Skip to content
Post Views: 4,115
நான் தேடும் காதல் நீ….7
ஞாயிறு மாலையே அமரன் வீட்டினர் சென்னை கிளம்ப ஆயத்தமாயினர்.கற்பகம் தான் தாமரையின் பின்னே சுற்றிக் கொண்டு திரிந்தார்.இதை செய் அதை செய்யாதே என்று அவளுக்கு அறிவுரைகள் வழங்கியபடி இருக்க,
“அத்த அவளை விடுங்க….”என்று அமரனே ஒருமுறை கூறிவிட்டான்.ஆனால் கற்பகத்தால் தான் அப்படி விட முடியவில்லை.தாமரை எப்போதும் போல் தாய் கூறுவதற்கு எல்லாம் சரியென்று தலையாட்டிக் கொண்டிருந்தாள்.
“எப்படி தான் இவ எல்லாத்துக்கும் தலையாட்டுறாளோ தெரியலை….”என்று அகிலா அமரனிடம் கூற,
Advertisement
“அவ ஏதாவது பேசினா…..ஏன் எதிர்த்து பேசுறனு அத்த அதுக்கும் சத்தம் போடும் அதான் தலையை ஆட்டி வச்சிக்கிறா….”என்றுவிட்டு அமரன் போய்விட,அகிலாவுக்கு கவலை தான் கற்பகம் மற்றும் தாமரையை நினைத்து.தாமரை கல்லூரியில் இறக்கிவிடும் போது அமரன் அவளின் கையில் பணம் கொடுக்க,
“எதுக்கு அமரா பணம் அது தான் நான் முன்னாடியே கொடுத்துட்டேனே….”என்று கற்பகம் பதற,
“அத்த எதுக்கு பதறுர….அவளுக்கு காலேஜ்ல எஸ்கஷன் அழைச்சிக்கிட்டு போறாங்கனு சொன்னா அதான் கொடுக்குறேன்….”
Advertisement
“என்ன நான் இவளை போக கூடாதுனு சொன்னேனே…”என்று கற்பகம் கோபமாக தாமரையின் புறம் திரும்ப,
Advertisement
“அண்ணி….என்னதிது சின்ன புள்ள ஆசை படுது அவ கிளாஸ்ல எல்லாரும் போறாங்கனு…..ஏன் வேண்டாம்னு சொல்லுறீங்க….”என்று அகிலா தாமரை தன் பின்னே வைத்துக் கொண்டே கூற,
“என்னடீ உனக்கு பேச ஆள் சேர்த்துட்டியா….இதுக்கு தான் இவ்வளவு தூரம் படிக்க அனுப்ப வேண்டாம்னு சொன்னேன் நீ கேட்டியா அகிலா….பாரு நான் சொன்னதுக்கு அப்புறமும் எதிர்த்து வேலை செய்யுறா….”என்று ஆரம்பிக்க,
“அத்தை….”
Advertisement
“அண்ணி…”என்று அமரனும்,அகிலாவும் ஒரு சேர கற்பகத்தை அதட்ட,தாமரையின் கண்களின் கண்ணீர் கோடாக இறங்கியது.
“பாருங்க அண்ணி பிள்ளை கண்ணு கலங்கி போச்சு….ஏன் இப்படி அவளை திட்டுறீங்க….”என்று மருமகளை முன் இழுத்து கண்களை துடைத்துவிட,
“தாமரை அத்தை ஏதோ கோபத்துல பேசிட்டாங்க அதுக்கு அழலாமா…..விடு நான் தான் பணம் கொடுத்துட்டேனே நீ சந்தோஷமா போயிட்டுவா….”என்றவன் கற்பகத்திடம் திரும்பி,
“விடு அத்த…எல்லாத்துக்கும் கோபப்படாத…..”என்று கூற,
“இல்ல அமரா இவ்வளவு தூரம் நம்மளை விட்டு தனியா இருக்கா அதான் பயமா இருக்கு….”என்று கூறியவரின் குரலும் கரகரத்து தான் இருந்தது.
“அண்ணி இப்ப நீங்க ஆரம்பிச்சிட்டீங்க….என்னதிது பிள்ளையை விட்டுட்டு போக வந்தோம் இப்படி அழுதுகிட்டு இருந்தா நல்லவா இருக்கு….ஏய் குட்டிமா என்னடா இது…உன் அம்மா பத்தி உனக்கு தெரியாது….அப்படியே அவங்க உன்னை திட்டினாலும் என் அத்தான்கிட்டேந்து நான் வாங்குறேன்னு நீ சொல்ல வேண்டாம்….”என்று தாமரையையும் தேற்ற,தாமரை முகத்தை தூக்கிக் கொண்டு தான் நின்றாள்.
“தாமரை….”என்று அமரன் சற்று அழுத்தமாக அழைக்க,
“அத்தான்…”என்றவள் குரல் மேலும் உள்ளடங்கி இருந்தது.அதை உணர்ந்த அமரன் கற்பகத்தை முறைக்க,
“நான் என்னடா கண்ணா பண்ணேன்….போ உனக்கு நான் சொன்னா மட்டும் கோபம் வந்திடும்….”என்று அவர் முறுக்கி கொள்ள,தாயின் சிறுபிள்ளை தனத்தில் தாமரை சட்டென்று சிரித்துவிட்டாலும் முகம் வாடி தான் இருந்தது.
“ம்ம்…இது என் மருமக….இப்படி நீ சிரிச்ச முகமா இருந்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்….நல்லபடியா போயிட்டுவா….”என்று அகிலா கூற,அவளோ தன் தாயின் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இங்க வா….”என்று அழைத்த கற்பகம் அவள் எதிர்பாராதவிதமாக அணைத்துவிடுவிக்க,
“ம்மா….”என்ற தாமரை தாயின் முகத்தை பார்க்க அதில் ஏக்கத்திற்கும் கலக்கம் குடியிருந்தது.அது எதனால் என்று அறிந்தவளோ,
“ம்மா…எனக்கு ஆசையா இருக்குமா…நான் போயிட்டுவரேன்மா ப்ளீஸ்…..”என்று மீண்டும் கெஞ்ச,
“சரிடீ…பத்திரமா போயிட்டுவா….”என்று அவளின் தலை தொட்டு ஆட்ட,அப்போது தான் தாமரையின் முகம் தெளிந்தது.
“அப்பாடா எல்லாரும் சரியாகிட்டீங்களா…..இப்ப நாம கிளம்பலாமா அண்ணி….கண்ணா நீ பிள்ளையை ஹாஸ்டெல்ல விட்டுட்டு வந்துடு…..”என்று அகிலா கூற,அமரனும் தாமரையை அழைத்துக் கொண்டு சென்றான்.அவர்கள் சென்றவுடன் கற்பகத்திடம் திரும்பிய அகிலா,
“அண்ணி நீங்க பண்ணிக்கிட்டு இருக்குறது நல்லாயில்லை….பிள்ளையை ஏன் எப்ப பார்த்தாலும் அதட்டிக்கிட்டே இருக்கீங்க….அவ ஏற்கனவே வாய் பேசமாட்டா அத்தனை அமைதி இப்ப நீங்க இப்படி பண்ணவும் இன்னும் பேசவே யோசிக்கிறா….”
“நான் என்ன பண்ணட்டும் அகிலா…அவ அப்பா உயிரோட இருந்தா நான் ஏன் இப்படி பயப்பட போறேன்….ஏற்கனவே உங்களை கஷ்டபடுத்துறோமோனு ஒருபக்கம் மனசு கடந்து அடிச்சிக்குது….அதுக்கு ஏத்தாப்புல இவளும் ஏதாவது ஒன்னுகிடக்க ஒன்னு பண்ணிடுறா அதான் எனக்கு கோபம் வந்துடுது….”என்று கற்பகம் அழுது கொண்டே கூற,
“இப்படி நினைக்காதீங்கனு உங்களுக்கு எத்தனை தடவை தான் சொல்லுறது….இது உங்க சொத்து உங்களுக்கும் பங்கு இருக்கு நீங்க இப்படி பேசறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை அண்ணி….நீங்க இப்படி பண்ணுறதால தாமரை கண்ணாவை விட்டு விலகி தான் இருப்பா….”என்றுவிட,
“அகி….”என்று அதிர்ந்துவிட்டார் கற்பகம்,
“ஆமா அண்ணி….நான் இதை சொல்லக்கூடாதுனு நினைச்சிக்கிட்டு இருந்தேன் ஆனா நீங்க பண்ணுறத பார்த்தா உங்களுக்கு சொன்னா தான் புரியும் போல….”என்றும் கூறிவிட,
“ஏன் அகி இப்படி சொல்லுற…நான் என்ன அவ்வளவு கொடுமையா படுத்துறேன் என் பிள்ளையை….”என்று கற்பகம் தேம்ப தொடங்க,அவரின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்ட அகிலா,
“அண்ணி….நாம நல்லது தான் செய்யுறோம்னு நினைச்சிக்கிட்டு அவங்களை ரொம்பவும் வதைக்க கூடாது….அதுவும் தாமரை ரொம்ப அமைதியான பொண்ணு அவளை நீங்க திரும்ப திரும்ப ஏதாவது சொல்லி உள்ளுக்குள்ள அடைக்கிறீங்க…இது நல்லதுக்கு இல்லை….நான் அவ்வளவு தான் சொல்லுவேன்….”
“இல்ல அகி….அது இது தெரியாத ஊரு….இங்க விடவே எனக்கு மனசில்லை ஆனா அவ ரொம்ப அடம்பிடிச்சானு நாம இங்க சேர்த்துவிட்டோம்….அதான் இப்பவும் எல்லாத்துக்கும் அடம்பிடிக்க ஆரம்பிச்சசிட்டாளோ எனக்கு மனசு பட்டுச்சு…அதான் அடக்கி வைச்சேன்….”
“அதுக்குனு பிள்ளைக்கிட்ட என்ன சொல்லியிருக்கீங்க…..உனக்கு அப்பா இல்லை நாமளே இன்னுனொருத்தவங்களை நம்பி தான் இருக்கோம் நம்மளால அவங்களுக்கு எந்த தொந்திரவு வரக்கூடாதுனு….இப்படியெல்லாமா சொல்லுவீங்க….”என்று கோபமாக கூறிய அகிலாவிற்கு முகத்தில் அத்தனை கோபம் முழுதாக காட்டத்தான் முடியவில்லை.
“இதெல்லாம் மட்டும் உன்கிட்ட சொல்லிட்டு போயிருக்காளா கோட்டி கழுதை….”என்று மகளை திட்டியபடி பல்லை கடிக்க,அகில கோபமாக ஏதோ பேச ஆரம்பிக்கும் முன் அமரன் வந்துவிட,
“வா கண்ணா…இங்க பாரு உன் அத்தை பண்ணுறதை….”என்று கோபத்தை மகனிடம் காட்ட,
“ப்ச்…முதல்ல ஏறுங்க…அப்புறம் பேசலாம்…”என்று தாயை பார்வையால் அடக்கி ஏற வைத்தவன்,
“அத்தை நீங்களுமா ஏறுங்க….”என்று கூற அவரோ முறைத்துக் கொண்டே ஏறினார்.காரில் அனைவரும் அமைதியாகவே வர கற்பகம் தான் முதலில் ஆரம்பித்தது
“நான் இப்ப என்ன சொல்லிட்டேனு உன் அம்மா முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு வரா கண்ணா….தாமரைக் கிட்ட உண்மையை சொன்னேன் இதுல என்ன தப்பிருக்கு….”என்று கற்பகம் தொடங்க,
“நான் என் மருமகளுக்கு எல்லாம் செய்வேன் கண்ணா….அதை கேட்க அவங்களுக்கும் எந்த உரிமையும் இல்லைனு நீயும் சொல்லிடு….”என்று அகிலாவும் சூடாக கொடுக்க,இப்படி இருவரும் வார்த்தையாடல் புரிந்து வந்து கொண்டிருக்க வண்டி திடீர் என்று நின்றுவிட்டது.
“என்ன கண்ணா ஏன் நிப்பாட்டின….”என்று இருவரும் ஒருசேர கேட்க,அமரனோ எதுவும சொல்லாமல் இறங்கி எதிரில் இருந்த உணவகத்திற்கு சென்றுவந்தவன்,
“இந்தாங்க ஐஸ்கீரிம்…சாப்பிடுங்க கூலாகிடுவீங்க….”என்று இருவருக்கும் நீட்ட,கற்பகம் திருதிருத்தார் என்றார் அகிலாவோ சத்தமா சிரித்துவிட்டார்.
“கண்ணா….அய்யோ முடியலை போ….”என்றவர் முதலில் வாங்கி கொள்ள கற்பகமோ இன்னும் தெளியாமல் அமர்ந்திருக்க,அதை பார்த்த அமரனுக்கு இன்னும் சிரிப்பு பொங்கியது.
“அத்தை….நான் சீரியல் எல்லாம் பாக்குறது இல்லை….அதனால இப்படி சண்டை போடம ஐஸ்கீரிமை சாப்பிட்டு மனசையும்,உடம்பையும் குளிர்ச்சி படுத்திங்க….அப்ப தான் என்னால வண்டி ஓட்ட முடியும்….”என்று கூற,
“போ கண்ணா உனக்கு எப்போதும் விளையாட்டு தான் அதுவும் என்னை தான் கிண்டல் பண்ணுவ….”என்று கூறினாலும் அவன் நீட்டியதை வாங்கி சாப்பிட்ட கற்பகத்திற்கும் மனதும்,உடலும் குளிர்ந்து தான் போனது.
“அத்தை தாமரை நம்ம வீட்டு பொண்ணு அவ எந்த தப்பு செய்யமாட்டா…அதுவும் அவ உங்க வளர்ப்பு அவளை நீங்க சந்தேகபடலாமா….”என்று அமரன் கேட்க,
“நானா சந்தேகபடுவேன் கண்ணா….எனக்கு தெரியாதா என் பொண்ணை பத்தி….”
“அப்ப தெரியுது தான…அப்புறம் எதுக்கு அவளை சும்மா இதை செய்யாத அதை செய்யாதனு தொந்தரவு பண்ணுறீங்க…அவளை ப்ரியா விடுங்க அப்ப தான் அவளுக்கும் வெளி உலகம் தெரியும்….”என்று கூற கற்பகத்திற்கும் அப்போது தான் தன் தவறு புரிய,
“சரிப்பா….இனி இப்படி பேசல….”என்று கூற,
“இதை உங்க கண்ணா சொன்னா தான் கேட்பீங்க இல்ல….”என்று அதுவரை அமைதியாக இருந்த அகிலா முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு கேட்க,
“அது….கண்ணா என்ன உன்ன மாதிரியா பேசினான்…அவன் எவ்வளவு பொறுமையா சொன்னான்…அது போல நீயும் சொல்லியிருந்தா புரிஞ்சிருக்கும்….”
“என்ன சொன்னாலும் உங்க மருமகனை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே…”என்று அகிலாவும் நொடித்துக்கொள்ள
“அது எப்படி என் மருமகனாச்சே….அவன் சொன்னா சரியா தான் இருக்கும்….”என்று கற்பகம் அமரனின் தலை கோதியவரே முகம் மலர அகத்தில் இருந்த நிறைவு முகத்திலும் தெரிந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“என்னக்கா நீயும் என் கூட வரியா….”என்று விடுதிக்கு கிளம்பிக் கொண்டிருந்த சிவன்யா கேட்க,
“ஆமாடீ…எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு….”
“என்ன கடைக்கு பொருள் வாங்கனுமா….”என்று கேட்க,தீர்த்தா ஆமாம் என்று தலையாட்டினாள்.
“அப்ப காலையிலே சொல்லியிருக்கலாம்ல நாம காலையிலேயே கிளம்பியிருக்கலாம்…இப்ப பாரு நேரத்தை இப்பவே ஏழு இப்ப போயிட்டு எத்தனை மணிக்கு நீ வருவ….உன்னை தனியா விட்டுட்டு எனக்கு தான் பயமா இருக்கும்….”என்று சிவன்யா கவலை கொள்ள,
“அடியே…நீ கவலை படாத நான் பத்திரமா தான் வந்துடுவேன்….நீ எல்லாம் எடுத்து வச்சிட்டியா பாரு….”
“ம்ம் எடுத்து வச்சிட்டேன்….”என்று சிவன்யா கூறவும் இருவரும் ஒருசேர வீட்டை பூட்டிவிட்டு கிளம்பிவிட்டனர்.சிவன்யாவை அவளின் கல்லூரி வாயிலில் விட்டுவிட்டு தீர்த்தா கடைக்கு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வரவே இரவு பத்தை தான்டிவிட்டது.தன் வீட்டிற்குள் வந்து நுழைந்தவள் முதலில் தங்கைக்கு தான் அழைத்து தான் வந்துவிட்டதாக கூறிவிட்டு வைத்துவிட்டு படுக்க ஆயத்தமாக மீண்டும் கைபேசியில் அழைப்பு இந்த நேரத்தில் யார் யோசித்துக் கொண்டே திரை பார்க்க வக்கீல் சதாசிவம் தான் அழைத்திருந்தார்.உடனே அழைப்பை ஏற்றவள்,
“ஹலோ அங்கிள்….”
“ஹலோ தீர்த்தா எப்படிமா இருக்க….”
“நான் நல்லயிருக்கேன் அங்கிள்….என்ன அங்கிள் இந்த நேரத்துல போன் பண்ணியிருக்கீங்க….”
“என்னமா உன் மாமா செல்வம் ஊர்லேந்து வந்துட்டாரா….அவரை மீட் பண்ணும்னு சொல்லியிருந்தேனே….”என்று அவர் கேட்க,
“அவரை கண்டிப்பா நாம பார்க்க போகனுமா….”
“கண்டிப்பா போகனும்மா….அது தான் உனக்கு நல்லது…இந்த கேஸ் ஒண்ணுமில்ல தான் டாக்குமெண்ட் உன் பேர்ல தான் இருக்கு…ஆனா உங்க தாத்தா பண்ணி வச்சிருக்கது உன் அத்தைக்கு தெரிஞ்சிது பிரச்சனையா மாற வாய்ப்பு இருக்கு…அதனால நாம அவரை பர்சனலா மீட் பண்ணி இதை சுமூகமா பேசிடறது நல்லது….”
“சரி அங்கிள் அவரு நாளைக்கு தான் வரார்….என்னோட பிரண்டோட அப்பா தான் அவருக்கு பிஏ அவர் கிட்ட நான் பேசிட்டு நான் உங்களுக்கு கூப்பிடுறேன்….”
“சரிமா கூப்பிடு…நாளைக்கு எனக்கு ஈவினிங் தான் கோர்ட்….சோ நான் காலையில ஆபிஸ்ல தான் இருப்பேன்…”
“ஓகே அங்கிள்….ஆனா எனக்கு நம்பிக்கையில்லை….”என்று தீர்த்தா கூற,
“ஏன் அவசரபடுற….நாம முதல்ல பேசி பார்ப்போமே…..”என்று அவர் கூற,
“இல்ல அங்கிள் அவரும் எனக்கு எதிரா எதாவது பண்ணா….”என்று தீர்த்தா தன் சந்தேகத்தை கேட்க,
“அப்படி செய்யமாட்டார்….எனக்கு நம்பிக்கையிருக்கு….நீ வா நாம பார்த்துக்கலாம்….”என்று கூற தீர்த்தாவுக்கும் வேறு வழியிருக்கவில்லை என்பதால் சரி என்று கூறி வைத்துவிட்டாள்.
error: Content is protected !!