Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிறம் பாராத காதல்.

நிறம் பாராத காதல் 23 1

✨நிறம் பாராத காதல்✨

✨அத்தியாயம். 23(1)



Advertisement

ஒரு நொடி தான்.ஒரே நொடி தான்.

“ஐ லவ் யு தீரா…” என்ற வைதேகியின் வார்த்தையும் அவளின் அணைப்பும் ரணதீரனை வேறு லோகத்திற்கு அழைத்துச் சென்றது.

Advertisement

இதுவரை யாரிடமும் இப்படியொரு உணர்வை உணர்ந்திடாத வைதேகியின் இதயம் முழுதும் ரணதீரன் மட்டுமே குடிக்கொண்டு இருந்ததை அணுவணுவாக உணர்ந்தவள், இதநாள் வரை நட்பின் பெயரில் மறைத்திருந்த காதலை இனியும் மறைக்க முடியாமல் இந்தக் கணம் வெடித்து விட்டாள்.

Advertisement

“உங்களை ஏன் எனக்கு இவ்வளவு பிடிக்குதுன்னு எனக்குத் தெரியல்லை தீரா… விடை இல்லாத கேள்விகள் இருக்கலாம்! ஆனால் கேள்விகளே தேவை படாமல் நான் உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் தீரா…” என்று தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்திய வைதேகி இந்த நொடிவரை ரணதீரனின் இதயத்தில் தான் தஞ்சம் புகுந்து இருந்தாள்.

Advertisement

வைதேகியின் அணைப்பில்

தன்னிலையை மறந்து இருந்த ரணதீரனுக்கு அவள் தன் மீது கொண்டது நட்பைத் தாண்டிய காதலின் உணர்வு என்று தெரிந்ததுமே அவனின் மனம் முதலில் குத்தாட்டம் போட்டது.

இந்த அழகிய தருணத்தை அவன் ரசிக்கும் முன்னே தன் மூளைக்குள் சொல்ல முடியாத வலியை உணர்ந்தவன் காதில்,

“ராணா… அவளை நம்பாதே” என்ற குரல் மீண்டும் ஒலித்ததும் சட்டென்று அவள் வசமிருந்து தள்ளி வந்தான்.

அவனின் செயலில் எந்த வித மாற்றத்தையும் உணராத வைதேகி

இவள் காதலை அவன் ஏற்றுக்கொண்டான் என்று எண்ணி வெட்கம் கொண்டாள்.

“நீ போய்த் தூங்கு, யாராவது வரப் போறாங்க” என்றவன் வேகமாக அவனுக்கான அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தவனை மலர்ந்த முகத்துடனே பார்த்த வைதேகி, ரணதீரன் அவளுக்காக அளித்த ஓவியத்தைப் பார்த்தவளின் விழிகள் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

கண்கள் இமைக்காமல் அந்த ஓவியத்தைப் பார்த்தவள்,”அப்பா… உங்களைப் போலவே என்னைச் சந்தோசமா பார்த்துக்குற தீரனை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். தீரனோட எனக்குச் சீக்கிரமா கல்யாணம் நடக்கும்னு நீங்களும் என்னை விஷ் பண்ணுங்க”

என்ற வைதேகி தன் கையில் ஏந்தி இருந்த ஓவியத்தைப் பார்த்துத் தான் பேசிக்கொண்டு இருந்தாள்.

தன்னை மறந்து தன் தாய் தந்தையின் ஓவியத்துடன் வைதேகி பேசிக்கொண்டு இருக்க,

“விஷ் தானே… பண்ணிடலாம்” என்று திடிரெனக் கேட்ட குரலில் திட்டுகிட்டு திரும்பிப் பார்த்த வைதேகியின் எதிரே மாறனும் மாயாவும் நின்று இருந்தார்கள்.

“என்ன வைதேகி தனியா நின்னு யாரோட பேசிகிட்டு இருக்க?” என்று மாறன் கேக்க, “ஆமா கையில என்னது?”என்று கேட்ட மாயாவிடம் அழகான ஓவியத்தைக் கொடுத்தாள் வைதேகி.

ரணதீரன் வைதேகிக்காகக் கொடுத்த பிறந்தநாள் அன்பளிப்பில், நடுவில் வைதேகியும் அவளின் இடது வலது கன்னத்தில் அவளின் தாய் தந்தையரும் இதழ் பதித்து முத்தமிடுவதைப் போலிருந்த ஓவியத்தைப் பார்த்து மாறன் மற்றும் மாயாவின் கண்கள் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் மிளிர்ந்தது.

“ரொம்ப அழகா இருக்கு வைதேகி!உனக்காக நம்ம ரணதீரனே வரைஞ்சு கொடுத்திருக்கானா! என்னால நம்பவே முடியல”என்று மாயா செல்ல, “ஆமாமா… இங்க நடக்கிற எதுவுமே என்னாலயும் தான் நம்ப முடியல” என்ற மாறனின் வார்த்தையில் வெட்கம் கொண்டவளாக நின்று இருந்தாள் வைதேகி.

“ஐயோ மாமா…என்ன இது வைதேகி வெட்கமெல்லாம் படுறா! இங்கே என்னதான் நடக்குது?”என்று மாயா கேட்க,

“இங்க என்ன நடக்குதுன்னு உனக்குப் புரியலையா?” என்ற மாறன் தன் கைபேசியில் இருந்த வீடியோவை எடுத்து மாயாவிடம் நீட்டினான்.

மாறனின் கைப்பேசியை பார்த்த மாயாவின் முகம் முழுதும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

“அப்படி என்ன வீடியோ அது?” என்று கேட்டுக்கொண்டே வைதேகியும் கைபேசியை பார்க்க, அதில் வைதேகி ரணதீரனிடம் தன் காதலை சொன்ன அழகிய தருணம் மாறனால் படம் பிடிக்கப்பட்டு இருந்தது.

“ஐயோ அண்ணா! இதை எப்போ நீங்க வீடியோ எடுத்தீங்க?” என்று வைதேகி வெட்கம் கலந்த பொய்யான கோபத்துடன் கேட்க,”என்னம்மா நீ?என் மச்சான் ரணதீரனை நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் எவ்வளவு ஆசைப்படுறேன் தெரியுமா? இப்போ என் ஆசை எல்லாம் நிறைவேறப் போகுதுனு நினைக்கும்போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்ற மாறன் வைதேகியை தன் சொந்த தங்கையாகத் தான் எண்ணினான்.

“மாமா நீங்க எப்ப இதைல்லாம் வீடியோ எடுத்தீங்க?” என்று மாயா கேக்க, “நான் எதார்த்தமா தான் வெளியே வந்தேன் மாயா… அப்போ பார்த்து என் தங்கச்சி அவள் காதலை என் மச்சான்க்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாள்! அப்பதான் சட்டுனு அதை வீடியோவா ரெக்கார்ட் பண்ணிட்டேன்” என்று மாறன் சொன்னதும் வைதேகிக்கு சங்கடமாகப் போனது.

“இப்போ இந்த வீடியோவை நம்ம ஃபேமிலி குரூப்ல அனுப்ப போறேன்” என்று மாறன் சொல்ல, “ஐயோ அண்ணா…அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க. நான் தான் என் காதலை சொன்னேனே தவிர இன்னும் உங்க மச்சான் எனக்குப் பதில் சொல்லவே இல்லை” என்ற வைதேகியின் முகத்தில் சிறு கவலையும் தோன்றியது.

“என்ன வைதேகி நீ!…உன்ன யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? உன்ன மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க என் தம்பி தானே கொடுத்து வச்சிருக்கணும். அதெல்லாம் என் தம்பிக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். இதுவரை என் தம்பி உன்கிட்ட பேசிப் பழகுற மாதிரி யாரிடமும் பழகி நாங்க பார்த்ததே இல்ல. ஆனா! உன்னை அவன் உள்ளங்கையில் வைத்துத் தாங்குறான். கண்டிப்பா என் தம்பிக்கும் உனக்கும்தான் கல்யாணம் நடக்கும்” என்ற மாயாவின் வார்த்தையைக் கேட்டு வைதேகியின் மனம் குளிர்ந்து.

“சரி சரி நேரம் ஆகுது. நான் இப்போதைக்கு இந்த வீடியோவை யாருக்கும் அனுப்ப மாட்டேன்.நாளைக்கு அத்தை எதிர்ல ரணதீரனை வச்சுக்கிட்டு உங்களுக்குக் கல்யாண தேதியைக் குறிச்சிடலாம்” என்று மாறன் சொல்ல, வைதேகிக்கு ரணதீரனின் குடும்பத்தை எந்த அளவுக்குப் பிடித்திருந்ததோ அதே அளவுக்கு ரணதீரனின் அன்பும் அக்கறையும் அவனுடைய ஒவ்வொரு செய்கையும் பிடித்துப் போனதால் தன்னை மீறி அவள் மனதில் இருந்த காதலை சட்டென்று அவனிடம் தெரியப்படுத்தியவள் அன்றைய இரவு ரணதீரனின் நினைவுகளைச் சுமந்த வண்ணமாகவே உறக்கத்தை தழுவினாள்.

மறுநாள் காலை வைதேகி இருந்த அறையின் கதவைத் தட்டிக்கொண்டு மாயா உள்ளே நுழைந்தவள், “வைதேகி… எழுந்துட்டியா? இந்தா உனக்கு எங்களோட பிறந்தநாள் அன்பளிப்பு” என்றப்படி வைதேகியின் நிறத்துக்கு ஏற்றது போல மஞ்சள் நிற புடவையில் பச்சை நிற கரை வைத்து அதில் தோகை விரித்த மயில்கள் நடனமாடுவதை போன்ற பட்டுச் சேலையைக் கொடுத்ததும், வைதேகி மறுக்காமல் வாங்கிக் கொண்டவள், நேரத்தோடு குளித்து முடித்து அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

எந்த ஒப்பனையும் இல்லாமல் இயற்கையான அழகிற்கு சொந்தக்காரியான வைதேகி, அழகுக்கு அழகு சேர்ப்பதைப் போலப் பட்டுடவை அணிந்து தேவதையாகத் தெரிந்தவளை பார்த்து அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

“வைதேகி…உனக்கு இந்தப் புடவை ரொம்ப அழகா இருக்கு. நீயும் ரொம்பவே அழகா இருக்க” என்ற கீதா வைதேகிக்கு தன் கைகளால் திருஷ்டி எடுக்க, “இந்தா மாப்பூ வச்சுக்கோ” என்ற வேதநாயகி தன் கையில் இருந்த முல்லைப் பூவை வைதேயின் கூந்தலில் சூட்டி அழகு பார்த்தார்.

வீட்டில் உள்ள அனைவரும் ஹாலில் நின்றிருக்க வைதேகியின் கண்கள் தேடியது என்னவோ ரணதீரனை தான்.

“மணி ஆகுது கோவிலுக்குக் கிளம்பலாமா” என்று மாறன் கேட்க, “கிளம்பலாம் மாப்புள்ள. மாயா பூஜைக்குத் தேவையான பொருளை எல்லாம் வண்டியில் எடுத்து வச்சிட்டியா?” என்று வேதநாயகி கேட்டதும்,

“எல்லாம் ரெடியா இருக்கு அம்மா நம்ம கிளம்ப வேண்டியது தான்” என்றாள் மாயா.

“சரி…எல்லாரும் போய் வேலு கார்லயும் மாறன் கார்லயும் உட்காருங்க. நான் வீட்டைப் பூட்டிக்கிட்டு வரேன் “என்று கீதா சொல்ல,

“அண்ணி… தீரா எங்கே?”என்று பொறுமை இழந்தவளாகக் கேட்டாள் வைதேகி.

“மச்சான் ஏதோ அவசர வேலையா விடியக் காலையிலேயே கிளம்பி போயிட்டாம்மா. அவன் நேரா கோயிலுக்கு வந்துருவான்.

நீ வா நம்ம கிளம்பலாம்” என்ற மாறனின் வண்டியில் மாயா, கீதா மற்றும் வைதேகி அமர்ந்துக்கொள்ள.வேலுவின் காரில் பொம்மி, நீலவேணி, வேதநாயகி மற்றும் மாறனின் குழந்தை மயிழினி அமர்ந்ததும் இவர்கள் அனைவரும் சேர்ந்து வேதநாயகியின் குலதெய்வ கோவிலுக்குப் பயணித்தார்கள்.

மாறன் கோவிலை நோக்கித் தன் காரை விரட்ட, பின் இருக்கையில் கீதாவுடன் அமர்ந்திருந்த வைதேகியின் முகம் வாடி இருந்தது.

“என்ன வைதேகி… பிறந்தநாள் பிள்ளை ஏன் இவ்வளவு சோகமா இருக்க? உன் அம்மா அப்பா நினைவு வந்துடுச்சா?” என்று வைதேகியின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தப்படி கீதா கேட்க,

“இல்ல அம்மா! நான் நல்லா தான் இருக்கேன்” என்ற வைதேகியின் மனதில் ஏன் ரணதீரன் தன்னிடம் சொல்லாமல் வெளியே சென்றான் என்ற கேள்வி எழுந்தது.

இவர்கள் பயணித்த அரை மணி நேரமும் வைதேகி மௌனத்தைக் கடைபிடித்தவள் மனதில் ஆயிரம் குழப்பங்கள் தோன்றிய வண்ணமாகவே இருந்தது.

“ஒருவேளை நம்ம தான் அவசரப்பட்டு நம்ம காதலை தீரனிடம் சொல்லிட்டோமா! அவரு என்னைத் தப்பா நினைச்சுட்டாரா! அவருக்கு என்னைப் பிடிக்கலையா! எல்லோரும் ஒண்ணா இருக்கணும்னு தானே தேயிலை எஸ்டேட்டுக்கு வந்தாங்க. ஆனா அவர் மட்டும் இப்போ இல்லனா என்ன அர்த்தம்?” என்ற குழப்பத்தில் இருந்த வைதேகியை கண்ணாடி வழியே கவனித்துக் கொண்டுதான் இருந்தான் மாறன்.

மாறன் விரட்டிய கார் சில நிமிடங்களிலேயே கோவில் வாசலைச் சென்றடைய, “நீங்க எல்லாம் கோவிலுக்குள்ள போங்க. நான் இதோ வரேன்” என்றவன் தன் கைபேசியின் வாயிலாக ரணதீரனை அழைத்தான்.

நீண்ட நேரம் அழைத்துப் பார்த்தும் ரணதீரன் மாறனின் அழைப்பிற்கு பதில் தராததால் கோபம் கொண்ட மாறன்,

“இவன் என்ன பைத்தியமா? எதுக்காக இப்படி எல்லாம் பண்றான்? “என்று தனக்குள் ரணதீரனை திட்டிக்கொண்டே மாறனும் கோவிலுக்குள் நுழைய, அங்கே வைதேகிக்காகச் சிறப்புப் பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலுவுடன் வேதநாயகியும் கோவிலுக்கு வந்து இறங்கியவர், “மாப்பிள்ளை… ஏன் இன்னும் ராணா வரல? ” என்று கேட்க,

“நான் இப்பதான் போன் பண்ணி பேசினேன் அத்த. மச்சான் வேலை முடிஞ்சதும் வந்துருவான். நீங்க வாங்க நம்ப பூஜையை ஆரம்பிக்கச் சொல்லலாம்” என்ற மாறனின் பதிலில் ஏதோ சரி இல்லை என்று உணர்ந்திருந்தார் வேதநாயகி.

வைதேகியின் பெயரில் நடக்கும் சிறப்பு பூஜையில் வேதநாயகியின் குடும்பம் மொத்தமும் கலந்துக்கொண்ட நிலையில்,

ரணதீரன் மட்டும் அங்கு இல்லாததை எண்ணி வைதேகிக்கு சொல்ல முடியாத அளவிற்கு வேதனையாக இருந்தது.

கிட்டதட்ட ஒரு மணி நேரம் நடந்து முடிந்த பூஜையின் முடிவில் ஐயர் அங்குள்ள அனைவருக்கும் பிரசாதத்தை கொடுக்க,

“என்ன அண்ணி! ஏன் இன்னும் உங்க தம்பி வரல?” என்ற கேள்வியை இதோடு நூறு முறையெனும் மாயாவிடம் கேட்ட வைதேகிக்கு என்ன பதில் சொல்வது என்று மாயாவிற்கும் தெரியவில்லை.

“வாங்க எல்லாரும் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்” என்று கீதா சொன்னதும், அனைவரும் கோவில்படிகட்டில் அமர்ந்திருக்க,

“அண்ணி…நேத்து நைட்டு நான் தீரன் கிட்ட அப்படி நடந்திருக்கக்கூடாதோ!” என்ற வைதேகியின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது.

“என்னமா நீ…பிறந்தநாள் அதுவுமா ஏன் இப்படி கண் கலங்குற?

நீ பொறுமையா இரு. நம்ம வீட்டுல போய்ப் பேசிக்கலாம்” என்ற மாயா வைதேகிக்கு ஆறுதல் சொன்னவளின் மனதிலும் தன் தம்பியின் செயலை நினைத்துக் கோவம் தான் எழுந்தது.

ரணதீரனின் நினைவுடனே தனியாகக் கோவிலைச் சுற்றி வந்த வைதேகி தெப்பக்குளத்தின் அருகே நின்று இருந்தவளை,”என்ன வைதேகி… ராணாவை பற்றி யோசிக்கிறியா?”எனக் கேட்கும் குரல் கேட்டு வைதேகி திரும்பிப் பார்க்க, அங்கே பொம்மியுடன் வேலு நின்று இருந்தான்.

“சிஸ்டர்… நீங்க ராணாவை லவ் பண்றீங்களா?”என்று வேலு தன் சந்தேகத்தைக் கேட்டதும்,

“நீ ராணாவை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுற தானே?” என்று பொம்மியும் தெளிந்த மனநிலையுடன் கேட்டதும், வைதேகிக்கு பொம்மயின் தெளிவு சின்ன மகிழிச்சியைக் கொடுத்தது.

“சொல்லுங்க சிஸ்டர் நீங்க ராணாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறிங்களா?”என்று வேலு கேட்டதும்,

“ஆமா… எனக்கு ஆசை தான். ஆனா அவருக்கு என்னைப் பிடிக்கலைனு நினைக்கிறேன்” என்ற வைதேகியின் கண்கள் கலங்கயதை பார்த்து, “யாரு சொன்னாங்க! ராணாக்கு உன்னைப் பிடிக்கும். ஆனா உன்னோட நிறத்தைத் தான் அவனுக்குப் பிடிக்காது” என்ற பொம்மியின் பதிலில் வைதேகிக்கு குழப்பம் ஏற்பட்டது.

“சிஸ்டர்… அக்கா சொன்னது போல ராணாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும், ஆனா அவன்க்கிட்ட ஒரு குறை இருக்கு” என்ற வேலு கிட்டத்தட்ட பத்து நிமிடம் வைதேகியிடம் பேசியவனின் வார்த்தையில் வைதேகிக்கு ரணதீரனிடம் இருப்பது குறை இல்லை அது அவனின் தாழ்வு மனப்பான்மை என்று புரிய வந்தது.

பொம்மியும் வேலுவும் சொன்னதை வைத்து ரணதீரனை பற்றிய ஒரு முடிவுக்கு வந்த வைதேகி, எதுவாய் இருப்பினும் நேரடியாக ரணதீரனிடமே பேசிட வேண்டும் என எண்ணினாள்.

கோவிலிலிருந்து அனைவரும் மீண்டும் வேதநாயகியின் பங்களாவிற்க்கு வந்த பிறகும் ரணதீரனை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் அன்றைய தினம் பகல் நேரம் முழுதும் வைதேகி தவித்தத்தை பார்த்து அனைவருக்குமே பாவமாகத் தான் இருந்தது.

மாலை நேர வேளையில்,”அம்மா… நம்ம வீட்டுக்குக் காருல யாரோ வராங்க” என்ற பணியாளரின் வார்த்தையைக் கேட்டு அனைவரும் வாசலைப் பார்க்க, “சித்ரா…எப்படி இருக்க தங்கம்”என்ற தன் தாத்தா சென்முகத்தையும் பாட்டி வள்ளியையும் நேரில் பார்த்த வைதேகி ஓடிச் சென்று அவரைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.

“வாங்க… உள்ள வாங்க” என்று முதியவர்களை மரியாதையுடன் அழைத்த வேதநாயகி வைதேகியின் குடும்பத்தை மரியாதையாக உபசரித்தார்.

“என் மகள் பண்ண புண்ணியம் தான் என் பேத்தியை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்து இருக்கு” என்ற வள்ளி, “ஆமா… ரணதீரன் எங்கே?” என்று கேட்டதும், “என் மச்சானை உங்களுக்குத் தெரியுமா?”என்று ஆச்சிரியமாகக் கேட்டான் மாறன்.

“என்னப்பா இப்படி கேட்டுட்ட! நேத்து ரணதீரன் எங்க வீட்டுக்கு வந்து சித்ராவோட அம்மா அப்பா போட்டோவை வாங்கிகிட்டு, இன்னைக்கு வைதேகிக்கு பிறந்தநாள். நீங்க ரெண்டு பேரும் வந்து அவளை ஆசீர்வாதம் பண்ணனும்னு கேட்டதால தானே நாங்க இங்க வந்தோம்” என்று வள்ளி சொல்லும் சமயம் ரணதீரன் வீட்டுக்குள் நுழைந்தான்.

“வாங்க பாட்டி, வாங்க தாத்தா” என்று வந்தவர்களை மரியாதையாக அழைத்த ரணதீரன் தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த வைதேகியை கண்டும் காணாமல் நின்று இருந்தவனின் செய்கையில் வைதேகிக்கு நெஞ்சடைத்து போனது.

இதே சமயம் இதுநாள் வரை வைதேகியை பத்திரமாகப் பார்த்துக்கொண்ட வேதநாயகியின் குடும்பத்திற்கு வைதேகியின் தாத்தாவும் பாட்டியும் நன்றி தெரிவித்தார்கள்.

“சித்ரா…உனக்கு இனி யாரும் இல்லைனு நீ கவலைப்படாத. உன்னை உள்ளங்கையில வச்சி தாங்குற மாதிரியான ஒரு மாப்பிளையை உனக்காக நாங்க பார்த்து இருக்கிறோம்” என்று வள்ளி சொல்ல,

“தம்பி உள்ள வாங்க” என்ற சென்முகத்தின் குரலைக் கேட்டு வீட்டுக்குள் நுழைந்த ஆடவனைக் கண்டு அங்குள்ள அனைவரும் அதிர்ச்சியில் நின்று இருக்க,

வைதேகியின் விழிகள் மட்டும் எந்த வித உணர்வுமின்றி தன்னை கண்டுகொள்ளாமல் மூளையில்

நின்று இருந்த ரணதீரனின் ஒரே ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!