Skip to content
Post Views: 648
“ஆனா எங்க வீட்டு மருமகளை இப்படி பண்ணது உங்க அம்மாதான். எங்ககிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு. நீ உன்னோட கோபத்தை எல்லாம் உன் அம்மாகிட்ட போய் காட்டு..” என்று சீறினார் கைலாஷ்.
“நீங்க யோக்கியம் மாதிரி பேசாதிங்க..” என்று தருண் சீற, மாயா அவனிடம் “பரவால்லா மாமா. நீங்க வெளியே போங்க. எனக்கு ஒன்னும் ஆகாது..” என்றாள்.
Advertisement
அவன் கொழுந்தியாவை முறைத்தான். “ப்ளீஸ் எனக்காக போங்க..” என்றாள்.
தருண் சரவணனை முறைத்தப்படி வெளியே சென்றான்.
Advertisement
Advertisement
இவ்வளவு நேரமும் தருண் அமர்ந்திருந்த நாற்காலியில் இப்போது கைலாஷ் அமர்ந்தார்.
“உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது அந்த கனகவதிதான்னு எங்ககிட்ட ஆதாரம் இருக்கு, ஆனா போலீஸ் எங்களை நம்ப மாட்டேங்கிறாங்க. நீ அவளுக்கு எதிரா புகார் கொடு. கண்டிப்பா அவ ஜெயிலுக்கு போய்டுவா..” என்று சொன்னார் கைலாஷ்.
Advertisement
ஆனால் அப்படி ஜெயிலுக்கு அனுப்பினால் அந்த கனகவதி நம் அம்மாவிடமும் அப்பாவிடமும் மன்னிப்பு கேட்பாளா? மேலும் பிரச்சினைகள்தான் செய்வாள். இது தீராத பழிவாங்கலாக தொடர்ந்து கொண்டுதானே இருக்கும்? என்று யோசித்துப் பார்த்தாள் மாயா. அவளுக்கு தேவை தண்டனை கிடையாது சாரிதான்.
“நான் அவங்களை ஜெயிலுக்கு அனுப்பினா என் அக்காவோட வாழ்க்கை கேள்விக்குறியாகும்..” என்று இவள் சொல்ல, கைலாஷ் வெளிப்படையாக தனது அதிருப்தியை காட்டினார்.
“நீயும் டைப்பிக்கல் இந்தியன் கேர்ள்லாதான் இருக்க. அவளை மாதிரி ஆளையெல்லாம் பழி வாங்கி ஜெயிலுக்குள்ள தள்ளணும். தூக்குல ஏத்தணும்..” என்றார்.
‘இத்தனைக்கும் காரணமே உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பகைதானே!’ என்று மனதுக்குள் சொன்னவள் ‘முதலில் இவர்களின் பகையை நான் கண்டுபிடிக்க வேண்டும்..’ என்று மனதோடு முடிவெடுத்தாள்.
“பழி வாங்கினாலோ தூக்குல ஏத்தினாலோ எங்கப்பா உயிரோடு வர மாட்டார் சார். எனக்கு நடந்ததும் இல்லன்னு ஆகாது..” என்றாள்.
இவளிடம் பேச வந்ததே தவறு என்று நினைத்தார் அவர்.
சரவணன் அவளின் கையை பிடித்தான். “உனக்கு இப்படி ஆனதும் நான் எவ்வளவு கவலைப்பட்டேன் தெரியுமா?” எனக் கேட்டான்.
‘நான் கண் விழித்ததும் பார்த்தது உன் முகம்தானே? நீ இங்கேயேதானே காவல் காத்த. உனக்கு கவலைதான்!’ என்று நக்கலாக நினைத்தவள் “எனக்கு இப்ப ஒன்னும் இல்ல. குணமாகிட்டு இருக்கேன்..” என்று கடமைக்கு சொன்னாள்.
“அந்த விக்னேஷ் உன் பின்னாடி சுத்துறான்னு கேள்விப்பட்டேன்..” என்றார் கைலாஷ்.
‘அவனை நான் காதலிக்கிறேன்..’ என்ற விசயத்தை இவர்களிடம் சொல்லி விடலாமா என்று யோசித்தவள் இவர்களுக்கு ஏன் சொல்ல வேண்டும், இவர்கள் என்ன நம் சொந்தமா பந்தமா என்று நினைத்து “எனக்கு சரியா தெரியல சார்..” என்றாள்.
“அவனோடு அளவா வச்சிக்க. அவன் பேமிலியோடும் அதிகம் பழகாத. அவங்க குடும்பமே ரொம்ப மோசம்..” என்றார்.
“சரிங்க சார்..” என்றாள் இவளும்.
“அப்படின்னா நீ இப்ப நடந்த எதையும் போலிஸ்கிட்ட சொல்ல மாட்ட. அப்படிதானே?” கைலாஷ் சந்தேகமாக கேட்டார்.
“ஆமா சார்..”
“உன்னை போல ஆட்களை திருத்த முடியாது..” என்று முனகிவிட்டு சரவணனை அழைத்துக் கொண்டு சென்று விட்டார் அவர்.
இவள் புகார் தராதது கனகவதிக்கும் ஆச்சரியத்தைதான் தந்திருந்தது. ஆனால் அது தர்மேந்திரனுக்கு பயத்தை தந்தது. மாயா ஒன்றும் ஏமாளி அல்ல. அவள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கும்.
அவர் சந்தேகப்பட்டது போலவே அடுத்த சில வாரங்களில் மாயாவும் விக்னேஷூம் மாலையும் கழுத்துமாக இந்த வீட்டு வாசலில் வந்து நின்றார்கள்.
பணிப்பெண் ஒருத்தி வந்து தகவலை சொல்ல கனகவதி ஓடி வந்து பார்த்தாள்.
பட்டு வேட்டியோடு அவனும் மயில் நீல பட்டு சேலையில் அவளும் இருந்தார்கள். தாமரை மாலையும் புன்னகையுமாக இருந்தார்கள்.
வாசலில் நின்றிருந்த இருவரும் நெருங்கி வந்து இவள் காலில் விழுந்தார்கள்.
இவளுக்கு மாயா மீது வந்த கோபத்தை விட மகன் மீதுதான் அதிக கோபம் வந்தது. அவளை பற்றி தெரிந்தே இவன் அவளை திருமணம் செய்து வந்திருக்கிறான். அம்மாவின் மீது அவன் வைத்திருக்கும் பாசம் அவ்வளவுதானா?
ஆசிர்வாதம் செய்யாமல் அவள் பின்னால் நகர்ந்துக் கொண்டாள்.
“ஏன்ம்மா உன் மகனை ப்ளஸ் பண்ண கூட உனக்கு அவ்வளவு கஷ்டமா?” எனக் கேட்டான்.
“நீ தெரிஞ்சே துரதிர்ஷ்டத்தை தேர்ந்தெடுத்திருக்க. இனி அந்த கடவுளே வந்து ப்ளஸ் பண்ணாலும் உன் வாழ்க்கை முன்னேறாது..” என்றாள்.
இவன் தந்தையை பார்த்தான். “ஏன்ப்பா நான் கல்யாணம் பண்ணா கூட தப்பா?” அப்பாவி போல கேட்டான்.
“சொல்லாம பண்ணி இருக்கடா..” என்றார் தர்மேந்திரன்.
“சொல்ல தோணலப்பா. முன்னாடியே சொல்லி இருந்தா இந்த கல்யாணத்தை நீங்க ஏத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டிங்க. நான் எல்லாம் யோசிச்சிதான் இவளை கல்யாணம் பண்ணி கூட்டி வந்து இருக்கேன். இஷ்டமா இருந்தா ஆரத்தி எடுங்க. இல்லன்னா நான் இப்படியே உள்ளே வரேன்..” என்றான்.
அவன் முன்னால் கை நீட்டி நிறுத்திய கனகவதி “அவளோட புருஷனா நீ உள்ளே வரக்கூடாது..” என்றாள்.
கணவனின் கைப்பிடித்த மாயா மாமியாரை இடித்து தள்ளி கொண்டு உள்ளே நடந்தாள்.
“ஏய் இது என் வீடுடி..” கனகவதி கூச்சலிட, திரும்பிப் பார்த்த மாயா கைகளை கட்டினாள்.
“நீங்க என்னை கொலை பண்ண பார்த்திங்க. நான் உங்களை போலீஸ்ல கூட போட்டு கொடுக்கல. நான் பழி வாங்க வரல. என் காதலனோடு வாழ வந்திருக்கேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாதிங்க. நீங்க எனக்கு தொல்லை கொடுத்தா நான் போலீஸ்க்கு போவேன்..” என்று சொன்னவள் கணவனிடம் திரும்பி “பெட்ரூம் எங்கே இருக்கு?” என்று கேட்டாள்.
அவன் அழைத்துப் போனான்.
“என்னையே மிரட்டுறா அவ..” என்று கனகவதி கத்த, “அவ ஏதோ பிளான் பண்ணி வந்து இருக்கா. நீ செஞ்ச தப்புக்கு பழிவாங்க கூட வந்து இருக்கலாம். உன் பையன் ஏன் அவளுக்கு சப்போர்ட் பண்றான்னு தெரியல. ஆனா நிச்சயம் ரெண்டு மூனு நாள்ல அவனோட தப்பு அவனுக்கு புரிய வந்துடும். அவனே அவளை வீட்டை விட்டு அனுப்பிடுவான். அதுவரை மட்டும் நீ கொஞ்சம் அமைதியா இரு. அவ உனக்கு எதிரியா இருந்தா எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா உன் பையன் எதிரியா மாறிட்டா அப்புறம் நம்ம வாழ்றதுல பிரயோஜனமே இருக்காது..” என்று இவளுக்கு புரிய வைக்கப் பார்த்தார் தர்மேந்திரன்.
கனகவதி கோபத்தில் சிவந்த முகத்தோடு சென்று சோபாவில் அமர்ந்தாள்.
“தண்ணி கொண்டு வா..” என்று இவர் கிச்சனை பார்த்து குரல் தந்த நேரத்தில் மாடியில் இருந்த தன் பெட்ரூம் கதவை திறந்து மனைவியை உள்ளே அழைத்து போனான் விக்னேஷ்.
மாலைகளை கழட்டி ஓரம் வைத்தாள். கண்ணாடியின் முன்னால் நின்று தன் முகத்தை பார்த்தாள். தாலியை கையில் எடுத்துப் பார்த்தாள். பின்னால் வந்து நின்ற விக்னேஷ் அவளின் தோள்களில் கரங்களை பதித்தான்.
“என்னை கல்யாணம் செஞ்சதுக்கு தேங்க்ஸ்..” என்றான்.
“நான்தான் தேங்க்ஸ் சொல்லணும்..” என்றவளின் கன்னம் பற்றி திருப்பினான்.
“இங்கே உனக்கு முழு துணையா நான் இருப்பேன்..” என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“மூனு மாசத்துக்கு கிஸ் பண்ணாத..” என்றவள் தன் கன்னத்தை துடைத்தாள்.
“இன்னும் ஒன்னரை மாசம்தான் இருக்கு. உன் அப்பா இறந்து ஒன்னரை மாசம் ஆயிடுச்சி..” என்றான்.
இவளுக்கு உடனே கண்ணீர் பூத்தது.
“உன் அப்பாவோட இடத்தை என்னால நிரப்ப முடியாது. ஆனா என்னால முடிஞ்ச அளவுக்கு நான் உனக்கு துணையா இருப்பேன்..” என்றான்.
“தேங்க்ஸ் விக்கி..” என்றவளை கட்டிலில் அமர வைத்தவன் “இந்த ப்ளவர்ஸ் வெயிட்டா இருக்குற மாதிரி தோணுது. கழட்டிடட்டுமா?” என அவள் தலையை தொட்டு கேட்டான்.
“ம்ம்..”
அவள் கேசத்தின் வாசம் அநியாயத்திற்கு போதையேற்றியது. கண்களை மூடி இழுத்து சுவாசித்தான்.
“பூவை வேணா கழட்டி நீ உன் மூக்கோடு சேர்த்து கட்டிக்க..” என்று ஐடியா தந்தாள் மாயா.
“அட மெண்டலு. பூ வாசம் வேற. பூ உன்னோடு கலந்து வரும் வாசம் வேற..” என்றவன் பூவை கழட்டி ஓரம் வைத்தான்.
அவளின் அடர்ந்த கேசத்தை வருடினான்.
சேலையை தொட்டவன் கழுத்தில் மென்மையாக கோலம் வரைந்தான்.
“ஒன்றரை நிமிசம் கூட ஆகல. அதுக்குள்ள இப்படி பண்றிங்களே பாஸ்..” என்றவள் அவனின் கையை தள்ளி விட்டாள். அங்கிருந்த தலையணையில் சாய்ந்தாள்.
“ஏதோ தேவதை ஒன்னு சேலை கட்டி என் ரூம்ல வந்து படுத்திருக்கிற மாதிரி தோணுது..” என்றான்.
“உருட்டுங்க உருட்டுங்க உங்க வாய்தானே?” என்றவள் “கொலுசை கழட்டி விடுறிங்களா? எனக்கு சத்தமா நடக்க பிடிக்காது..” என்றாள்.
இவனும் அவளின் பாதம் பற்றினான். கொலுசுகளை கழட்டினான்.
“என் அம்மாவை அடிச்சிடாத..” என்றான்.
“மாட்டேன். என் முகத்தை பார்த்தே அவங்களுக்கு குற்ற உணர்வாகணும். அவங்களா சாரி கேட்கணும்..” என்றாள். ஆனால் அவளின் மனசாட்சியோ ‘சும்மா சாரி கேட்க அவ என்ன அரை வேக்காடா? அவளை வழி கொண்டு வரும் வரை நிம்மதியான தூக்கம் கூட எனக்கு கிடையாது..’ என்றது.
அவளின் பாதம் வருடினான்.
“விக்கி..”
நிமிர்ந்து பார்த்தான்.
“ஒன்னரை மாசத்துக்கு நமக்கு நடுவுல பில்லோஸ் வச்சிக்கலாம்..” என்றாள்.
“சரி..” என்று உதடு சுழித்தவன் “ஆனா நீ உன் ரூல்ஸை பாலோ பண்றியான்னு பார்க்கலாம்..” என்றான்.
“கொஞ்சம் அழகா இருக்க. அதுக்காக ரொம்ப திமிரோடு பேசாத..” என்றவள் பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்து கண் மூடினாள். “நான் தூங்குறேன். டிஸ்டர்ப் பண்ணாத..” என்றாள்.
அவன் தன் உடையை மாற்றினான். கதவை சத்தமில்லாமல் சாத்தி விட்டு வெளியே வந்தான்.
அவன் ஹாலுக்கு வந்தபோது பணிப்பெண் காப்பியை கொண்டு வந்து தந்தார்.
எதிரில் அமர்ந்திருந்த அம்மாவும் அப்பாவும் இவனை முறைத்தார்கள்
“நீ என்ன வேலை பண்ணி இருக்க தெரியுமா?” எனக் கேட்டார் அப்பா.
“மேரேஜ்..”
“ஆனா அவ உன்னை உண்மையா பிடிச்சி போய் கல்யாணம் செய்வாளா? அவளோட எதிரி நாம..” என்றாள் அம்மா.
“நாம இல்ல. நீங்க..” என்று திருத்தினான் இவன்.
“ஓகே நான்தான் எதிரி. ஆனா எதிரியோட பையனை எந்த பைத்தியக்காரி லவ் பண்ணுவா?” எனக் கேட்டாள் கனகவதி.
“அவ உன் அம்மாவோடு சேர்த்து உன்னையும் பழி வாங்குவா. நீ செஞ்சது முட்டாள்தனம் விக்கி..” என்றார் அப்பா.
“யார் மேல வேணா லவ் வரும். சிவனுக்கும் அவரு மாமனாருக்கும் கூடதான் சண்டை. ஆனா சதி தேவி அவரை லவ் பண்ணலையா? அது போலதான் இதுவும்..” என்றவன் காப்பியை குடித்து விட்டு கோப்பையை ஓரம் வைத்தான்.
“விக்கி நான் உனக்கு லாஸ்ட் வார்னிங் தரேன். அட்லீஸ்ட் உன் மண்டைக்கு புரியும் வரையாவது அவளை விட்டு ஒதுங்கி இரு. கொஞ்சம் எச்சரிக்கையா இரு..” என்றாள் அம்மா.
“கண்டிப்பா..” என்றவன் எழுந்தான்.
“அவ இந்த வீட்டு மருமக. என் மனைவி. அவளை நீங்க யாரும் கஷ்டப்படுத்த மாட்டிங்கன்னு நம்புறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவன் வெளியே சென்று விட, கனகவதி எழுந்தாள். “என் பையனை கொல்ல வந்த அவளை நான் சும்மா விட மாட்டேன். இப்பவே நான் அவளை போட்டு தள்ளுறேன். நான் ஜெயிலுக்கு போனாலும் பரவால்ல..” என்று மாடிக்கு கிளம்ப முயன்றாள்.
அவளின் கையை பிடித்த தர்மேந்திரன் “முட்டாள்தனம் செய்யாத. நீ செய்யும் காரியம் உன் பையனை முழுசா உன்கிட்ட இருந்து பிரிச்சிடும். எதையும் யோசிச்சி செய்யலாம்..” என்றார்.
தொடரும்.
error: Content is protected !!