Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன்-13

உனக்கென இருப்பேன் 13

 

மிக நெருக்கத்தில் அவன் முகம் கண்டு அவள் இதயம் தாளம் தப்பித் துடித்தது.

ஏற்கனவே பலவீனப்பட்டு இருந்தவளை பார்வையால் மேலும் பலவீனப் படுத்திக் கொண்டிருந்தான்.



Advertisement

கீர்த்தி உனக்கு என்னாச்சு? ஏன் என்னை அவாய்ட் பண்ணுற? பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பது போல் அழுத்தமாய் அவளை பார்த்தான்.

அப்படிலாம் இல்லை ….வார்தைகள் டைப்பிடித்தது பயத்தில் .

என்னாச்சும்மா ? அவ்வளவு கனிவுடன் அவள் கண்கள் பார்த்தவன் 

Advertisement

நடுங்கும் அவள் கரத்தை பற்றினான். 

Advertisement

விசுக்கென கையை உதறிக் கொண்டவள் மெல்ல பின்னல் நகர்ந்தாள்.

அவளின் செய்கை  ஆணவனை மிகவும் காயப்படுத்தியது .

அவன் ஆண்மைக்கு இழுக்கு என்னும் போது அவனால் தாங்கிக் கொள்ள  முடியவில்லை.

Advertisement

உன்னை என்ன ரேப் பண்ணவா போறேன்? கண்கள் சிவந்துவிட்டது, சுவாசம் தாறுமாறாய் ஏறி இறங்கியது.

உனக்கு தாலிகட்டியவன் நான் , உன்னை தொட்டு பேச எனக்கு உரிமை இல்லையா?

இல்லை …இல்லை …கண்டிப்பா இல்லை !காதை பொத்திக் கொண்டு கத்தினாள்.

ஏன்டி இல்லை ? விழியால் அவளை எரித்து பஸ்பமாக்க முயன்றான்.

தாலி கட்டிட்டா புருஷன் ஆகிடுவீங்களா? நீங்க நல்லவரே இல்லை…நல்லவர் மாதிரி நயவஞ்சகமா நடிக்கிறீங்க. உங்க கேரக்டர் சரியில்லை…நீங்க கேடுகெட்ட மனுஷன் .அவள் மனதில் இருந்தது அவள் அறியாமலே வந்து விட்டது.

குடிகாரன் மட்டுமல்ல கோபத்தில் இருப்பவனும் உண்மை தான் பேசுவான். அவள் கோபத்தில் உண்மையை பேசிவிட்டாள் . கரையானாய் மனதை அரித்த விஷயத்தை போட்டு உடைத்து விட்டாள்.

என் கேரக்டரை நீ எதில் பார்த்த? தினமும் ஒருத்தி கூட சுத்திட்டு இருக்கேனா? லாட்ஜில் ரூம் போட்டு கொட்டம் அடிச்சுட்டு வரேனா? 

வார்த்தைகள் வலிமையாய் பற்களுக்கு இடையில் கடிபட்டு சின்னா பின்னமாகி வந்தது.

யார் கூட சுத்திட்டு வரீங்கன்னு  யாருக்கு தெரியும்?எதோ ஒரு குருட்டு தைரியத்தில் பேசிவிட்டாள் .

என்ன சொன்ன ..என்ன சொன்ன?இப்போ சொல்லு! 

அவன் பேச்சின் வன்மையில் அவள் மிரண்டு போனாள்.

சொல்லுடி ! நான் என்ன கேடு கெட்டு போயிட்டேன் நீ பார்த்துட்ட? கர்ஜித்தான் . இந்த அஸ்வின் அவளுக்கு புதிது . வார்த்தைகளுக்கு வலிக்காமல் கண்களில் குறும்பு மின்ன ஸ்நேகமுடன் பேசும் அஸ்வினை தான் அவள் கண்டிருக்கிறாள் .

அவனின் விறைத்த தோற்றம் கண்டு பயத்தில் மேலும் நகர்ந்து பின்னால் போனாள்.

அவ்வளவு தான் அவன் வாழ்நாளில்  இதுவரை வராத கோபம் வந்து தொலைத்தது. தாவி அவள் கரம் பற்றி இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

அவள நடுக்கம் கூடியதே அன்றி குறைந்த பாடில்லை .

என்னை என்னடி பொம்பளைக்கு அலையற பொறுக்கின்னு நினைச்சியா?

நாற்பது நாளா ஒரே ரூமில் தான் இருக்கோம் …என்னைக்காவது தவறா உன்னை ஒரு பார்வை பார்த்திருப்பேனா ? தகாத எண்ணத்தோடு என் மூச்சு காத்து உன் மேல பட்டிருக்குமா ? அவன் சிம்மக் குரல் அவளுக்கு கிலியை ஏற்படுத்தியது .

அதிகப்படியான பயத்தில் அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.

கோபம்,ஆற்றாமை,ஏக்கம் எல்லாம் சேர்ந்து ஆணவனின் நிதானம் இழக்க செய்தது. அழுது கொண்டிருந்தவளை  அள்ளி அணைத்து நடுங்கும் அவள் இதழில் வன்முத்தம் வைத்தான்.

அவனிடமிருந்து அவள் விலக போராட…எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது போல் இன்னும் அவனுக்கு கோபம் சுள்ளென்று ஏறியது .

அவள் இதழுக்கு விடுதலை அளிக்கும் யோசனை அற்றவனாய் அழுந்த..அழுந்த…..ஆழமாய் அவளை உயிரில் நிறைத்து நெடு முத்தம் கொடுத்து தன்னை சமன் செய்து கொண்டவன் தொய்ந்த அவள் கோலம்கண்டு கட்டிலில் தள்ளினான்.

நான்காண்டு காதலின் பூரணத்துவத்தை ஒற்றை முத்தத்தில் அனுப்பவித்தான் .

நீ எனக்கானவ,…எனக்கு உரிமை உள்ளவ…உன்னை பலவந்தப்படுத்தல…ஜஸ்ட் ஒரு கிஸ் பண்ணினேன் . தன்னை நியாய படுத்தினான் .

சீ….முகம் சுழித்து கட்டிலில் இருந்து துள்ளி குதித்தவள் …உங்க சுயரூபத்தை காட்டிட்டீங்கல்ல….அங்காரமாய் கத்தினாள் . தோற்றுவிட்ட  உணர்வு அவளுக்கு.

எதுடி என்னோட சுயரூபம்? அவள் கரம் பற்றி தன்னருகில் இழுத்தான் 

அண்ணன் பொண்டாட்டி அரை  பொண்டாட்டி தம்பி பொண்டாட்டி தன்  பொண்டாட்டின்னு ஒரு கேடுகெட்ட பழமொழி உண்டுல்ல …அது போல நடந்துக்கிட்டிங்க …..

என்னடி சொல்ற ? மெல்ல மெல்ல மிருகமாய் மாறிக் கொண்டிருந்தான். அவள் கூறிய உதாரணம் அவனை கூசிப் போக வைத்தது .

தம்பி லவ் பண்ணின பெண்ணை தானும் லவ் பண்ணின உத்தமராச்சே நீங்க ..! 

தம்பி எப்போ சாவான் அவன் பொண்டாட்டியை தாரமாக்கிக்கலாம்ன்னு காத்துட்டு இருந்தீங்களா? 

அவளின் பேச்சு அவனை வேரோடு வீழ்த்தியது. இதயத்தை துளைத்த வார்த்தைகள் ரத்தம் கசிய வைத்தது .

ச்சீ…யாரை பார்த்து என்னடி பேச்சு பேசற ?  அடித்து கொன்றுவிடும் ஆவேசம் வந்தவன் கையை ஓங்கி விட்டான் …ச்சீ …உன்னை தொட்டு அடிக்க விரும்பல. உன்னை தீண்டினால் கூட பாவம் ! என் இருபத்தொன்பது வருஷ ஒழுக்கத்தை ஒற்றை சொல்லில் சிதைத்தவள் நீ!

என் தம்பி சாக நான் காத்திருந்தேனா ? அவனுக்கு விழிகள் கலங்கியது.

உன்னை வெறுக்கிறேன் …அடியோடு வெறுக்கிறேன் …தம்பி பொண்டாட்டியை தரமாக்கிய காமுகனா என்னை பார்க்கிற உன்னை உயிருக்கு உயிரா காதலித்ததை அவமானமா நினைக்கிறேன்.

உன்னை நினைத்த மனதில் இன்னொருத்தியை நினைக்க கூடாதுன்னு கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு இருந்தவன் நான் .

என்னை போய் ….கண்களை மூடி நெற்றியில் குத்திக் கொண்டான் .

என் காதலுக்கான தகுதி உனக்கு இல்லை . உன்னோட என் வாழ்க்கை இனி கடமைக்கு மட்டும் தான் . என் நிழல் கூட உன்னை தீண்டாது . 

எரிமலை பிழம்பாய் வார்த்தைகளை கொட்டியவன் ஆவேசத்துடன் வெளியேறினான்.

என்ன பேசினோம் ஏது பேசினோம் என்று கிரஹிக்கவே அவளுக்கு நெடுநேரம் ஆனது .

என்ன நடந்தது என்று கேட்டிருக்க வேண்டும்!

அஸ்வின் கண்களில் பொய்யில்லை . அவன் வார்த்தை போலியாய் இருக்க வாய்ப்பில்லை. நான் அவசரப்பட்டு  விட்டேன்.

 காய்ச்சல் கண்ட உடம்பு  தளர்ந்து போன நிலையில் இயலாமையால் எக்குத்தப்பாய் ஏதோ பேசிவிட்டேன் . வார்த்தைகளின் வீரியத்தை  தாமதமாய் உணர்ந்து கொண்டாள்.

அவன் இவ்வளவு ஆவேசமாய் பேசிவிட்டு போகிறான் எனில் அவனிடம் தவறில்லை தானே …

நான் என் வாயால் கெட்டு விட்டேனே…. எனக்கும் என் குழந்தைக்கும் எல்லாமுமாக இருந்தவனை வார்த்தையால் வதைத்து விட்டேனே… கடவுளே எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது ? மடங்கி சரிந்தவள் ஆற்றுவார் தேற்றுவார் யாருமின்றி அழுது கரைந்தாள்.

தன்  தவறை  எண்ணி தன் விதியை எண்ணி முழங்காலில் முகம் புதைத்து கேவி அழுதாள்.

எதுவானாலும் மனம் விட்டு பேசு என்று சொல்வாரே … நான் பேசி இருந்தால் இன்றைக்கு இவ்வளவு பெரிய சங்கடம் நேர்ந்திருக்காதே…. நான் பேசாமல் என் வாழ்க்கையை கெடுத்து கொண்டேனே … இது தான் பெண் புத்தி பின் புத்தி என்பதா ?

“…………….”

இரவு எதுவும் சமைக்கவில்லை , இருவரும் சாப்பிடவில்லை.

சுத்தி சுத்தி வந்து கீர்த்தி கீர்த்தி என்று வாய் ஓயாமல் அழைப்பவன் இன்று அவளை வெறுத்து ஒதுக்கி விட்டு ஹாலில் இருக்கும் சோஃபாவில் கண்மூடி படுத்திருந்தான் .

கீர்த்தி என்று ஒரு ஜீவன் அந்த வீட்டில் இருக்கிறது என்பதை அடியோடு மறந்து விட்டான் போலும் …!

அலைப்புறும் அவன் மனம் இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை.

மறக்க கூடிய மன்னிக்க கூடிய வார்த்தைகளை அவள் பேசவில்லையே …. குன்றி படுத்திருந்தான் .

ஒரு பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் தன் நடத்தையை தரம் தாழ்த்தி பேசும்போது இதயம் நொறுங்கிவிடும் தானே … ?

எத்தனை பெரிய அவச்சொல்லை அத்தனை சாதாரணமாய் சொல்லிவிட்டாள்  எனில் அவள் மனத்தில் தனக்கான இடம் எது? புரிந்து கொண்டவனுக்கு மேனியே பற்றி எரிந்தது.

பெண்களின் சதை திரட்சி கண்டு அலைபவனா நான் ? கடவுளுக்கு நிகரானது என் காதல் என்று கர்வம் கொண்டிருந்தேனே …என் கர்வம் அவள் பேச்சில் தூள்  தூளாக சிதறி விட்டதே. சூட்டு கோளால் சூடு வாங்கியவன் போல் துடித்தான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!