சுடர்கின்ற காதல் தீயே. 4
ஒரு வருடம் கழித்து,
கொடைக்கானல் நகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற போர்ட் நம்மளை அன்போடு வரவேற்கிறது.
Advertisement
கொடைக்கானலில் உள்ளே நாயுடுபுரம் என்று ஏரியாவில், மிகுந்த குளிருக்கு நடுவில் அமைந்திருந்த, அந்த கெஸ்ட் ஹவுஸ், பனிப்பொழிவு எங்கும் இருக்க, வெள்ளை மேகங்கள் அங்கே தாங்கி, கீழே இருந்த செடிகள், ஈரமாக இருந்தது.
அங்கு பங்களா இருக்க பங்களாவுக்கு சற்று கீழே தள்ளி, இரண்டு அறைகளைக் கொண்ட ஒரு வீடு இருந்தது.
அங்கே குழந்தையின் அழுகுரல் கேட்க,
Advertisement
” செல்லக்குட்டி இருங்க அம்மா வந்துட்டேன்”, என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தால் கலை.
Advertisement
பெண் குழந்தை ஒன்று அமர்ந்து அழுது கொண்டிருந்தது பசியில்.
அவள் வேகமாக பருப்பு சாதத்தை கொண்டு வந்து, குழந்தைக்கு ஊட்டி விட, பசியில் நன்றாக சாப்பிட ஆரம்பித்தால் ஆதிரா.
Advertisement
கண்ணிமைக்காமல் தன் குழந்தையை பார்த்துக் கொண்டு, அழகாக சாப்பாடு ஊட்டி விட, வாயையும் துடைத்து விட்டு, உடைமாற்றி, பேப்பர்ஸ் போட்டுவிட்டு, அழகு தேவதையாக அவளை ரெடி பண்ணினாள்.
அன்று அங்கிருந்து கிளம்பியவள் இங்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.
” என்ன மா புள்ள சாப்பிட்டுருச்சா? “என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தால் வாசுகி பாட்டி.
” சாப்பிட்டா பாட்டி. சாப்பாடு கொண்டு வர குள்ள கத்தி வெறச்சிட்டா? “
” நீ முன்னாடியே ரெடி பண்ணி வைக்கலாம் இல்ல”
” சூடா இருக்கணுமே பாட்டி முன்னாடியே வெச்சா, ஆறிப் போய்விடும் இவளுக்கு சீக்கிரம் சளி வேற பிடிச்சிடுது. விடுங்க எனக்கு பொறந்தா கொஞ்சம் பசியும் தாங்கி பழகணும். அப்பதான் சாப்பாடு ஓட அருமை புரியும்”
” என்ன தாயே இப்படி எல்லாம் பேசுற உனக்கு என்ன இங்க நல்ல சம்பளம் வாங்குற? கணக்கு வழக்கு தோட்டம் எல்லாம் நீ தானே பாத்துக்குற? நல்லபடியா தானே இருக்க அப்புறம் என்ன?”
” பாத்தா அப்படித்தான் தெரியும். பெத்த அம்மாவுக்கு துரோகம் பண்ண நல்லா இருக்க முடியுமா? எவனையோ நம்பி அப்பா, அம்மாவ விட்டு போனதுக்கு, இதோ இங்க, அப்பன் பேரு யாருன்னு தெரியாத குழந்தை. இப்போ ஓகே சுத்தி இருக்கிறவங்களுக்கு டைவர்ஸ் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டேன். இவ வளர்ந்து வரும் போது கேப்பாளே, அந்த நாய் பேரையும் சொல்ல முடியாது, இவளோட உண்மையான அப்பா யாருன்னு தெரியாது. எவ்வளவு கஷ்டமான நிலைமை தெரியுமா பாட்டி? நீங்க இருக்கிறதுனால என்ன புரிஞ்சுக்கிட்டிங்க, உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, என் நிலைமையை யோசித்துப் பாருங்கள். விடுங்க பாட்டி இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு போறோம் இவ தான் என்னோட வாழ்க்கை இவள நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும்” என்று சொல்லி விட்டு குழந்தையை பாட்டி இடம் விட்டு விட்டு கணக்கு வழக்கு பார்க்க சென்றாள்.
பங்களாவை சுற்றி கீழே தோட்டம் இருந்தது. அங்கு நெறைய பேர் வேலை பார்க்க, பங்களாவையும் பார்த்து கொண்டு சூப்பர்வைஸ் பார்த்து கொண்டு இருக்கிறாள்.
…….
பெங்களூர்…
அந்த மிகப்பெரிய அரண்மனை வீட்டில், தனது அறையில் சோகமாக அமர்ந்து குடித்துக் கொண்டு இருந்தான் ருத்ரன். சில வருடங்களாக அப்படித்தான் இருக்கிறான். அவன் முகம் இறுகிப்போய் கண்கள் சிவந்து போயிருந்தது. எதுவும் பிடிக்கவில்லை. வாழ்க்கையை வெறுத்து போய் குடித்து உடலை அழித்துக் கொண்டிருந்தான்.
இத்தனைக்கும் அவன் ஒரு மருத்துவன். குடிக்க கூடாது என்று முடிவில் இருந்தவன் தன் வாழ்க்கையை வெறுத்து போய் , எதிலும் நாட்டம் இல்லாமல் இப்படி இருக்கிறான். அதற்கு அவனது கடந்த காலமே சாட்ச்சி.
கீழே தாத்தாவும், பாட்டியும் அவனை நினைத்து வேதனையில் தான் இருந்தனர். எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டானே, அதுவும் இந்த இரண்டு வருடங்களாக மிகவும் மோசமாகிவிட்டது. காரணம் புரியாமல் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
“வள்ளிமா அவனை இப்படி பாக்க என்னால முடியல ” என்று தாத்தா கதிரேசன் பாவமாக கூறினார்.
” என்னாலையும் முடியல. ஒரே பேரன்னு எப்படி எல்லாம் வளர்த்தோம், கடைசில இப்படி குடிகாரனா மாறுனது பார்க்க தான் உயிரோட இருக்குமா? ” என்று பாட்டியும் வேதனையாக சொல்ல இருவருக்கும் இருவரே ஆறுதல்.
“எல்லா அவளால வந்தது. என் பேரனோட வாழ்க்கையை இப்படி மாத்திட்டா. அவன ஆம்பளையே இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டா. எந்த ஆம்பளைனால இதை தாங்கிக்க முடியும். இத்தனைக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க. அதனால தான் என் பேரன் உடைஞ்சு போயிட்டான்” என்று பாட்டி புலம்ப தாத்தாவுக்கும் அதே எண்ணம்.
” எல்லா சரியா வந்தது. ஆனால் இந்த ரெண்டு வருஷம் இன்னும் ரொம்பவே மாறிப் போயிட்டான். எல்லாத்தையும் மறந்து வேலைக்கு போலாம்னு சென்னை போனவன், இன்னும் வெறி புடிச்சவனா தான் இங்க வந்தான். ஒருவேளை அவள அங்க பார்த்திருக்கணும் அதனால வந்த கோபமா இருக்கும் “
” இருக்கலாங்க, ஆனா இனிமேல் இதை இப்படியே விடக்கூடாது இதுக்கு ஏதாவது பண்ணனும். அவன கொஞ்சமாவது மாத்த முயற்சி பண்ணனும் ” என்று அந்த பாட்டி சொல்ல இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.
குடித்துவிட்டு மட்டையாகிக் கிடந்தவன், ” நீ எப்படி டி இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கானவ முதல்ல என்கிட்ட தானே வந்து இருக்கணும். எப்படி கல்யாணம் ஆன ஒரு பொண்ண நான் தொடலாம். அப்ப அவ என்னோட இல்லையா? நீ வேற ஒருத்தவன் பொண்டாட்டியா? நான் பண்ணது ரொம்ப பெரிய பாவம். இந்தப் பாவத்திலிருந்து எனக்கு விமோசனமே கிடைக்காதா? முதல் முதல ஒரு பொண்ணு மேல உணர்ச்சி. ஆனா அந்த பொண்ணு எனக்கு சொந்தமில்லை. இந்த கடவுள் எது எனக்கு நல்லதாகவே கொடுக்க மாட்டார் போல” என்று புலம்பிக்கொண்டு உறங்கிப் போனான் ருத்ரன்.
