Skip to content
Post Views: 1,519
” பாசமலர் சீன் ஒட்டி முடிச்சிட்டேன்னா கிளம்பு, சீக்கிரம் எல்லா வேலையும் முடி, “
” லவ் ட்ராக் ஓட்டனும், செக் போஸ்ட் மாதிரி நீ நிக்காதேன்னு சொன்னா., போக போறேன்., ஏண்டி வேலையுனு விரட்டுற., ” கலாய்த்தபடியே நகர்ந்து,
Advertisement
” அண்ணா !!! மேடம் காலையில் இருந்து சூடா இருக்காங்க., கூல் பண்ணு..,மீ எஸ்கேப் ” அவள் வெளியே சென்ற பின்னும் அமைதியாய் இருக்க.
Advertisement
” என்ன கோபம்.,? “
Advertisement
“உங்களை பத்தி எனக்கு தெரியாதது தான் அவளுக்கு தெரியுமா.,? அவளை சொல்ல சொல்றிங்க., ? ” சட்டென்று பொரிய,
Advertisement
” பார்றா., என் லயாவுக்கு பொஸசிவ் அருவி மாதிரி பொங்குதே., ” அவன் கூறிய பின்பு தான் சாதாரணமாய் பேசிய விசயத்துக்கு கூட தனக்கு தான் உரிமை என அவள் எண்ணியதே புரிந்தது.
” நேத்து நைட்டில் இருந்து என்ன கோபம்? சிவாகிட்ட கூட பேசவே இல்லையாம்.,?
” அதுக்குள்ள உங்களுக்கு நியூஸ் வந்துருச்சா., ? அதான் வந்திங்களா ?”
” என்னனு சொல்லுமா., ?” தன்மையாய் கேட்க.
” நம்ம ரெண்டு பெரும் லவ் பண்ணி கல்யாணம் பண்றோம்னு இன்வைட் பண்ற எல்லாரும் கிண்டல் அடிக்கிறாங்க., பதில் சொல்லி முடியல., அதுலயும் என் பக்கத்துக்கு ரூம் சினேகா அன்னைக்கு மால்ல உங்களை நான் பார்த்தப்பவே டவுட் வந்ததாம். வச்ச கண்ணு வாங்காம பார்த்தேனாம்.,
உங்க பின்னாடியே சுத்தி வந்து கரெக்ட் பண்ணிட்டேன்னு கிண்டல் பண்ணுறா.., எனக்கில்லை தெரியும், நீங்க இன்னும் என்கிட்டே பேசவே யோசிக்கிறது. கடுப்பாய் வந்துச்சு., அதான் யாருகிட்டயும் பேசாம அமைதியா வேலை பார்த்துட்டு இருந்தேன்., அவனுங்க உங்கட்ட போட்டு கொடுத்துட்டாங்க., “
காதலே இல்லாமல் காதல் என்று சொல்லும் போது வேதனை தானே வரும். அப்பா அம்மா பார்த்து திருமணம் முடிக்க பேச்சை கேட்கவே முடியவில்லை அவளால். அதிலும் இவன் பேசாமல் அமைதியாய் இருப்பது கோபத்தை தான் தூண்டியது.
” ஆமாம்., நாங்க லவ் தான் பண்றோம்னு சொல்ல வேண்டியது தானே., எதுக்கு டென்ஷன் ஆகுற., ?”
” நம்ம லவ் பண்ணோமா., ஏங்க நீங்க வேற ..,?”
” முன்ன பண்ணல, இப்போ பண்றோம் தானே ., இல்லைனு சொல்லு பார்ப்போம்,”
“!!!!…”
” ஜஸ்ட் சில்.., பார்க்குறவங்க கண்ணுக்கு நம்ம லவ் மேரேஜ் பண்ணதா இருக்கட்டுமே, எதுக்கு டென்ஷன் ஆகுற., “
ஒன்றுமே கூறாமல் அமைதி காக்க., ” விடும்மா., அவங்க பேசுற பேச்சை எல்லாம் லூசுல விடு., சொல்றவன் கிளம்பி போயிருவான், நம்ம தான் கஷ்டப்படணும், பிரீயா இரு.”
“!!!!”
” நீ இப்படி அமைதியா இருந்தேன்னா எனக்காக தான் நீ மாறிட்டேனு சொல்லி என்னை காய்ச்சி எடுக்கிறாங்க., “
” இப்பவும் அவங்க சொல்றங்கன்னு தானே என்கிட்டே பேசுறீங்க., “
” ஏய் அவங்க என் பிரென்ட், நீ என் லயா, என் உயிர், உன் மேல எனக்கு அக்கறை இருக்காதா., அவனுங்க சொல்லி உன்னை வந்து நான் பார்க்கனும்னு அவசியமே இல்லை. நேத்து ஒரு நாள் பேசலை, அதுக்கு மேடமுக்கு என்னா கோபம் வருது,
ராஜா மாதிரி உனக்கும் என் மேல ரொம்ப பொசசிவ். ஆனால் இவ்ளோ சீக்கிரம் நான் எதிர்பார்க்கல. நேத்து புல்லா கிளைண்ட்ஸ் எல்லாருக்கும் இன்வைட் பண்ணிட்டு இருந்தேன், ஜிவெல்ஸ் பர்சேஸ்ன்னு அலைஞ்சேன்., ” இத்தனை விளக்கம் கொடுத்ததும் கொஞ்சம் முகம் மாறியது.
மேஜையில் ஒரு கையை ஊன்றி கொண்டு, தாடையில் முகம் பதித்து அவன் முகத்தையே அமைதியாக பார்த்து கொண்டு இருந்தவளை கண்டதும் இவளின் கோபம் அவர்கள் சொன்னதினால் இல்லை, தான் பேசாததில் தான் என்பது புரிய மெல்ல தெளிந்தான்.
” நான் அமைதியானா தான் பேசுவீங்களா .., கோபத்துல பேசாம இருந்தா மத்தவங்களுக்கும் இப்படித்தான் வலிக்கும்., சண்டே என்னை விட்டுட்டு கார்ல தனியா கிளம்பி போக தெரிஞ்சது., இனிமே கோபத்துல தனியா போய் உட்கார்ந்திங்கே அப்போ இருக்கு உங்களுக்கு.,”
நண்பர்களை சந்தித்த பின் முகம் கசங்க அமைதியாய் மாறா தனியே கிளம்பி சென்றதில் வருத்தம். நேற்றும் காலை முதல் இரவு வரை இயந்திரதனமாய் வேலை செய்தான் என ராஜா புலம்ப வருத்தம் கோபமாய் மாறியது.
ஏன் தனித்து துயர் சுமக்க வேண்டும். வாழ்வில் சந்தோசத்தை பகிர தான் உறவா?. சோகம் சொன்னாலும் குறையும் தானே ? தன்னிடம் கூட பேசவில்லை எனில் வாழ்க்கை முழுதும் இதுவே தொடருமோ என தோன்றியது.
அதற்கு தான் நேற்று வேலை முடித்து சென்றபின் இரவில் இருந்து வீட்டில் இருந்த இரு அண்ணன்களோடும் பேசாமல் இருந்தது. அங்கே தட்டினால் இதோ இங்கே வந்து உடனே நிற்கிறானே என்றே தோன்றியது. நட்பிற்காக என்றாலும் தன் மேல் உள்ள அன்பையும் வார்த்தையால் வெளிப்படுத்தி விட்டானே என்ற நிம்மதியும் சேர்ந்தே பிறந்தது.
” ஓகே. இனிமே தனியா போகல… பேசாம வேலை பார்க்கல… மொத அவங்கட்ட பேசு. ” சிரித்தபடி தலையசைத்தாள்.
” டிரஸ் மாடல், ஜிவெல்ஸ் உனக்கு ஓகே தானே.., “
” ரெண்டுமே ரொம்ப பிடிச்சிருக்கு., இது எப்போ போட வாங்கிருக்கிங்க., “
” மேரேஜ் அன்னைக்கு நைட் ” என நிறுத்த ” நைட் போடுறதற்கு இந்த ட்ரெஸ்ஸா? , ” சற்றே முகம் சிவக்க ஒன்றும் கூறாமல் இருந்தாள்.
” நைட் ரிசெப்சன் அப்போ போட்டா நல்லா இருக்கும்ல., நீயும் ரெட் கலர்ல சிவந்து போய் நிற்க போற, உன் பேஸ் மேட்ச் பார்த்து நகை வாங்குனேன்., உன் முகம் புல்லா ரெட்டிசா இருக்கும். அப்போ இந்த காம்பினேஷன் மேட்ச் ஆகும்ல. ” குறுகுறுப்பான அவன் பார்வையில் வெட்கம் வர, எழுந்து ஜன்னல் அருகே சென்று நின்றவளோ, எதிர் திசையில் வேடிக்கை பார்த்து நாணம் மறைத்தாள்.
” ஒருத்தன் கொண்டு வந்து கொடுத்தா நல்லா இருக்கானு கழுத்துல போட்டு பார்க்கனும், ரசிச்சு பார்த்துட்டு இருக்க கூடாது, ” எப்போது நகையை கையில் எடுத்து கொண்டு தன்னருகே வந்து நின்றான் என கூட அவளுக்கே தெரியவில்லை.
கழுத்து அருகே அவன் கை வந்ததும் தான் கண்டு கொண்டாள். அவள் மீது விரல்கள் படாமல் நகை அணிவித்து இருந்தாலும் திடீர் நெருக்கம் மூச்சு முட்ட வைத்தது.
” சூப்பரா இருக்கு. இந்த கிரீன் சேரிக்கு கூட நல்லா தான் இருக்கு. ” கழுத்தை ஒட்டி கரத்தை இன்னும் நகர்த்தாமல் தான் இருந்தான். அவன் மூச்சு காற்று முதுகில் படர அதன் வெம்மையில் தகிக்க ஆரம்பித்தது. சற்றே திரும்பினால் கூட மீசையின் குறுகுறுப்பும், இதழ் சிபரிசமும் அவளை தீண்டும். கால் பெரு விரல்களை அழுத்தி மடக்கி தன் உணர்வை அவனுக்கு காட்டாமல் தடுக்க, கன்னத்தின் செம்மையோ அவளையும் முந்தி கொண்டு பிரதிபலித்து விட்டது.
” பார்றா., மேடமுக்கு இப்போவே வெட்கம் வருது., செம்மயா செட் ஆகுது., இன்னும் கொஞ்சம் வரனுமே., என்ன பண்ணலாம்., ” யோசித்த பாதையில் சட்டென கரங்களை தோளை சுற்றி போட்டவன், இறுக்கி அணைத்து கொண்டு ” கிஸ் பண்ணா இன்னும் ரெட் ஆகுமா.,? அவளையே கேள்வி வேறு கேட்க வெட்கம் பிடுங்கி வந்தது. ” ஏன்டா இப்படி படுத்துற..,” என்பதாய் பார்த்தாள் இமை படபடத்து.
” செழித்த அழகில்
சிவந்து நிற்கும் செந்தேனே…
என் கழுத்து வரையில் ஆசை
வந்து நின்றேனே… வெறித்த
கண்ணால் கண்கள் விழுங்கும்
பெண்மானே உன் கனத்த
கூந்தலின் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே…” கிசுகிசுப்பாய் பாடலை வேறு பாடி கலவரப்படுத்த செய்தான். அமைதியான அறையில் அவன் பாடல் மட்டும் காதில் ரீங்காரமாய் ஒலிக்க ஒளிவதற்கு இடம் தேடி மனம் அலைபாய்ந்தது.
” அடப்பாவி., ஒன்னை போயி ஒன்னும் தெரியாதவன்னு நினைச்சேனே? ” மனதில் தான் நினைத்தாள்.
சற்றே விலகி நின்றவனோ ” தெரியாம எல்லாம் இல்லை. தொட்டா அடுத்து கையை எடுக்க தோணாதுன்னு தான் பக்கத்துல வராம இருக்கேன்., “
அவள் வாயே திறக்காமல் மௌன மொழி பேசினாலும் புரிந்து கொள்பவனை வைத்து கொண்டு என்ன செய்திட முடியும் பேதை பெண்ணால். அவன் இமையோடு தன்னை தொலைத்து முற்றிலும் அவன் வசம் மனம் சென்று விட்டது. அமைதியாய் இருந்த வானில் காரிருளை மேகம் சூழ சடசடவென மழை பொழிய தொடங்கியது.
அந்த நிமிடம் கொட்டும் மழையில் கரங்களை இறுக கோர்த்து கொண்டு மேகத்தின் தாளத்தில், இடியின் கானத்தில், நீரின் லயத்தினில் மிதந்திடும் ஆசை வந்தது. மின்னலை ரசித்து கொண்டு மின்னும் மின்னலையும் அணைத்து கொள்ள துடித்தது மாறனின் மனம். மங்கையவளோ அவன் புறம் திரும்பாது, மாரியை ரசித்து கொண்டிருக்கும் பாவனையில் அமர்ந்திருக்க அவளிலும் அவனே வியாபித்திருந்தான்.
error: Content is protected !!