Skip to content
Post Views: 6,941
வேலைகள் அதன் பாட்டிற்கு நடந்தது வீட்டில் கிடந்த ஒற்றை படுக்கை கட்டில் இவர்களின் வீட்டிற்கு மாற்றப்பட்டது, புதியதாக ஒரு டேபிள் பேன் வாங்கப்பட்டது.
Advertisement
முதலில் அறைக்குள் படுக்கவைக்கலாம் என்றுதான் எண்ணினான் ராஜா ஆனால் அது சரியாக வராது தானும் காலை அலுவலகம் சென்றுவிட்ட பிறகு தாயை கழிவறை கொண்டு செல்வது கனகத்திற்கு மிகவும் சிரமம் என்று யோசித்து வரவேற்பறைக்கும் அடுப்படிக்கும் பொதுவான சுவற்றோடு ஒட்டிப் போட்டுவிட்டான்.
Advertisement
Advertisement
கைச்சரியாகவே எப்படியும் மாதம் ஆகும் காலில் நல்ல அடி ரத்தம் கட்டி கிடந்தது வீக்கம் வேறு ராக்காயால் உதவியின்றி எழுந்து நிற்கவும் முடியவில்லை, படுக்கையிலே அனைத்தும் செய்துகொள்ளவும் அவருக்கு விருப்பமில்லை.
Advertisement
அன்று மருத்துவமனையில் அந்த வீட்டிற்கு நாங்கள் வரப்போவதில்லை நீங்கள் அங்கு வருவதனால் பார்த்துக்கொள்கிறோம் என்று அவன் சொல்ல மருமகளை வசைபாடத் தொடங்கிவிட்டார் ராக்காயி, கனகம் கணவனை அயற்சியாய் பார்த்துநின்றாள் விட்டுவிடு என்னால் முடியவில்லை என்பதாக.
“என் வீட்டை விட்டு நான் எதுக்குடா வரணும் உன் பொண்டாட்டி என்ன அவ்ளோ பெரிய ஆளா இவ வெச்சதுதான் சட்டமா இவ வீட்டில வந்து நான் கிடக்கனுமா” என்று அவர் பாட்டிற்கு கத்தினார்.
செல்லியம்மாவும் “அடியே என்ன நினைச்சுட்டு இருக்க அவ்ளோ சொல்லியும் உனக்குப் புத்தி…” என்க.
“நிறுத்துங்க” என்ற ராஜகுமாரன் “நீங்க ஒரு வார்த்தை பேசக் கூடாது” என்றான் மாமியாரை பார்த்து.
“என்னை என்னனு நினைசீங்க முதுகெலும்பு இல்லாதவன்னா இல்ல ஆம்பளையே இல்லன்னு நினைசீங்களா, அவங்கதான் புரியாம பேசறாங்கன்னா நீங்களும் அப்படியே பேசுறீங்க எனக்குச் சுயபுத்தியில்லயா பொண்டாட்டி சொல்றதை மட்டும் கேட்டு ஆடுறவன் மாதிரியா உங்களுக்கு என்னைய பாத்தா தெரியுது”.
“கல்யாணம் ஆனா நிமிஷத்துல இருந்து இப்போ சொன்னேனே இந்த முடிவுவரைக்கும் இது எல்லாமே என் முடிவு, நான் என்ன சொன்னேனோ அதைத்தான் என் பொண்டாட்டி கேட்டுகிட்டு இருக்கா புருஷன் சொல்றதை கேட்டுக்கணும்னு சொல்லிச் சொல்லித்தானே வளர்த்தீங்க அவளை அவளும் அதைத்தானே செய்றா”.
“இதே அவ நான் சொல்றதை கேக்காம போயிருந்தா புருஷனை மதிக்க மாட்றா திமிர் பிடிச்சவன்னு சொல்லியிருப்பீங்க ஆனா இப்போ அதையே அவ செய்யவும் அப்படியே பழியை திருப்பி அவ மேல போடுறீங்க, இதுல நீங்க எல்லாரும் என்ன சொல்ல வரீங்க எனக்குப் புத்தியே கிடையாது எல்லாமே எனக்கு என் பொண்டாட்டிதான் சொல்லிக் குடுக்குறா நான் ஒரு மடையன் யோசிக்க தெரியாதவன் அப்படித்தானே” என்றதும் பதறிவிட்டார் செல்லியம்மா.
“ஐயோ மாப்ள அப்படியில்ல” என்றதும்.
“என்ன அப்படியில்ல இங்க நான்தானே பேசிட்டு இருக்கேன் அப்போ நீங்க என்கிட்டே தானே கேக்கணும் சும்மா நிக்குற அவளைத் திட்டுறீங்க அப்போ அதுக்கு அர்த்தம் என்ன என் வார்த்தைக்கு எந்த மதிப்பும் இல்ல அப்படித்தானே” என்று உச்ச கட்ட கோபத்தில் பொரிந்தான் கப்சிப்பென்று அமைதியாகிவிட்டார் செல்லியம்மா.
“உனக்கு என்னம்மா பிரச்சனை” என்றான் தாயிடம்.
“நான் வரமாட்டேன்” என்றார் அவர்.
“சரி வராத ஆள் வெச்சுக்கலாம்” என்றான் அவன் அசராமல்.
“வரவங்க காலைல எட்டு மணிக்கு வந்துட்டு சாயந்திரம் ஆறு மணிக்குப் போய்டுவாங்க இது ஒன்னும் சிட்டி இல்ல கூடவே இருந்து பாத்துக்க ஆள் கிடைக்க மாட்டாங்க இதுக்கே எப்படியும் பத்தாயிரம் கேப்பாங்க”.
“அப்புறம் சமையலுக்கு தனியா ஆள் வைக்கணும் வீட்டு வேலைக்கு ஆள் எல்லாம் சேத்தா எப்படியும் மாசம் இருபதுக்கிட்ட செலவாகும், நான் பத்து கொடுக்குறேன் உன் மூத்த பிள்ளைக்கிட்ட பத்து வாங்கிக்க” என்று அவன் அடுக்க விழி பிதுங்கியது.
“ஏதே பெரியவனிடம் கேட்பதா அவன் கொடுத்துவிட்டுத்தானே அடுத்த வேலையே பார்ப்பான்… நீதானேடா வீராப்பா வெளில போனா” என்றார் அவர்.
“ஆமா அதே வீராப்போட வெளிலதான் இப்போவும் இருக்கேன் வரேன்னு நான் சொல்லவேயில்லயே, இன்னொரு திருத்தம் நான் போறேன்னு சொல்லல நீதான் வெளில போச்சொன்ன நல்லா யோசிச்சு பாரு இப்படி சொன்னதுக்கு அப்புறமும் அங்கேயே இருக்க என்னைய என்ன மானங்கெட்டவன்னு நினைசீங்களா” என்றான்.
“சரிப்பா நீ சொல்றதே சரியா இருக்கட்டும் இப்போ அங்க வரத்தானே சொல்றேன்” என்றார் ராக்காயி மகனை மடக்கி விட்டதாக நினைத்து.
“ஏதே வரச் சொன்னீங்களா உங்களைப் பாத்துக்க அவளை வேலைக்காரியா வரச் சொல்லுற… அதுக்கு என் பொண்டாட்டி ஆள் இல்ல நல்ல மனசோட திருப்பிக் கூப்பிடு அப்போ யோசிக்கலாம்”.
“நானே ஆள் வெச்சு பாத்துக்கலாம்னு சொல்லியும் இந்தப் பைத்தியக்காரிதான் நானே பாத்துக்குறேன்னு நிக்குறா நான் சொல்லல நீ என்ன செஞ்சாலும் இவங்ககிட்டலாம் நல்ல பேர் எடுக்க முடியாதுன்னு நீதான் மனசாட்சி மண்ணாங்கட்டினு பேசுற” என்றான் மனைவியிடம்.
வேறு வழியும் தெரியவில்லை யோசித்து யோசித்து இறுதியில் சம்மதிக்கவேண்டிய நிலை ராக்காயிக்கு மகனின் வீட்டிற்க்கே சென்றார், கனகத்திற்குத்தான் வேலை சரியாக இருந்ததது அதிகாலை எழ வேண்டும் யோககுமாரனுக்கும் மாமனாருக்கும் கூட இங்கிருந்தே உணவு மூன்று வேளையும்.
அவளும் அந்த வீட்டின் மருமகள் அல்லவா அக்காவும் அங்கில்லை அணைத்து பொறுப்பும் அவள் தலையில், காலை உணவு மதிய உணவு இரண்டும் காலையே தயாராக வேண்டும் அதோடு காலை மாமியாரை குளிக்க வைக்க வேண்டும்.
ஏழுமணிபோல ராஜா தாயை அப்படியே தூக்கி சென்று குளியலறையில் விட்டுவிடுவான் அவர் காலைக்கடன்களை முடிக்க அவரைக் குளிக்கவைத்து உடை மாற்றி விடுவாள் கனகம்.
புடவை கட்ட முடியாது என்று அவரை நைட்டி போட வைப்பதற்குள் அவளுக்கு நாக்கு தள்ளி விட்டது முதல் நாள், காலை எட்டுமணிக்கு கனகசபை வந்துவிடுவார் காலை உணவை முடித்துவிட்டு யோகனுக்கு காலை உணவையும் பேக் செய்யப்பட்ட மதிய உணவையும் வீட்டிற்கு கொண்டுவந்து மகனிடம் கொடுத்துவிடுவார்.
மதியம்போல் சாப்பிட வீட்டிற்கு வந்துவிடுவார் மாலை தேநீர் சிற்றுண்டி பிறகு இரவுணவை முடித்து மகனுக்கு உணவோடு அங்குச் சென்றுவிடுவார், மறுநாள் காலைத் தந்தை மகன் இருவரது அழுக்கு உடைகளும் வந்து சேரும்.
ஒரு வாரம் வேலை வேலை என்று நேரம் இல்லாமல் சுற்றிய ராஜாவின் கவனத்தல் இது விழ மொத்தமாகத் துணிகளைச் சலவைக்கு கொடுக்க ஏற்படு செய்துவிட்டான், காலை அவன் உதவி செய்தாலும் அவன் இரவு வரும்வரை ராக்காயியை அவளே கைத்தாங்கலாகப் பின்னால் அழைத்துச்செல்ல வேண்டும்.
அவருடைய மொத்த உடலின் எடையையும் அவளால் தாங்க முடியாது மூச்சு முட்டிப் போகும் அவளுக்கு, சரியான ஓய்வு இல்லை உறக்கமும் இல்லை இரவில் அடிக்கடி வெளியில் செல்ல வேண்டும் என்பார், ஒரு வாரம் ராஜகுமாரன் எழுந்து வந்து உதவினான் சரியான உறக்கம் இல்லாமல் அவனுக்குத் தலைவலியும் சோர்வும் சேர்ந்துகொண்டது.
வண்டி ஓட்டி அலுவலலகம் செல்ல வேண்டும் அங்கும் மிஷினில் வேலை பார்க்கிறான் கொஞ்சம் கவனம் சிதறினாலும் பெரும் அபாயம் ஆகிவிடும், கனகம் திடமாக மறுத்துவிட்டாள் வேண்டாம் நீங்கள் அறையில் படுத்துக்கொள்ளுங்கள் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று.
அவனுக்கு நிம்மதியான உறக்கத்தை உறுதி படுத்தி அவள் தேய்ந்து கொண்டிருந்தாள், கிராமம் அல்லவா ஆட்கள் வந்து போய் இருப்பார்கள் அவர்களுக்குக் குடிக்க சாப்பிட கொடுக்க வேண்டும், வீட்டில் நேரம் போகாமல் கிடக்கும் வயதான ராக்காயின் தோழிகள் இதுதான் சாக்கென்று நலம் விசாரிக்க வந்து அப்படியே கதையும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
“உன்னால வெளில வரமுடியலையே அதான் நாங்களே இங்க வந்துட்டோம்” என்று காலையே வந்துவிடுவார்கள் மதியம் அவர்களுக்கும் சேர்த்து செய்ய வேண்டும், சனி ஞாயிறு தினங்களில் செல்லியம்மாவும் பழனிசாமியும் சம்பந்தியை பார்க்க வருவார்கள் ஏதேனும் உணவு வகை இருக்கும் வரும்போது.
நாட்டுக்கோழி குழம்பு நல்லி எலும்பு சூப் நண்டு குழப்பு என்று கனகம் எதையும் காண்பித்துக்கொள்ள மாட்டாள், அவளுக்கு வீட்டிற்கு செல்ல முடியாமல் போனது செவ்வந்தியை பார்த்தும் இரண்டு மாதம் ஆகியிருந்தது, ராஜலட்சுமியும் மாணிக்கமும் கூட இடையில் வந்து பார்த்துச் சென்றனர்.
கணிசமான எடை குறைந்திருந்தாள் கனகம் மூன்று மாதத்தில், கால் சரியாகிவிட்டது ராக்காயிக்கு கைகூட கொஞ்சம் தேறிவிட்டது கழுத்தில் வலி இருந்தது அடிக்கடி தலை சுத்தல் மருமகளின் கவனிப்பில் ஆள் நன்றாகவே இருந்தார் மருமகள்தான் தேய்ந்து போயிருந்தாள், மற்றுமொரு முக்கிய காரணம் கணவனின் அருகாமை தேடி ஏங்கியது பெண் மனம்.
ராக்காயின் அருகே கீழே பாய் விரித்துப் படுத்துக்கொள்வாள் கனகம் மிகச் சிறிய வீடு சின்ன சீண்டல், அணைப்பு, முத்தம் கூடக் கிடையாது அவள் அவர்களின் அறைக்குள் கூடப் போக முடியாது கண்கொத்தி பாம்பாக அவளையே பார்த்திருப்பார்.
இவர் வந்த இரண்டாம் நாள் கணவன் அழைத்தான் என்று அறைக்குள் சென்றவள் வெட்க சிரிப்போடு வெளியில் வர ராக்காயின் விழிகள் கனலை கக்கியது மகன் அந்தப் பக்கம் சென்றதும் “மாமியாக்காரி படுக்கைல கிடக்குறா வெக்கமே இல்லாம பட்ட பகல்ல புருஷன் கூட இழைஞ்சுகிட்டு நிக்க எப்படித்தான் முடியுதோ” என்றவர் வார்த்தைகள் சுருக்கென்று தைத்தது.
கணவன் தந்த இதழ் முத்தத்தின் தித்திப்பு இப்பொழுது சுட்டது அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அதன்பிறகு அறைக்குள்ள்ளே செல்வதில்லை அவனுடைய ஒரு அணைப்பிற்கு ஏங்கினாள் ஒற்றை முத்தத்திற்கு பேராசை கொண்டாள் தான் அருகில் சென்றாலே பதறி விலகும் மனைவியை என்ன செய்ய என்று தெரியாமல் தவித்து நின்றான் கணவன்.
இப்பொழுதெல்லாம் தாயிடம்கூட அதிகம் பேசுவதில்லை செவ்வந்திக்கு அழைப்பாள் அவள் நலம் விசாரிப்பாள் அன்று பேசிக்கொண்டிருந்த செவ்வந்தி ஏனோ சோர்வாகவே பேசினாள்.
“என்னாச்சுக்கா உடம்பு முடியலையா” என்றாள் கனகம்.
“இல்லடி” என்றாள் மெல்ல.
“அப்புறம் என்ன” என்றிவள் குடைய “உங்க மாமாதான்… வந்தே பத்து நாள் ஆகுது சனி ஞாயிறு லீவ் தான பாக்க வரலாம்ல வரவேயில்லை” என்றாள் செவ்வந்தி.
விழிகளை இறுக மூடித் தன்னை நிலை படுத்தினாள் கனகம் ‘எப்போதான்க்கா திருந்துவ அவர் புள்ள உன் வயித்துல வந்ததும் அவர் ஆம்பளைன்னு நிரூபிச்சிட்டார் இனிமே அதை நல்ல படியா பெத்து குடுக்க வேண்டியது உன் பொறுப்பு உன்னை நல்லபடியா பாக்க வேண்டியது அப்பா அம்மா பொறுப்பு அவர் வேலை முடிஞ்சது இதுதான் அவர் நினைவு’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
“கனகம்… கனகம்… என்னடி சத்தமே இல்ல” என்றாள் செவ்வந்தி.
“ஹ்ம்ம்… ஒண்ணுமில்ல நீ கூப்பிடு வரச்சொல்லு’ என்றாள் கனகம்.
“சொன்னேன் இந்த வாரம் பாக்கலாம்னு சொல்றாரு” என்க அதற்கு மேல் அதைப் பற்றி அவள் பேசவில்லை.
அலைபேசியை வைத்தவள் யோசித்து பார்த்தாள் இந்த மூன்று மாதத்தில் யோகன் இங்கு வந்து தாயை பார்க்கவேயில்லை, அன்னையுடன் அலைபேசியில் பேசுகிறான் போலத் தந்தையிடமும் விசாரிக்கிறான் அவ்வளவே பெருமூச்சொன்று எழுந்தது அவளுக்கு.
தாய்க்கு செய்ய இவள் கணவன் கணக்கு பார்க்கவில்லை என்றாலும் இந்த நொடிவரை எவ்வளவு செலவு ஏதேனும் தேவை இருக்கிறதா ஒன்றும் அவன் கேட்கவில்லை தலையை உலுக்கிக்கொண்டவள் எழுந்து உள்ளே சென்றாள்.
நன்றாகவே தேறிவிட்டார் ராக்காயி சில நாட்களாக மருமகளை கூர்ந்து கவனிக்கிறார் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை அவரிடம் பேசுவதில்லை, மாமியாரை அப்படி பார்த்துக்கொள்கிறாள் மாமனாரை அக்காவின் கணவனயும் பார்த்துக்கொள்கிறாள் ஏனோ தானோ என்று இல்லாமல் நல்ல உணவுகள் சமைத்து கொடுக்கிறாள்.
தன்னை குளிக்க வைத்துப் பளிச்சென்று அமர வைக்கிறாள் வீட்டிற்கு யார் வந்தாலும் வருபவர்களிடம் முகம் காண்பிக்காமல் உபசரிக்கிறாள் எல்லாம் நால்லாத்தான் செய்றா வாய்தான் கூட என்று இறுதி முடிவுக்கு வந்திருந்தார் அபோழுதும் மருமகளை மெச்ச முடியவில்லை.
அவருக்குத் தெரியவில்லை அவர் மகன்மீது அவள் கொண்ட காதலே அவளை இத்தனையும் செய்ய வைத்திருக்கிறது என்று அன்று மருத்துவமனைக்குச் சென்றபோது இனி பிரச்சனை ஒன்றுமில்லை சின்ன சின்ன வேலைகள் செய்யலாம் என்று சொன்னார் மருத்துவர்.
தன் தேவைகளைத் தானே பார்த்துக்கொள்ள முடியும் அவரால் இப்பொழுது, வண்டியில் வருகையில் “நான் வீட்டுக்குப் போறேன்” என்றார் மகனிடம்.
“வீட்டுக்குத்தான் போறோம்” என்றான் அவன்.
“இல்ல நம்ம வீட்டில விட்டுடு” என்றார்.
“மூணு பேருக்குச் சமையல் வீட்டு வேலை எல்லாம் எப்படி செய்வ” என்றான் அவன்.
“முடிஞ்சது செய்றேன் இனிமேலும் யாருக்கும் பாரமா இருக்க வேண்டாம்” என்றார் எங்கோ பார்த்துக்கொண்டு.
“ஓஹ்… மூணு மாசம் பாரமா இருந்துட்ட இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் இருந்துட்டு போ” என்றான் அவன்.
“என்னடா என்னய பாரம் சொல்லுற” என்றார் ரோஷத்தோடு.
“என்னம்மா பிரச்னை உனக்கு நீயேதானே சொன்ன அந்த வார்த்தையை எல்லாத்தயும் நீயே சொல்லிட்டு என்னய ஏன் சண்டைக்கு இழுக்குற” என்று அவனும் கத்தினான், கொஞ்சம் அடங்கினார்.
“சரி நான் ஒன்னும் சொல்லல நம்ம வீட்டிலேயே விடு சமையல் மட்டும் உன் பொண்டாட்டிகிட்ட செய்யச் சொல்லு கொஞ்ச நாளைக்கு நான் வீட்டில கூட்டி பெருக்குறது துணி மடிக்குறதுன்னு சின்ன சின்ன வேலை செய்றேன் மொதல்ல” என்றார்.
“என்னவோ பண்ணுங்க” என்றவன் அவரை வீட்டில் விட்டுத் தன் வீடு வந்தான்.
“ஏங்க அத்த எங்க ஏன் வரல” என்றாள் கனகம் “வந்து சொல்றேன்” என்றவன் அவரின் உடைகள் மருந்துகள் அனைத்தையும் கொண்டு சென்று கொடுத்தான், அவன் வந்தபோது மனைவி இரவுணவை தயார் செய்துகொண்டிருந்தாள் இட்லியும் சாம்பாரும்.
தாய் சொன்னதை மனைவியிடமும் சொன்னவன் குளித்து உடை மாற்றி வந்தான் அவன் வருவதற்குள் அனைத்தையும் தயார் செய்து பாத்திரத்தில் அடைத்து வைத்தாள் அதை வீட்டிற்கு கொண்டுபோய் கொடுத்துவிட்டு அண்ணனைப் பார்த்து நான்கு வார்த்தை கேட்டு விட்டு வந்தான்.
“பெத்தவளையும் பாக்க வர மாட்ட உன் பிள்ளையைச் சுமக்குறவங்களையும் போய்ப் பாத்து என்ன எதுன்னு விசாரிக்க மாட்ட, அவங்க பொண்ணுக்குத்தான் அவங்க சோறு போட முடியும் உன் பிள்ளைக்கு நீதான் வாங்கிக்குடுக்கணும் எப்போதான்டா மாறுவ” என்றான் அண்ணனிடம்.
அவனுக்குச் சலிப்பு தட்டிவிட்டது என்னவென்று இவனைச் சொல்லிச் சொல்லிச் செய்யவைப்பது என்று அன்னையிடம் திரும்பியவன் “ஏதாவது தேவைன்னா போன போடுங்க” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.
உண்டுமுடித்து மருந்தை எடுத்துக்கொண்டு படுத்த ராக்காயி மனதில் சின்ன மகன் மருமகளின் நினைவுகளே மகன் தனக்காக நிற்காமல் போயிருந்தால் தன் நிலைமை என்ன யார் பார்த்திருப்பார்கள் என்று யோசனை செய்ய, கொஞ்சம் நாட்களாகக் கனகசபையும் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
“உன் பெரிய புள்ளய பாத்தியா ஒரு நாள் ஒரு பொழுது நேர்ல வந்து உன்னைப் பாத்தானா அவனுக்கு வேளா வேலைக்குச் சோறு கிடக்குது அவன் வேலை எல்லாம் சரியா நடக்குது எந்தக் கவலையும் இல்ல காசு கூட அவன் குடுக்குல சின்னவன்தான் எல்லா செலவும் அவன் பொண்டாட்டி அவ்ளோ வேலை பாக்குறா நீதான் புரிஞ்சுக்காம இருக்க” என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
மகள் நிச்சயம் பார்த்திருப்பாள் ஆனால் இந்த நிலையில் அவளால் வர இயலாதே அப்படியே வந்தாலும் குடும்பத்தை விட்டு இத்தனை மாதம் அவளால் நின்றிருக்க முடியாது பிள்ளையின் படிப்பு இருக்கிறதே, சில நாட்களாகவே பல யோசனைகள் மனதில் ஒரு முடிவிற்கு வந்திருந்தார் அந்த இரவு.
உணவைக் கொடுத்தவன் திரும்பி வர மனைவி அவனை எதிர்பார்த்து வாசலிலே காத்திருந்தாள் ‘வாங்க சாப்பிடலாம்” என்றவள் உள்ளே செல்ல வாயிற்கதவை பூட்டியவன் அடுப்படி சென்ற மனைவியை அப்படியே அள்ளிக்கொண்டு படுக்கையறை சென்றான்.
“ஐயோ என்ன பண்றீங்க” என்று துள்ளினாள் அவள், அறை கதவையும் அடைத்தவன் அவளை இடையோடு வளைத்துப் பிடித்துத் தன்னோடு இறுக்கினான்.
“எங்கடி பாதிதான் இருக்க மீதி எங்க மாமனை சேராத ஏக்கமா” என்க விழிகள் நிறைந்தது கனகத்திற்கு அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள் அவளின் நிலைதானே அவனுக்கும்.
“அழாதடி ஒய் சண்டைக்கோழி என்னய பக்கத்துல கூட வரவிடலை நீ எல்லாம் உன் மாமியார் செஞ்ச வேலைதான என்ன சொன்னுச்சு அம்மா” என்றான் அவளின் முகம் நிமிர்த்தி.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல இப்போவும் உங்க அம்மா ஞாபகம்தான் என்னய நீங்கத் தேடவே இல்ல என் ஞாபகமே இல்லைதானே உங்களுக்கு” என்று வேண்டுமென்றே சீண்டினாள் அவனை.
“உன்ன நான் தேடலையா… பக்கத்துல வந்தாலே பத்தடி தள்ளி நின்னவ நீ இப்போ என்னய சொல்றியா இருடி இன்னைக்கு உனக்கு என் தேடலைப் புரியவைக்காம விடுறதில்லை” என்றவனின் தேடலில் பெண்தான் துவண்டு போனாள்.
அகோர பசியில் மூன்று மணிக்கு ஒரே தட்டில் இருவரும் உண்டு முடித்தனர் உண்டவுடன் உறங்கக் கூடாதென அதைச் செரிக்க வைக்க விடியும் வரை வேலை பார்த்திருந்தான் களவாணி, அயற்சியையும் தாண்டிய பூரிப்பு அவளை உறங்கவிடவில்லை ஏழு மணிபோல் குளித்து விளக்கு வைத்துச் சமையல் செய்தவள் கணவனை எழுப்ப.
“ரொம்ப டயர்ட் பொண்டாட்டி நீ என்ன பிரெஷா இருக்க” என்று அவளை வளைத்துப்பிடிக்க அவனைத் தள்ளிவிட்டு நகர்ந்தவள் “போய்க் குளிச்சுட்டு வாங்க சாப்பிட்டு வேலைக்குப் போகவேண்டாமா “என்றாள்.
“இன்னைக்கு போகலாடி வேலை இங்கதான்” என்றான் மீசையை முறுக்கி, வெட்கம் பிடுங்கியது அவளை வேகமாக வெளியில் ஓடினாள் குளித்துவந்தவன் அவளை மடியில் அமர்த்தி “ஊட்டு” என்றான்.
அவனுக்கு ஒரு வாய் கொடுக்க அடுத்ததை அவள் பக்கம் திருப்பினான், இருவரும் திருப்தியாக உண்டுமுடிக்க கதவின் பக்கம் அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்தனர் ராக்காயியும் கனகசபையும் முகத்தை வேறுபக்கம் திருப்பி நின்றிருந்தனர், சட்டென்று அவனை விட்டு விலகி அடுப்படியில் சென்று மறைந்துகொண்டாள் கனகம்.
error: Content is protected !!