Skip to content
Post Views: 1,835
லயத்தில் கரைந்த மாறனின் மாயம் அல்லவா மாயா!!!!. பொக்கை வாயாலேயே சிரித்து காந்தமாய் அனைவரையும் கவர்ந்திட்டாள் அவனை போலவே. இமை சிமிட்டி சிமிட்டி அவள் சிரிக்கையில் பட்டாம்பூச்சிகள் நம் மேனியில் உரசும் உணர்வெழும். சின்ன ஆரஞ்சு சுளை உதட்டில் சப்தம் செய்து சிரிப்பாள்.
குட்டி கையால் அவன் உதட்டை உரசி, மீசை இழுத்து, தலை களைத்து அவளோடு இருக்கும் பொழுதுகளில் எல்லாம் மாறனும் மாறிவிடுவான் மாயாவாய்.
Advertisement
வருடம் கடக்க இன்று லயா மாறாவின் இளவரசி மாயாவிற்கு பிறந்தநாள். மெரூன் கலர் வெல்வெட் கவுனில், ஜர்த்தோசி ஒர்க் செய்யப்பட்டு, முத்தும் , பொன்னால் ஆன குட்டி ஜிமிக்கியும், கழுத்தோரம் சிறு முத்து செயின் மட்டும் அணிந்து, குட்டி குடுமி அவள் அசைவில் ஆட, தளிர் நடை போட்டு தன் தந்தையை நாடி ஓடி வந்தாள்.
அவளோடு ஜதி சொல்லியபடி கொலுசொலியும் சேர்ந்தே வந்தது. பத்து மாதத்திலேயே பேச ஆரம்பித்தவள் இப்போது அனைவர் பெயரையும் ஞாபகம் வைத்து சொல்லுவாள். கொஞ்சம் ஸ்பீட் அம்மாவை போலவே அனைத்தும் கற்று கொள்வதில்.
Advertisement
Advertisement
அவனோ கையில் ராஜாவின் பூஜாவை வைத்து கொஞ்சி கொண்டிருக்க, கண்களை சுருக்கி முறைத்து பார்த்தாள். ரோஜா நிறத்தில் மின்னிய செவ்விதழ் மெல்லமாய் கடிப்பட்டு கொண்டிருந்தது.
” ப்ப்ப்பப்ப்பா…. “கத்தி அழைக்க சின்னவளோ பயத்தில் அலற ஆரம்பித்தாள். அவளை சமாதானம் செய்தபடி, மறு மடியில் இவளை அமர்த்தி கொண்டான்.
Advertisement
” குட்டி பாப்பா பாரு அழுகுது… கத்த கூடாது… நீ குட் கேர்ள் தானே…. ” மாறனின் மெல்லோசை அவள் காதில் கேட்குமா என்னுமளவு மெதுவாய் கூற, அப்பனை போலவே பாம்பு காதிற்கா கேட்காது.
” நோப்பா… நான் உன் கேர்ள். ” அழுத்தி சொன்னாள். கண்களோ இடது மடியில் அமர்ந்து சிரித்து கொண்டிருந்த பிள்ளையை தான் கண் சிமிட்டாமல் பார்த்தது.
பத்து மாதம் கடந்து பால் பற்கள் தெரிய அவளும் இவளை பார்த்து சிரித்தாள். ” என் அப்பா மடியில் நீயா ” என கண்களை சுருக்கி பார்க்க,
” டேய் செல்லம்!!!! நம்ம மாமா பாப்பா தானேடா… அப்பா தூக்க கூடாதா? “
” மாமா… லாஜா மாமா.. இங் வா.. பாப்பா தூக்கு.. ” பேசி கொண்டிருந்தவனோ அவள் அருகே வந்து தூக்க முயல,
” நான்ல… பூசா… “
” அவன் என் பொண்ணை தூக்கி வச்சிர கூடாது… ஓடி வந்துருவியே… ஒழுங்கா என்கிட்டே வந்துரு. அவன்கிட்ட தான் என் பொண்ணு இருப்பா… என்ன பண்ணுவ , அவன் என் மச்சி ” என்பதாய் கிண்டல் செய்து பேச.
மாறனின் கழுத்தை இறுக்க கட்டி கொண்டவளோ ” வர் மாடேன் போ… ” உதடு பிதுக்கி சொன்னவள், தந்தையை பாவமாய் இமை சுருக்கி பார்த்து, விழியால் பதில் கேட்க,
“என் மாயா குட்டி அப்பாட்ட தான் இருப்பா… ” மாறன் பதில் சொல்லி முடிக்கும் முன் ” பூசாவும் இப்பா… ” என முடித்தாள்.
தன் அப்பாவிடம் தான் மட்டுமே இருக்க வேண்டும் என பிள்ளை மனம் நினைத்தாலும், மற்றவர் சொல்லையும் உடனே ஏற்று கொள்வாள் எவ்வித மறுப்புமின்றி.
” என் செல்லக்குட்டி சொன்ன உடனே கேக்கும்… ” என ராஜா முத்தம் தர இன்னோர் கன்னத்தையும் திருப்பி காட்டினாள். ஒற்றை நொடி தான் கோபம், அடுத்த நிமிடம் மாமன் கையில் துள்ளி விளையாடி மழலை மொழி பேசி மிலற்றி கொண்டிருந்தாள். பூஜாவிற்கோ கண்ணை சுழற்ற, மாமன் மடியில் அவள் தூங்கி விட்டாள்.
” இங்கே உட்கார்ந்துட்டு என்னடா பண்றீங்க ரெண்டு பேரும்.., ?” சிவாவும் பேச்சில் இணைய.,
” டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்., அடுத்து ரவுண்டு ஸ்டார்ட் பண்ணலாமா, என்னனு.., “
” அடுத்த ரவுண்டா ? ” என்னவென யோசனையாய் அவனை பார்க்க, ராஜாவோ விழியால் குழந்தைகளை காட்டினான் குறும்பாய்.,
” அடேய் பன்னிங்களா!!!! உன்னை விட ரெண்டு மாசம் சின்னவன் நான். எனக்கின்னும் கல்யாணமே ஆகல., உனக்கு செகண்டா கேக்குது .., கொன்றுவேன்.., ” சிவா சப்பென முதுகில் அடித்து விளையாட ,
” நீ தான் சிங்கிளா ஜாலியா இருக்கேனு சொன்ன., “
” நான் என்ன சாமியாராடா .., ? “
” நீ போலி சாமியார்டா ., பொண்ணு பார்த்ததும் கடலை வறுக்கிற கன்னி சாமியார்., “
” உங்களுக்கு மாத்தி மாத்தி வேலை செஞ்சு, இங்கே ஒருத்தன் ஓடா தேஞ்சு போறேன்., கண்ணு தெரியுதா கபோதி உனக்கு., என் கல்யாணம் முடிஞ்சு என் பிள்ளைக்கு மொட்டை அடிக்கிற வரை ரெண்டு பேரும் அடுத்த பிள்ளையை பத்தி பேசவே கூடாது..,”
” இன்னும் ஆறு மாசத்தில் கல்யாணம் முடிவு பண்ணிட்டோம் தானேடா உன் சக்தி கூட..,” மாறன் மச்சானுக்கு பரிந்து பேச.
ராஜா திருமணத்திற்கு வந்திருந்த சக்தியை கண்டவுடன் இவனுக்கு பிடித்து விட, பெரியோர் பேசி முடித்து நிச்சயம் செய்து விட்டனர்.
” அதே தாண்டா நானும் கேக்குறேன்., உனக்கு பத்து நாலு., இவனுக்கு ரெண்டு மாசம்., பச்ச புள்ள எனக்கு மட்டும் ஆறு மாசமா..,”
” ஆறு மாசம்மா.., அப்படிலாம் சொல்லக்கூடாது., ஆறே மாசம் தான்னு சொல்லனும்டா .., ” இன்னும் ராஜா நக்கல் செய்ய ,
” பக்கி., பக்கி., அடங்குடா., ” இவர்கள் கொஞ்சம் அடி, கொஞ்சம் பேச்சு என்று பேசி கொண்டிருக்க மடியில் இருந்த பூஜா சிணுங்க ஆரம்பித்தாள்.
” டே மசி!!!” முதலில் கூறும் போது அவர்கள் கவனத்தில் விழவில்லை. அவள் சிணுங்க “டே மசி, அழுகதே!!! ” அவள் கரத்தில் தன் கையை பிடித்திட செய்தவள், கன்னம் தட்டி கொடுத்தால் அழுகையை நிறுத்த.,
” செல்ல குட்டி இப்போ பூஜாவை என்ன சொன்ன..,? ” ராஜா தான் சுதாரித்து கேட்டான், இதே வார்த்தையை தானே முதலில் மாறா ராஜாவிடம் கூறியது.
” பூசா!!!… எனோட டே மசி!!! ” அழுத்தமாய் கூறியவள் தெற்று பல்லை காட்டி அவனிடம் சிரிக்க, கேட்டவர்களுக்கோ மனம் நெகிழ்ந்தது. தங்கள் நட்பும் தொடர்ந்தும் அடுத்த சந்ததி வசம் செல்லும் போது மனம் இறக்கை இல்லாமல் பறந்தது. சந்தோஷத்தில் மாயாவை தூக்கி போட்டு இவர்கள் விளையாடி கொண்டிருக்க, அவளும் கலுக்கி சிரித்தாள்.
“அதுக்குள்ள இங்க என்னப்பா சத்தம் ஓவரா கேக்குது. என்ர பொண்ணு தூங்கிட்டு இருக்கா. எழுப்பிறாதீங்க.. “
” லவுட் ஸ்பீக்கர் சத்தம் கேட்டா தான் என் பொண்ணு எந்திரிச்சி அழுவா… எங்க சத்தத்தை கேட்டு தூங்கிட்டு தான் இருக்கா.. இப்போ அழுவா பாரு” ராஜா சொல்லி வாய் மூடவில்லை.
குட்டி லவுட் ஸ்பீக்கர் கத்த ஆரம்பித்தது. மாயாவோ வாயில் ஒற்றை விரலை வைத்து “உஷ்” சப்தம் போடாதே என்பதாய் சைகை செய்து விட்டு, பூஜா கன்னம் தட்டியபடி,
“”பரம் தந்த சமிக்குப்
வதமான யாலி….
லாசாதி லாஜனுக்கு இமான யாலி….
யாலி யாலி யாலி யாலி…,”
மழலை மொழியில் தப்பும் தவறுமாய் பாடினாலும் அந்த கானம் கேட்டவர்கள் மனதை மெய் மறக்க செய்யும் வண்ணம் லயித்திருந்தனர். லயா தினமும் மாயாவிற்கு பாடும் லாலி பாடலை தான் பூஜா குட்டி அழுகையை நிற்பாட்ட அவள் பாடினாள்.
மகளின் குரல் கேட்டு ஓடி வந்த லயாவின் கண்களில் கண்ணீர். தன் மகளே குழந்தை, அவளோ தகப்பனை போல இந்த வயதில் இன்னோர் சிசுவை உறங்க வைக்க உதவி செய்கிறாள் என தாயுள்ளம் கண்ணீர் சிந்த, பெற்றவனோ அவளை இறுக்க அணைத்து முத்தமழை பொழிந்திட்டான்.
கண்கள் நெகிழ, பரவசத்தில் திளைத்தவன் மனம் சட்டென்று தன்னவளை தான் தேடியது. அவள் தானே இவளின் விதை. ” மாறா!!!! ” அந்த ஆழ்ந்த குரலில் அவளின் மொத்த உணர்வும் புரிந்திட கரம் நீட்டியவன் அவளை தோளோடு அணைத்து கொண்டு நின்றான். பாடல் தானே இவர்களை இணைத்து சுதி சேர்த்தது, மகளோ அதில் லயம் சேர்த்து விட்டாள்
” என் தங்க கட்டி எவ்ளோ அழகா பாடுது..,” தமயந்தியும் உச்சி முகர, குழந்தையோ வெட்கத்தில் குனிந்து, கண்ணை சிமிட்டி தாயை பார்த்து சிரித்தாள்.
” நீ பாடுறத விட என் மாயா செல்லம் தான் அழகா பாடுது.., ” ரோஜாவும் அவளை தூக்கி கொஞ்சி, ” பட்டு குட்டி!!! என் பொண்ணு உனக்கு மச்சி.. என்னை எப்படி கூப்பிடுவ., “
மீண்டும் தாயை பார்த்தவள் ” லோஸ்த்தே!!!” என்றாள் அழுத்தி.
ராஜாவோ வெடித்து சிரித்தவன் ” கரெக்டா சொன்னடா செல்லம், உங்க அத்தை லூசுன்னு.., “
” நான் லூசா.., ” அவனை அடிக்க கை ஓங்க, மாயாவோ தடுத்தாள்.
” உன் மாமனை அடிக்க கூடாதா நானு.., அத்தையை கிண்டல் பண்ணுறார் பாரு.., நீயே அடி ” அவள் கூறியும் அமைதியாய் பார்த்து கொண்டு இருந்தாள்.
” உன்னையாவது லூசுன்னு சொன்னா., தமயந்தி அத்தையை அவ தமீனானு கூப்புடும் போதெல்லாம் என் காதுல தமன்னானு கேக்கும்.., வாட் கேன் ஐ டூ .., ” இன்னுமே கிண்டல் செய்ய.
” படவா.., என்னையே கிண்டல் பண்ற.., ” தமயந்தி ராஜாவின் தோளை தட்ட தான் செய்தார். மாயாவிற்கு என்ன புரிந்ததோ தன பிஞ்சு கரத்தால் மாமனை அடிக்க ஆரம்பித்தாள்.
” உன் மாமாவை நல்லா அடி, ரொம்ப நக்கல் பண்ணிட்டு இருக்கார். ” ரோஜாவும் அடிக்க சொல்ல,
” செல்லம் அவனை மாதிரியே அத்தையை சொன்ன உடனே அடிக்கிறே.., வலிக்குது விடு ” பிஞ்சு கரம் என்றாலும் சுளீரென தான் பட்டது ராஜாவிற்கும்.
” அவனுக்கு இதெல்லாம் மசாஜ் பண்ண மாதிரி.., ரைட்ல அடி, லெப்ட்ல அடி, முதுகுல அடி, போடுடா செல்லம்., ” சிவாவும் ஊக்குவிக்க .
” லாஜா மாமா!!! ச்ச்சோ..,பலிகுதா…,” அடி கொடுத்தவளே முத்தம் கொஞ்சி மருந்தும் கொடுத்தாள்.
” மாயா!!! யாரையும் அடிக்க கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல ., மாமாகிட்ட ஸாரி கேளு.,” தாயின் அதட்டல் கேட்டதும், மீண்டும் ஒரு முத்தம் கொடுத்து மூக்கோடு கண்ணை சுருக்கி சிரிக்க, அவளின் கொள்ளை அழகில் அனைவரின் உள்ளமும் கொள்ளை போனது.
சந்தோச கூச்சலும், கிண்டல்களும் தன் வீட்டை நிறைத்திருக்க, அனைத்தையும் பார்த்து கொண்டு அமர்ந்திருந்த பெரியவர்கள் மனமோ தனிமையில் தவித்திருந்த, தங்கள் கூட்டில் ஜோடி புறாக்களின் குதூகலம் கண்டு உள்ளம் குளிர்ந்தனர்.
சொந்தங்கள் கூட அன்பாக பழக யோசிக்கும் காலத்தில் தான் நாமியிருக்கிறோம். நட்போடு சொந்தம் கொள்ளும் மக்கள், ஏனோ சொந்தங்களை நட்பாக கொள்ள யோசிக்கிறது.
ஆனால் மாறனும், ராஜாவும் நட்பை சொந்தமாக, சொத்தாக நினைப்பதால் தான் கூட்டு பறவைகள் எல்லாம் சேர்ந்து நட்பு வானிலே பறந்து, உல்லாசமாய், சந்தோசமாய், கூடி களித்து, லயித்து பறக்கின்றனர்.
அவர்களின் நட்பு லயத்தில் மாற்றமில்லை. அன்பில் மாற்றமில்லை, காதலிலும் மாற்றமில்லை. லயம் மாறா காதல் என்றும் மாறாது.
error: Content is protected !!