Skip to content
Post Views: 1,842
꧁☆☬ லயம் – 19 ☬☆꧂
விரிந்து சிரிக்கும் தாமரையின் அழகை போல, சிவந்த கன்னம் நிறைய சந்தனம் பூசி, கை நிறைய வளை குலுங்க, மேடிட்ட வயிற்றில் கரம் கோர்த்து அவனோடு அவள் நின்று கொண்டிருக்க, திருமணம் அன்று பார்த்த ரசித்த கூட்டம், இன்னுமின்னும் அவர்களின் அந்நியோன்யத்தை விழி விரிய பார்த்து ரசித்தது.
Advertisement
வளை போடும் போது வலியில் அவள் சிறிதே தவித்தாலும், இவன் விழிகளும் வழியை காட்டியது. அவள் சிரிப்பில் இவன் விழி சிரிக்க, பூரிப்பில் பூரிக்க, அவள் உணர்வுகளின் கண்ணாடியாய் இவன் விளங்கிட்டான்.
Advertisement
அவளை விட்டு சிறிதும் நகரவில்லை. சேரில் அமர்ந்திருந்தவளோ அவன் விழி பார்த்து தான் எதுவும் செய்திட்டாள்.
Advertisement
வளைகாப்பு முடித்த பின் எங்கே பிரிந்திருக்க நேருமோ என இவர்கள் தவிக்க, பெரியோர்களோ முன்பே தீர்மானித்து விட்டனர், எப்போதும் இவர்களை தவிக்க விடாமல் இணைத்தே வைத்திருக்க வேண்டுமென. கணேசன் சுபாவின் பிரசவம் எனும் கேள்வி எழும்போதே அண்ணனோடு அவர் வீட்டில் வந்து தங்கி விட்டார் மீண்டும் கூட்டு குடும்பமாய்.
Advertisement
இருபுறமும் அத்தையும், அம்மாவும் மலர்ந்து நின்றிருக்க, அண்ணியோ அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள். வீட்டின் பெரிய மருமகள் என்று பூசிய வயிறு வெளியே தெரிய வருபவர்கள் எல்லாருக்கும் பரிசு பொருள் கொடுத்து கொண்டிருக்க, அவளுக்கு உதவியாக உபத்திரம் செய்து கொண்டு, அவளின் இரு அண்ணன்களோடு ரோஜாவின் தம்பி பாலகுமாரும் நின்று கொண்டிருந்தனர்.
“ராஜ்., மூஞ்சை பார்த்துட்டே நிக்காம, டக்குனு எடுத்து கொடுக்க மாட்டிங்களா .., “
“ஜோ .., நீ குனிய கூடாதுன்னு தான் நாங்க குனிஞ்சு குனிஞ்சு எடுத்து கொடுக்குறோம்., ஏம்மா, திட்டுற., “
“மாமா.., இதுக்கு தான் வேற நல்ல அக்காவை பார்த்து கட்டிக்கிக்கோங்கன்னு சொன்னேன்., கேட்டிங்களா .., பாருங்க .., உங்களை திட்டிகிட்டே இருக்கா.., “
” டேய் மில்க் சன்!!!.., உன் வேலை பை எடுத்து கொடுக்குறது., அதையே பைய எடுத்து கொடுத்தா திட்ட மாட்டாங்களா ? என் ராஜாகிட்ட உனக்கென்ன பேச்சு.., “
” நீ வாய் பேசிட்டே நிப்ப ., கேக்குறவன் வாயில ரெண்டு கொசு உள்ளே போயிட்டு வந்தா கூட உனக்கு தெரியல., உன் வாய் எப்போ மூடுறேன்னு பார்த்து நாங்க கொடுத்திட்டே இருக்கணுமா., போடி .., “
“என்னால திட்ட முடியல, நீயாவது அவளை திட்டுறியே என் ராசா!!!!…, ” மைண்ட் வாய்ஸ் என்று சப்தமாய் ராஜா சொல்லிவிட உஷ்ண பார்வையில் ரோஜா இதழ் குத்தியது.
அனைவர் முன்பும் அவனை திட்ட முடியாமல் முறைத்தவள் ” டேய் மில்க் ரொம்ப பொங்குனா, தண்ணியை ஊத்தி விட்டிருவேன்., கம்முனு இருடா., ” அதட்டலாய் அலட்டல் செய்து கொண்டு ஐந்து மாத பூரிப்போடு நின்றவளை கண்டு, யாரும் அறியாமல் கண் அடித்தவனோ அதற்கும் முறைப்பை தான் பரிசாய் பெற்றான்.
வளை பூட்டிய கையோடு ராஜா வீட்டிற்கு அழைத்து சென்றனர். சிரிப்பும் குதூகலமும் காதில் ஒலித்து கொண்டே இருக்க வயிற்றில் வளரும் இருவரின் கருவும் நல்ல வளர்ச்சியை எட்டியது. சில நாட்கள் தாய் வீடு, பல நாட்கள் தன் வீடு என்றே லயா கழித்திருக்க, ஒன்பதாம் மாதம் முடிந்து பத்து நாட்கள் கடந்திருந்தன.
அன்று மனதில் இனம் புரியா பயம் அவளை எட்டி பார்த்தது. சுருக் சுருக் என்று வலி வர, மாறனை மனம் தேடியது. வாய் திறந்து கூறாமல் அமைதியாய் தான் இருந்தாள். இன்னும் பிள்ளை பிறக்க இரு வாரம் உள்ளதே அதற்குள் பொய் வலி வந்திருக்கும் என அவளே எண்ணியிருக்க, அவனோ கண் முன் வந்து நின்றான். மனதில் நிம்மதி பரவ அவன் கரங்களை பற்றி கொண்டு அருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தாள்.
“இன்னைக்கு வர லேட்டாகும்னு சொன்னிங்க., அதுக்குள்ள வந்துட்டிங்க., “
” என்னால வேலை பார்க்க முடியல, ஒரு மாதிரி இருக்குது., ” அவளிடம் அவன் கூறி கொண்டிருக்கும் போதே வலியால் கதற தொடங்கிவிட்டாள். கையில் தூக்கியவன், தமயந்தியை கூடவே அழைத்து கொண்டு, மற்றவர்களை ஹாஸ்பிடல் வர சொல்லிவிட்டு அவளோடு காரில் ஏறி பறந்து விட்டான். பக்கத்தில் உள்ள மருத்துமனை என்பதால் வேகமாக சென்று அவளை அனுமதிக்க, உள் செல்லும் போதே பனிக்குடம் உடைந்து விட்டது. செக் செய்த டாக்டர் குழந்தை பிறக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவனும் அனுமதி பெற்று உள்ளே சென்று விட்டான்.
தமயந்தி தனித்து நிற்க மனதில் பதட்டம் சூழ்ந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்னும் தன்னிடம் சிரித்து பேசி விளையாடி பெண், வழியில் கதற நெஞ்சம் அடித்து கொண்டது. குழந்தை நல்ல முறையில் பிறந்து கையில் சேர்ந்து விட வேண்டும் என பரிதவித்து கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அனைவரும், அவரை சூழ்ந்து கொள்ள மனதில் ஆறுதலோடு ஆசுவாசம் கிடைத்தது.
எந்த பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறு ஜென்மம் தானே., எத்தனை குழந்தைகள் தங்கள் பெற்று வளர்த்து கஷ்டப்பட்டிருந்தாலும், தங்கள் மக்களுக்கு குழந்தை பேறு என வரும் போதோ, தானும் துடித்து தானே நிற்பர்.
லேபர் ரூம்மில் அவன் கையை பிடித்திருந்தவள் மனதிலோ அன்று ஒரு நாள் சந்தோச தருணத்தில் விளையாட்டாய் சொல்லியது தான் நினைவில் வந்தது.
” எனக்கிருக்கிற சந்தோசத்திற்கு இப்போவே செத்து போகணும்னா கூட சந்தோசமா செத்து போயிருவேன்., ” விளையாட்டாய் தான் அவள் கூறியது,
அதற்கே “எங்க போனாலும் என்னையும் சேர்த்தே கூட்டி போயிரு., உன்னை பிரிஞ்சு என்னால் இருக்க முடியாது, ” என்றான் அழுத்தமாய்.
அன்று அவன் கூறியதை கேட்டதும் இறுக்க அணைத்து கொண்டவள், மனமோ இன்றோ பயத்தில் துடித்தது. தனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் இவன் என்ன செய்வானோ? என வலியோடு பார்த்திருக்க, “வந்தே தீருவேன்..,” என பிடிவாதமாய் கரங்களை இறுக பற்றி கொண்டு இருந்தான்.
இவளின் வலிகளை அவனும் தாங்கி, இரு உயிரும் தவித்திருக்க, அவர்களை அதிகம் துடிக்க வைக்காமல் அவனின் மாயா அரைமணி நேரத்திலேயே அவன் கரம் சேர்ந்திருந்தாள்.
ரோஜா பூவை போல அவனை அச்சில் வார்த்தார்போல, அவளின் காந்த விழிகளை பெற்று அவன் மகளும் பிறந்திருந்தாள். கையில் ஏந்தியதும் மொட்டின் சிரிப்பில் மலர்ந்தவன் லயாவை தான் பார்த்தான்.
” நம் உதிரம் பார், நம் கை சேர்ந்து விட்டாள். ” கண்ணில் நீரோடு நெகிழ்வாய் அவளை பார்க்க,
” நம்மிருவர் உயிரையும் காப்பாற்றிய உயிர் அவள் ” என்பதாய் மௌன மொழி பேசிட்டாள் விழியாலே. வலியின் சோர்விலும், உறக்கத்தின் பிடியிலும் ஆழ்ந்தவள் தன்னவன் தன் மகளை பார்த்து கொள்வான் என்று அசதியில் விழி மூடினாள்.
கண் விழித்து பார்க்கும் போதோ சுற்றம் அனைத்தும் மகளோடு மகிழ்ந்திருக்க, அவள் கள்வனோ அருகிலே அவள் கரம் பற்றி அமர்ந்திருந்தான்.
” அவ்ளோ சீக்கிரம் எல்லாம் உங்களை விட்டுட்டு ஓடிறமாட்டேன், டென்ஷன் ஆகாதிங்க., மாறா!!!! ” மெல்லிய சிரிப்போடு சொன்னவளை கண்டவனுக்கோ தன்னுயிர் தன்னை சேர்ந்த உணர்வு.
” என்னை விட்டுட்டு நீங்க ரெண்டு பேருமா., ” என்பதாய் மாயா அழுகையை தொடங்க, “மாமா., பாப்பா அழுவுது.., ” ஓடி வந்து அவனிடம் கிசுகிசுப்பாய் உரைத்தனர் பொடுசுகள். அவளின் கரத்தில் வந்ததும் சிரிக்க ஆரம்பித்திட்டாள் சேட்டை இளவரசி.
பிஞ்சின் கரங்களை மெல்ல பொடுசுகள் பிடித்து கொள்ள, விடாமல் அவளும் கரங்களை பற்றினாள் தந்தை சொல்படி. அவன் தான் மணிவயிற்றில் இருக்கும் போதே நித்தமும் மகளோடு பேசி, கொஞ்சி, அனைத்தையும் சொல்லி கொடுத்தானே.
error: Content is protected !!