Skip to content
Post Views: 6,065
நிறம் பாராத காதல்
இறுதி அத்தியாயம்.
வைதேகி ரணதீரனின் திருமண வைப்போகம் பெரியவர்களின் ஆசியோடு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.
அன்றைய தினம் இருவீட்டாரும் புதுமண தம்பதிகளுக்கு முதல் இரவு ஏற்பாட்டை ஊட்டி மலை பிரேதேசத்தில் இருக்கும் பெரிய பங்களாவில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
Advertisement
சந்தன நிற மைசூர் சில்க் சேலையில், கையில் பால் சொம்புடன் அழகோவியமாக ரணதீரனின் முன்னே வந்து நின்றாள் வைதேகி.
அந்த அறை முழுதும் பல வண்ண மலர்களால் அலங்காரிக்கப்பட்டு இருக்க,
கட்டிலின் விழும்பில் முகத்தில் வியர்வை துளிர்த்தப்படி அமர்ந்து இருந்த ரணதீரனை பார்த்ததும் சத்தமாகச் சிரித்து விட்டாள் வைதேகி.
அவள் சிரிப்பில் அவன் தன் இடத்தில் அமர்ந்தபடியே நெஞ்சில் ஓர் உல்லாசமான பதட்டத்துடன் வைதேகியை பார்வையால் நெருங்கினான்.
Advertisement
சந்தன வாசனையும் மலர்க்காத்தும் கலந்து அந்த இடத்தை ஒரு கனவுலகமாக மாற்றியிருக்க, வைதேகி தன் கணவனை நெருங்கி வந்து அவனிடம் பால் சொம்பை நீட்டினாள்.
Advertisement
ரணதீரன் சொம்பை கையில் வாங்கும் போதே அவன் கரங்கள் நடுங்க, மேலும் அவனைப் பார்த்துச் சிரித்தவள், “என்ன தீரா… என்ன பயமா இருக்கா?” என்று கேட்டாள் வைதேகி.
அவள் கேள்விக்கு,”ம்…” என்று அவன் சொன்னதும், “இனி ரொம்ப பயமா இருக்கும்” என்ற வைதேகியின் பதிலில் ரணதீரனின் முகத்தில் கலவரம் கூடிப்போனது.
அரண்டவனின் முகத்தைத் தன் இரு கரங்களால் ஏந்திய பெண்ணவள் காதலாகத் தன்னவன் நெற்றியில் இதழ் பதித்து,”என் தீராக்கு என்கிட்ட என்ன பயம்!” என்றவளின் கேள்வியில் அவன் இதழ்களில் மெலிதாகப் புன்னகை மலர்ந்தது.
Advertisement
“நான்… நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்ற ரணதீரனை பார்த்து, ‘என்ன?’ என்பதை போல அவள் புருவத்தை உயர்த்தினாள்.
“நான்… ஐ… ஐ லவ் யூ டி பொண்டாட்டி!” என்றவன் தன் முதல் முத்தத்தைத் தன்னவள் எதிர் பாராத தருணத்தில் வைதேகியின் நெற்றியில் பதித்து இருந்தான்.
முதல் முத்தத்திலேயே தலைவனின் முழு காதலையும் புரிந்துகொண்ட தலைவி அவள், கற்றுக்கூட நுழையாதப்படி ரணதீரனை கட்டி அணைத்துக்
கொண்டாள்.
ஓவியன் ரணதீரனின் விரல்கள் என்னும் தூரிகை, அவளது அழகிய வதனத்தில் தொடங்கி, ரகசிய மலரின் இதழ்களில் மெதுவாய் வர்ணங்களை வரைந்தது.
அவன் தொடுதலில் எழுந்த அவளது அசைவுகள் கூட இசையாகத் தான் ரணதீரன் காதில் ஒலித்தது.
தேனீபோல் அவளது தேகம் முழுவதும் சுழன்று,
ஒவ்வொரு இடத்திலும் முத்தங்களால் காதல் ஓவியங்களைத் தீட்டினான் ரணதீரன்.
ஆடவனின் கரங்களில் கைபாவையென மாறினாள் அவனின் பேரழகி வைதேகி.
அந்த இரவில்,முத்தங்கள் மொழியாகி, இருவரும் ஓர் உயிராய் இணைந்தனர்.
இதுநாள் வரை கடைபிடித்த சன்னியாசத்தின் அமைதியை வைதேகியின் காதலின் கனிவில் முடிவாக்கினான் ரணதீரன்.
மறுநாள் காலை மலை பிரேதேசத்தின் இயற்கை சூழலில் வைதேகி தேநீரை பருகிக்கொண்டு இருக்க, ரணதீரனோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாவையின் இதழ்களின் நடுவே பதுங்கி இருக்கும் தேனினை சுவைத்து இருந்தான்.
நாள், வாரம், மாதம் என்று இவர்கள் இருவரின் காதல் நொடிக்கு நொடிக்கு மெருகேறிக்கொண்டே தான் போனது.
ரணதீரனின் குடும்பத்துக்கே வைதேகி பொக்கிஷமாகத் தெரிந்தாள்.
தன் காதல் மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான் ரணதீரன்.
திருமணம் முடிந்த ஒரே மண்டலத்தில் வைதேகி தன் காதல் கணவன் ரணதீரனின் பிள்ளையை வயிற்றில் சுமக்கும் செய்தியைக் கேட்டு இருவீட்டாரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது.
வைதேகியின் வருகையால் நெல்சன் வேதநாயகியின் குடும்பம் வாழையடி வாழையாக வளர்வதை ஊரைக்கூட்டி சீமந்த விழாவை ஏற்பாடு செய்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார் வேதநாயகி.
ஒன்பது மாத கருவைச் சுமந்து இருக்கும் வைதேகி செதுக்கி வைத்த தங்க விக்ரகம் போலக் கட்சியளித்தவளை,திருமதி மாயாமாறனும், திருமதி பொம்மிசங்கரும் சபையில் அழைத்து வந்து அமர வைத்தார்கள்.
தன் குழந்தையைச் சுமக்கும் வைதேகியை கண்டு ரணதீரன் நொடிக்கு நூறு முறை பூரித்து போனான்.
அந்த ஊரே வைதேகியின் சீமந்ததிற்கு வருகை தந்து இருக்க, அதில் விக்ரமனின் அம்மா ஆண்டாளும் தலைக்கனம் இல்லாமல் வந்தவரைப் பார்த்து வேதநாயகிக்கு ஆச்சிரியமாக
இருந்தது.
“அப்புறம் சம்மந்தி! விக்ரம் கல்யாண சாப்பாடு எங்களுக்கு எப்போ போடப் போறீங்க!?” எனக் கீதா கேக்க,”இனி அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை” என்ற ஆண்டாளின் பதிலில் வலிகள் மட்டுமே நிறைந்து இருந்தது.
“என்னாச்சு?”என மாறன் அக்கறையாக விசாரிக்க,”விக்ரமுக்கு சென்னையில ட்ரான்ஸபெர் கிடைத்து வேலைக்குப் போன இடத்துல ஃபயர் ஆக்சிடென்ட் ஆகிடுது,
என் பையன் பிழைத்து வந்ததே பெரும்பாடா போச்சு,
உச்சி முதல் பாதம்வரை தீக்காயம் படாத இடமே இல்லை! என் புள்ளையை உயிரோடு கொடுத்தால் போதும்னு நான் வேண்டாத தெய்வமும் இல்லை! நான் ரணதீரனைப் பற்றி ஏளனம் பேசினதோ என்னவோ! என் பையனுடைய மகன் தலையில நான் எல்லா பாவத்தையும் இறக்கி வச்சுட்டேன்” என்று ஆண்டாள் கதறி அழுதார்.
“அழாதீங்க சித்தி! விக்ரம் சீக்கிரமா குணம் அடைஞ்சிடுவான்” என்று ரணதீரன் ஆறுதல் சொல்ல, அதேச் சமயம் வைதேகி பூக்கரங்களில் கண்ணாடி வளையலை அணிவித்து சீமந்தத்தை நல்ல முறையில் ஆரம்பித்து வைத்தார் வைதேகியின் பாட்டி வள்ளி.
அவரைத் தொடர்ந்து கூடியிருக்கும் அனைவரும் வைதேகிக்கு வளையல் அணிவித்து,சந்தனம் பூசி சீமந்தத்தை சீரும் சிறப்புமாக முடித்து வைக்க, அத்தனை பெண்களுக்கும் நடுவே திருநங்கை பவானியையும் வைதேகிக்கு ஆசிர்வாதம் செய்தார்.
இவர்களுடனே ரணதீரனின் நண்பன் வேலுவுக்கும் அவனின் மனைவி நான்கு மாத கருவைச் சுமக்கும் நீலுவுக்கும் கூட இதயம் முழுவதும் பரவசம் நிறைந்து இருந்தது.
சீமந்தம் முடிந்தும் வைதேகியை அவளின் தாத்தா பாட்டியுடன் அனுப்ப மனம் இல்லாத ரணதீரனின் குடும்பத்தினர் தன் மருமகளின் பிரசவத்தை தன் வீட்டிலேயே நடத்த முடிவு செய்த்தார்கள்.
அடுத்த ஒரே மாதத்தில் வைதேகிக்கு அவளை நகல் எடுத்ததை போலவே அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பிஞ்சு விரல்களை வருடிய ரணதீரனின் மனதில் எல்லை இல்லாத ஆனந்தம் பெருக தன் குழந்தையின் நெற்றியில் இதழ் பதித்தான்.
“அண்ணா…நீங்க மட்டும் இல்லை என்றால் எனக்கு இப்படியொரு அன்பான, அரவணைப்பான குடும்பம் கிடைத்து இருக்காது. இன்னும் கேட்டால் என் வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்கும்,
நீங்கத் தீரனுக்கு மட்டும் மாமா இல்லை” என்று வைதேகி தன் சொற்களை முடிக்கும் முன்னே,
“என்னமா! உன்னையும் உன் புருஷனையும் சேர்த்து வச்சதால என் பையன் இந்த ஊருக்கே மாமான்னு சொல்ல வரியா!” என்று கீதா கேட்டதும், அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
“என்னை யாராவது புகழ்ந்தா உங்களுக்கு ஆகாதே” என்ற மாறனை பார்த்து,
“அப்படி இல்ல அம்மா! என் குழந்தைக்க்கும் மாறன் அண்ணன் தான் தாய் மாமன்னு சொல்ல வந்தேன்” என்று வைதேகி சொல்ல, மாயா மற்றும் வேதநாயகியின் உள்ளம் பரவசம் அடைந்தது.
குழந்தையைப் பார்த்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.
குழந்தையுடன் ரணதீரனும் வைதேகியும் மட்டும் ஒன்றாக இருந்த சமயம் வைதேகி முகத்தில் சோகம் தெரிந்ததை பார்த்து,
“என்ன வைதேகி! ஏன் மா ஒரு மாதிரி இருக்க?” என்று ரணதீரன் தன் குழந்தையைக் கையில் ஏந்தியபடி புரியாமல் கேட்டான்.
“இருந்தாலும் எனக்குப் பொம்பள புள்ள மேல தான் ஆசையா இருந்தது தீரா…அதுவும் எனக்கு உங்கள மாதிரியே ஒரு பொம்பள பிள்ளை பிறக்கணும்னு தான் வேண்டுகிட்டேன்” என்று வைதேகி கவலையாகச் சொன்னதும் ரணதீரனின் இதழ்களில் ரகசிய புன்னகை மலர்ந்தது.
“அதுக்கு என்ன! அடுத்த வருஷம் இதே நேரம் இன்னொரு பொம்பள புள்ளைய பெத்துட்டா போச்சு” என்று ரணதீரன் சொன்னதும்,
“உண்மையாவா! அப்போ இன்னொரு குழந்தை கிடைக்குமா?” என்று அவளும் கண்களில் காதலுடன் கேட்க,
“யாமிருக்க பயமேன்” என்ற ரணதீரனின் இதயத்தில் செல்லமாக முத்தமிட்டாள் வைதேகி.
அழகிற்காக ஒருவரை காதலித்தால் அது ஆசை.
அன்புக்காக ஒருவரை காதலித்தால் அது ஈர்ப்பு.
காதலிக்கிறார் என்பதற்காகக் காதலித்தால் அது அனுதாபம்,
காரணமே இல்லாமல் காதலித்தால் அது தான் காதல்.
அப்படிப்பட்ட காதலை சித்ரவைதேகியின் மூலம் ரணதீரனின் மட்டும் அல்லாமல், அழகு அந்தஸ்து என நிறம் பாராத காதலை விரும்பும் அனைவரும் காதல் செய்யுங்கள்.
-முற்றும்.
error: Content is protected !!