Skip to content
Post Views: 764
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
Advertisement
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய்
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்
Advertisement
காலமெல்லாம் காத்தருள்வாய்
Advertisement
தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி
Advertisement
என்ற பாடல் கோவில் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டியிருக்க அந்த ஊரில் எங்கு திரும்பினாலும் வண்ண விளக்குகள் மினுமினிக்க திரும்பும் பக்கமெல்லாம் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்க வாலிப வயதினை தொட்ட இளைஞர்கள் பட்டாம்பூச்சியை சுற்றி திரியும் மங்கைகளை தங்கள் கூலர் கண்ணாடியில் சைட் அடிக்க கன்னியர்கள் தங்கள் ஓர விழி பார்வையால் காளைக்களை கவர்ந்த இழுக்க சிலர் ஒலிக்கும் மேளச்சத்தத்திற்கு ஏற்ப நடனமாட என அந்த ஊரை திருவிழா கோலம் கொண்டிருந்தது.
“சித்தி, சித்தி,திவ்யா சுபாஷ் எல்லாரும் எங்க இருக்கீங்க” என்று ஆர்ப்பாட்டமாக அழைத்துக் கொண்டு கையில் துணி பையுடன் உள்ளே நுழைந்தான் ரமேஷ். வசுந்தரா ரவியின் ஒரே புதல்வன்.
“ஐ ரமேஷ் அண்ணா” என்று ஒடி வந்து அவனை தோளோடு கட்டி கொண்டாள் பாரதி.
“திவி மா எப்படி டா இருக்க”என்று அவன் கேக்கும் போது வந்த சுபாஷ்,”அண்ணா பாத்தா தெரியல குந்தாணி மாதிரி இருக்குறது”என்றான் கேலியாக
“போடா தடியா அண்ணா பாருண்ணா இந்த தடியன் எப்ப பார்த்தாலும் என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்கான்” என்று ரமேஷிடம் செல்லம் கொஞ்சினாள்.
“நான் வம்பு பன்றனா நீ தான் குந்தாணி என்கிட்ட ஒரே வம்பு பண்ணிக்கிட்டே இருக்க”
“டேய் யாரைப் பார்த்து குந்தாணி சொல்ற நீ தாண்டா தடியா ஆளும் மண்டையும் பாரு” என சுபாஷினி திவ்யாவும் சண்டை போட ஆரம்பிக்க அவர்களே அடக்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கி போய் நின்றான் ரமேஷ். அப்போது, “டேய் நிறுத்துங்கடா எப்ப பாத்தாலும் உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை தான். வராதவன் வந்திருக்கான் அவனை வாங்கன்னு கூப்பிடல ரெண்டு பேர் சண்டை போடுறத பாரு. நீ வா பா அதுங்கள கண்டுக்காத”என்று இருவரையும் திட்டிவிட்டு ரமேஷை கூட்டிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார் இந்திரா.
புன்னகையுடன் அவரின் பின்னாடி போனவன், “எப்படி இருக்கீங்க சித்தி”என்றான்.
“நான் நல்லா இருக்கேன் கண்ணா நீ எப்படி இருக்க. நல்லா வளந்துட”என்று அவனின் கேவசத்தை வருடி விட்டார் இந்திரா.
அவரின் கரத்தை பற்றிய ரமேஷ் அதில் இருந்த சுருக்கங்களை வருடி விட்டு தான் கடைசியாக பார்த்த அவரின் முகத்தை நினைவு கூர்ந்து விட்டு தற்போது உள்ள அவரின் முகத்தை பார்த்து கலங்கிய தனது கண்களை அவருக்கு காட்டாமல் மறைத்தவன் மென் சிரிப்புடன்,“சித்தி நீங்க என்னை பார்த்து ஒரு 6 வருஷம் இருக்கும் இன்னும் அப்படியே வா இருப்பேன்”என்றவன் அப்போது உள்ளே வந்த தனது தம்பி, தங்கையை பார்த்து, “அதோட இந்த அரை டிக்கெட்டுங்களே பெருசாகும் போது நான் ஆக மாட்டேனா”என்று அவர்களை கலாய்த்தான்.
“அண்ணா இந்த அரை டிக்கெட் தான சொன்ன என்ன இல்ல தானே” என்று கேட்டுக் கொண்டு அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் திவ்யா.
“ஏய் யாரு பாத்த அர டிக்கெட் சொன்ன உன்ன தான் அண்ணா சொல்லி இருக்கான். போய் கண்ணாடியில்ல உன் உருவத்தை பாரு நீ தான் அரை டிக்கெட் மாதிரி இருக்க அப்படித்தானே அண்ணா” என்று தனது தமக்கையை கலாய்த்து கொண்டு அவர்கள் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“டேய் யாரைப் பார்த்து என்ன சொன்ன”
“உன்ன தாண்டி குள்ள வாத்து” என்று இருவரும் சண்டை போட ஆரம்பிக்க
“போதும் நிறுத்துரிங்களா குட்டி பிசாசுக்களா” என்று கத்திய இந்திராவை பார்த்து
“சித்தி ஏன் கத்துறீங்க அவங்க ரெண்டு பேரும் ஜாலியா என்ஜாய் பண்றாங்க எனக்கு தான் இப்படி ஒரு கொடுப்பினை இல்லாம போயிட்டு அவங்க ரெண்டு பேரும் நல்லா என்ஜாய் பண்ணடும். ரெண்டு பேரும் சின்ன பசங்க தானே” என்றான் இருவரையும் தோளோடு அணைத்துக் கொண்டு ரமேஷ்.
“அப்படி சொல்லுனா இருந்தாலும் இந்த குந்தாணிய சின்ன புள்ளன்னு சொன்னது ரொம்ப தப்பு தான் சரி போனா போகடும்”
“டேய் யாருடா குந்தாணி சொல்லுற நீதான் தடி மாடு நெட்ட கொக்கு எல்லாம்” என்று மீண்டும் இருவரும் ஆரம்பிக்க
“ மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா இதுங்கள திருத்தவே முடியாது சரி கண்ணா நீ என்ன சாப்பிடுற” என்றாள் இந்திரா ரமேஷை பார்த்து
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சித்தி. நான் வரும்போது சாப்டுட்டு தான் வந்தேன்”
“அது எப்படின்னா நாங்க சும்மா விடுவோம். இன்னைக்கு இந்த குந்தாணி தான் சமைச்சா அதனால மொத டெஸ்ட் எலி நீ தான் வாண்ணா வந்து சாப்பிடு” என்று அவன் கையை பிடித்து சாப்பிடும் இடத்திற்கு அழைத்து வந்தான் சுபாஷ்.
“டேய் உண்மையான நான் சாப்பிட்டேன் டா”
“பரவாயில்லை அண்ணா என் கூட சேர்ந்து ஒரே ஒரு இட்லி சாப்பிடு அது ஒன்னும் ஆகாது. இருந்தாலும் நீ எதுக்காக பயப்படுற எனக்கு தெரியுது” என்று இழுவையுடன் திவ்யாவை பார்க்க
அவனை கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டு நின்றவளை பார்த்து, “அண்ணா இப்ப எல்லாம் உண்மைய பேசக்கூட முடியலன்னா” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டு
“டேய் போதும்டா எதுக்கு அவள ஓவரா கலாச்சிக்கிட்டு இருக்க இப்ப என்ன உன் கூட சேர்ந்து நான் ஒரு இட்லி சாப்பிடணும் அவ்வளவுதானே சித்தி நீங்க வைங்க நான் சாப்பிடுறேன் என் தங்கச்சி சமையல் எப்படி இருக்குன்னு நானும் தெரிஞ்சிக்கிறேன். நீ வாடா தங்கம் ஏன் அங்கேயே நிக்க வந்து அண்ணன் கூட சேர்ந்து சாப்பிடு வா” என்று முறைத்துக் கொண்டு நின்ற திவ்யாவை தனது அருகில் அமர வைத்துக் கொண்டான் ரமேஷ்.
“பாருடா பாசமலர்கள” என்று அவர்களை கலாய்த்த சுபாஷ், “அம்மா சீக்கிரம் கொண்டு வாம்மா எனக்கு பசிக்குது” என்று சமையலறையை நோக்கி குரல் கொடுத்தான்.
“இந்தா வந்துட்டேன் டா கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டிய” என்று சொல்லி மூவருக்கும் இந்திரா உணவினை பரிமாற, “சித்தி நீங்களும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று சொல்லி அவருக்கு ஒரு தட்டினை வைத்து அவன் கையால் உணவினை பரிமாறினான் ரமேஷ்.
“டேய் நல்லா தானடா என் தங்கச்சி சமைக்கிறா எதுக்குடா அவள ஒரே நீ கலாய்க்க” என்று அவன் தலையில் லைட்டாக தட்டி விட்டு சாப்பிட தொடங்கியவனை பார்த்து முறைத்தவன் “எது இந்த இட்லிய தூக்கி எறிஞ்சா கண்ணாடி கூட உடைச்சிடும் இந்த இட்லி உனக்கு நல்லா இருக்கா ன்னா”
“டேய் மல்லிகை பூ மாதிரி இருக்கிற இட்லி உனக்கு கல்லு மாதிரி இருக்கா பேசாம சாப்பிடு” என்று அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தார் இந்திரா.
திவ்யாவோ அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு சாப்பிட தொடங்கினாள்.
“நம்ம ஒன்னு பேசினா மட்டும் இந்த வீட்ல இருக்க யாருக்கும் பொறுக்காதே” என்று தனக்குள் பொருமி கொண்டு அமைதியாக நால்வரும் சாப்பிட்டு எழுந்தனர்.
“சித்தி இதுல உங்க மூணு பேருக்கும் டிரஸ் எல்லாம் இருக்குது இந்தாங்க” என்று ஒரு பெரிய துணி பையை அவர் கையில் திணித்தான்
“இதெல்லாம் எதுக்குப்பா அதான் நான் இவங்களுக்கு டிரஸ் எடுத்துட்டேனே. அதனால இது வேண்டாம்பா” என்று அவன் கையில் கொடுக்கப் போனவரை தடுத்த ரமேஷ்
“நீங்க இத வாங்க யார நினைச்சு தயங்குறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் சித்தி. இது உங்களோட மூத்த பையன் உங்களுக்கும் என்னோட தம்பி தங்கச்சிக்கும் வாங்கி கொடுக்கிறது. இப்போ சொல்லுங்க நான் என் தம்பி தங்கச்சிக்கும் உங்களுக்கும் வாங்கி கொடுக்க கூடாதா. யார் எது சொல்லுவாங்கன்னு நினைக்காம உங்க பையன் உங்களுக்கு வாங்கி தரதா நெனச்சி இத வாங்கிக்கோங்க சித்தி. இல்லை நான் வாங்க மாட்டேன் அப்படின்னா நான் இந்த வீட்டுக்கு வர்றது இதுதான் கடைசி முறையாக இருக்கும்” என்றவன் சொல்லை மறுக்கவும் முடியாமல் அதே நேரம் அவர் கைகளில் உள்ள துணிப்பை வாங்க முடியாமல் கண் கலங்கி தவித்தவரை பார்த்த திவ்யா
“அம்மா அதான் அண்ணன் இவ்ளோ சொல்லுது இல்ல நீ வாங்கி உள்ள வைம்மா எது வந்தாலும் பாத்துக்கலாம்”
“சித்தி இவ்வளவு சொல்லியும் இத நீங்க வாங்காம இருக்கீங்கள. உங்களுக்கு என்னோட உங்க அக்காவோட பேச்சிதான முக்கியம். கொண்டாங்க நானே எல்லாத்தையும் எடுத்துட்டு போறேன்” என்று அவர் கையில் உள்ளதை பிடுங்க போனவனை தடுத்த சுபாஷ்
“அண்ணா அப்படியெல்லாம் அம்மா நினைக்கவே இல்ல நீ ஏன் இப்ப கோபப்படுற அம்மா எல்லாத்தையும் கொண்டு போய் உள்ள வைம்மா” என்று தனது அன்னையை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு, “ஏன் அண்ணா இப்படி எல்லாம் பேசுற. அம்மா ஏற்கனவே நொந்து போய் இருக்காங்க அவங்க கிட்ட பார்த்து பேசுன்னா” என்றான் வேதனையுடன்.
“இல்லடா உனக்கு தெரியாது. சித்தி பேருல அவ்ளோ சொத்து இருக்குடா. ஒரு ரெண்டாயிரம் ரூபாய்க்காக வீட்டுக்கு வந்த சித்திய எங்க அம்மா என்ன எல்லாம் பேசி இருக்காங்க தெரியுமாடா. அத நெனச்சா இப்ப கூட நெஞ்சிலே ஈட்டி எறங்குன மாதிரி இருக்கு. அவங்க என் அம்மா அவங்களை என்னடா நான் சொல்ல முடியும். இதோ இப்ப கூட கை நிறைய சம்பளம் வாங்குறேன் டா என்னோட சொந்த சித்தி என்னோட தம்பி தங்கச்சி எல்லாம் இப்படி கஷ்டப்படுறத பார்க்கும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமாடா. ஒன்னும் செய்ய முடியாமல் இருக்கிற என் நிலைமைய நினைச்சா என்னடா வாழ்க்கை இது மாதிரி இருக்கு முடியலடா. அப்படி என்னடா பணத்து மேல ஆச அம்மாவுக்கு. அப்பா போன் பண்ணி இங்க நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லும் போது எனக்கு எப்படி இருந்துச்சி தெரியுமா. என்னோட தம்பி தங்கச்சியை இப்படி கஷ்டப்படுறது பார்க்க முடியலடா. நீ சித்தி கை எப்பவும் பஞ்சு மாதிரி இருக்கும் டா ஆனா இப்ப அவங்க கை எப்படி இருக்கு தெரியுமாடா” என்று கண் கலங்கியவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டவன்
“விடுனா எதுக்கு நீ இப்படி பீல் பண்ற அதான் என்னையும் அக்காவையும் நீ தான படிக்க வைக்கிற அது போதாதா. இன்னும் ஒரு ரெண்டு இல்ல மூணு வருஷமோ எங்களோட நிலைமை இப்படி இருக்காதுனா எல்லாம் மாறும். நீ இப்படி பீல் பண்ணாதனா எங்களால பார்க்க முடியல அம்மா வந்துருவாங்க கன்னத் தொட” என்று அவனை தேற்றினான் சுபாஷ்.
பெரிய மனிதனாக தனக்கு சமாதானம் சொல்லும் தனது குட்டி தம்பியை பார்த்து புன்னகைத்த ரமேஷ், “ என் குட்டி தம்பி இவ்ளோ அழகா பேசுறான். இந்த வருஷம் எக்ஸாம்ல நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணுடா உன்னை நான் டாக்டருக்கு படிக்க வைக்கிறேன் நீ சென்னைக்கு வந்துடுடா என் கூட சரியா”
“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்னா இப்ப வா நம்ம திருவிழாவ என்ஜாய் பண்ணுவோம்” என்று அவன் கையை பிடித்து கோவிலுக்கு அழைத்து சென்றான் சுபாஷ்.
அதுவரை அவர்களின் பேச்சினை மௌனமாக கேட்டுக் கொண்டு இருந்த திவ்யா, “அம்மா அந்த மலமாடு அண்ணனை கூட்டிட்டு கோயிலுக்கு போறான்மா வாமா நம்மளும் சேர்ந்து போலாம்” என்று தனது அன்னையை அழைத்துக் கொண்டு ஓடிய திவ்யா, “டேய் நில்லுடா நாங்களும் வரோம்” என்றவளுக்கு “ஏய் லூசு நீ இப்ப பொம்பள செட்டப்ல இருக்க டி மெதுவா வா” என்றான் சுபாஷ் பல்லை கடித்துக் கொண்டு
“ஆமால்ல” என்று தான் கட்டியிருந்த சேலையை சரி செய்து அவர்களை பார்த்து அசடு வழிந்தாள்.
அதனைப் பார்த்து தலையில் அடைத்து கொண்டவனை,“டேய் சும்மா இருடா அவளே இன்னைக்கு தான் புடவை கட்டி இருக்கா. அவள போய் கலாய்க்காதே. நீ வாடா தங்கம் அப்படியே கல்யாண பொண்ணு மாதிரி இருக்க அங்க ஏதாவது மாப்பிள்ளை கிடைச்சா உனக்கு கட்டி வைக்கிறேன் வா” என்று தனது தங்கையின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான் ரமேஷ்.
அவனுக்குத் தெரியவில்லை தனது தங்கை வரும்போது கழுத்தில் தாலியுடன் தான் வருவாள் என்று…… இதுதான் விதியோ கடவுள் வரப்போவதை முன்கூட்டியே அவனின் வாய் வெளியே அறிகுறி காட்டினரோ என்னவோ…..
error: Content is protected !!