Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 18 1

இதோ.. இதோ.. என் பல்லவி

அத்தியாயம்  – 18



Advertisement

 சுந்தர் மூன்று  பேர பிள்ளைகளோடு  விக்ரம்  தனியாக எடுத்து இருந்த அறையில் இருந்தார்கள்..

Advertisement

விக்ரம்  பல்லவிக்கு  சாயங்காலம் ஒரு சூப்பை வர  வைத்து பல்லவிக்கு  கொடுத்தவன்..

Advertisement

சுந்தரை வந்து பார்க்க. சிவகாமி பெட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தாள். ஆஷிக் சுந்தரின் போனில்  கேம் விளையாடி கொண்டு இருக்க, சூர்யா அவனுடைய டேப்பில்  கேம் விளையாடி கொண்டு இருந்தான்..

Advertisement

சந்தருக்கு மகனிடம் தனியே பேச நிறைய விஷயங்கள்  இருக்க..

மகனை பிள்ளைகளிடம் இருந்து  தனியே  அழைத்து வந்தவர்.

“எப்போ நீ பல்லவியை  கல்யாணம் பண்ணுண விக்ரம்” என்றார்..

“4  வருஷம்  மேல  ஆச்சு டாடி”  என்றான்..

“விக்ரம்”!  என்றார். அவன்  சொல்வதை  நம்ப முடியவில்லை என்பது போல..

“ப்பா நான் உங்க பையன். நான் ஏன் பா உங்ககிட்ட பொய் சொல்ல போறேன்”  என்றான்..

“எப்போ எப்படி கல்யாணம் பண்ணுன பல்லவியை”..

 அவனின் போனில் ஒரு  லிங்  பைல் இருக்க   அதை ஓபன் பண்ணி தந்தையிடம் காண்பித்தான்..

சுந்தர் அந்த போனை வாங்கி பார்த்தார்.. அதில் பல்லவி இந்தியா போகும் முன்னே  இரண்டு பேரும் ரிஷிஸ்டர் மேரேஜ் பண்ணிய பேப்பர்  போட்டோவாக இருந்தது…

“என்ன விக்ரம்  யாருகிட்டையும் சொல்லாம எப்படி பல்லவியை மேரேஜ் பண்ணுன” என்றார்..

“பல்லவிக்கே  தெரியாது  டாடி”..

“தெரியாம  எப்படி கையெழுத்து  வாங்கின”…

“ஒரு நாள் அவளை ரிஷிஸ்டர் ஆபிஸ்  வர சொல்லி. உன் பேருல  ஒரு பிஸ்னஸ் பண்ண போறேன்னு  சொல்லி சைன்  வாங்கிட்டேன் டாடி. மேரேஜ் ரிஷிஸ்டர் பண்ணுனவரு  உனக்கு இதுக்கு சம்மதமானு  கேட்டாரு. பல்லவி தலையாட்டி சம்மதம்  சொன்னா.  அவளுக்கே  நாங்க ரிஷிஸ்டர்  கல்யாணம் பண்ணுனது தெரியாது டாடி”..

“உண்மையாவா விக்ரம்”..

“ஆமாம் டாடி, உங்க பையன்  ஒரு பொண்ணுக்கு  குழந்தை குடுக்குற வர போய் இருக்கானா  உரிமையை  இல்லாம, அப்படி செய்வேனா டாடி” என்றான்..

“ரொம்ப சந்தோஷமா  எனக்கு இருக்கு விக்ரம், உன்ன பத்தி தப்பா நெனச்சிட்டேன் பா, சாரி” என்றார்..

“பரவாயில்ல  டாடி திடிர்னு பல்லவி  என் பொண்டாட்டியின்னு சொன்னா  உங்களுக்கு சந்தேகம் வரும்  தானே பா”..

” ஆமா நீ ஏன் பல்லவிக்கு தெரியாம ரிஷிஸ்டர் மேரேஜ் பண்ணுனா, தெரிஞ்சு பண்ணி இருக்கலாமே” என்றார்..

“அவ  ஒத்துக்க மாட்டா டாடி,  அவ திடிர், திடிர்னு என் மேல கோபப் படுவா. நீங்க கோடிஸ்வரர் நான் உங்களுக்கு பொருத்தமில்லையின்னு புலம்புவா. அப்பறம் அவ அம்மா  பைரவி,  எங்க கல்யாணத்துக்கு  ஒத்துக்க மாட்டாங்கன்னு  சொல்லுவா. திடிர்னு எங்கேயாவது அவ காணாம போயிட்ட என்ன பண்ணுறதுன்னு  தான் . இப்படி அவளுக்கே தெரியாம ரிஷிஸ்டர் மேரேஜ் பண்ணுனேன். ஆனா எல்லாம் தப்பா போச்சுபா ” என்றான்..

“வருத்தப்படாத  விக்ரம் அது தான் இப்போ   பல்லவி உனக்கு கிடைச்சுட்டாள அப்பறம் என்ன.. அது மட்டும் இல்ல,  உங்க அம்மாவே உனக்கு அவ உருவத்தில் குழந்தையா   திரும்பி வந்து இருக்கா சந்தோஷமா இரு விக்ரம்”…

“அப்பறம்  ஒன்னு கேட்கனும் விக்ரம், நீயேன்  பல்லவிக்கு இந்தியாவில் கல்யாணம் ஆனது அப்புறம், உனக்கும்  பல்லவிக்கும்  கல்யாணம்  ஆனத பத்தி  யாருகிட்டையும்  சொல்லல்ல” என்றார்..

“யாரு கிட்ட சொல்ல சொல்லுறீங்க பா. அவளுக்கு கல்யாணமானது  தெரிஞ்சு எனக்கு ஆக்சிடெண்ட்  ஆச்சு. நான் கண் முழிக்கவே ரொம்ப நாள் ஆச்சு. நான் யார்கிட்டே போய் நியாயம் கேட்க..

அதுவும் பல்லவி எந்த மாதிரி சூழ்நிலையில  கல்யாணம் பண்ணுனாலோ. பல்லவி கல்யாண போட்டோ நான் பார்த்தேன்பா  எவ்வளவு வேதனையான  முகத்தை வச்சியிருந்தா  தெரியுமா. ஏற்கனவே  பாதி உயிர் போயி தான் அவ கல்யாணம் பண்ணியிருப்பா. நான் அவ முன்னாடி போயி நமக்கு லண்டனுல ஏற்கனவே கல்யாணம் ஆச்சுன்னு சொல்லி,

ஏற்கனவே மனசால செத்தவள மீண்டும்  கொல்ல சொல்லுறீங்களா  பா…  வேண்டாமுன்னு தான்  விட்டேன்.

கொஞ்ச நாளுல  எல்லாம் சரியாகும். அவ எங்க இருந்தாலும் நல்லா இருகட்டும் தான் நான் நெனச்சேன்..

 ஆனா அவ  எனக்காக உயிர குடுக்க துணிவான்னு நெனைக்கல. விதி என்னை அவ கூட சேத்து வச்சுருச்சுபா”  என்றான்..

“அப்போ பல்லவியை  கல்யாணம் பண்ண பையன் என்ன ஆனான். மறுபடியும் உன்கிட்ட வந்து அவன் பிரச்சனை பண்ண  என்ன பண்ணுறது..

“அவன் பேரு விஷால், இப்போ அவனுக்கு மேரேஜ் ஆகி குழந்தை கூட இருக்கு. என்னுடைய ஆளு  இந்தியா போய் அவன்கிட்ட பேசி பல்லவிக்கும் அவனுக்கும்  நடந்த கல்யாணம் செல்லாதுன்னு சொல்லி , பத்திரத்துல சைன் வாங்கிட்டு  வந்துட்டான். அவனால இனி ஒரு பிரச்சனையும்  இல்ல டாடி” என்றான் விக்ரம்…

“அப்போ எல்லாம் பிரச்சனை முடிஞ்சதா  விக்ரம்”..

“ஆமாம்  டாடி” என்றான்.

“இதற்கு அப்பறம் என்ன பண்ணா போற” என்றார்..

“புரியல டாடி, என்ன  பண்ணா போறேன்னா. பல்லவியையும் பிள்ளைகளையும்  லண்டன் கூட்டிட்டு போவேன்” என்றான்

“அத பத்தி நான்  சொல்லல்ல  விக்ரம், ரிஷிஸ்டர்  மேரேஜ்  பண்ணுன  ஓகே.. தாலி கட்ட வேணாமா. நீ ஒரு  பெரியசெலப்பிரிட்டி சாதாரணமான  ஆள்இல்ல..

நீ  தீடிர்னு  லண்டனுக்கு  இவங்கள  கூட்டிட்டு வந்தா  இவங்க யாரு ? ஆஷிக், சிவா  யாரு?  கல்யாணம் பண்ணாமா வாழ்றாங்கன்னு  பேச்சு  வரும்.

அதுக்காகவாவது  நீ   இன்னொரு முறை பல்லவியை  எல்லாருக்கும் தெரியுற  மாதிரி கல்யாணம் பண்ணனும்.. அப்படி  இல்லான சிம்பளா  கல்யாணம் பண்ணிட்டு  ரிஷப்ஷன்னாவது  வைக்கனும்”  என்றார் சுந்தர்..

“டாடி மூணு பசங்களை வச்சுச்கிட்டு கல்யாணம் பண்ண சொல்லுறீங்களே. இது நியாயமா பிள்ளைகள்  என்ன நினைப்பாங்க. ரிஷிஸ்டர்  கல்யாணம்  ஆகி  போச்சுல. எனக்கு பெருச  தாலி மேல எல்லாம் நம்பிக்கை இல்லைப்பா”என்றான்..

“இல்ல  விக்ரம் உங்க  இரண்டு பேர் வாழ்க்கை நிறைய பிரச்சனைகள்  நடந்து இருக்கு அதனால, நீங்க மறுபடியும்  சேர்ந்து வாழ தொடங்கும் போது முறையா  தாலி கட்டி கல்யாணம் பண்ணிட்டு வாழனுமுன்னு  தோணுது” என்றார்..

“சரி உங்க இஷ்டப்படி செய்யலாம் சொல்லுங்க டாடி” என்றான்..

“அது  நம்ம  குல தெய்வம்  சௌடாம்பிகா அம்மன்  கோவிலுல வச்சு கல்யாணம் பண்ணிட்டு,  நம்ம ரெஷர்ட்  ஒன்னு கொவாவுல இருக்குல  அங்கே வச்சு சின்னத ஒரு ரிஷப்சன் வச்சுப்போம். அப்பறம் லண்டனுல நம்மா பிஸ்னஸ் பீப்பிலுக்கு இங்கே பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்”..

“ஐடியா  எல்லாம் நல்லா தான் இருக்கு  டாடி. மேரேஜ் ஏன் நம்ம குலதெய்வம்  கோவிலுல  வச்சு பண்ணனும், இங்கே லண்டனுல ஒரு கோவிலுல  வச்சு  பண்ணிட்டு. இங்கே ஒரு ரிஷப்சன் வைக்கலாம்  பல்லவியால கொஞ்ச நாளைக்கு அலைய முடியாது” என்றான்..

“பல்லவிக்கு  நல்ல படியா  குணமாகட்டும் விக்ரம்  மெதுவா நாம செய்யலாம்” என்றார் சுந்தர்..

விக்ரம் பின்னாடி இருந்து  “அப்பா”  என்று குரல் கேட்க.

விக்ரம்  திரும்பி பார்த்தான். ஆஷிக் நின்று இருந்தான்..

“என்ன ஆஷிக் ” என்று விக்ரம் கேட்க.

“பாப்பா  எழுந்துட்டா உங்கள கேட்குறா” என்றான்..

“இதோ வர்ரேன்டா ” என்றவன் மகளிடம்  வர. தூக்கு என்பது போல் விக்ரமை பார்த்து  கையை தூக்கினாள்.. வேகமாக வந்தவன் மகளை  தூக்கி தோளில்   போட்டு தட்டி கொடுத்துக்கொண்டே   “என்னாட செல்லம்”  என்றான்..

“அம்மாட்டா  போகனும் டாடி ” என்றாள்..

மகளை தூக்கி கொண்டு  வந்தவன் பானுவிடம் மகளை தர..

தன் மடியில்  மகளை வைத்து கொண்டவள்   “என்னடா  குட்டி” என்று மகளின் தலை கோத.

“ஆபிமா  நம்ம வீட்டுக்கு போகனும்” என்றாள்..

விக்ரம்  மகளிடம் “போலாம்  சிவாக்குட்டி  டாக்டர் வந்தவுடனே  அப்பா கேட்கிறேன். நாம  வீட்டுக்கு போலாம்” என்றான்..

“நோ பா நாம இப்பாவே போலாம், எனக்கு இங்க பிடிக்கல” என்று அடம் பண்ணி அழ..

“சிவா அழ கூடாது அப்பாடா வா” என்று  தூக்க வர…

“நோ டாடி நாம மஹாமுது  தாத்தா வீட்டுக்கு போலாம் ” என்று மீண்டும் அழ.

விக்ரம் மகளை தூங்கி கொண்டு  ஆபிதாவிடம் நான் பாத்துக்கொள்கிறேன்  என்று வெளியே வந்தான்..

சிவாக்குட்டி அழும் சத்தம் கேட்டு. ஆஷிக், சூர்யா, சுந்தர் அனைவரும் வந்து பார்த்து.

“ஏன் அழுவுற சிவா என் கிட்ட வா” என்று சூர்யாவும், ஆஷிக்கும் அழைக்க.

 “நான் வரமாட்டேன்” என்றவள் விக்ரமனின் கழுத்தை கட்டிக்கொண்டாள்..

சுந்தர் அழும் பேத்தியிடம்  “தாத்தா கிட்ட வர்ரீயா  தாத்தா  உனக்கு ஐஸ்கீரிம்  வாங்கி  தர்ரேன்”  என்று  அழைக்க..

“ஐஸ்கீரிமா”  என்று தாத்தாவிடம் தாவ..

பேத்தியை  தூக்கிக்கொண்டவர், பேரன் இருவரையும்  அழைத்து கொண்டு  ஐஸ்கீரிம் சாப்பிட அழைத்து சென்றார்..

விக்ரம் ஆபிதா இருக்கும் அறைக்கு வர.. “பாப்பா  எங்கே? ரொம்ப அழுதா” என்று ஆபிதா கேட்க..

“அப்பா  ஐஸ்கீரிம் வாங்கி தர்ரேன்னு  சொன்னாரு  அழுகையை  ஸ்டாப் பண்ணிட்டு போய்டா”  என்று விக்ரம் சிரித்தான்..

” உனக்கு நைட் புட்  கொண்டு வர சொல்லவா  பானு ”  என்றான்…

“வேண்டாம்முங்க  அப்பறம்  பாத்துக்கலாம்  பசிக்கல ” என்றாள்..

‘அது என்ன பானு, என்னை முறை வச்சு கூப்பிட மாட்டேங்குற  ங்க, ங்க. வாங்க  போங்கன்னு  கூப்பிடுற. என்னை விக்ரமுன்னு தானே  முன்னே  கூப்பிடுவ. இப்போ என்ன?.  உனக்கு” என்றான்..

” அது எங்க சப்ரின் அம்மா  சொல்லுவாங்க  ஹஸ்பண்ட் பேர சொல்லி கூப்பிட கூடாதுன்னு. வாங்க, போங்கன்னு!  மரியாதையா  கூப்பிடனுமுன்னு சொல்லி இருக்காங்க”  என்றாள்…

“ஓ”!  என்றவன். “அது என்ன  உங்க ஷேக்தாவுத்தை மட்டும் மச்சான். மச்சானு ஆசையா முறை சொல்லி கூப்பிடுறா” என்றான் கோபமாக…

“அது  என்  தங்கை  வாஜிதாவோட ஹஸ்பண்ட், என்ன விட வயசுகூட அதனால மச்சான்னு  கூப்பிடுறேன். என்னோட கம்மி வயசுன்னா பேரு  சொல்லி கூப்பிடலாம். இல்ல  கொழுந்த நார் என்று கூப்பிடலாம். வயது மூத்தவங்களை மச்சான்னு தானே கூப்பிடனும்”  என்றாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!