Skip to content
Post Views: 3,186
இதோ.. இதோ.. என் பல்லவி
அத்தியாயம் -19
Advertisement
வாஜிதாவின் குழந்தைகளை விக்ரமும், ஆபீதாவும் ஆசைதீற கொஞ்சிவிட்டு. வாஜிதா பானுவிடம் சென்று குழந்தைகளை விட்டு வந்தாள் பானு..
Advertisement
விக்ரம் கிளம்பலாமா என்க.. ஆபிதா பானுவுக்கு மஹாமுது இல்லத்தில் இருந்து கிளம்ப மனமே இல்லை.
Advertisement
அதுவும் வாஜிதாவின் இரண்டு பிள்ளைகளை பார்த்த பின். தனக்கு சிவாக்குட்டி பிறந்து இருந்த போது. வாஜிதா பானு தன்னையும், சிவாக்குட்டியையும் எப்படி பார்த்துக் கொண்டாள் என்பதை ஆபீதா நினைத்து பார்த்தாள்..
Advertisement
இப்போ வாஜிதா பானு குழந்தை பெத்து தந்தை இல்லம் வந்து இருக்கும் போது. எப்படி தனியே விட்டு செல்வது என்று கலங்கி நிற்க..
“என்ன பானு?. என்னாச்சு, ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு” என்று விக்ரம் அருகில் வந்து கேட்டவன். அவளை தொட்டு பார்த்து உட்கார வைத்து தண்ணீர் கொண்டு வர சொல்லி, அவளுக்கு தண்ணீரை குடிக்க வைத்தவன். “என்னாச்சு பானு உடம்பு ஏதாவது பண்ணுதா ஹாஸ்பெட்டல் போலாமா” என்று விக்ரம் பதர..
“நான்” என்றவள். “கொஞ்ச நாள் இங்கே இருந்துட்டு வரட்டுமா” என்று விக்ரமிடம் கேட்க..
“ஏன் பானு என்னாச்சு? அப்போ என்கூட வரமாட்டீயா”. என்றான்.
“கண்டிப்பா உங்க கூட வர்றேன். இப்போ வாஜிதா பானு குழந்தை பெத்து இங்க அப்பா வீட்டுக்கு வந்து இருக்க. அவளை தனியே விட்டு வர எனக்கு மனது வரல” என்றாள்.
“நீ எப்படி” என்றவன் “நீயே ஒரு பேசன்ட் மாதிரி இருக்க, நீ எப்படி வாஜிதாவை பார்த்துப்ப, என்னால உன்ன இங்க விட்டு போகமுடியாது பானு கிளம்பு” என்றான்..
“ஜீ நீங்க வாங்க” என்று அவளின் அறைக்கு அழைத்து சென்றவள்..
“பானு” என்றவன் “உன்ன டாக்டர் 15 நாள் ஒரு வேலையும் செய்யாம ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காருமா. உன்ன எப்படி எல்லாம் கஷ்டபட்டு காப்பாத்தி கூட்டிட்டு வந்து இருக்கேன் தெரியுமா, உன்ன இங்க விட்டுட்டு நான் போக மாட்டேன் ” என்றான்..
“நான் உங்கள போக சொல்லல்ல நீங்களும் இங்கேயே இருக்க, ஒருபத்து நாள் கழிச்சு போலாம்” என்றான்..
“நானும் இங்க இருக்க மாட்டேன். நீயும் இங்க இருக்க கூடாது பானு கிளம்பு நமக்காக பிளைட் காத்துகிட்டு இருக்கு கிளம்பலாம் பானு வா” என்று அழைக்க..
“சொன்னா புரிஞ்சுக்கோங்க ஜீ. நம்ம சிவாக்குட்டி பிறந்தப்போ, வாஜீதா தான் என்னை பாத்துகிட்டா இப்போ அவளுக்கு குழந்தை பிறந்து இருக்கு. நான் அவளுக்கு கொஞ்சமாவது உதவியா இருக்கலாமுன்னு ஆசை படுறேன்”…
“அது தான் ஷேக்தாவுத், உங்க அப்பா, அண்ணன், அண்ணி நிஷா எல்லாரும் இருக்காங்க பாத்துப்பாங்க, உனக்கு ஏதாவதுன்னா யாரு பாத்துப்பா. 4 வருஷமா உன்ன பிரிஞ்சு வேதனையோடு வாழ்ந்துட்டு இருந்தேன்.. உன்ன பாத்ததுகப்பறமா தான் நான் நிம்மதியா இருக்கேன். மறுபடியும் இப்போ உன்ன எமன் கிட்ட போராடி காப்பாத்தி கொண்டு வந்து இருக்கேன்.. இனி உன் பேச்ச கேட்டு உன்ன விட்டு போக முடியாது, இன்னும் 10 நிமிசத்துல நாம கிளம்பனும், கிளம்பு” என்றான்..
“ஜீ பிலிஸ், ஜீ. எனக்காக இந்த ஒரு வாட்டி பிலிஸ்” என்று அவனிடம் கெஞ்ச..
“இப்போ நீ என் கூட கிளம்புற அவ்வளவு தான்” என்றான்.
“அவளோ வாஜிதாவையும், பிள்ளைகளை தனியே விட்டு வர முடியாது” என்றாள்..
“முதல்ல உன் உடம்ப பாரு, அப்பறம் மத்தவங்களை பார்க்கலாம்” என்றான்..
“என்ன என் உடம்புக்கு, நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள்..
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே மஹாமுது ஆபிதாவின் ரூம் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவர்..
ஆபீதா பேசியதை கேட்டு கொண்டே வந்தவர், விக்ரமனின் முகத்தை பார்க்க. அவன் கடும் கோபத்தில் உள்ளான் என்று முகமே காட்டி கொடுக்க.
“ஆபீதாமா நீ மாப்பிள்ளையோடு கிளம்பு, நாங்க வாஜிதாவை பாத்துக்கிறோம்” என்றார்..
“வாப்பா நானும் கொஞ்ச நாள் வாஜிதாவை பாத்துட்டு இருக்கேன். அவர் சரின்னு சொல்லுவார்” என்றாள்..
“நான் ஒன்னும் சரியின்னு சொல்லல்ல” என்றான்..
“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க”என்று விக்ரமை பார்த்து சொல்ல..
“மாப்பிள்ளை சொல்லுறது தான் சரி ஆபீதாமா உனக்கு உடம்பு வேற சரியில்லாமா, இப்பதான் குணமாகி வந்து இருக்க. நாங்க பாத்துக்கிறோம் நீ கிளம்பு ” என்றார்..
“இல்ல வாப்பா வாஜீதாவுக்கு இரண்டு குழந்தைகளை சேர்த்து பாக்க கஷ்டமா இருக்கும், நான் இருந்தேனா. ஏதோ கொஞ்சம் நேரம் பிள்ளைகளை பாத்துப்பேன்” என்றாள்..
“இல்லம்மா நீ கிளம்பு, இங்கே நான் ஷேக்தாவுத், உங்க அண்ணி நிஷா, அப்புறம் வேலைக்கு இரண்டு பேர வர சொல்லி இருக்கேன். பிள்ளைகளை பாத்துக்க . நீ கவலை படாத வாஜிதாவை நாங்க நல்லா பாத்துப்போம்”..
“நீங்க என்ன வாப்பா, என்னை போ,போ சொல்லுறீங்க. நான் உங்க ஆபீதா இல்லையா” என்று கண்கலங்க..
“ஆபீதா மா நீ எப்பையும் என் பொண்ணுடா. நான் உன் வாப்பா. நீ எப்போ வேணா இந்த வீட்டுக்கு வரலாம், எத்தனை நாள் வேணாலும் தங்கலாம். இது உன் வீடுமா. மாப்பிள்ளையை பாரு, அவரு உன் மேல எவ்வளவு அன்பு வச்சு இருக்காருன்னு. நான் ஹாஸ்பெட்டலுல வச்சு பாத்துட்டேன். நீ அவரு கூட தான் போகனும்,. வாஜிதாவை நாங்க எல்லாரும் பாத்துக்குறோம். நீ உன் உடம்ப பாத்துக்கோமா” என்றார் மஹாமுது…
ஆபீதாவுக்கு பயங்கரகோபம். தன்னை யாரும் புரிந்து கொள்ள வில்லை என்று கோபம் கொண்டவள். அவளின் அறையை விட்டு வெளியில் வந்தவள். சுந்தரை பார்த்து “இன்னும் பத்து நிமிசத்துல கிளம்பலாம் மாமா” என்றவள்..
பாத்தீமா பானு இருக்கும் அறைக்கு சென்றாள்.. அவள் பின்னாடியே அவளது பிள்ளைகளும் பாத்தீமா தாதி அறைக்கு வர..
படுத்து இருந்த பாத்தீமா தாதி இவர்கள் சத்தம் கேட்டு. “வா ஆபீதா எப்படி இருக்க, கிளம்பிட்டீயா” என்று கேட்க..
எல்லாரும் நான் கிளம்புறதே குறியா இருக்காங்க போல என்று மனதில் நினைத்தவள்..
பாத்தீமா தாதி காலில் விழ.. “நல்லா இருமா” என்றவர். அவளின் கையில் ஒரு ‘குரான்’ புக்கை கொடுத்தவர். “அல்லா உனக்கு எல்லா நன்மைகளையும் செய்வார்” என்றார்..
பிள்ளைகளும் பாத்தீமாதாதியிடம் ஆசி வாங்கி விட்டு வர.
அனைவரிடமும் வர்றேன் என்று சொல்லிக்கொண்டவள்..
வாஜிதா இருக்கும் அறைக்கு வர. நல்ல வேளை அவள் தூங்கி கொண்டு இருந்தாள்..
தங்கையை இந்த நேரத்தில் பார்த்திருந்தாள் கண்டிப்பாக கதறி அழுதிருப்பாள் பானு.
ஷேக்தாவுத்திடம் “வர்றேன் மச்சான் பிள்ளைகளையும், வாஜீயையும் பாத்துக்கோங்க” என்று சொல்லியவளின் குறல் அமர..
“நீ கவலை படாம போயிட்டு வா. பானு உன் தங்கச்சி எங்கேயும் போகமாட்ட, என்னைக்கு இருந்தாலும் அவ உன் தங்கச்சி தான், நீ அவளுக்கு அக்கா தான் புரியுதா. உன் பிள்ளைகளையும் பாத்துக்கோ. உன் ஹெல்த் ரொம்ப முக்கியம் அதையும் பாத்துக்கோ.. விக்ரம் மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க நீ ரொம்ப குடுத்து வச்சு இருக்கனும்.. பாத்து போயிட்டு வா” என்று வழி அனுப்பி வைத்தார்..
அறையை விட்டு வெளியில் வர. முபாரக் மனைவி நிஷா நின்று இருக்க. “வர்றேன் அண்ணி” என்றாள்..
அண்ணனை பார்க்க தங்கையின் கைபிடித்துக்கொண்டவன். “தைரியமா போயிட்டு வா பானு. ஏதாவதுன்னா எனக்கு ஒரு போன் போடு அடுத்த பிளைட்ட புடிச்சு அண்ணன் நான் வர்றேன் வருத்தப்படகூடாது” என்றான் விக்ரமை பார்த்து கொண்டே..
ஆபீதாவின் துணி பைகள் எல்லாம் பேக் செய்து ரெடியாக இருக்க. அவர்கள் வீட்டு பணியாள் அதை எடுத்து காரில் வைத்தார்..
ஆபீதா எல்லாரிடம் சொல்லிக்கொண்டு காரில் ஏற. பிள்ளைகளும் அவளுடனே பின் சீட்டில் ஏறிக்கொள்ள..
விக்ரம் அனைவரிடம் தலை அசைத்து போயிட்டு வருகிறேன் என்றவன். மஹாமுதுவை கட்டி அணைத்து விடை பெற்றான்..
ஆபீதா காரில் அமைதியாக வர. பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள்…
விக்ரம் கண்ணாடி வழியே அவளை பார்த்துக்கொண்டு தான் வந்தான்..அவளை கஷ்டபடுத்திவிட்டோமோ என்று மனதில் தோன்ற. உனக்கு உடல் சரியானது உன்னை கொண்டு வந்து விடுறேன்பானு. உன்னை என்னால இப்போ விட்டுட்டு போக முடியாது.. உன் ஹெல்த் தான் இப்போ முக்கியம் என்று மனதில் நினைத்து கொண்டே வர. கண்ணாடி வழியே அவள் கோப முகத்தை பார்த்தவன்,.. அப்படியே கோபம் மட்டும் பல்லவி மாதிரியே வருது. ஆனா என்னை மட்டும் ஞாபகம் வராது இவளுக்கு. லண்டன் வாடி உன்ன வச்சுக்கிறேன் என்று மனதில் பேசிக்கொண்டே வந்தான்..
அனைவரம் ஏர்போர்ட் வந்து சேர. இவர்களுக்காக தனி விமானம் காத்துக்கொண்டு இருக்க.. இவர்கள் நேரடியாக விமானம் இருக்கும் இடம் சென்று விமானத்தில் ஏறிக்கொண்டனர்..
பல்லவிக்கு படுக்கும் வசதியோடு பர்த் போல சீட் ஏற்பாடு பண்ணி இருந்தான்..
விக்ரம் சிவாக்குட்டியை தூக்கிக்கொண்டு வந்தான்.. அவர் அவர்களுக்கு தனி, தனியே உட்கார சாய்ந்து தூங்க எற்று சீட் நிறைய இருக்க. பிள்ளைகளுக்கு பிடித்த இடத்தில் அமர்ந்து கொண்டனர்..
விமானம் கிளம்பியுடன் பானுவை பார்த்து “சீட்டில் படு பானு” என்றவன் அவளுக்கு சீட்டை வசதி பண்ணி கொடுக்க.
“இல்லை நான் நல்லா தான் இருக்கேன் உட்கார்ந்து வர்றேன்” என்றவள்.. வீம்புக்காக சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தாள்..
பின்பு ஆபீதாபானுக்கு இடுப்பு வலிக்க நெளிந்து கொண்டே அமர்ந்திருந்தாள்..
இரவு உணவு வர. அனைவரும் உண்டனர். சிவகாமிக்கு விக்ரம் ஊட்டி விட. தந்தையின் எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டு கதைபேசிய படியே உணவு உண்டவள். அவன் மீதே தோளில் படுத்து உறங்க.. ஆபீதா மகளையே பார்த்திருந்தாள்..
ஆஷிக்கையும், சூர்யாவையும் பார்க்க, அவர்கள் இருவரும் சுந்தரிடம் ஏதோ பேசிக்கொண்டே. வீடியோ டேப்பில் பார்த்து கொண்டு இருந்தனர்..
error: Content is protected !!