Skip to content
Post Views: 827
“அம்மாடி இந்திரா நான் யாருன்னு உனக்கு தெரியுதா” என்று கேட்டுக் கொண்டு வந்தார் வேதாச்சலம் அவரின் குடும்பத்துடன்.
கோவிலில் ஒரு பகுதியில் அமர்ந்து சுதாவுடன் பேசிக்கொண்டு இருந்த இந்திரா தன் பேரை யார் அழைப்பது என்று நிமிர்ந்து பார்க்க அங்கே நின்ற வேதாச்சலத்தை பார்த்து, “வேதா பெரியப்பா நீங்களா” என்று ஆச்சரியமாக எழுந்து நின்றாள்.
“உன்னோட வேதா பெரியப்பாவே தான்”என்று அவளின் தலையை தடவியவர், “எப்படி டா இருக்க”என்றார்.
“இருக்கேன் பெரியப்பா”என்றவள் விரத்தியாக, “நீங்க எப்படி இருக்கீங்க பெரியப்பா. அண்ணா, அண்ணி நீங்க எப்படி இருக்கீங்க. பசங்க எப்படி இருக்காங்க”என்றாள் அவர்களை பார்த்து
Advertisement
“நாங்க நல்லா இருக்கோம் மா. சாரி மா மச்சான் இறந்தது எங்களுக்கு தெரியாது. நீ இங்க இருக்குறதும் எங்களுக்கு தெரியாது. போன மாசம் தான் ஒரு நாள் உன் பொண்ண பாத்தோம். யார் பொண்ணு விசாரிக்கும் போது தான் தெரிஞ்சிச்சி உன் பொண்ணுனு. அதோட சேர்த்துதான் எல்லா விபரமும் தெரிஞ்சிச்சி. முன்கூட்டியே தெரிஞ்சி இருந்தா கண்டிப்பா நாங்க வந்து இருப்போம் மா.தப்பா நினைக்காதமா”என்றார் விநாயகம்.
“அதனால என்னனா நாங்க இப்ப நல்லா தான் இருக்கோம் னா”
“சரிமா உன் பிள்ளைங்க எங்க.உனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணுதான. ஏங்க அவங்கள காணும்”
Advertisement
“பொண்ணு ராட்டினம் ஆட போய் இருக்கா. பையன் இங்க தான்’என்று தேட தொடங்கியவர் சற்று தள்ளி நின்ற சுபாஷை அருகில் அழைத்தார்.
Advertisement
“என்ன மா”என்று வந்தவனை, “இது தான் பெரியப்பா என் பையன்”என்று அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
“ஹாய் யங் மேன் எப்படி இருக்க”என்று தாத்தா விசாரிக்க
“நான் நல்லா இருக்கேன் தாத்தா. நீங்க எப்படி இருக்கீங்க”என்றான்.
Advertisement
யாரும் சொல்லி தராமல் தானே அவன் முறை சொல்லி அழைப்பது அவருக்கு பிடித்திருக்க அவனின் கையை பிடித்து, “மை பாய் என்ன படிக்கிற”என்றார்.
“12த் எக்ஸாம் எழுதி இருக்கேன். ரிசல்ட்காக வெயிட் பண்றேன் தாத்தா”
“சோ எவ்வளவு மார்க் வரும். என்ன படிக்க ஐடியா”
“தெரியல தாத்தா பட் நல்லா பண்ணி இருக்கேன். எவ்வளவு மார்க் வந்தாலும் சீக்கிரமா வேலைக்கு போற மாதிரி தான் படிப்பேன்”
“ஏன் பா”என்றார் விநாயகம்.
“இது யார்”என்பதை போல் தாத்தாவை பார்க்க, “என்னோட பையன் தான் பா”என்றார்.
சரி என்பதை போல் தலை ஆட்டி விட்டு, “இல்ல மாமா என்னோட குடும்ப சுமைய நான் தான் சுமக்கணும். எத்தன நாள் தான் எங்க அம்மாவ சுமக்க விட்டு நான் வேடிக்கை பாக்க முடியும். அதோட அக்காவுக்கு மேரேஜ் பண்ணனும். அம்மாவுக்கு அந்த தையல் மெஷின்ல இருந்து விடுதலை கொடுக்கணும்”என்றவனை அனைவரும் பெருமை
பார்க்க இந்திரா மட்டும் கவலையாக பார்த்தாள்.
அதை கவனித்த புஷ்பா, “என்ன இந்திரா புள்ளைய எவ்வளவு அழகா வளர்த்து வைச்சி இருக்கனு நாங்க எல்லாம் பெருமையா பாக்கவோம். நீ ஏன் கவலையா பாக்க”
“இல்ல அண்ணி. இவன் நல்லா படிக்குற பையன் இவங்க அப்பா இவன டாக்டர் ஆக்க நெனைச்சாரு. ஆனா இப்ப பாருங்க அவர் இல்ல உடனே எப்படி எல்லாம் மாறுது. இவன் மனசுல எவ்வளவு இருக்கு”என்றாள் அழுகையுடன்.
“என்ன மா நீ அண்ணா நான் இருக்கும் போது ஏன் கலங்குற. உன் பையன டாக்டருக்க படிக்க வைக்கணும் அவ்வளவு தான அத நான் பாத்துக்கிறேன் போதுமா”என்றார் விநாயகம்.
“ஐயோ மாமா அதுலாம் வேண்டாம்”என்று உடனே மறுத்தவனை பார்த்து, “டேய் கடனா தரேன். நீ படிச்சி முடிச்சிட்டு திருப்பி தந்துரு போதுமா”என்க
அவன் அப்போதும் தயக்க அவன் மனதை படித்து போல தாத்தா, “என்ன யங் மேன் அக்கா மேரேஜ் பத்தி தான யோசிக்க” என்றார்.
“ஆமா தாத்தா. அக்காவுக்கு இப்பவே 24 ஆகுது. இதுல நான் டாக்டருக்கு படிச்சி முடிக்க 4 இயர்ஸ் ஆகும். அதுக்கு பிறகு எப்படி அவளுக்கு மேரேஜ் பண்ண முடியும்”என்றான் கவலையாக.
“உன்னோட கவலைய போக்க எங்கிட்ட ஒரு வழி இருக்கு” என்றவர் இந்திராவை பார்த்து, “அம்மாடி இந்திரா உன் பொண்ணு திவ்யா பாரதிய போன மாசம் என்னோட மருமகள் பார்த்திருக்கா பார்த்தவுடனே அவளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு நம்ம திரு அதான் மா என்னோட மூத்த பேரன் திருக்குமரனுக்கு உன் பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறோம் நீ என்னம்மா சொல்ற”
“என்ன பெரியப்பா சொல்றீங்க நம்ம திருவுக்கா” என்றாள் நம்ப முடியாமல்
“ஆமாம்மா அவனுக்கு தான்” என்ற விநாயகம், “சொல்லுமா என்னோட பையனுக்கு உன் பொண்ண கட்டி தர உனக்கு சம்மதமா” என்றார் இந்திராவிடம்
“அண்ணா நீங்க உண்மையா தான் சொல்றீங்களா” என்றாள் இன்னும் நம்பாமல்
“உண்மையா தான் சொல்லுறோம். உன்னோட பொண்ண கொஞ்ச நாள் முன்னாடி தான் நான் பார்த்தேன் பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அதனால அவளை என்னோட மருமகளா வரணும்னு ஆசைப்படுறேன். இப்ப சொல்லு உனக்கு சம்மதமா இல்லையா” என்றாள் புஷ்பா.
“அண்ணி நீங்க சொல்றது கேட்க எனக்கும் ஆசையா தான் இருக்கு. ஆனா இப்ப இருக்குற என்னோட நிலைமையில நீங்க எதிர்பார்க்கிற எதுவும் என்னால செய்ய முடியாது” என்றாள் அப்போதும் தயக்கமாக
“என்னம்மா நீ உன் கிட்ட நாங்க பணம், நகை ஏதாவது கேட்டோமா பொண்ண மட்டும் கட்டிதாமா நாங்க தங்கம் மாதிரி வச்சிக்கிறோம். காசு பணத்தை பத்தி எதுவும் யோசிக்காத. அது எங்ககிட்ட நிறைய இருக்குது. எங்களுக்கு தேவை நல்ல குணமான பொண்ணு மட்டும் தான். உன்னோட பொண்ணு எங்க பையனுக்கு ஏற்றவளா இருப்பா நாங்க நம்புறோம். இப்ப சொல்லு உன்னோட சம்மதத்த” என்றார் வேதாச்சலம்.
அப்போதும் தயக்கமாக தனது மகனை பார்க்க அவள் பார்வையை உணர்ந்து கொண்ட வேதாச்சலம், “யங் மேன் நீ சொல்லு. உங்க அக்காவ எங்க பையனுக்கு கட்டி தருவியா” என்றார் சுபாஷை பார்த்து
“உங்களை எல்லாம் பார்த்தா எங்க அக்காவ நல்லா பாத்துப்பீங்கன்னு தெரியுது இருந்தாலும் மாப்பிள்ளை பாத்தி யாருமே சொல்லவே இல்லையே. அவர் என்ன பண்றார் எப்படி இருப்பார் அவர் குணம் எப்படி எதுவும் சொல்லலையே” என்றான் தெளிவுடன்.
“அப்படி சொல்லுறா என் சிங்கக்குட்டி. பாத்தியா விநாயகம் இந்த வயதிலேயே எப்படி தெளிவாக இருக்கானு. இந்திரா பையன ரொம்ப நல்லா வளர்த்து இருக்கம்மா” என்று அவளை பாராட்டியவர் சுபாஷ் பார்த்து, “என்னோட பேரன் பேரு திருக்குமரன். அவன் நம்ம ஏரியாவுல இன்ஸ்பெக்டரா வேலை பாக்குறான். அவன பத்தி ஏதாவது தெரியனும்னா நீ வெளியே போய் விசாரிச்சு பாரு. நல்லா விசாரிச்சு பார்த்துட்டு உன் அக்காவுக்கு என்னோட பேரன் கரெக்டா இருப்பானானு சொல்லு” என்றார் அவன் தோலை தட்டிக் கொண்டு தாத்தா.
அவர் அப்படி சொன்னதும் பதறி போன இந்திரா, “ஐயோ பெரியப்பா அவன் சின்ன பையன் அவனுக்கு ஒன்னும் தெரியாது நீங்க ஏதோ தப்பா நினைக்காதீங்க” என்றாள்.
“இதுல தப்பா நினைக்க என்னம்மா இருக்கு. தன்னோட அக்காவ கல்யாணம் பண்ணிக்க போறவர் எப்படி இருக்கனும்னு அவனுக்கு ஒரு ஆசை இருக்கும் தான அவன் விசாரிக்கட்டும் விசாரிச்சு பார்த்து எல்லாம் கரெக்டா இருந்தா அவனோட அக்காவ எங்க பையனுக்கு கட்டி தர போறான். அப்படி தான” என்று சுபாஷை பார்த்து கேட்க
“தாத்தா நான் முன்ன பின்ன தெரியாத ஆளாக இருக்கும் நினைச்சு தான் கேட்டேன். திரு மாமாவ பத்தி எனக்கு முன்னாடியே தெரியும். அவர் கூட நான் என்னோட சின்ன வயசுல பழகி இருக்கேன். இன்பாக்ட் திரு மாமா என்னோட இன்ஸ்பிரேஷன். அவர் என்னோட மாமா சொல்ல எனக்கு கெத்து தான். இருந்தாலும் அக்காவுக்கு பிடிச்சிருக்கானு கேட்டுட்டு சொல்றோம் தாத்தா” என்றான் சுபாஷ் பணிவுடன்.
“சரிப்பா நீ சொன்ன மாதிரியே எல்லாத்தையும் பண்ணிடுவோம் சரியா’ என்றவர் அவனின் தோளில் கை வைத்து, ‘உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டா. ஒருவேளை உங்க அக்காவுக்கு என் பேரனை பிடிக்காம போனாலும் உன்ன படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு என்னோடது தான்” என்றார் வேதாச்சலம் தாத்தா அவனை கட்டி அணைத்துக் கொண்டு.
அதனை புன்னகையுடன் அனைவரும் பார்த்து நின்றனர்.
@@@@@@@@@@@@@@
“ராட்டினம் சுத்தணும் சொல்லி தான கூட்டிட்டு வந்த இப்ப எங்கடி என்னை இழுத்துட்டு போற” என்றாள் திவ்யா தனது கையை பிடித்து எங்கேயோ இழுத்து செல்லும் கீதாவை பார்த்து
“ஏய் கொஞ்ச நேரம் பேசாம வாடி எல்லாத்தையும் சொல்றேன்”
“இப்ப நீ சொல்ல போறியா இல்லையா எங்க என்ன இழுத்துட்டு போற” என்று தனது கையை பிடித்திருந்த அவள் கையை தட்டி விட்டாள்.
“ஏய் ப்ளீஸ் புரிஞ்சுக்கடி அங்க அவர் என் கூட பேசணும் வான்னு சொல்லி கூப்பிடுறாங்க எனக்கு தனியா போக பயமா இருக்கு ப்ளீஸ் என்கூட துணைக்கு வாடி” என்று அவள் கன்னத்தில் கை வைத்து கெஞ்சினாள்.
“என்ன விளையாடுறியா எங்க அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா நான் வரமாட்டேன் போடி” என்று அவள் கையைத் தட்டி விட்டு தனது அன்னை இருக்கும் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினாள் பாரதி.
“ஏய் ஏய் ப்ளீஸ் டி என் செல்லம் இல்ல நில்லுடி. உன்ன விட்டா எனக்கு யாரடி ஹெல்ப் பண்ணவா ப்ளீஸ் வாடி” என்று கண்ணை கசக்க
“சொன்னா புரிஞ்சுக்கடி இது ரொம்ப ரிஸ்க்கு யார்கிட்டயாவது மாட்டினா அவ்வளவுதான்” என்று அப்போதும் சம்மதிக்காமல் அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தாள்.
“ப்ளீஸ் டி ப்ளீஸ் அவர் ரொம்ப கெஞ்சுறாங்க. ப்ளீஸ் எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் பேசிக்கிட்டு உடனே வந்துருவோம் யாருக்கு எதுவும் தெரியாது ப்ளீஸ் வாடி” என்று கெஞ்ச
“சரி சரி ஒவரா கெஞ்சாத. அஞ்சு நிமிஷம் மட்டும் தான் அதுக்கு மேல நீ நின்னு பேசிட்டு இருந்தா நான் வந்துட்டே இருப்பேன் சரியா”
“சரி சரி வா தாயே” என்று அவளை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு அருகில் இருந்த ஆற்றக்கரைக்கு அழைத்து சென்றாள்.
இவர்கள் இருவரும் போகும் அவசரத்தில் வழியில் கஞ்சா போதையில் மிதந்து கொண்டு இருந்தவர்களை கவனிக்கவில்லை. அதில் இருந்து ஒருத்தன், “மச்சான் என்ன ரெண்டு புறா தனியா போகுது” என்றான் புகையிலையால் மஞ்சள் கரை படிந்த தனது பற்களை காட்டிக் கொண்டு
“ஆமா மச்சான் ரெண்டு புறாவும் வெள்ள புறா வேற
ரெண்டுல ஒன்னு சீக்குனாலும் இன்னைக்கு 65 தான்” என்று சொல்லி இருவரும் கொடூரமாக சிரிக்க
“மச்சான் ரெண்டும் நம்ம எடத்துக்கு தான் போகுது. வாடா மிஸ் பண்ணிட போறோம் சீக்கிரமா போவோம்” என்று இருவரும் இடுப்பில் நிக்காமல் கலண்டு கொண்டு வந்த தனது கைலியை கட்டிக்கொண்டு அவர்களின் பின்னர் சென்றனர்.
ஆற்றங்கரை பக்கத்தில் வந்த இருவருக்கும் சற்று தள்ளி நின்ற அவன் கையை அசைக்க பதிலுக்கு அவனுக்கு கை அசைத்துக் கொண்டு அவன் பக்கத்தில் செல்லப்போன கீதாவின் கையை பிடித்து, “இங்க பாரு நான் இங்கே நிக்கிறேன். நீ போய் அஞ்சு நிமிஷத்துல பேசிட்டு வந்துடனும் சரியா” என்றாள் பாரதி.
“சரிடி நீ பார்த்து நில்லு” என்று சொல்லி அவனை நோக்கிச் சென்றாள்.
“லவ் கூட பண்ணலாம் போல லவ் பண்றவங்களுக்கு ஃப்ரண்ட் தான் இருக்க கூடாது போல. ராட்டினம் ஆட ஆசைப்பட்டது ஒரு குத்தமா கடவுளே” என்று மேலே பார்த்து பேசிக்கொண்டு இருந்தவளை ஒளிந்து நின்று இருவரும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
“மச்சான் ரெண்டு புறாவும் வேணுமா இல்ல இந்த தனியா இருக்கிற இந்த ஒத்த புறா மட்டும் போதுமா”
“மச்சான் ரெண்டுக்கும் ஆசைப்பட்டா ஒன்னு கூட கிடைக்காது. அதனால ரெண்டுல ஒன்னு அதோட ஜோடி புறாவ தேடி போயிட்டு அது நமக்கு வேண்டாம் தனியா நிக்குற இந்த ஒத்த புறா நமக்கு போதும்”
“அதுவும் சரிதான்” என்று அவன் சத்தமாக சிரிக்க வர அவனின் வாயை மூடியவன், “டேய் கொஞ்ச நேரம் அமைதியா இரு சத்தம் போடாம அமைதியா போய் அந்த புறாவோட வாயை பொத்தி தூக்கிட்டு நம்ம இடத்துக்கு போயிடுவோம். அதுக்கு பிறகு நீ எவ்வளவு வேணா சிரிச்சுக்கோ சரியா”
“சரிடா மாப்பிள்ளை” என்று சொல்லி இருவரும் மெதுவாக தனியே நின்ற பாரதியின் பின்னே சென்றனர்.
“அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம் சொல்லிட்டு போய் பத்து நிமிஷம் ஆகுது இன்னும் என்னதான் பண்ணிட்டு இருக்களோ இவள நம்பி வந்து இருக்கவே கூடாது. சுத்தி வேற இருட்டா இருக்கு பயமா வேற இருக்கு. ஏய் கீதா வந்து தொலைடி” என்று அவள் தனியே பேசிக்கொண்டு இருக்க
அவளின் பின்னே மெதுவாக வந்து இருவரில் ஒருவன் அவள் வாயினை மூட மற்றொருவன் அவள் காலை பிடித்துத் தூக்கி சென்றனர்.
அவர்களிடமிருந்து தப்பா நினைத்து திமிறிய பாரதியின் முயற்சிகள் அனைத்தையும் அவர்களின் உடம்பு பிடியால் முறியடித்தனர்.
“மச்சான் பார்க்க தான் ஆளு ஒல்லியா இருக்கா ஆனா செம கனம் கணக்காடா இவள அப்படியே வச்சி செய்யணும் டா” என்றான் ஒருவன்.
“டேய் மாப்ள இன்னைக்கு நைட்டு இது நம்மளுக்கு தான் உனக்கு என்னனு தோணுதோ எல்லாத்தையும் பண்ணு. இந்த வெள்ளை புறா நாளைக்கு காலைல நொந்தபுறவா மாற போகுது பாரு” என்று அவளை தூக்கிக்கொண்டு செல்லும்போது இருவரும் பேசி சிரிக்க
அவர்களின் பேச்சினை கேட்டு மிரண்டு போன பாரதி, “குமரா எப்படியாவது என்ன காப்பாத்து. இவங்க கையில மாட்டி நான் சீரழிய கூடாது அதுக்கு பதிலா என்ன கொன்னுரு. ப்ளீஸ் யாரையாவது அனுப்பி வை என்ன காப்பாத்த கடவுளே” என்று மனதில் வேண்டிக்கொண்டாள்.
“டேய் மச்சான் இவள இங்க வச்சு எதுவும் செய்ய வேண்டாம். இந்த டைம்ல யாராவது இந்த பக்கம் வந்துகிட்டே இருப்பாங்க. அதனால நம்ம காட்டு வழியா மெயின் ரோட்டுக்கு போயிருவோம் சரியா”
“சரி மச்சான் நீ சொன்ன மாதிரியே போயிருவோம்” என்று சொல்லி இருவரும் அவளை தூக்கிக் கொண்டு மெயின் ரோட்டிற்கு சென்ற போது மணலில் கால் புதைந்து ஒருவன் கீழே விழ அவனை தொடர்ந்து மற்ற இருவரும் கீழே விழுந்தனர்.
மணலில் விழுந்து கிடந்த பாரதி வேகமாக எழுந்து மற்றவரைக்களை பார்க்க அவர்கள் மணலில் உருண்டு கொண்டு கிடந்தனர்.
“பாரதி இதான் உனக்கு தப்பிக்கிறது சரியான வாய்ப்பு. யூஸ் பண்ணிக்கடி நீ ஓடுற ஓட்டத்தில் தான் உன் வாழ்க்கையே இருக்கு. கடவுளா பார்த்து ஒரு வாய்ப்பு தந்திருக்காரு ஓடு பாரதி ஓடு” என்று தனது மனதிற்கு சொல்லிக் கொண்டவள் வேகமாக எழுந்து ஒரு தொடங்கினாள்.
அவள் எழுந்து ஓடுவதை பார்த்த ஒருவன் வேகமாக எழுந்து, “ மச்சான் அவ ஓடுகிறா நான் போய் பிடிக்கிறேன் நீ பின்னாடியே வா” என்று சொல்லி அவள் பின்னே துரத்தி ஓடினான்.
“ஏய் எங்கடி ஓடுற நில்லடி. நீ எங்க போனாலும் எங்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது” என்று சொல்லி அவள் பின்னே ஓடி வந்தவன் அவள் சேலை முந்தியை பிடித்து இழுக்க அதில் குத்தி இருந்த பின் அவளின் ஜாக்கெட் கிழித்து பியந்து வந்தது. அதை உணர்ந்து கொண்டவன் இன்னும் வேகமாக அவள் சேலை பிடித்து இழுக்க அது அவன் கையோடு வந்தது.
சேலையை பிடித்து இழுத்ததால் தடுமாறியவள் கீழே விழ போக பின் சுதாரித்து நின்று தனது இரு கைகளிலும் மண்ணை அள்ளி அவன் கண்களில் வீசிவிட்டு வேகமாக மெயின் ரோட்டில் ஒரு வண்டி வருவதை பார்த்து அதனை நோக்கி ஓட தொடங்கினாள்.
வேகமாக வந்து கொண்டிருந்த வண்டி திடீரென்று வந்த இவளை பார்த்து கடைசி நொடி சடன் பிரேக் அடிக்க அதன் வேகத்தை பார்த்து கண்டிப்பாக இன்று நாம் செத்தோம் என்று நினைத்து இறுக்கமாக தனது கண்களை மூடிக்கொண்டு நின்ற பாரதி வண்டி நின்ற சத்தத்தை கேட்டு கண்களை திறந்து பார்த்தாள்.
அப்போது காரின் கதவு திறந்து இறங்கியவனை பார்த்து, “மாமா” என்று அழைப்போடு ஓடிச் சென்று அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.
அப்போது அந்த வழியே நடந்த வந்து இரு பெண்கள் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு, “அண்ணி இது இந்திரா பொண்ணு தான. இவ இங்க என்ன பண்றா. அதுவும் ஒருத்தன கட்டி புடிச்சிட்டு எப்படி நிக்கா பாருங்க இத சும்மா விடக்கூடாது அந்த போனை கொண்டாங்க இப்பவே என்ன பண்றேன்னு பாருங்க” என்று சொல்லி யாருக்கோ போன் செய்து இருவரும் நிற்கும் கோலத்தை சொல்லி இங்கே ஊரிலுள்ள அனைவருக்கும் அழைத்து வரச் சொன்னாள்.
“நான் இருக்கிற வரைக்கும் உங்களை நிம்மதியா வாழ விட்டுருவனா இருக்குடி உங்களுக்கு எல்லாம்” என்று மனதில் நினைத்துக் கொண்டு இருவரையும் பார்த்து நக்கலாய் சிரித்துக்கொண்டு நின்றாள் வசுந்தரா.
ஆனால் அவளுக்கு தெரியாது அவளுடன் நிற்பது யார் என்று……..
அதனை கவனித்து பார்த்திருந்தால் சொல்லாமல் இருந்திருப்பாளோ… என்னவோ…..
ஆனால் விதியை யாரால் வெல்ல முடியும்…..
error: Content is protected !!