Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் தேடும் காதல் நீ

நான் தேடும் காதல் நீ…..10

நான் தேடும் காதல் நீ….10

அன்று செல்வத்தை பார்த்துவிட்டு வரும் போதே சதாசிவம் கூறிவிட்டார்,

“அவர்களாக மூவ் செய்யும் வரை நீ அமைதியாக இரு…அவசரபட வேண்டாம்…..செல்வம் பார்த்துக்குவான்…..”என்று கூறிவிட சரி என்றுவிட்டு வந்துவிட்டாள்.அடுத்த நாள் காலையிலேயே அமரனின் முன் தான் நின்றாள் தீர்த்தா.ஆனால் அவனோ,

“என்ன….”என்று எதுவும் நடவாதது போல கேட்க.இரு நொடி மௌனம் அவளிடம் ஒரு மனம் கூறிவிடு என்று கூற மற்றொரு மனமோ விலகியே இரு என்று கூறியது.அவளின் அருகாமை இன்று ஏதோ பயத்தை கொடுத்தது அமரனுக்கு எங்கே தன்னையும் மீறிவிடுவோமோ என்று நினைத்தவனுக்குள் இயலாமை கோபம் இரண்டும் ஒன்று சேர முகத்தை இறுக்கியவன்,



Advertisement

“தீர்த்தா என்ன வேணும்….எனக்கு வேலையிருக்கு சீக்கிரம் சொல்லு…..”என்று சற்று கோபமாகவே கேட்டான்.அதுவரை அடக்கியிருந்த அவளின் கோபமும் ஆத்திரமும் மீண்டும் தலை தூக்கிவிட,

“ஒண்ணுமில்லை….”என்று தலையை ஆட்டிவிட்டு வந்துவிட்டாள்.என்ன தான் அவனிடம் பேச வேண்டாம் என்று நினைத்தாலும் முடியாமல் போனது.அதனால் தான் அவனை பார்த்தவுடன் அவனிடம் அனைத்தையும் கூறிவிடலாம் என்று வந்தவள் அவன் தன்னை தவிர்ப்பதில் மீண்டும் முறுக்கிக் கொண்டு வந்துவிட்டாள்.போகும் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில்,

“வேணாம் தீர்த்தா….உன்னோட நோய் என்கிட்டேயும் தொத்திக்கிச்சு போல பயமா இருக்கு….எனக்கு வேணாம்….இந்த காதல் வேணாம்….உன்னோட அருகாமை வேணாம்….என்னை விட்டு தள்ளியே இரு….அது தான் நமக்கு நல்லது…..”என்று கூறிக் கொண்டவனின் மனது உனக்கு என்ன தான் வேண்டும் என்று கேள்வி எழுப்ப அதற்கு பதில் இல்லை.அதன் பின் தீர்த்தாவும் பேசவில்லை அமரனும் கேட்கவில்லை.இதோ ஒரு வாரம் கடந்துவிட்டது.

Advertisement

அதிகாலை நாச்சியப்பன் கடையில் வேலைகள் மும்முரமாக ஓடிக் கொண்டிருந்தது.இன்னும் சற்று நேரத்தில் மண்டியும் திறந்து ஆட்களும் வர ஆரம்பித்துவிடுவார்கள் அதற்குள் வேலைகளை முடித்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

Advertisement

“பாப்பா….இந்தா இந்த சட்டினியில உப்பு சரியா இருக்கானு பாரு…”என்று செந்தா தீர்த்தாவிடம் கேட்க அவள் முறைப்பதை பார்த்தவர்,

“ம்ம் இப்ப முறைப்ப அப்புறம் என்னை தான் திட்டுவ…அதனால நீயே செத்த பார்த்துடு….”என்று கெஞ்சுவது போல கூற,தீர்த்தாவின் முகத்தில் மெல்லிய புன்னகை,செந்தா தாத்தா காலத்தில் இருந்து வேலையில் இருப்பவர்.ஒருவகையில் தீர்த்தாவிற்கு பாட்டி ஸ்தானத்தில் இருப்பவரும் கூட அதனால் அவரிடம் அதிகம் கோபம் கொள்ள மாட்டாள்.செந்தாவும் வேலையில் கெட்டி என்ன தான் வயது மூப்பு இருந்தாலும் சோம்பி அமராமல் வேலை செய்வார்.ஆனால் சில நேரங்களில் நிகழும் கவன குறைவு தீர்த்தாவை நிதானம் இழக்க வைத்துவிடும்.அவர் கூறியபடி ருசித்து பார்த்துவிட்டு சரியாக இருக்கிறது என்று கூறிய பின் செந்தா அடுத்த வேலை பார்க்க போய்விட,தூரத்தில் புல்லட்டின் சத்தம் கேட்டது.

“என்னதிது அதுக்குள்ள அமரன் வரான் போல…..”என்று கூறிக் கொண்டே அவனிற்கான டீயை தயார் செய்ய ஆரம்பிக்க அவளின் கடையை கடந்து சென்றான் அமரன்.அவன் மண்டியை திறந்து தனது இருக்கையில் அமர அவனிற்கான டீ அவனின் முன் இருந்தது.தீர்த்தா தான் தந்துவிட்டு சென்றாள்.

Advertisement

“என்னடா நடக்குது இங்க….ஒரு ஆளு இன்னைக்கு அமைதியா போகுது….என்ன விஷயம்…..”என்று கதிர் கேட்க அமரனோ எந்த பதிலும் கூறாமல் டீயை ரசித்து பருகிக் கொண்டிருந்தான்.கதிர் ஒருவாரம் சென்று இன்று தான் கடைக்கு வருகிறான் அதனால் அவனிற்கு அமரன்,தீர்த்தாவின் பனிப்போர் தெரியாது.

“டேய் கேட்டா பதில் சொல்ல மாட்டியா….அவ ஏன் ஒருமாதிரி இருக்கா….”என்று கதிர் கேட்க எதற்கும் அமரனிடம் பதில் இல்லை அமைதி மட்டுமே.ஆனால் அவளின் நடவடிக்கைகளை அறிந்து வைத்திருந்தான் தீர்த்தாவின் பிரச்சனை அவள் சதாசிவத்தை பார்த்தது,அவருடன் செல்வத்தை பார்த்துவிட்டு வந்திருப்பது என்று அனைத்தும் அவனின் காதிற்கு வந்துவிட்டது அடுத்த நாளே ஆனால் எப்போதும் அதற்கு வினையாற்றுபவன் இன்று அமைதியாக ஒதுங்கி நின்று கொண்டான்.

அமரனின் மௌனம் கதிருக்கு பயத்தை தான் கொடுத்தது எப்போதும் இப்படி இருப்பவனில்லை ஏதோ மாற்றம் நிகழ்ந்திருக்கிறது ஆனால் அது நல்லதா கேட்டதா என்று தான் அவனிற்கு புரியவில்லை.அவனிற்கு அமரனும்,தீர்த்தாவும் வேறு வேறு இல்லை.

“நானே போய் கேட்குறேன்….என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா அவ….வர வர சரியா பேசறது கூட இல்லை…..”என்று கூறிவிட்டு கதிர் எழுந்து செல்ல அமரன் தடுக்கவில்லை.

“பூரி….என்ன பண்ணிக்கிட்டு இருக்க…..”என்று கத்தியபடியே கதிர் கடைக்குள் வர அவனின் தலையை பதம் பார்த்தது சொம்பு ஒன்று.

“ஆஆஆஆ….அம்மா….”என்று தன் நெத்தியை தேய்து கொண்டவாரே ஒரு இருக்கையில் அமர்ந்தவன் தீர்த்தாவை முறைத்துக் கொண்டே,

“பூரி இது நல்லாயில்லை அவ்வளவு தான் சொல்லுவேன்….”என்று முகத்தை உர் என்று வைத்துக் கொண்டே கூற,தீர்த்தா அடுத்து கனமான பாத்திரத்தில் கை வைக்கவும்,

“சரி சரி சமாதானம் சமாதானம்…..”என்று கூற அவனின் முன் டீயை வைத்தவள்,

“நீ எப்ப வந்த நான் பார்க்கவேயில்லை….”

“நீ யாரை தான் பார்க்குற….இப்பபெல்லாம் நீ மாறிட்ட தீர்த்தா….”என்று உண்மையான வருத்ததுடன் தான் கூறினான் கதிர்.

“ப்ச் விடு கதிரு….உனக்கு எப்ப எக்ஸாம் வருது….படிச்சிட்டியா….இந்த தடவை ஒழுங்கா பாஸாகிடு….சொல்லிட்டேன்….”

“பேச்சை மாத்துற நீ…..”என்றவன் எழுந்து கொள்ள,தீர்த்தாவும் தன் வேலைகளை பார்க்க துவங்க,

“என்கிட்ட சொல்லல சரி ஆனா அமரன்கிட்ட கூட சொல்லலை போல….அவன் கிட்ட ஏன் பேசமாட்டேங்குற தீர்த்தா….”என்ற கதிரின் கேள்வியில் திரும்பியவள்,

“என்கிட்ட இப்ப எதுவும் கேட்காத கதிர்….நானே கொஞ்ச நாள் கழிச்சு சொல்லுறேன்….இப்ப கேட்காத….ப்ளீஸ்….”என்றுவிட அதன் பின் கதிர் தீர்த்தாவிடம் எதுவும் கேட்கவில்லை அமைதியாக வந்துவிட்டான்.ஆனால் அவள் தன்னிடம் கூறாததில் கோபமும் வருத்தமும் இருந்தது.சோர்ந்த முகத்துடன் வரும் நண்பனை கண்ட அமரனுக்கு வருத்தமாக தான் இருந்தது.

“விடுடா அவளே சொல்லுவா….”

“நான் என்ன செஞ்சுடுட போறேன்…அதான் என்கிட்ட சொல்லலை போல….”என்று கூற,

“அவ காதுல நீ பேசுனது விழுந்தது அவ்வளவு தான் பார்த்துக்க….உனக்கு அவளை பத்தி தெரியாதா…..விடு….”

“இல்லடா….என்னமோ மனசுக்கு சரியா படலை அதான்….”என்று கதிர் பேசிக் கொண்டிருக்கும் போதே தீர்த்தாவின் கடையின் முன் ஒரு ஆடி கார் வந்து நின்றது.அமரனுக்கு தெரிந்துவிட்டது வருவது யார் என்று ஆனால் இவன் எதற்கு வருகிறான் என்று புருவத்தை சுருக்கினான்.

காரில் இருந்து கம்பீரமாக இறங்கியவனையே அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆறடி உயரத்தில் மேல் தட்டிற்கு உண்டான அனைத்தும் அம்சமும் பொறுந்தியிருந்தது அவனிடம்.

“யாருடா இவன் ஹீரோ மாதிரி இருக்கான்….”என்று கதிர் வாய் விட்டே கூற,

“கொல்ல போறேன் உன்னை….”என்ற அமரனின் பார்வை மொத்தமும் அவனிடம் தான்,வேலையில் இருந்த தீர்த்தா கார் வரும் சத்ததில் நிமிர்ந்து பார்க்க அதில் இருந்து இறங்கியவனைக் கண்டவுடன் ஒரு நிமிடம் திகைத்து தான் விட்டாள்.தனது பரம எதிரி யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு கூறுவாள் நிமலன் என்று.சிறு வயது முதல்லே அவனிற்கும் தீர்த்தாவிற்கும் ஆகாது.அதுவும் தங்கள் நிலை அந்த வீட்டில் குறைந்த போது ஒருமுறை அவனின் எள்ளல் பேச்சில் அவனை அடித்து விட்டாள்.அதற்கு லதா காளி போல் ஆடியது எல்லாம் இப்போது மனக் கண் முன் வந்தது.ஆனால் நிமலனுக்கு அது போல் எந்த நியாபகங்களும் இல்லை போல காரை நிறுத்திவிட்டு கடையின் உள் நுழைந்தவன்,

“ஹாய் தீர்த்தா….ஹவ் ஆர் யூ…..”என்று வெண் பற்கள் தெரிய சிரிக்க,தீர்த்தா இன்னும் குழம்பிய நிலையிலேயே நின்றாள்.

“ஹேய்….”என்று தன் இரு கைகளையும் சிலையாக நின்ற தீர்த்தாவின் முன் ஆட்டிட,

“ஆங்….”என்றவள் ஓரடி பின் நகர்ந்தாள்.அவளின் கண்கள் தன் போல் எதிரில் நோக்க அவளையே பார்த்தவண்ணம் நின்றிருந்தான் அமரன்.

“தீர்த்தா….”என்ற நிமலனின் சத்தத்தில் திரும்பியவள்,

“நீ….நீ….எதுக்கு வந்த….”

“ப்பா…பேசிட்டியா…..நான் கூட ஊமையாகிட்டியோனு நினைச்சேன்…..”என்று கூற,தீர்த்தாவின் முகம் மாறியது அதை உணர்ந்த நிமலன்,

“ஹே…ஹே….கூல் கூல்…நான் சும்மா தான் சொன்னேன்….நீ எதையாவது எடுத்து என்னை அடிச்சிடாத….”

“அப்ப வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு….”என்ற தீர்த்தாவின் முகத்தில் ஒருவித இறுக்கம் குடியேறிந்தது.

“ம்ம்….நீ இன்னும் பழசை எல்லாம் மறக்கலைனு நினைக்கிறேன்…..வெல் ஐ ம் சாரி பார் எவரி திங்….”என்று உணர்ந்து தான் கூறினான்.தீர்த்தாவிற்கு அது புரிந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல்,

“இட்ஸ் ஓகே….என்ன விஷயம்….”

“வள வளனு பேசாத….விஷயத்துக்கு வாடா வெண்ணைனு சொல்லுற அப்படி தான….”

“ஆமா….”

“ச்சு….டேமேஜ்….எதிர்பார்த்தது தான்….சொல்லுறேன்…ஆமா எங்க உன் தங்கச்சி….”என்றுவிட்டு வீட்டின் உள்ளே தேட,

“அவ இல்லை நீ எதுக்கு வந்த அதை சொல்லு….”

“அட என்னமா உன் வீட்டுக்கு வந்திருக்கேன் வானு கூப்பிட்டு ஒரு டீ கூட கொடுக்கலை…இவ்வளவு பெரிய டீ கடையில எனக்கு ஒரு டீ கிடையாதா…”என்று இலகுவாக கூறிக் கொண்டே ஒரு நாற்காலியில் அமர,தீர்த்தாவிற்கு அவனை போல் எல்லாம் இலகு தன்மை வரவில்லை ஆனால் தன்னிடம் வந்திருக்கிறான் என்பதற்காக அவனை உபசரித்தாள்.

“வாவ்……ஜஸ்ட் அமேஸிங்……”என்று அவள் கொடுத்த டீயை ரசித்து பருக,அவனை ஏதோ வேற்று கிரக வாசி போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் தீர்த்தா.

“என்ன அப்படி பார்க்குற….நிஜமா ரொம்ப நாள் ஆச்சு….நான் டீ குடிச்சு….வீட்ல நல்லவே இருக்காது பொதுவா நான் வெளில குடிக்கவும் மாட்டேன்….அப்புறம் ஏன் இங்க குடிச்சனு கேட்குறியா….இது நம்ம கடை அதான்….”என்று கூற,

“இப்ப எதுக்கு இவ்வளவு புகழாரம்…..என்ன வேணும் உனக்கும் உன் குடும்பத்துக்கும்…..”என்று தீர்த்தா கேட்க,நிமலனின் புருவங்கள் உச்சி மேட்டை தொட்டது.

“அப்பா சொன்னது போல இவ டேஞ்ஜர் தான்….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவரே நிமிர தீர்த்தாவின் பார்வை அவனை துளைத்தது.

“சரி சரி…..நான் சொல்லிடுறேன்….உன்னையும்,சிவாவையும் தாத்தா பார்க்கனும் சொன்னார் அதுக்கு தான் உங்களை அழைச்சிட்டு போக வந்தேன்….”என்று ஒரு வழியாக தான் வந்த விஷயத்தை கூற,

“எந்த தாத்தா…எனக்கு யாரையும் தெரியாது….நீ கிளம்பு….நான் வேற ஒரு விஷயமா நீ வந்திருப்பனு நினைச்சிட்டேன்…”என்றவள் தன் வேலைகளை பார்க்க தொடங்க,

“ஹேய் தீர்த்தா….ப்ளீஸ் புரிஞ்சுக்க….தாத்தா இப்ப ரொம்ப முடியாம இருக்கார்….அவருக்கு உங்களை ஒரு தடவை பார்க்கனும் ரொம்ப ஆசை படுறார்….என்ன தான் இருந்தாலும் அவர் வயசானவர்…..கொஞ்சம் யோசியேன்….அதோட அப்பா உன் கிட்ட இதையும் சொல்ல சொன்னார்….கேஸ் வாப்பஸ் வாங்கியாச்சு….இன்னைக்கு இப்ப தான் நடந்திருக்கும்….வக்கீல் அங்கிள் உனக்கு சொல்லுவார்….”என்று அனைத்தும் கூறி முடிக்க,தீர்த்தா மத்ததை விட்டுவிட்டு அவன் கூறிய கடைசி விஷயத்தை கேட்டதும் சதாசிவத்திற்கு அழைக்க தொடங்கிவிட்டாள்.அவளையே பார்த்துக் கொண்டு நின்ற நிமலனுக்கு புரிந்தது அவள் யாருக்கு அழைக்கிறாள் என்று அவனும் தன் தந்தைக்கு அழைத்து விபரம் கேட்க அவர் இப்போது தான் வக்கீலை பார்த்து  வேலையை முடித்துவிட்டு வெளியில் வருவதாக கூறினார்.

“நல்லவேளை பண்ணிங்க….இல்லை இவ என்னை உண்டு இல்லைனு பண்ணிருப்பா…”என்று நிமலன் தன் தலையில் கை வைத்தபடி கூற,

“ஹா…..ஹா….இன்னைக்கு நீ தப்பிச்சிட்டனு சொல்லு….”

“ரொம்ப சந்தோஷம் போல உங்களுக்கு….”என்று கூறியவன் அவனாகவே,

“ம்ம் ரொம்ப கஷ்டம் போலப்பா….அவ வரமாட்டா….என்ன செய்யறதுனு தெரியலை…நான் வேற தாத்தா கிட்ட பிராமிஸ் பண்ணிட்டேன்….என்ன பண்ணபோறேனோ…..”என்று நிமலன் புலம்பிக் கொண்டே திரும்ப அவனை முறைத்தபடி நின்றிருந்தாள் தீர்த்தா.

“அச்சோ மாட்டிக்கிட்டேன்….”என்றவன் கைபேசியை அணைத்து வைத்துவிட,

“கிளம்பு….”

“இல்ல தீர்த்தா அது….”என்று ஏதோ கூற வந்தவனை கை நீட்டி தடுத்தவள்,வெளியில் செல்லுமாறு கை காட்டிவிட்டாள்.

“ஓகே ஓகே….நான் போறேன்…..ஆனா திரும்ப கண்டிப்பா வருவேன்….நீங்க வர வரைக்கும் உன்னை பார்க்க வருவேன்….”

“என்ன மிரட்டுறியா….”

“இல்ல கெஞ்சுறேன்…..”என்று இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து கும்பிடு போட அவனின் அழுச்சாட்டியத்தில் நரநரவென பல்லை கடித்த தீர்த்தா,

“உன் கிட்ட பேசறதே வேஸ்ட்…..”என்றுவிட்டு அவனை எதை கொண்டு அடிக்கலாம் என்று தேட,

“அடேய் நிமலா ஓடிடு இல்லை இன்னைக்கு நீ சட்னி தான்….”என்று கூறிக் கொண்டே தன் காரில் அமர்ந்துவிட,

“ஒழுங்கா கிளம்பிடு அது தான் உனக்கு நல்லது….”என்று தீர்த்தாவின் குரல் வாசல் வரை கேட்க,ஒற்றை பக்க காரின் கண்ணாடியை திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டியவன்,

“இங்க பாரு தீர்த்தா நான் பேச தான் வந்தேன் நீ தான் வன்முறையை கையில எடுக்குற….அதனால இப்ப போறேன்….நாளைக்கு வரேன்….பை….”என்று அவன் கூறி காருக்குள் நுழைய,கார் கதைவை பதம் பார்த்தது ஒரு பெரிய கல்,

“ஆத்தே அடிச்சே கொன்னுடுவா போல….விடக்கூடாது நிமலா….”என்று கூறிக் கொண்டே காரை எடுத்துக் கொண்டு அவன் ஓடிவிட,

“எருமை…..சொரனையே இருக்காது போல எப்படி இளிச்சிக்கிட்டு வரான்….”என்று கூறிக் கொண்டே எதிர் கடையை பார்க்க அமரன் மண்டியின் உள் வேலையில் இருந்தான்.ஒருநிமடம் அவனிடம் செல்ல துடித்த கால்களை முயன்று அடக்கியவள் தன் கடைக்குள் நுழைந்து கொண்டாள்.

“விட்டு விலகும் முன்பே…..

விட்டு விலகுவது நன்று…..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!