Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 20 1

இதோ.. இதோ.. என் பல்லவி

 அத்தியாயம்  -20



Advertisement

    ஒரே வீட்டில் இருந்தாலும் விக்ரமும்  பானுவும்  பேசிக்கொள்ள  வில்லை..

Advertisement

Advertisement

 பானு  உணவு  சாப்பிட்டதும், சூர்யாவிடமோ  ஆஷிக்கிடமோ பானுவின் மாத்திரையை கொடுத்து  விழுங்கசொல்லுவான் விக்ரம்..

மறந்தும்  பானுவை  நேருக்கு நேர் பார்ப்பதை  தவிர்த்தான் விக்ரம்..

Advertisement

பானுவுக்கு  அவனின் பாரா முகம் வேதனையை தர. அவனிடம்  பேச மனம் தோன்றினாலும். அவனாகவே  பேசட்டும் என்று எதிர் பார்த்தாள்..

அவனோ  தூரத்தில் இருந்து அவளின் தேவைகளை  பார்த்து பூர்த்தி  செய்து  வைத்தான்..

பிள்ளைகளோடு  நன்றாக பேசுபவன். தன்னோடு  ஒரு வார்த்தை  பேசாதது  வேதனையை தர. அவன் முகத்தையே  எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருப்பாள்..

அவள் தன்  முகத்தையே பாரப்பது தெரிந்தாலும் மனதில் அவள் பார்ப்பது  சந்தோஷத்தை தர. கிட்ட  போன முறைப்பா போடி என்று  அவளிடம் பேசாமல் இருந்தான்..

ஜெனி  பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள்ள. பானு  நன்றாக  ஓய்வு  எடுத்து. உடம்பை பார்த்துக் கொண்டாள்..

விக்ரம், பானு, ஆஷிக், சூர்யா, சிவாக்குட்டி என்று  அவைவரும்  ஒரே   அறையில் படுத்தாலும்  பிள்ளைகள் தூங்கியவுடன், விக்ரம் அவனின்  பழய  அறைக்கு சென்று விடுவான்..

 பானுவிற்கு அவனிடம்  பேச வேண்டும் என்று தோன்ற. சாப்பிடும்  போது விக்ரமிடம் பேச. அவன்  இவள் கேட்டதற்கு  பிள்ளைகளின்  முகம்  பார்த்து பதில்  சொன்னான்..

அதில்  கடுப்பானவள்  போடா. நானும் பேச  மாட்டேன் என்று முறுக்கிக் கொள்ள…

இரண்டு வாரங்கள் கடந்த இருந்தது..

காலையிலே  பானு இருக்கும் அறைக்கு வந்த விக்ரம் ” பானு”   என்று அவளை பேர் சொல்லி அழைக்க.

அவன் தன்னை பேர் சொல்லி அழைத்து பேசிய சந்தோஷத்தில்..

“சொல்லுங்க ஹபீபி ”  என்றாள்.

“உன்னை செக் பண்ண ஹாஸ்பெட்டல்  போகனும்  கிளம்பு”  என்றான்..

“என்ன செக்கப் பண்ண போறோம்?”. என்றாள்..

“டாக்டர்  சொல்லி இருக்காரு  15   நாளுக்கப்பறம்  ஆபிதாவை ஹாஸ்பெட்டல்  கூட்டிட்டு போயி ஒரு புல் செக்கப்  பண்ண   சொல்லி இருக்காரு அது தான் கிளம்பு. பசங்க இருக்கட்டும். சிவாவை மட்டும் தூங்கிட்டு  போகலாம்” என்றான்..

“சரி”  என்றவள் கிளம்பி வர.. ஆஷிக்கிடமும், சூர்யாவிடமும் சீங்கிரம் வந்துருவோம்  விளையாடுங்க, ஜெனி  ஆண்ட்டி இருப்பாங்க  நாங்க ஹாஸ்பெட்டல் போயிட்டு  வர்றோம்”  என்று  இவர்கள்    கிளம்பினார்கள்..

 விக்ரம்  தான்  காரை ஓட்டிக்கொண்டு வந்தான். விக்ரம்  தன்னோடு பேசியது சந்தோஷத்தை தர. அவனுக்கு நம்ம மேல இருந்த கோபம் போயிடுச்சு போல என்று மனதில் நினைத்தவள். அவனிடம்  காரில் பேச முயற்சி பண்ண.

சிவாக்குட்டி  தந்தையிடம் பேசிக்கொண்டு வந்தாள். “அப்பா  நாம எங்க போறோம். ரொம்ப தூரம் நாம இரண்டு பேரும் போயி  ஐஸ்கிரீம் சாப்பிடலாம்”  என்று தந்தையிடம்  பேசிக்கொண்டு வர..

ஆபிதா பானு  வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு  வந்தாள்..

 இன்னைக்கு விக்ரம் மிக அழகாக தெரிந்தான் பானுவின் கண்களுக்கு. அவனின் உடை, ஹேர் கட். அவனின் உயரம் என்று அவனை ஓரக் கண்ணால்  பார்த்து  சைட்டு அடித்து கொண்டு வந்தாள்..

மூன்று பேரும் ஹாஸ்பெட்டல் வந்து சேர்ந்தனர். அது மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்க. “டாடி பிக் ஹாஸ்பெட்டல்” என்றாள் சிவாக்குட்டி.

“ஆமாம்டா வா போலாம்”  என்று இருவரையும் உள்ளே அழைத்து செல்ல..

ஆபீதாவுக்கு அனைத்து டெஸ்டுகளும் எடுக்க பட்டது..

அவளுக்கே இது என் இவ்வளவு டெஸ்ட் தலை முதல் கால் வரை என்று இருந்தது..

அனைத்து டெஸ்ட் ரிப்போர்ட்டும்  1  மணி நேரத்தில் வரும் என்று நர்ஸ் வந்து சொல்லி விட்டு செல்ல…

இருவரையும்  மதிய உணவிற்கு வெளியில் அழைத்து சென்றான்..

மகளுக்கு “என்ன வேணும்டா சாப்பிட , இது வேணுமா, அது வேணுமா” என்று கேட்டு வாங்கியவன்.

“உனக்கு என்ன வேணுமோ  நீயே   சொல்லி வாங்கிக்கோ பானு” என்று   மெனு கார்டை அவளிடம் தர.

அந்த மெனு கார்டை அவனிடம் திருப்பி கொடுத்தவள்”நீங்களே எனக்கு சேர்த்து ஆர்டர் பண்ணுங்க”  என்றாள்..

அவளின்  கோபம்  புரிந்தவன்  அவளுக்கு பிடித்த மாதிரி இரண்டு, மூன்று டிஸ்களை ஆர்டர் பண்ணா..

எனக்கு என்ன வேணுமுன்னு எல்லாம் தெரியும். ஆனா பேச மாட்டார். ரொம்ப தான் பண்ணுறாரு வீட்டுக்கு வாங்க இருக்கு. என்று மனதில் விக்ரமனை திட்டி கொண்டே சாப்பிட்டாள்..

மூன்று பேரும் சாப்பிட்டு முடித்து  ஹாஸ்பெட்டலுக்கு வர.

விக்ரம்  டாக்டரிடம் “ஆபிதாவுக்கு  எல்லாம்  நார்மலாக  இருக்கு தானே”  என்றான்..

“எஸ் விக்ரம் சீ, இஸ்  பர்பெக்ட்லி ஆல்  ரைட் நவ்”  என்றார்…

“பிளட் ரீப்போர்ட்  எல்லாம் சரியா இருக்கா  டாக்டர் ”  என்று கேட்க…

அதுவும் சரியாக இருப்பதாக டாக்டர் சொன்னார்..

“ஆபிதா டிராவல் பண்ணலாமா  டாக்டர்” என்றான் விக்ரம் கேட்க..

“யா  பண்ணலாம்  விக்ரம்”…  என்று கூற.

“ஓகே டாக்டர் தாங்யூ”  என்று  ஆபீதாவையும், சிவாக்குட்டியையும் வீட்டுக்கு அழைத்து வந்த விட்டவன்..

” நாளைக்கு நீயும் பிள்ளைகளும் மலேசியா போங்க பானு ” என்று சொல்லி விட்டு ஆபிஸ் சென்று விட்டான் விக்ரம்..

என்ன! என்ன சொன்னார்  மலேசியா போக சொன்னாறா  என்று அவள் முளித்து நிற்க.

விக்ரமனின் கார் இவர்களை விட்டவுடன் சென்று இருந்தது..

“வரட்டும்”  நைட்டு பேசிக்கலாம் என்று காத்து இருந்தாள்..

விக்ரம் இரவு வர. மிகவும் லேட்டாக. பிள்ளைகள் அனைவரும் தூங்கி இருக்க. ஜெனி அவர் வீட்டுக்கு சென்று இருந்தார். சுப்பராம்மையா விக்ரமுக்காக  காத்து இருக்க.

“நீங்க  போங்க  ராம்மையா   உங்க  வீட்டுக்கு. நான்  ஜீ வந்த பாத்துக்கிறேன்”  என்றாள் பானு…

“சரிமா என்று சுப்பராம்மையா அவர் வீட்டுக்கு கிளம்பி விட”..

சுந்தர் இன்று வேலை முடித்து சீங்கிரம்  வந்தவர் பேரப்  பிள்ளைகளோடு சேர்ந்து  விளையாடியவர். அவர் அறைசென்று தூங்கிவிட.

விக்ரம்  பானு வருவதற்கு  முன் தந்தையை   தங்களோடு வந்து இருங்கள் என்று அழைக்க. இல்ல விக்ரம் இது உன் அம்மா வாழ்ந்து வீடு நான் வரமாட்டேன் என்று சொன்னவர். என்று சிவகாமியை  பார்த்தாறோ அன்றிலிருந்து  விக்ரம் வீட்டில் தான். விக்ரம் கூட சுந்தரை கேலி செய்து இருந்தான். உங்க பொண்டாட்டி மாதிரி என் பொண்ணு இருக்கவும். இங்கே இருக்கீங்க என்றிருந்தான்.

பானு விக்ரமுக்காக சாப்பிடாமல் காத்து இருந்தாள்.. விக்ரம் வேலை  முடிந்து வர நள்ளிரவு ஆனது.

கதவை  திறந்து கொண்டு விக்ரம் வர. ஹாலில்  டி. வி ஓடிக்கொண்டு இருக்க. பானு  உட்கார்ந்த வாறே தூங்கிகோண்டு இருந்தாள். இவன் வந்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்டவள்..

 அவனை பார்த்து “வாங்க சாப்பிடலாம்” என்றாள்..

“நான்  சாப்பிட்டேன் நீ போய் தூங்கு, ஏன் இங்கே உட்கார்ந்து இருக்க” என்றவன். பேசிக்கொண்டே  தூங்கும் பிள்ளைகளை  பார்த்து விட்டு  வந்தவன்..

பானு இன்னும் சோபாவிலே  அமர்ந்து இருக்க. “போ, போயி தூங்கு. எனக்கு தூங்கம் வருது”  என்று அவன் அறைக்கு போக எழுந்தான்..

அவளோ அசையாமல்  அமர்ந்து இருக்க. “தூங்கம் வரலய பானு, மாத்திரை  போட்டீயா”  என்றான்..

அவள் இல்லை என்று தலையாட்ட..

“ஏன் மாத்திரை  சாப்பிடல. எப்போ சாப்பிட்ட” என்றான்..

“நான் இன்னும் சாப்பிடல”  என்று  பானு சொல்ல..

” ஏன் இன்னும்  சாப்பிடமா  இருக்க. வா சாப்பிடு” என்று அவளை கைபிடித்து இழுக்க..

“எனக்கு வேண்டாம் போங்க” என்று அழுக..

“இப்போ  எதுக்குடி அழற, சாப்பிட சொன்னது ஒரு குத்தமா, வா வந்து சாப்பிடு ”  என்று அழைக்க..

“எனக்கு  வேண்டாம்” என்று மீண்டும் கண் கலங்க..

“நான்  என்னடி பண்ணனும் சொல்லு பண்ணுறேன். ஏன்டி இப்படி அழுது சாவடிக்கிற” என்றான்..

“நானா உங்களை சாவடிக்கிறேன், நீங்க தான்  என்கிட்ட பேசாம என்னை வேதனை  பட வைக்கிறீங்க. எல்லார் கிட்டையும் நல்லா பேசுறீங்க என் கிட்ட மட்டும் பேசுறது  இல்லை”.. என்று புலம்ப.

 ” நான்  எதுக்குடி  உன்கிட்ட பேசனும். நீ என்னை  பார்த்து என்ன சொன்ன. இதற்குதான் என்னை கூட்டிட்டு வந்தீயயின்னு. என்னை  பார்த்து கேட்ட. என்ன பத்தி என்ன நெனச்ச  நீ. நான் அவ்வளவு மோசமான ஆளா சொல்லு. என் பல்லவி தவிற ஒரு பொண்ணையும்  தொட்டதில்லடி நானு. ஆனா  நீ  என்ன  பாத்து  இப்படி கேட்க, உனக்கு  எப்படி மனது வந்துச்சு பானு”  என்றான்..

அவள் அவன் அருகில் வந்து “ஜீ சாரி ஜீ  ஏதோ கோபம். நீங்க என்னை மலேசியாவில்  இருந்து கூட்டிட்டு வந்துடீங்கன்னு கோபம் அதனால தான் அப்படி பேசுனேன் சாரி ஜீ. இனிமே இப்படி பேச மாட்டேன். என்கிட்ட  பேசாம மட்டும்  இருக்காதீங்க எனக்கு ரொம்ப  கஷ்டமா  இருக்கு ஜீ”  என்றாள்..

“சரி வா சாப்பிடு  காலையில் பேசிக்கலாம்  வா”  என்று டைன்னிங்  டேபலுக்கு  கை பிடித்து அழைத்து வந்தவன்..

“சாப்பிடு” என்க. அவள் அசையாமல்  அமர்ந்து இருக்க.

அவனோ  அவளுக்கு  ஒரு தட்டில் சாப்பாத்தியை எடுத்து  வைத்து  பன்னீர் கீரேவியை  ஊற்றி அவள் பக்கம் வைத்து  “சாப்பிடு” என்றான்…

அவளோ  ஆ  என்று வாயை  திறக்க.

சிரித்து கொண்டே அவளுக்கு சப்பாத்தியை ஊட்டி விட்டான்.

அவளோ அவனோடு நெருங்கி அமர்ந்து கொண்டு உண்டாள்.. “இரு மாத்திரை  தர்ரேன் ”  என்றவன்  மாத்திரையை  எடுத்து வந்து தர..

 அதை வாங்கி விழுங்கியவள். “நீங்க சாப்டீங்களா” என்றாள் பானு..

“சாப்டேன்  பானு, ஈவ்னிங் ஒரு  டின்னர் பார்ட்டி  அதான் சாப்பிட்டேன். நீ போய் தூங்கு கைலையில்  நீ  மலேசியா  கிளம்பனும்”  என்றான்.

அவளோ  சொல்ல  மறந்துட்டோமோ  என்றவள்…

“நான்   மலேசியா போகலா”..

“ஏன்  நீ தான் உன் தங்கச்சியை  பார்க்கனும், தங்கச்சி பிள்ளைகளை பாத்துக்கனுமுன்னு   சொன்ன. இப்போ  உன்  உடம்பு  ஓகே வா  இருக்கு நீ போயிட்டு வா”…

“இல்லை நான் போகல. வாஜிதா வாப்பா வீட்டுல இல்ல. மச்சான் வீட்டுக்கு போயிட்டா”  என்றாள்..

“பரவால நீ போயி உன் வாப்பா, உன் பாசகார அண்ணன் முபாரக்கை  எல்லாரையும் பார்த்துட்டு. உனக்கு எப்போ இங்க வரனுமோ  அப்போ வா” என்றான்….

அவனை முறைத்து பார்த்தவள்..

“என்னை  பழி வாங்குறீங்களா” என்றாள் பானு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!