Skip to content
Post Views: 3,630
“உன்னை பழிவாங்கி நான் என்ன செய்ய போறேன் பானு,. உனக்கு எங்க போகனுமோ போ. எங்க இருக்கனுமோ அங்கே இரு. உன்னை யாரும் கேட்க மாட்டாங்க. எனக்கு தூங்கம் வருது பானு, நான் என் ரூம் போறேன் நீ போ” என்றான்…
அவளோ என்ன சொல்லி இவரை புரியவைக்க என்று டைனிங் டேபளின் பக்கத்தில் உள்ள சேரில் அமர்ந்திருக்க..
Advertisement
“நீ போ பானு தூங்கு பானு. நானும் தூங்கனும் போ ” என்றான்.
Advertisement
“எனக்கு இங்க இருக்க தான் பிடிச்சுருக்கு உங்க வேலையை பார்த்துட்டு போங்க. என் வாப்பா நீ விக்ரம் மாப்பிள்ளையோடு போன்னு சொல்லிட்டாரு. நீங்க மலேசியா போன்னு சொல்லுறீங்க. நான் தான் ஒரு பைத்தியகாரி எல்லாம் மறந்துட்டு ஒன்னும் மே தெரியாம உட்கார்ந்து இருக்கேன்” என்று தலையில் கை வைத்து அழுத்தியவளை..
Advertisement
“தலை வலிக்குத பானு’ என்று
அவள் அருகில் வந்தவன். வா என்று அவனின் அறைக்கு அழைத்து சென்றான். “ஒரு 5 மினிட்ஸ் வந்துருவேன்” என்று குளித்துவிட்டு உடை மாற்றி வந்தவன். “இரு ஒரு நிமிசம்” என்றவன் பிள்ளைகளை பார்த்துட்டு வந்தான்..
Advertisement
அவனின் அறைகதவை சாற்றி விட்டு லைட்டை ஆப் பண்ணியவன் பானுவின் அருகில் வந்து “தூங்கு பானு” என்று தன் அருகில் அவளை படுக்க சொல்ல..
“பிள்ளைகள்” என்றாள்.
“அவங்க நல்லா தூங்குறாங்க, டோர் ஓபன் பண்ணி தான் வச்சு இருக்கேன். நீ தூங்கு ” அவளை தன்னோடு படுக்க வைக்க..
“ஜீ” என்றாள்..
” உம் என்ன பானு தூங்கு” என்று கண்மூடிய படியே சொல்ல..
“நான் உங்களை ஹக் பண்ணி கிட்டு தூங்கட்டுமா ” என்றாள்..
“உம்” என்று அனுமதி தர..
அவனை மார்போடு அணைத்து கொண்டவள். “சாரி ஜீ” என்றாள்..
“உம் தூங்கு” என்றான்.
“அவளோ தூங்கம் வரல” என்றாள்..
“அதுக்கு நான் என்ன பண்ணட்டும் பானு” என்றான்..
“நம்ம ரெண்டு பேரும் தனியா எங்கையாவது போவோமா”..
“இந்த நடு ராத்திரியிலேயா” என்றான்..
“உம்” என்றவள். “காலையில் உங்க பிள்ளைகள் உங்ககிட்ட பேச கூட விட மாட்டாங்க அது தான் இப்போ நாம எங்கேயாவது போலாமா” என்றாள்..
“சரி வா” என்றவன்..
சுந்தரின் ரூம் கதவை தட்ட. கதவை திறந்த சுந்தர் “என்ன விக்ரம் இந்த நேரத்துல” என்றார்.
“நாங்க இரண்டு பேரும், ஒரு ரைடு போறோம் டாடி. பிள்ளைகளை பார்த்துக்கோங்க” என்றான்..
“சரிபா, நான் பிள்ளைகளோடு படுத்துக்கிறேன். நீங்க போயிட்டு சீங்கிரம் வாங்க” என்று பிள்ளைகள் தூங்கும் அறைக்கு சென்றார் சுந்தர்..
“வா பானு” என்றவன். அவனின் கார் எடுக்க போக..
அவளோ அவனின் கை பிடித்து பைக்கை சுட்டி காட்ட..
“ஏய் டிசம்பர் மாசம் குளிர்டி தாங்க மாட்டா, கார்ல போலாம் இன்னொரு முறை பைக்குல அழைச்சுட்டு போறேன் வா” என்று காரில் அவளை அழைத்து செல்ல..
காரில் அவனோடு ஒட்டிக்கொண்டு வந்தவளை பார்த்து. “இப்படி இருந்த நான் எப்படி கீர் போடுறது” என்று சிரித்து கொண்டவன். ஒரு கையால் காரை ஓட்டிக்கொண்டு வந்தவன். இன்னொரு கையால் அவளை அணைத்த படியே அவளின் தலையில் முத்தம் வைத்து காரை ஓட்டிக்கொண்டு வந்தான்..
கார் வந்து நின்றது தேம்ஸ் நதி கரையின் ஓரம் தான்..
சற்று தூரத்தில் லண்டன் பிரிட்ஜ் இருக்க. கிரிஸ்துமஸ் இன்னும் 10 நாளில் வருவதால். லண்டன் மேம்பாலம் வண்ண விளக்குகளால் மின்னின. பாலத்தின் ஓரத்தில் வரிசையாக 100 மேல் கடை இருக்க. அந்த நேரம் பாதி கடைகள் மூடி இருக்க. பாதி கடைகள் மட்டும் திறந்து இருந்தது. சிலர் அங்கே நடமாடிக்கொண்டு இருந்தனர்.. “என்ன இவ்வளவு கடைகள் ஜீ” என்றாள் பானு..
“அது கிரிஸ்துமஸ் வருதுல, அதான் கடை போட்டு இருக்காங்க. ஈவ்னிங் வந்த ரொம்ப நல்லா இருக்கும் வா” என்று காரை பார்க்கிங்கில் விட்டு பானுவை தோள் அணைத்தவாறே அழைத்து சென்றான்.
பானு விக்ரமனின் விடுப்பை சுத்தி கை பிடித்து கொண்டே வர.
இருவரும் சிறிது நேரம் கடைகளை சுத்தி பார்த்தவர்கள்..
“கடையெல்லாம் நல்லா இருக்கு பிள்ளைகளை கூட்டிட்டு வருனும்” என்றாள் பானு…
“உம் வரலாம்” என்றவன். ஏதாவது வேணுமா பானு, வாங்கிக்கோ” என்றான்..
“வேண்டாம் ஜீ பிள்ளைகளை கூட்டிட்டு வந்து வாங்கிக்கலாம்” என்று இருவரும் கடைகளை சுத்தி பார்த்து விட்டு நதிகரையோரம் வர.
“பானு போட்டுல போலாமா” என்றான்..
“எனக்கு பயமா இருக்கு ஜீ” என்றாள்..
“வா போலாம்” என்று ஒரு மோட்டர் போட்டை நிறுத்தி அதில் இருவரும் ஏறி அமர..
அது மோட்டர் போட் என்பதால். வேகமாக சென்றது.. பானுவுக்கு கொஞ்சம் பயமாக இருக்க.
விக்ரமனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு வந்தாள்..
மழை வேற சாரல் போல் பெய்ய. இருவரும் ஒருவரை, ஒருவர் பார்த்து சிரித்து கொண்டு வந்தனர்..
விக்ரம் பானுவை தன்னோடு இன்னும் சேர்த்தணைத்து கொண்டவன். “நல்லா கிளைமட்டுல” என்றான்.. அவளும் “உம்” என்று தலையாட்ட..
விக்ரமுக்கு பழய நினைவுகள். இதே மாதிரி பல்லவியோடு போட்டில் வரும் போது. அவள் பண்ணிய அலப்பரை எல்லாம் நியாபகம் வர. மனதில் அவளை எண்ணி சிரித்துக்கொண்டு வந்தான்..
பானு விக்ரமனை பார்த்து என்ன , என்பது போல் பார்க்க..
போட் வீட்டின் முன் நின்றது. “இறங்கலாம் பானு” என்றவன். அவளை இறக்கி விட்டு. போட் ஓட்டியவனுக்கு பணத்தை குடுத்து வர.
“இது யார் வீடு?”.
“நம்ம வீடுதான் பானு வா” என்று அந்த வீட்டுக்கு அழைத்து சென்றான்..
இருவரும் பாதி நனைந்து இருக்க.. “பானு என்றவன் “ட்ரெஸ் மாத்திக்கோ நனஞ்சுருக்கு பாரு என்றவன்.”என்கிட்ட ட்ரெஸ் இல்லையே” என்றாள்..
“இரு வறேன்” என்றவன். ஒரு கப்போர்டை திறக்க அன்று பல்லவி பிறந்த நாளைக்கு விக்ரம் குடுத்த வெள்ளை நிற புடவை இருக்க அதை எடுத்து பானுவிடம் கொடுத்தவன். “இதை மாத்திக்கோ பானு, எனக்கு அடுத்த ரூம்புல என் ட்ரெஸ் இருக்கு மாத்திட்டு வர்ரேன்” என்று அடுத்த அறைக்கு சென்றான்..
அந்த கவரை திறந்து பார்த்தாள் பானு, அதில் வெள்ளை நிற புடவை அழகாய் இருக்க, அதை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்று மாத்தி கொண்டு வந்தவள், தலை முடி ஈரமாக இருக்க. தலை முடியை விரித்து விட்டு, தலையை துவட்டிக்கொண்டு இருக்க.
“பானு” என்று விக்ரம் அறைக்குள் வர. தலை முடியை விரித்து போட்டு வெள்ளை நிற புடவையில் தேவதை போல் நின்ற பானுவை பார்த்தவன்..
“பல்லவி” என்று தன்னை மீறி அழைத்தவன். அவளிடம் வேகமாக சென்று அவளை அணைத்து கொண்டவன்.. அவள் முகம் முழுவதும் முத்தமிட.
அவனை நிமிர்ந்து பார்த்தவள்” நான் பானு” என்றாள்.
சட்டென்று அவளை விட்டு விலகியவன், “சாரி பானு, ஏதோ உணர்ச்சி வேசப்பட்டு. சாரிமா” என்று அவளை விட்டு விலக..
“பானு சொல்லுங்க ஹபீபி” என்றாள்.
அவளை பார்த்து சிரித்தவன் “சாரி பானு” என்றான்..
அவனின் உதட்டின் மேல் கை வைத்தவள். “பேச கூடாது” என்றாள்..
அவனோ சிரித்து விட்டு “வேற என்ன பண்ண” என்றான்.
பானு விக்ரமனின் கை எடுத்து அவளின் வெற்று இடுப்பில் வைத்து அழுத்த..
அவளின் வெற்று இடுப்பை தொட்டவனுக்கு. அவளின் உடல் சூட்டை உணர.
பானு அவனின் சட்டை காலரை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள். அவனின் இதழ்ழோடு, அவளின் இதழை பொருத்த..
அவளின் எண்ணம் புரிந்தவன். அவள் செய்த செயலை தனதாக்கி கொண்டான்..
தன் உயரத்துக்கு அவளை தூக்கி இருத்தான் விக்ரம்.. இருவரும் நானா, நீயா என்று இதழ் முத்தத்தில் சட்டை போட, விக்ரம் தான் ஜெயித்தான்.. அவளை தன்னோடு அணைத்து வைத்து கொண்டவன். சிறிது நேரத்தில் அவளை இறங்கி விட..
அவளோ அவன் முகம் பார்க்க வெக்கப்பட்டு அவன் மார்பில் சாய்ந்து கொள்ள..
“போலாமா பானு வீட்டுக்கு” என்றான் விக்ரம்..
பானு அவனை நிமிர்ந்து பார்த்து முறைக்க.
“அடியே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த, என்னை நானே கண்ட்ரோல் பண்ண முடியாது வா போலாம்” என்றான்…
“உங்களை யாரு கண்ட்ரோல இருக்க சொன்னா” என்றாள் பானு..
“ஏய் பானு அப்போ உனக்கு ஓகே வா”.
“எது எதுக்கு சம்மதம் கேட்கனுமுன்னு வெவஸ்த இல்ல” என்று புலம்பியவளை பின் இருந்து தூக்கியவன்..
“இருடி உன்ன கதர விடுறேன்” என்று அவளை அவனின் அறைக்கு தூக்கி சென்றாள்..
அவனின் வேகத்தை பார்த்து முதலில் பயந்தவள். பிறகு அவனின் மென்மை கண்டவள். “ஹபீபி, ஹபீபி” என்று உரிகி முனங்கி கொண்டு இருந்தவளை. ஆசை தீற கொஞ்சி விட்டு விட..
அவளோ இது போதாது என்று அவனை அணைக்க.
அவனின் அழுமையை கண்டவள். போதும். போதும் என்று சொன்ன பின்னே விட்டான் பானுவை.. “இனிமே வெவஸ்த கெட்டவன்னு சொல்லுவீயா” என்றான்..
அவனை பார்த்து கை எடுத்து கும்பிட்டவள். “இனிமே சொல்ல மாட்டேன் ஆளை விடுங்க பா” என்று போர்வை போர்த்தி படுக்க.
“ஏய் போர்வையை ஏன் எடுக்குற. நான் எதுக்கு இருக்கிறேன்”. என்று அவளிடம் நெறுக்கி வர..
“ஐயா சாமி இதுக்கு மேல பாடி தாங்காது. நாளைக்கு பாத்துக்கலாம், தள்ளி போங்க என்றாள்..
“நீ தானடி சும்மா இருந்தவனை. டிசர்டை பிடித்து இழுத்து கிஸ் அடிச்ச. இப்போ ஒன்னும் தெரியாத பிள்ளை மாதிரி சீன் போடுற” என்றவனை..
“தூங்கம் வருது ஜீ” என்றவளை
“சும்மா சொன்னேன் டி தூங்கு” என்று பானுவை அணைத்து கொண்டு தலையை வருடி விட.
பானு விக்ரமை பார்த்து “ஹாப்பியா ஹபீபி” என்று கேட்க.
அவளின் இதழில் இதழ் ஒற்றி எடுத்தவன். “ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தூங்கு” என்றுஅவளை தூங்க வைத்து விட்டு மணியை பார்க்க விடிந்து விட்டு இருந்தது.
சுந்தருக்கு போனில் தாங்கள் இருக்கும் இடத்தை மெஜேஸ் பண்ணியவன். ஜெனி வந்தவுடன் காலையில் பிள்ளைகளை இங்கே அழைத்து வருமாரு டைப் பண்ணிவிட்டு.
பானுவை பார்க்க. அவளோ திரும்பி படுத்து இருந்தாள்.அவளை தன் பக்கம் திருப்பி அணைத்து கொண்டு தூங்கியிருந்தான்….. விக்ரம்….
error: Content is protected !!