Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 7

அத்தியாயம் 7

வெற்றிவேல் செழியன் பாத்ரூம் சென்று தனது வேலையை முடித்து விட்டு, தன் முகத்தை துடைத்த படி வந்து பார்த்த போது, 

‘என்ன  நடந்தது..?!’ என்றே புரிந்து கொள்ளாத குழந்தை போல.. விழித்தபடி இருந்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பு பீரிட்டு வந்தது.

அதேநேரம் அவளின் தலையிலிருந்து வழிந்த நீரும், அவள் அமர்ந்திருந்த விதமும் சிரிப்பையும் தாண்டி அவள் மீது பரிதாபத்தையும் கொடுக்க, கையிலிருந்த துண்டை அங்கிருந்த ஷோஃபாவின் மேல் போட்டு விட்டு மெல்ல அவளை நோக்கி சென்றபடியே,

‘டேய் வெற்றி.. நீ இப்படி தூங்கும் போது செஞ்சு பயப்படுத்தியிருக்க கூடாதுடா.. போடா.. 

பாரு.. எப்படி உக்காந்திருக்கான்னு..? ச்சே..!!  



Advertisement

எதையும் யோசிச்சு செய்யமாட்டையா..?’ என தன்னையே திட்டியபடி சென்றான்.

அதோடு அவளிடம் மன்னிப்பையும் கேட்க நினைத்து அவளருகே நெருங்கி நின்று அவளின் தோளை தொட்டு, “கனி..” என்று அழைத்த அடுத்த நொடி.. 

அவன் தலையிலிருந்து வழிந்தது இரவு கனிகா அவர்களுக்காக கொண்டு வந்த பால்.. 

Advertisement

“குட் மார்னிங் மாமா, ஹேவ் ஏ குட் டே..” என்ற வாழ்த்தோடு.

Advertisement

இரவு கொண்டு வந்த பால் என்பதால் புளித்து போய் இருக்க, அதிலிருந்து வந்த கெட்டுப்போன வாடை வெற்றிவேலின் வயிற்றை பிரட்டத்தொடங்கியது.

அது மட்டுமா கனிகாவின் அதிரடியால் கண்ணிலும் லேசாக பால் புகுந்து கொள்ள.. கண்ணை தேய்த்தபடி தன் தலையை உதறி முடித்து, கோபப்பார்வையை அவளை நோக்கி வீச நினைத்து அவளிருந்த திசையை வெற்றி பார்க்க, 

அதுவரை அவனிடம் சிக்கும் வகையில் நிற்க கனிகா என்ன அவ்வளவு முட்டாளா..? 

Advertisement

எப்போதோ பறந்துவிட்டிருந்தாள் அவ்வறையை விட்டு.

“அடியேய் அராத்து.. உன்ன.. 

உனக்கு இருக்கற கொழுப்புக்கு.. உன்ன என்ன பண்ண போறேன் பாரு..

பிராடு.. பிராடு.. பண்ணறது பூராவும் பிராடு வேலை. 

உண்மையா ஒரு தடவையாவது இருக்காளா..? பார்க்கற நேரமெல்லாம் நம்மள வச்சு செய்யுது. 

இரு எங்கே போவே..? திரும்ப இதே ரூமுக்கு தானே வந்தாகனும். அப்போ வச்சு செஞ்சிடுறேன்…” என வாய் விட்டே சொல்லியவன், 

திரும்ப பாத்ரூமில் நுழைந்து, அந்த பால் வாடை போக தேய்த்து குளித்து கண்ணையும் நீரால் சுத்தம் செய்து வருவதற்குள் போதும் போதுமென்று ஆகியிருந்தது.

அதே கடுப்போடு ஜாக்கிங் செல்ல ஏதுவாக தனது ட்ரக் பேண்ட், டீ சர்ட்டோடு வந்தவன் ஹாலின் நின்றபடி கனிகாவை தேட, அவள் இருப்பதற்கான அரவம் எதுவும் இல்லாது இருந்தது.

அதில் கடுப்பானவன், “எங்கே போயிருப்பா இவ..?. 

விடுடா.. எப்படியும் இங்கே தானே இருக்கணும். வந்து பார்த்துக்கலாம் அவள..” என தனக்குள் முனுமுனுத்தபடியே வெளியே சென்றான். 

அவன் வெளியே செல்லும் வரையிலும் அங்கிருந்த ஒரு அறையில் பதுங்கி நோட்டம் விட்ட கனிகா, “அப்பாடா..!” என ஒரு பெருமூச்சை விட்டவாரே,

“கனி.. நீ பண்ணது கொஞ்சம் ஓவரா தான் போச்சோ..? இந்த மாமா வேற செம காண்டுல போறாரே…? 

எதாவது விவகாரமா செஞ்சிடுவாரோ..?” என தனக்கு தானே பேசியவள், 

“உக்கும்.. மாமா தானே.. விவரமாவே ஒண்ணும் செய்ய தெரியல. இதுல விவகாரமாவா செஞ்சிட போறாரு..!

விடு.. விடு. எவ்வளவோ பார்த்திட்டோம். இத பார்க்க மாட்டோமா..?” என எப்போதும் போல அசால்ட்டாக சொல்லியபடி மீண்டும் தங்கள் அறைக்கு சென்றாள்.

அங்கே இருவரின் கைங்கரியத்தால் தண்ணிர் மற்றும் பால் அபிஷேகத்தால் கலவரமாகியிருந்த மெத்தை விரிப்பையும், அறையையும் ஒழுங்கு செய்து.. குளித்து அவசரமாக கீழே வந்து சந்திரா அறையில் தஞ்சம் புகுந்திருந்தாள் வெற்றிவேலிடம் சிக்காது தப்புவதற்காக.

கனிகா சந்திராவின் அறைக்குள் நுழையும் நேரம் அவரும் தூக்கி எழுந்து ஃப்ரஸ்ஸாகி வரவும் சரியாக இருக்க, “குட் மார்னிங்.. அத்தம்மா..” என்ற படி வந்தவளை அவரும் ஆசையாய் அணைத்து கொண்டார்.

இரவு கடந்த கால நிகழ்வை நினைத்தபடி அதிக நேரம் விழித்திருந்ததாலும், அதிகாலை வெற்றிவேலின் செயலால் விளைந்த அதிகப்படியான வேலையால் வந்த களைப்பாலும், 

அதே நேரம் தான் செய்த செயலால் எழுந்த சிரிப்போடும் மலர்ந்திருந்த மருமகளின் முகத்தை பார்த்தவருக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. 

அந்த நிம்மதி தந்த சந்தோஷத்தோடு, “குட் மார்னிங் கனிம்மா. நீ ஏன்டா இப்பவே எழுந்திச்சு வந்தே..? 

மெதுவா எழுந்து வந்திருக்கலாமே.. என்ன அவசரம்..?” என பரிவோடு அவளின் தலையை வருடி கேட்க,

“நா இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தா.. உங்க புள்ள அவ்வளவு தான்.. என்னை ஒரு வழி பண்ணியிருப்பார்.. என்னாலையும் எவ்வளவு தான் முடியும் சொல்லுங்க.. மீ பாவமில்ல..” என அவள் சொன்னதன் அர்த்தம் அனர்த்தமாய் ஆகும் என்பதை உணராது சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் சொன்ன விசயத்தில் இருந்து, ‘தன் மகன் வாழ்க்கை பற்றி கவலை இல்லை..’ என்ற நிம்மதியும், அதை கனிகா சொன்ன விதத்தில் எழுந்த கூச்சமும்.. சந்திராவின் முகத்தில் தெரிய, அவரின் முகத்தில் தெரிந்த பாவம் விளங்காது விழித்த போதும்,

“நீங்க ஏன் அத்தம்மா இவ்வளவு சீக்கிரம் எழுந்தீங்க..?” என தனது அடுத்த கேள்வியால் அவரை சங்கடத்திலிருந்து மீட்டாள்.

“என்னடா செய்யறது. நான் தான் தவமிருந்து பெத்து வச்சிருக்கனே ஒரு தடியன.. 

அவனுக்கு இடியே அவன் தலையில விழுந்தாலும் ஓடறத நிறுத்தாம அவன் செய்யறது மட்டுமில்லாம, 

வந்ததும் அவனுக்கு சத்துமாவு கஞ்சி காய்ச்சி வச்சு சரியா கொடுக்கலைன்னா கத்தியே உசுற வாங்குவான். 

அதனால எப்பவும் இந்த நேரத்துக்கு எழுந்து பழக்கம் தான்..” என புன்னகையோடு  சொல்ல,

“ஓ..! மாமா உங்கள இவ்வளவு டார்ச்சர் செய்யறாரா..? நான் தான் வந்துட்டேனே. 

இனி நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க அத்தம்மா. நா பார்த்துக்கறேன் அவர..” எனச் சொல்ல, 

பெருமையாய் சந்திரா பார்த்தார் எனில், கனிகாவின் மனசாட்சியோ, “நீ மட்டும் அவருக்கு கஞ்சி வச்சு கொடுத்தா.. அது தான் அவருக்கு கடைசி பாலே.

தாயே.. உன் சமையல் கலைய தயவு செஞ்சு வெற்றி மாமாகிட்ட காட்டிடாதே..!

இப்போ ஓடிட்டு வீட்டுக்கு வர்றவர்.. அப்புறம் வீட்டை விட்டே ஓடிட போறார்…!” என வாரியது.

அதை கேட்டு காண்டானவளோ, “ஏய்.. நீ எனக்கு தான் மனசாட்சி. சோ, நீ எப்பவும் எனக்கு மட்டும் தான் சப்போட்டா பேசனும். 

இல்ல.. உனக்கு தான் அடுத்த கஞ்சி.. ச்சே… பால்.. ஜாக்கிரதை..!” என அதனை மிரட்ட,

“மனசாட்சிக்கே சங்கு ஊத உன்னால தான் முடியும்..! நீ சொன்னபடி செஞ்சாலும் செய்வே.. எனக்கெதுக்கு அந்த வம்பு.. நீயாச்சு.. உன் புருஷனோட உயிராச்சு..” என்றபடி அதுவே சென்று மூலையில் பதுங்கியது அவளுக்கு பயந்து.

கனிகா அதன் மனசாட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த, அதே நேரம், “ராஜாத்தி.. நீ சொன்னதே போதும்டா. என்னால முடிஞ்ச வரைக்கும் நானே செய்யறேன். 

எனக்கு முடியாத போது அப்போ நீ செய்.. சரியா..?” என அனைவரின் உயிரையும் அவரே அறியாது காத்திருந்தார் சந்திரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!