அஸ்வின் உறைந்து நின்றான், உடல் உறுப்புகள் அனைத்தும் கணநேரத்தில் வேலை நிறுத்தம் செய்தது .காதலுக்காக தகுதியை உயர்த்திக் கொண்டு வந்தேன் . வந்த நேரம் காதலே இல்லை என்று ஆகிபோனதே ….!
வாய்விட்டு அலற வேண்டும் போல இருந்தது .அடக்கிக் அரும்பாடு பட்டுபோனான்.
என்னம்மா நீ வினோத்தை லவ் பண்றியா இல்லையா ? சுந்தர் சற்று காட்டமாகவே கேட்டான் .
Advertisement
ம்ம்ம்ம் என்று ஒப்புதலாய் தலை அசைத்தாள் .
என்ன திமிரு உனக்கு மக்களின் தலைமுடியை கொத்தாக பற்றி ஓங்கி அறைந்தார் பகவதி .
ப்ளீஸ் அடிக்காதீங்க ! குறுக்கே புகுந்தான் அஸ்வின் .
Advertisement
இதோ பாருப்பா…நீங்கல்லாம் படிச்சவங்க தானே ….? எங்க சாதி குலம் கோத்திரம் வேற … அக்கம் பக்கம் அசிங்கமா பேசறதுக்குள்ள தயவு செய்து போயிடுங்க ! அந்த பெரிய மனிதர் கைகூப்பினார் .
Advertisement
அவர் மகன் தெலுங்கில் ஏதோ கத்தினான் . அவரும் மகனுடன் மாட்லாடினார்.
வினோத் பயத்துடன் அஸ்வின் கரம் பற்றினான் . அது ஏற்கனவே உணர்விழந்து தொய்ந்து போனதை அவன் அறியவில்லை.
கலங்கிய தம்பியின் முகம் கண்டவன் “இதோ பாருங்க ….நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க ?”
Advertisement
உங்க பொண்ணு ஆசையை விட உங்களுக்கு சாதி குலம் தான் பெருசா போச்சா ?
உங்க பொண்ணு தான் எங்க வீட்டு மருமகள் நாங்க பெரியவங்களோட வந்து முறைப்படி சம்மந்தம் பேசறோம் என்றான் அஸ்வின்.
அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை . எச்சில் விழுங்கியபடி நின்றனர்.
எங்களுக்கு தெரியாம ஏதாவது தகிடுதத்தம் பண்ணீங்க அவ்வளவு தான் ! ஆவேசமாய் கத்திவிட்டு தம்பியை இழுத்துக்கொண்டு கிளம்பினான் அஸ்வின்.
“………………………..”
மூடிய அறைக்குள் தலையணையில் முகம் புதைத்துக்
கதறினான் அஸ்வின் .
நான் காதலித்தவள் யாரையாவது திருமணம் செய்துகொண்டு கண்காணாமல் எங்காவது வாழ்ந்தால் கூட பரவாயில்லையே …என் தம்பியையா ?நான் எப்படி கண் கொண்டு பார்ப்பேன் ? ஜீரணிக்க முடியாமல் உயிரும் உணர்வும் துடித்தது . விம்மினான் ,அரற்றினான் சித்தம் கலங்கி சுருண்டு படுத்துவிட்டான் .
நான் பொத்திப்பொத்தி வளர்த்த காதல் இப்படி மூடி வைத்தே அழுகிப் போனதே …! அச்சு சொன்னாளே எவனாவது குறுக்கே வந்துடப் போறான் என்று ….அது வினோவாகி போனானே ….
நான் எப்படி கீர்த்தியை மறப்பேன் ? தம்பி மனைவியை நினைப்பது பாவம் அல்லவா ? வலித்த இதயத்தை அழுந்த பற்றிக் கொண்டான் .
கதவு தட்டப்பட்டது ….முகத்தை துடைத்துக் கொண்டு கதவு திறந்தான் .
அக்ஷ்யா கலவரமாய் நிற்கும் அண்ணன் முகத்தை ஆழ்ந்து நோக்கினாள்
அவன் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை மீண்டும் உடைப்பெடுக்க…. உள்ளே போய் கட்டிலில் அமர்ந்து கொண்டான் .
அண்ணா என்னாச்சு ? கீர்த்தி உன் லவ்வை அக்செப்ட் பண்ணலையா? துடித்து போய் கேட்டாள் .
அவ வினோத் லவ்வை அக்செப்ட் பண்ணிட்டா …. அவன் குரல் உடைந்து கரகரத்தது.
அண்ணா ….அலறிவிட்டாள் அன்பு தங்கை .
தங்கையின் கரம் பற்றியவன் அச்சு காதலுக்கு ரெண்டு சைட் உண்டும்மா என்றான் .
அண்ணனை பார்த்து துடித்தாள் .
என் காதல் ஒன்சைட் லவ் தானே ….கீர்த்தி வினோத் ரெண்டுபேரும் மனசார விரும்புறாங்க .
ம்கூம் …நான் இதை ஒத்துக்க மாட்டேன் அக்ஷயா ஆரம்பித்து விட்டாள்.
அச்சும்மா எனக்கு கீர்த்தியை பிடிக்கிறது முக்கியயம் இல்லை அவளுக்கு யாரை பிடிக்குதுங்கிறது தான் முக்கியம். இது அவளோட வாழ்க்கை அவ் தானே முடிவு எடுக்க முடியும் .
இல்லை இது என் அண்ணனோட வாழ்க்கை . என் அண்ணன் லவ் தோற்று போக நான் விட மாட்டேன்.
நம்ம அப்பாட்ட சொல்வோம் …அவர் போய் கீர்த்தி வீட்டில் பேசட்டும் .
அச்சு ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற ? கோபம் கொண்டான் .
என் அண்ணன் கலங்கி நிக்கிறதை நான் ஏத்துக்க மாட்டேன். வாண்ணா ப்ளீஸ் ….அப்பாட்ட பேசுவோம் ! அவன் கரம் பற்றி இழுத்தாள்.
வேண்டாம் அச்சு …கீர்த்தி ஒருத்தனை மனசார விரும்புறான்னு தெரிந்தும் இந்த பேச்சை தொடர்வது அசிங்கம் .
அண்ணா நீ கூட தான் அவளை மனசார விரும்பின …?
அச்சு ப்ளீஸ் ……இந்த பேச்சை இதோட விட்டுடேன்! வலியோடு கெஞ்சுதலாய் பார்த்தான் .
இந்த வினோத்துக்கு நாட்டுல பொண்ணேவா கிடைக்கலை ? அந்த குடும்பம் எப்போதும் இப்படி தான் நம்மகூட வம்புக்கு வருமா ? ஆவேசமானாள் .
அச்சு நீ சின்ன பொண்ணு ….உனக்கு இதெல்லாம் புரியாது . போ …போய் சாப்பிட்டு படு !தங்கையிடம் குரல் உயர்த்தினான்.
நீயும் வா சாப்பிடலாம் . கண்ணீரை துடைத்துக் கொண்டு அழைத்தாள் .
என்னால எப்படி சாப்பிட முடியும் ? மனசு வலிக்குது ..கொஞ்சம் கொஞ்சமா தான் மனசை திசை திருப்ப முடியும் .
அக்ஷயா கண்ணில் மாலை மாலையாய் கண்ணீர் . தன் அண்ணன் தோற்றுவிட்டது தாநீ தோற்றுவிட்டது போல் உடைந்து அழுதாள் .
அச்சு என்னோட லவ் முடிந்து போன விஷயம் , எக்காரணம் கொண்டும் இந்த பேச்சு வெளியில் வரக் கூடாது . திட்டவட்டமாய் கூறிவிட்டான் .
“…………………………….”
சித்தப்பா கிருஷ்ணசாமியை தனியே அழைத்து பேசினான்.
சித்தப்பா நிலைமை கை மீறி போயிடுச்சு ! நமக்கு வினோத் முக்கியம் . அந்த பொண்ணை பேசி முடிங்க !
கீர்த்தி எங்க பிணத்தை தாண்டி தான் நீ போக முடியும் . பெற்ற தாய் கண்ணீரில் கரைந்தார் .
சாரிம்மா….என்னை வினோத்தோடு போக விடுங்க ! சபரி மாமாக்கு முப்பத்திரண்டு வயசாகுது …அவருக்கு என்னை கட்டிக்கொடுக்க பார்க்கறீங்களே…என் ஆசையை விட உங்களுக்கு ஜாதி தான் முக்கியமா? தாயின் கரம் பற்றி தன்னை புரிய வைக்க முயன்றாள்.
உன்னோட சர்டிபிகேட்ஸ் மட்டும் எடுத்துட்டு கிளம்பும்மா என்றான் சுந்தர்.
நான் போலீசுக்கு போவேன் என்றார் கீர்த்தியின் அப்பா சுகுமாரன் .
அம்மா நான் கிளம்புறேன் ….தாயின் கரம் பற்றி சொல்லிவிட்டு கிளம்பினாள் கீர்த்தி.
இருதரப்பிலும் திருமணத்திற்கு ஆதரவு இல்லை என்ற பின்னே திருச்சிக்கு செல்ல முடிவெடுத்தனர் .
அஸ்வினுக்கு நிறைய நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள், அவன் படித்த ஊர் ,வேலை பார்த்து பழக்கப்பட்ட ஊர் .
வாட்சப் க்ரூப் மூலம் நண்பர்களுக்கு தகவல் அனுப்பினான் .
இரவு திருச்சி சென்றடைந்தனர்.நண்பர்கள் அறையில் வினோத் கீர்த்தியை தங்க வைத்துவிட்டு அஸ்வின் நண்பர்களுடன் வெளியில் கிளம்பிவிட்டான்.
சாரதாஸ் கடைக்கு சென்று தனக்கு தெரிந்தவரை பட்டுப்புடவை பட்டுவேட்டி வாங்கினான் . தங்கமயில் ஜுவல்லரிக்கு சென்று தாலியும் மெட்டியும் வாங்கினான் .
பீறிட்ட துக்கத்தை அடக்கிக் கொண்டு மாங்கல்யத்திற்கு பணம் செலுத்தினான் . அவன் பணத்தில் அவன் காதலிக்கு வேறு ஒருவன் தாலிகட்ட மாங்கல்யம் வாங்கும் பாக்கியம் வேறு யாருக்கு வாய்க்கும் ?
இந்த கீர்த்திக்காக தான் அவசரமாய் வேலை தேடிக் கொண்டான் ….இன்று கீர்த்தியே இல்லை என்றாகிவிட்டாளே …
ஷ்ஷ் ….இது பற்றி அப்பறம் பேசிக்கொள்ளலாம் !நண்பர்களை அணைத்துக் கொண்டான்.
அனைவருக்கும் இரவு உணவு வாங்கி கொண்டு அறைக்கு திரும்பினார்கள்.
அதிகாலை உச்சி பிள்ளையார் கோயிலுக்கு சென்றனர் . நண்பர்கள் முன்னே மாலை மாற்றி மாங்கல்யத்தை சூட்டினான் வினோத் .
அட்சதையை தூவிய அஸ்வினுக்கு ரத்தக் கண்ணீர் .
இதைவிட வேறென்ன கொடுமை இருந்துவிட முடியும் ? இதயத்தில் ஈட்டி இறங்கியது . துளிர்த்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டான் .
“……………………………………”
காலை உணவை உடுப்பியில் முடித்துக் கொண்டு அறைக்கு சென்று சற்றுநேரம் ஓய்வெடுத்தனர்.
பனிரெண்டு மணிக்கு மேல் ஊருக்கு கிளம்பினார்கள். அங்கு வீடே கொந்தளித்துக் கொண்டிருந்தது .
பாவி …..நம்ம குடும்பத்தை பழி வாங்க எம்புள்ளைக்கு ஒரு அன்ன காவடியை கல்யாணம் பண்ணி வச்சிட்டான் . அவன் நாசமா போயிடுவான் …நான் வயிறெரிஞ்சு சொல்றேன் அவன் நல்லாவே இருக்க மாட்டான் அஸ்வினுக்கு கிலோ கணக்கில் சாபத்தை அள்ளிக்கொடுத்தார் பத்மினி.
பத்மினி வார்த்தையை அளந்து பேசு ! உன் புள்ள வாயில் விரல் வைத்தா கடிக்க தெரியாத ஆளு இல்லை . லவ் பண்ற அளவுக்கு பெரிய மனுஷன் தான் உன் செல்ல மகன் .
அவன் பண்னின தப்புக்கு அஸ்வினை ஏன் சபிச்சு கொட்டுற ?
ஓ ..அண்ணன் பிள்ளைக்கு வக்காலத்து வாங்கறிங்களோ…..?
ஆமா …..அவன் நல்ல வளர்ப்பு ! நல்லா படிச்சான் நல்ல வேலை தேடிகிட்டான் . அது புள்ள …நீயும் ஒன்னு பெத்து வளர்த்தியே …காலேஜுக்கு படிக்க அனுப்பி வைச்சா அது லவ் பண்ணிட்டு வந்து நிற்குது.
அந்த பொண்ணு இல்லைனா செத்துடுவேன்னு அழுதா அவன் என்ன பண்ணுவான் ? தப்பிக்காரன் உயிர் தான் முக்கியம்னு அவன் கல்யாணம் பண்ணி வச்சிட்டான்.
என்னம்மா சலம்பல் பண்ணிட்டு அலைஞ்சா உங்க தம்பி பொண்டாட்டி …. அதுக்கு தான் மகன்காரன் திருட்டு தாலிக்கட்டி கூட்டிட்டு வரான் சரோஜினி எகத்தாளமாய் சிரித்தார் .
அடியேய் ….அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சதே நீ பெத்த மகராசன் தான் . பொன்னுசாமி தலையில் அடித்துக் கொண்டார்.