Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 22 1

இதோ.. இதோ.. என் பல்லவி

அத்தியாயம் -22



Advertisement

Pre final

Advertisement

   பல்லவி பிள்ளைகளை பார்த்து இருந்தாள்.. தனக்கு  ஆசையாக  ஊட்டி விடும்  பிள்ளைகளையே பார்த்தவள்.

Advertisement

“இப்போ  நான்  உங்கக்கிட்ட சில கேள்வி கேட்பேன், நீங்க சரியா பதில் சொல்லனும், இது ஒரு கேம் மாதிரி ஓகே வா”  என்றாள்..

Advertisement

“உம் கேளுங்கமா”  என்று மூன்று பிள்ளைகளும் அவள் முன் அமர்ந்து விட.

“ஓகே, என் பேர்  என்ன?”.

“பானுமா” என்றான் ஆஷிக்.

“ஆபீதா பானு”  என்றான் சூர்யா ஜித்..

“ஓகே உன் பேர் என்ன?” என்று ஆஷிக்கிடம் கேட்க..

“என் பேர் ஆஷிக்மா”..

“உன் பேர் என்னவென்று” சூர்யா விடம் கேட்க..

“மை நேம் சூர்யா ஜித்” என்றான்.

“குட்டிமா பேர் என்ன?”..

“என் பேர் குட்டிமா இல்ல, சிவாக்குட்டி” என்றது குழந்தை..

“சிவா  அம்மா கிட்ட  புல் நேம் சொல்லு”  என்றான் சூர்யா..

அவளோ “ஆபிமா பாப்பா நேம் சிவகாமி, எங்க பாட்டி பேரு, ஆகாகா” என்று சிரித்தவளை..

அவள் கன்னத்தை தொட்டு முத்தம் கொடுத்தாள்  பல்லவி..

“இது  என்ன ஊரு”..

“இது லண்டன் மம்மி ”  என்றான் சூர்யா.

“லண்டனா”  என்றவள் ஆழ்ந்து மூச்சைவிட்டு.”இந்த இயர் என்னப்பா” என்றாள்..

“இதுவா 2025 ஆபீமா” என்று ஆஷிக் கூற..

2025  வா, நான் 2021 ல தானே தண்ணீல விழுந்தேன். நாலு வருஷம்  ஆச்சா.. அப்பறம் எப்படி 10  வயதில் பிள்ளைகள் என்று யோசித்தவள்..

“உங்க அப்பா பேரு என்ன”  என்று கேட்க..

ஜெனி வந்து “எல்லாரும் சாப்பிட வாங்க”  என்று பிள்ளைகளை அழைக்க.

“பிள்ளைகள் இன்னும் சாப்பிடலையா மேம்”  என்று ஜெனியிடம் கேட்டாள் பல்லவி.

“ஆமாம் மேம்” என்றாள் ஜெனி..

“ஆபீமா மாத்திரை” என்று ஆஷிக் கொண்டு வந்து கொடுக்க.

“பானுமா  தண்ணீ”  என்று சூர்யா வந்து கொடுத்தான்.

பல்லவி பிள்ளைகளிடம் “இதை யாரு குடுக்க  சொன்னா எனக்கு” என்றாள்..

“டாடி சொல்லி இருக்காங்க மம்மி. அம்மா  சாப்பிட்டவுடனே மாத்திரை கொடுக்கனுமுன்னு” என்றனர் பிள்ளைகள்..

“சரி  உங்க அப்பா எங்க “?. என்றாள் பல்லவி..

“டாடி மேல உள்ள  ரூம்புல கால் பேசிட்டு இருக்காங்க மா. நாங்க சாப்பிட போறோம்”  என்று பிள்ளைகள் சாப்பிட செல்ல..

பானு ஒரு நாளும் மாடிக்கு சென்றது இல்லை..

இன்று பல்லவி பிள்ளைகளின்  டாடி யாரு?.  என் பேர் ஏன்  பானுன்னு கூப்பிடுறாங்க என்று தெரிந்துக்கொள்ள மாடிப்படி ஏறி மேலே  செல்ல படிகள் நிறைய இருக்க. அவளின் ஆறு மாத வயிறை  பிடித்துக்கொண்டு மாடி ஏறினாள்..

மாடியில்  ஏதோ மெல்லிய ஓசை ஒலித்துக்கொண்டு  இருந்தது. என்ன  ஓசை என்று பல்லவி கண்மூடி கேட்க.

“இதோ.. இதோ.. என்  பல்லவி..

உன் நினைவு என் நெஞ்சில்

என்றும் என்றும் நீங்காதே

என் கனவுகள் உன் உருவம்

என்றும்  என்றும் மாறாதே  என்று பாடல் மெல்ல ஒலிக்க.

பல்லவிக்கு   இது கண்டிப்பாக விக்ரம் தான் என்று  மனம் அடித்து சொல்லியது..

ஒரு அறையில் இருந்து  ஒரு ஆண் குரல் கேட்க..

அவளுக்கு பரிச்ஷையமான குரல் போன்றே கேட்க..

மெல்ல மாடி ஹாலில் இருந்து எட்டி பார்த்தாள்..

விக்ரம்  யாரோ மாடி ஹாலில் இருந்து எட்டி பார்ப்பது போல் தெரிய. போன் பேசிக்கொண்டே கதவை  நன்றாக திறக்க, பானு தன்னை பார்த்து அதிர்ச்சியாகி நிற்க..

“பானு”  என்றான் விக்ரம்..

பல்லவிக்கு என்னசொல்வது என்று தெரியவில்லை..

“ஈஸ்வரா” என்றவள், கீழே மடிந்து உட்கார்ந்து அழ..  மனதில் என் விக்ரமா. என் விக்ரமே தான் என்று அழ.

“என்னாச்சு  பானு, என்னம்மா  ஏன் கீழே  உட்கார்ந்து அழற”  என்று விக்ரம்  அருகில் வந்து கேட்க..

பல்லவி கதறி அழுவதை பார்க்க முடியாதவன் அவளை அப்படி தூக்கி கொண்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று விட..

பல்லவியின்  அழுகை நிற்க வில்லை. அவள் அழுவதை தடுக்க “ஏய்  என்னடி  ஆச்சு ஏதாவது அடி பட்டு இருக்க. உடம்பு சரியில்லையா என்னாச்சு  சொல்லு”  என்றான்…

“இல்லை” என்றவள். அவனின் முகம்  பார்க்க முடியாமல் தவித்தவளை.

“அப்பறம்  ஏன்டாம்மா அழுவுற. என்னாச்சும்மா சொல்லுடா. வயிறு வலிக்குதா, வாமிட் வருதா, தலசுத்துதா  சொல்லு பானு”  என்றான்..

“இல்லை” என்று மறுபடியும் தலையாட்டியவள். விக்ரமை நிமிர்ந்து பார்த்து.

“விக்ரம், பல்லவி விக்ரம் உங்க பல்லவி”  என்றாள்.. கண்ணீல் பொங்கி நீரோடு.

“என்ன பானு”  என்றவன் வார்த்தை வராமல்  நிற்க.. “பல்லவி!..  பல்லவி ,உனக்கு ஞாபகம்  வந்துருச்சாடா, நான் தெரியுறேன்னா உனக்கு”  என்றான்.

“விக்ரம், விக்ரம்”  என்று கத்தியவள் அவனை அணைத்துக் கொண்டு அழ..

“டேய் பல்லவிமா அழாதா. அது தான் உனக்கு எல்லாம் சரியாகிருச்சுல. அப்பறம் ஏன்டா அழற அழாத பானு” என்றிருந்தான்..

அவனிடம் இருந்து பிரித்தவள், “அது யாரு பானு?”. என்றாள்..

அவளை பார்த்து சிரித்தவன்,”என்னோடா இரண்டாவது  பொண்டாட்டி”  என்று சொல்லி சிரிக்க…

“விக்ரம் விளையாடதீங்க  யாரு அந்த பானு? பிள்ளைகள் கூட என்னை  பானுன்னு  தான் கூப்பிட்டாங்க” என்றாள்..

“ஆமா அப்பறம் பிள்ளைகள் யாரு” என்றாள்.

“கொஞ்சம்  பொறுமையா  கேளு பல்லவி. உனக்கு முதல்ல  என்னென்ன  ஞாபகம் இருக்குன்னு சொல்லு”  என்றான்..

“எனக்கா,!  நாம இரண்டு பேரும் ஏர்போர்ட்ல லாஸ்டா பார்த்தது அப்பறம்”  என்றவளின் முகம்  சுருக்குவதை பார்த்தவன்..

“வேண்டாம் பல்லவி உன் வாயால எதையும்  சொல்லாத,  உனக்கு என்ன நடந்துச்சுன்னு எனக்கு எல்லாம் உன் அக்கா ஜோதி சொன்னாங்க” என்றான்..

“அக்கா சொன்னாளா விக்ரம்”..

“ஆமாம்” என்றவன்.

“உனக்கு தண்ணீல  குதிச்ச வரைக்கும் ஞாபகம் இருக்கா”. என்றான்..

“உம் இருக்கு விக்ரம்”..

“ஏன்டி  தண்ணீல குதிச்ச”  என்றான்.

அவளோ பேச முடியாமல் முகத்தை திருப்ப.

“சொல்லுடா  ஏன் தண்ணீயில குதிச்ச” என்றான்..

“விக்ரம்” என்றவன்.”உங்கள தவிற என் நிழல கூட யாரும் தொட கூடாதுன்னு நினைக்குற ஆளு நான்,  ஆனா அவன்  அந்த விஷால் என் விருப்பம் இல்லாம  என்னை டச் பண்ணான். அப்போ நெனச்சேன் இனி ஒரு நிமிசம் கூட உயிரோட  இருக்க கூடாதுன்னு.அப்பறம்  கடைசியா உங்க கிட்ட பேசிடனுமுன்னு தான் போன் பண்ணேன்.அந்த துரோகி சித்தப்பன் இருக்கானே அவன் உங்க போன் எடுத்தான். அவன் பண்ணினதை எல்லாம் சொன்னான். அப்பறம் நீங்க உயிருக்கு போராடுறீங்க. கோமாவுக்கு போக கூட சான்ஸ் இருக்குன்னு சொன்னான். எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல. நான் உயிரோட இருந்த கண்டிப்பா என் வீட்டு  ஆளுங்க என்னை அந்த விஷால் கூட சேத்து வச்சுருவாங்கன்னு  தெரியும். என்னால அது முடியாது. உங்க கிட்ட கடைசியா  ஒரு முறை பேசனுமுன்னு நெனச்சு கால் பண்ணேன்.. நீங்க எனக்கு நடந்த கல்யாணத்த  பத்தி தெரிந்த  எவ்வளவு வேதனை படுவீங்கன்னு  எனக்கு தெரியும். வாழ்வா  இல்ல சாவான்னு என்நிலமை. கண்டிப்பா என்னால உங்கள  விட்டு வாழமுடியாது. அதான் தண்ணீல குதிச்சேன்.

என்ன சொல்லி நான்  குதிச்சேன் தெரியுமா விக்ரம் என்று அழுதவளை.

“வேண்டாம் பல்லவி வேண்டாம்டி அமைதியா இரு எமோஷ்சுனல் ஆகாத என்றான். “சொல்லிடுறேன் விக்ரம்” என்றவளை..

 “நீ  என்ன நெனச்சு குதிச்சுருப்பேன்னு எனக்கு தெரியும்டி. உன் காதலுக்கு நான் என்ன பதில் சொல்லுறது தெரியல”.

“விக்ரம்”  என்றவளை.

“இப்போ வேணாம் பல்லவி, நாம பேசலாம் இந்த  வாழ்கை பூரா”..

“விக்ரம் எனக்கு தல வலிக்குது” என்றாள்..

“சரி டா நீ படு  நான் உனக்கு மில்க் எடுத்துட்டு வர்றேன் குடிச்சிட்டு தூங்கு” என்றவன்..

கீழே வந்தவன் சுப்பாராமையாவிடம்  பாலை வாங்கி விட்டு. பிள்ளைகளை பார்க்க. ஜெனி பிள்ளைகளுக்கு  ஸ்டோரி சொல்லிக்கொண்டு இருந்தார்..

விக்ரம் பாலை எடுத்துக்கொண்டு  மாடிக்கு செல்ல. பல்லவி ஏதோ புலம்பிக்கொண்டு இருந்தாள்..

“பல்லவி” என்றவன். அவளை  பாலை  குடிக்க வைத்து தூங்கு பல்லவி காலையில் பேசிக்கலாம்”  என்றவன்.

விக்ரமிடம் இருந்து வாங்கி குடித்தவள். அவனின் மடியில் தலை வைத்து படுத்து  விட்டாள்.

 ஆனால் அவள் கண்ணீல் இருந்து கண்ணீர் வருவதை பார்த்தவன்..

“பல்லவி எதையும் நினைக்காத, தூங்கு  நாளைக்கு பேசிக்கலாம்” என்றவன்.. அவளின் தலையை வருடி விட. தூங்கி விட்டாள் பல்லவி..

விக்ரம் பல்லவி குடித்த பாலில் தூங்க மாத்திரை கலந்து  இருந்தான்..

டாக்டர் ஏற்கனவே சொல்லி இருந்தார். பல்லவிக்கு ஞாபகம் வந்த நிறைய கேள்விகள் கேட்பாங்க. ரொம்ப எமோஸ்ஷனல்  ஆகுவாங்க. இரண்டு நாளைக்கு தூங்க வைக்க. என்று  மாத்திரை குடுத்து இருந்தார். தூங்கின  சரியாகிடும் என்று சொல்லி இருக்க. அதன் படி செய்திருந்தான்..

விக்ரம் பல்லவி தூங்கியவுடன். அவளை பெட்டில் படுக்க வைத்து விட்டு. கீழே வந்து டாக்டரிடம் போன் போட்டு, “பல்லவி பழயது ஞாபகம் வந்து இருச்சு டாக்டர், ஆனா இப்போ 4 வருஷமா  நடந்தது எல்லாம்  மறந்து போச்சு  டாக்டர்”  என்றான்  விக்ரம்..

“அப்படியா!  விக்ரம் அதுவும்  நல்லது  தான்  சிலருக்கு இரண்டுமே  ஞாபகம்  வரும். பல்லவிக்கு   பழயது  மட்டும் ஞாபகம்   வந்ததுன்னு  சந்தோஷ படுங்க. சிலரு இரண்டும் ஞாபகம் வந்து  குழப்பமா இருக்கு. இந்த வாழ்க்கையா, இல்ல பழய வாழ்க்கையாயின்னு.”

“ஓகே  டாக்டர்  நாளைக்கு ஹாஸ்பெட்டல் வரவா”  என்றான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!