Skip to content
Post Views: 3,563
“அதெல்லாம் வேணாம் விக்ரம். ஒரு ஒன் வீக் போகட்டு வாங்க பல்லவியை செக் பண்ணி பாக்கலாம்.. முதல்ல அவங்க நல்லா தூங்கனும், அவங்க கேட்கறதுக்கு பதில் சொல்லுங்க.ஒரு மாத்திரை மெஜேஜ் போடுறேன். பல்லவிக்கு அதை கொடுக்க விக்ரம் போதும்” என்றார்..
“தாங் யூ டாக்டர்” என்றவன். போனை கட் பண்ணிவிட்டு பார்க்க..
Advertisement
சுந்தர் நின்று இருந்தார்.. ” என்ன விக்ரம் முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு என்னவென்றார்”..
“அப்பா பல்லவிக்கு எல்லாம் ஞாபகம் வந்துருச்சுபா”..
Advertisement
Advertisement
“என்ன சொல்லுற விக்ரம் எப்போ ஞாபகம் வந்துச்சு, எப்படி ஞாபகம் வந்துச்சு” என்றார்..
“எல்லாம் அந்த கேடு கெட்ட ஞானதுரையை பார்த்தவுடன் தான் பல்லவிக்கு ஞாபகம் வந்திருக்கு”..
Advertisement
“ஞானதுரையா நீங்க எங்க பாத்தீங்க அவனை” என்றார் சுந்தர்..
“பல்லவிக்கு செக்கப் போனோமா அப்போ பார்த்தோம்” என்றான்…
“அப்படியா” என்றவர், “இப்போ பல்லவி எப்படி இருக்கா”.
“ஓரே அழுகை டாடி அதான் தூங்க மாத்திரை கொடுத்து தூங்க வச்சுருக்கேன்”…
“என்ன விக்ரம் பல்லவிக்கு வயித்துல பேபி இருக்கும் போது. தூங்க மாத்திரை தரலாமா” என்றார்.
“டாக்டர் சொல்லி தான் குடுத்தேன் பா, ஏற்கனவே டாக்டர் சொல்லி இருந்தார். பானுவுக்கு குணமாகிட்டே வருது. எப்போ வேணா ஞாபகம் வருமுன்னு”..
“சரிப்பா மருமகள பார்த்துக்கோ”.. என்று அவர் அறைக்கு சென்று விட..
ஜெனி வீட்டுக்கு செல்வதாக சொல்லி சென்றார்..
விக்ரம் பிள்ளைகளிடம் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை மாடியில் தூங்குறா” என்று சொல்ல.
“ஆபீமாவுக்கு என்னாச்சு” என்று பிள்ளைகள் கேட்டு மாடி அறைக்கு சென்று விட.
விக்ரம் இவர்கள் பின்னாடியே வந்தான்..
சிவாக்குட்டி பல்லவியின் தலை பக்கம் அமர்ந்து, பல்லவியின் தலையை பிடித்து விட..
ஆஷிக்கும், சூர்யாவும் பல்லவியின் கால்களை பிடித்து கொண்டே “ஆபீமாவுக்கு உடம்பு சரியாகிடும் பா, நாங்க காலை பிடிச்சு விடுறோம்”. என்று இருவரும் சேர்த்து பல்லவியின் காலை பிடுத்து விட்டு கொண்டிருந்தனர்.
விக்ரம் பிள்ளைகளை கீழே இருங்கள், அம்மாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்ல வந்தவனை, சொல்லை கேட்காமல்.
மேலே ஓடிவந்து இப்படி பாசம் காட்டுற பிள்ளைகளை என்ன சொல்வது.
பெத்த பிள்ளைக்கு மேல் பாசம் காட்டும். தன் பெறாதபிள்ளைகளை பாசத்தை பார்த்து கண்கலங்கி நின்றான்..
சிறுபிள்ளை போல் இல்லை இவர்கள் என்று பார்த்திருந்தான்..
பிள்ளைகளிடம் வந்து அமர்ந்தவன். “அம்மா தூங்கட்டும், நீங்களும் அம்மா கூடவே தூங்குங்க” என்றவன். லைட்டை ஆப் பண்ணி விட்டு வர..
விடியும் நாள் இவர்களுக்கு நன்றாகவே விடிந்தது..
காலை முதலில் எழுந்தது. பல்லவி தான்..
தன்னை அணைத்து தூங்கும் சிவாக்குட்டியை பார்த்தவள்.. பின்பு கால் பக்கம் பார்க்க. இரு ஆண் பிள்ளைகளும் தன்கால் பக்கம் தூங்கிகொண்டு இருக்க..
விக்ரமனின் கை மட்டும் அவள் வயிற்றின் மேல் இருந்தது..
விக்ரம் எங்கே என்று பார்க்க. விக்ரம் பல்லவியில் வயிற்றில் கைவைத்துக்கொண்டே பெட்டில் கீழ் அமர்ந்து வாறே தூங்கி கொண்டு இருந்தவனை பார்த்தவள்..
தன்னை சுற்றி இத்தனை பேரும். தன் நலனுக்காக பாசம் காட்டும். பிள்ளைகளையும், புருஷனையும் நினைத்து சந்தோஷப்பட்டவள்.
அவளுக்கு உடல் வலிக்க , பாத்ரூம் வேற போக வேண்டும் என்று சிவாவை மெல்ல நகர்த்த “ஆபீமா” என்றவள் “முழிச்சிட்டியா பீவர் சரியாகிறுச்சா” என்றாள்…
“உம்” என்று தலையாட்ட.
விக்ரம் மகளின் சத்தம் கேட்டு இருவரையும் பார்க்க. “டாடி அம்மா முழிச்சிட்டா” என்றவள் விக்ரமிடம் தாவ..
மகளை அணைத்து க்கொண்டவன். பல்லவியிடம் “இப்போ ஓகேயாடா பல்லவி” என்றான்.
பல்லவி “உம் ஓகே விக்ரம்” என்றாள்..
“டாடி அம்மா பேரு பானு நீங்க ஏன் பல்லவி சொல்லுறீங்க”.
“அது டாடி அம்மாவ செல்லமா பல்லவி.. கூப்பிடுறேன். நீயும் பல்லவியின்னு கூப்பிடுறீயா”..
“ஓகே டாடி “என்றவள். பல்லவியை பார்க்க.. அவளும் மகளயே பார்த்து இருந்தாள்..
ஆஷிக்கும், சூர்யாவும் மெல்ல எழுந்தவர்கள்.”ஆபீமா உடம்பு சரியா போச்சா” என்று கேட்க..
பல்லவி மெல்ல தலையாட்ட.. இருவரும் பல்லவியின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டனர்.
பல்லவிக்கு சிறுபிள்ளைகள் தன்மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளனர்.. என்று நினைத்தவள். இருவரின் தலை முடியை வருடி விட.
“தாங்யூ மா” என்று சொல்லி விட்டு. நாங்க கீழ உள்ள ரூம்புக்கு போறோம், என்று ஆஷிக், சூர்யா கீழே செல்ல போக..”அண்ணா நானு” என்று சிவாக்குட்டியும் அண்ணன்கள் பின் சென்றாள்..
பிள்ளைகள் சென்றவுடன் பல்லவி “சூர்யா யாரு” என்றாள்..
“என் தங்கச்சி பையன். எனக்கு நடந்த ஆக்சிடென்டுல என் தங்கச்சியும் அவ புருஷன் என் பிரண்டும் சேர்ந்து இறந்துட்டாங்க.
“எல்லாம் என்னால தானே விக்ரம்” என்றாள்..
“ஏய் நீ என்ன பண்ணா இது எல்லாம் விதி நம்ம கையில இல்ல”..
“அப்போ ஆஷிக்.”
“அவன் ஆபீதா பானுவோட பையன்”…
“அபீதா யாரு? புரியல” என்றாள்..
“சொல்லுறேன் பல்லவி. நீ தண்ணீயில குதிச்சல.. உன்னை
தண்ணி அடிச்சுகிட்டு வந்து ஒரு பாலத்து கேழே உன்ன தள்ளி இருச்சு…
ஆஷிக் தான் உன்ன பாலத்து கீழ இருந்து பார்த்தான்.. முபாரக் ஆபீதாவோட அண்ணன் அவன் தான் உன்ன ஹாஸ்பெட்டலில் சேர்த்து இருந்தான்.
அவங்க ஒரு இஸ்லாமிய குடும்பம். நீ, ஆஷிக் அம்மா மாதிரி இருக்கவும். ஆபீமா,ஆபீமான்னு அவன் உன் முகத்தை பார்த்து அழ. எல்லாரும் உன் முகத்தை பார்க்க. நீ அச்சு அசல் அபீதா பானு மாதிரி நீ இருக்க, உனக்கு வேற பழயது எல்லாம் மறந்து போயி இருந்துச்சா.
உன்னை ஆஷிக்குக்கு அம்மாவா மலேசிய. கூட்டிட்டு போயிடாங்க.”
“அப்போ சிவாக்குட்டி யாரு..
“அவ உனக்கு எனக்கு பிறந்தவடி. நம்மல சேர்த்து வைக்க வந்தவ. அவளால தான் உன்னை கண்டு பிடிச்சேன்.. என்றான்..
“விக்ரம் நம்ம பாப்பா, நம்ம என்றவள், அப்படியா! விக்ரம்” என்று கேட்டவளை அணைத்து க்கொண்டவன்..
“ஆமாம் நம்மளுக்கு பிறந்தவடி. அப்படியே எங்க அம்மா மாதிரியே பெத்த குடுத்திருக்க எங்களுக்கு. எங்க அப்பா சிவாக்குட்டியை பார்த்ததுல இருந்து அவ கூடாவே தான் இருக்காரு. எந்தனை தடவை இங்க வாங்கன்னு கூப்பிட்டு இருப்பேன் தெரியுமா, வரமாட்டேன்னு சொன்னவரு. இப்போ நீங்க வந்ததுல இருந்து இங்கே தான் இருக்காரு”..
” அங்கிள் கீழே தான் இருக்காங்கல நான் போயிட்டு பாத்துட்டு வரவா”..
“இரு பல்லவி மெதுவா போலாம்” என்றவன்.. “வேற எதாவது கேட்கனுமா பல்லவி” என்றான்..
“அது” என்றவள் கேட்க தயங்க..
“கேளு” என்றவனிடம்.. “விஷால்” என்றாள்..
“அது செல்லாத கல்யாணம் பல்லவி..,
உனக்கும் எனக்கு முதல்ல இங்கே லண்டனுல வச்சு, நான் உனக்கு தெரியாமல் ரிஷிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டேன்” என்றான்..
“எப்போ பண்ணுனீங்க ரிஷிஸ்டர்” என்றாள்..
” அது உன் பேருல ஒரு பிஸ்னஸ் தொடங்க போறேன்னு உன்கிட்ட சைன் வாங்குனேன். உனக்கு ஞாபகம் இருக்கா” என்றான்.. “ஆமாம்” என்று தலையாட்ட..
“அது பிஸ்னஸ் தொடங்க இல்ல, நம்ம ரிஷிஸ்டர் மேரேஜ் பண்ணிகிற பத்திரத்துல தான் நீ கையெழுத்து போட்ட. நான் தான் உன்ன முதல்ல கல்யாணம் பண்ணி இருக்கேன். உன்ன மெரட்டி பண்ண கல்யாணம் செல்லாது பல்லவி, இப்போ அந்த விஷாலுக்கு கல்யாணமாகி குழந்தை கூட இருக்கு.. அவன்கிட்ட உனக்கும், அவனுக்கு எந்த சம்பந்தம் இல்லன்னு சொல்லி எழுதி கையெழுத்து வாங்கி ஆச்சு. இப்போ நீ என் பொண்டாட்டி மட்டும் தான், ஓகே வா” என்றான்..
“என்னென்ன வேலை பாத்து வச்சு இருக்கீங்க. என்கிட்ட சொல்லி இருக்கலாமுல்ல” என்றாள்..
“உன்கிட்ட சொன்னா நீ நம்ம மேரேஜ்க்கு ஒத்துக்குவியா”…
“இல்லை” என்று தலையாட்ட..
“அப்பறம் என்ன நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணமாகி.. இப்போ நாலாவது குழந்தை பிறக்க போகுது.. என்றான்..
“ஆமாம்” என்றவள். “நான் அந்த ஈஸ்வரன் கிட்ட அடுத்த ஜென்மத்துல என் விக்ரம்மை என்கிட்ட சேத்து வையிங்கன்னு சொல்லித்தாள்.. தண்ணீயில குதிச்சேன். ஆனா கடவுள் இந்த ஜென்மத்துலயே உங்கள எனக்கு குடுத்திருக்காரு. நான் எவ்வளவு அதிஷ்டசாலி” என்று விக்ரமனின் கையை எடுத்து. கன்னத்தில் வைத்து கொண்டாள்..
“நானும் தான் அதிஷ்டம் பண்ணி இருக்கேன். உன் உயிர குடுக்குற அளவுக்கு அப்படி என்ன, என் மேல காதல் பல்லவி”என்றான்.
“காதலா அதுக்மேல உங்க மேல பாசம் வச்சுருக்கேன் விக்ரம். நீங்க தான் எனக்கு எல்லாமுன்னு நாமா சேர்ந்து இருந்துட்டோம். தாலி கட்டுனதான் புருஷன், பொண்டாட்டியா விக்ரம், எப்போ உங்கள நான் நம்பி உங்களோட வந்தேனோ அப்பவே நீங்க தான் எனக்கு எல்லாமுன்னு ஆகிடுச்சு. உங்கள பத்தி எனக்கு தெரியும் விக்ரம். நீங்க என் மேல எவ்வளவு பாசம் வச்சு இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். நான் இல்லன்னா நீங்களும் வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் விக்ரம்.
எங்க அம்மா உயிருக்காக தான். என் வாழ்க்கையில அந்த மாதிரி ஆகிபோச்சு இல்லன்னா. நான் நீங்க என்னை தேடி வர்ர வரைக்கும் காத்துட்டு இருந்துருப்பேன் விக்ரம்..
நம்மளுக்கு ஏன் இது மாதிரியெல்லாம் நடக்கனும் விக்ரம். நம்ம என்ன பண்ணோம் ஒருத்தரை ஒருதர் விரும்புனது தப்பா”, என்றாள்..
“அப்படியில்ல பல்லவி நமக்கு எவ்வளவு சோதனை வந்தாலும் நாம எப்படி நம்ம காதல விட்டு கொடுக்காம இருக்கோம் முன்னு அந்த விதி நம்மை சோதிச்சு இருக்கு பல்லவி. நம்ம காதல் விதியை மீறி ஜெயிச்சுருக்கு.
நம்ம காதலுன்னு சொல்லுறத விட உன் காதல் தான் நம்மல சேத்து வச்சு இருக்கு பல்லவி”.. என்றான்..
“இனிமேல் நம்மல யாரும் பிரிக்க மாட்டாங்கல விக்ரம்”.. என்றவளை..
“அந்த கடவுளே நெனச்சாலும் சரி நீ எங்க இருந்தாலும் உன்னை தூக்கிட்டு வந்துருவேன் பல்லவி” என்றான்..
“நம்மளுக்கு நாலு பிள்ளைகள் விக்ரம்” என்றவளை..
“இன்னும் முடியல பல்லவி லிஸ்ட்ல இன்னும் பாக்கி இருக்கு” என்றான் விக்ரம்..
“என்ன! அப்போ இது லாஸ்ட் பேபி இல்லையா” என்றவளை..
“இல்லையே” என்றவன். தன் இரண்டு கையை விரித்து “இன்னும் பத்து பிள்ளைகள் பெத்துக்கணும் பல்லவி” என்றான் காதலாக..
“ஆ” வென்று பார்த்தவளை..
“வேணாமா” என்றான்…
“வேணும்” என்று தலையாட்டியவளை. ஆசையாக அணைத்துக்கொண்டான் விக்ரம்…
error: Content is protected !!