Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Theeyum Kaanal Neerum

அத்தியாயம் 15.2 : காதல் தீயும் கானல் நீரும்!!!

பதிலுக்கு தன் அண்ணனை முறைத்தான் செல்வா.

 

“கீதா, நீ என்ன பேசுற?”, என்று சிறு அதட்டலுடன் கேட்டாள் ரேகா.

 



Advertisement

“நீ பேசாத, உன்னை பாக்கவே பிடிக்கலை. நீயெல்லாம் ஒரு அம்மாவா? யாருமே என்னை நம்பலைல? என் அப்பா கூட என்னை நம்பலை. என்னை நம்புனது என் அக்காவும் கதிர் அத்தான் குடும்பமும் தான். பெத்த அம்மா அப்பாவும் நம்பலை பெரியப்பா பெரியம்மாவும் நம்பலை. பாட்டி கூட நான் அறிப்பெடுத்து போய்ட்டேனு சொல்லுச்சு. அக்கா வந்து சொல்லலைன்னா என்னை எல்லாரும் என்ன நினைச்சிருப்பீங்க? நீங்க யாருமே எனக்கு வேண்டாம்”, என்று சொன்ன கீதா வேணி மற்றும் மதியழகன் புறம் திரும்பி “என்னை உங்க கூடவே அழைச்சிட்டு போங்க, இல்லைன்னா நான் செத்து போறேன். ஆனா இவங்க கூட மட்டும் போக மாட்டேன்”, என்றாள்.

 

“அப்படி எல்லாம் பேச கூடாது மா. நீ வாழ வேண்டிய பொண்ணு. நீ எங்க வீட்டு மருமகள் தான். எங்க வீட்ல இருந்தே படி. தேனு  கீதாவை கூட்டிட்டு வா”, என்று மதியழகன் சொன்னதும் அனைவரும் கிளம்பினார்கள்.

Advertisement

 

Advertisement

ரேகாவும் துரைராசுவும் குற்றஉணர்ச்சியில் அழுதார்கள். “ஒரு குடும்பத்தையே பிரித்ததுக்கு எனக்கு இந்த தண்டனை தேவை தான்”, என்று ரேகாவும் “ஒரு நல்ல மனிதரான மதிவாணனை கொன்றதுக்கு மகளை பிரிந்திருப்பது சிறந்த தண்டனை தான்”,என்று துரைராசுவும் எண்ணிக் கொண்டார்கள்.

 

நம்ம வீட்டு பொண்ணை நாமளே நம்பளையே? முன்பு தேன்மொழிக்கும் இதே போல் நடந்திருந்தால் அவளையும் தாங்கள் தவறாக தான் நினைத்திருப்போம் என்ற உண்மை இப்போது புரிந்தது தேன்மொழி வீட்டினருக்கு. இவ்வளவு பெரிய அவ பெயரில் இருந்து காத்த கதிரின் மேல் மேலும் அன்பும் மரியாதையும் கூடி போனது.

Advertisement

 

வீட்டுக்கு சென்றதும் அவர்களை பார்த்து அதிர்ந்து போனாள் அன்னம். தன்னுடைய பேரன் கல்யாணத்தை பார்க்க முடியவில்லையே என்ற சிறு வலி இருந்தாலும் அதை மறைத்த அன்னம் “வேணி ஆரத்தி எடுத்துட்டு வா”, என்று சொல்லி சந்தோசமாகவே வரவேற்றாள்.

 

ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே வர வைத்த வேணி “பாட்டி காலுல விழுந்து ரெண்டு பேரும் ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க”, என்றாள்.

 

அன்னம் காலில் விழுந்து வணங்கியவர்கள் வேணி மற்றும் மதி காலிலும் விழுந்து வணங்கினார்கள்.

 

அப்போது தான் தங்கள் பைகள் அங்கேயே இருப்பதை பார்த்த தேன்மொழி உடனே நினைவு வந்தவளாக அதை பிரித்து ஒரு கிஃப்டை எடுத்துக் கொண்டு வந்தவள் “பிறந்த நாள் வாழ்த்துகள் தினேஷ்”, என்று சொல்லி கொடுத்தாள்.

 

அப்போது தான் அந்த விஷயமே அனைவருக்கும் நினைவு வந்தது. ஒருவர் மாற்றி ஒருவராக வாழ்த்து சொன்னார்கள். செல்வாவும் அவனுக்கு வாங்கி வைத்திருந்த பரிசைக் கொடுத்தான்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

மதி ஆளுக்கு ஆயிரம் என பணத்தை கையில் கொடுக்க அவன் சந்தோஷமாக அதை வாங்கிக் கொண்டான். கீதா தயக்கத்துடன் பெற்றுக் கொண்டாள்.

 

“அம்மாடி கீதா, நீ அத்தை ரூம்ல தங்கிக்கோ”, என்று வேணி சொன்னதும் அவளும் சரி என்றாள். அதில் தினேஷ் முகம் கூம்பி போக “டேய் அண்ணா, உன் ஆசைக்கு ஒரு அளவே இல்லையா?”, என்று கேட்டான் செல்வா.

 

“தேனு, கீதாவை மேல அழைச்சிட்டு போ”, என்றான் கதிர். “சரி அத்தான்”, என்று சொல்லி அவளை அழைத்து சென்றவள் “என் டிரஸ் எடுத்து தரேன்.முதல்ல குளி”, என்று சொல்லி அவளுக்கு எடுத்துக் கொடுத்து விட்டு வந்தாள்.

 

தேன்மொழி கீழே வரும் போது அண்ணன் தம்பி மூவரும் அன்னத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் சென்று அமர்ந்தாள் தேன்மொழி.

 

பின் கதிர் குளிக்க போக, அன்னம் தன் அறைக்கு சென்றாள். “என்னமோ கீதா நம்பர் கேட்டப்ப தர மாட்டேன்னு சொன்ன? இப்ப பாத்தியா? கல்யாணமே நடந்துருச்சு”, என்று தேன்மொழியிடம் வம்பிழுத்தான் தினேஷ்.

 

“டேய் அண்ணா சும்மா இரு டா. என்ன பேசுற நீ? அவளை பகைச்சிக்காத. அவளால உனக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டி இருக்கலாம்”, என்று அவன் காதில் முணுமுணுத்தான் செல்வா.

 

அவன் சொன்னதை அலட்சியமாக விட்டுவிட்டு தேன்மொழியை பார்த்தான். அவனை விட ஏளனமாக அவனைப் பார்த்த தேன்மொழி “நாளைல இருந்து தேன்மொழி காலேஜ் போறா”, என்றாள்.

 

“இதை எதுக்கு இப்ப சொல்றா?”, என்று அண்ணனும் தம்பியும் குழப்பமாக பார்த்தார்கள்.

 

“என்ன கொழுந்தனுங்களா நான் சொல்றது புரியலையோ? எப்படி புரியும்? கல்யாணம் ஆகிருச்சுன்னு தெனாவெட்டு”, என்று சொல்லி நக்கலாக சிரித்தவள் “அவ காலேஜ் போகும் போதும் வரும் போதும் நீ தான் அவளை கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரணும்னு அத்தைக்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். இவங்களுக்கு தான் கல்யாணம் ஆகிருச்சே. எனக்கு எதுக்கு இந்த வேலை? நான் என் ரூமுக்கு போறேன் பா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

போகும் அவளை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான் தினேஷ். “வச்சிட்டாளா ஆப்பு? இதுக்கு தான் சொன்னேன்? கேட்டியா? எப்படியாவது அவ காலுல விழுந்துரு அண்ணா. இந்த பண்ணி சே சே இந்த அண்ணி துணை நமக்கு தேவை? இல்லைன்னா கீதா கூட பேசவே முடியாது. நீயும் அமைதி கீதாவும் அமைதி. உங்க ரெண்டு பேருக்கும் இடையில தேனு இருந்தே ஆகணும்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் செல்வா.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“சே பைக்ல கூட்டிட்டு போறது வரது நல்ல சான்ஸ். தேனு நல்லா யோசிச்சிருக்கா.நான் தான் கவுத்துட்டேன். போக அரைமணிநேரம் வர அரை மணி நேரம் அப்புறம் என்னைக்காவது ஐஸ்கிரீம் சாப்பிட்டா அப்பவும் கீதா கூட இருக்கலாம். இந்த தேனை எப்படியாவது காக்கா பிடிக்கணும்?”, என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

தேன்மொழி அறைக்குள் நுழையும் போது குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான் கதிர். அடுத்த நொடி பாய்ந்து சென்று அவனை கட்டிக் கொண்டாள் தேன்மொழி.

 

ஒரு நிமிடம் அதிர்ந்து போனான் கதிர். சொல்லில் வடிக்க முடியாத ஆனந்த அதிர்ச்சி. முதன் முதலில் கிடைத்த அவள் நெருக்கம் அவனுக்கு சந்தோஷத்தை அளவில்லாமல் தந்தது.

 

முதலில் ஏதாவது பூச்சியை பார்த்திருப்பாளோ என்று தான் நினைத்தான். அவள் முதுகு அழுகையில் குலுங்கவும் “இன்னைக்கு கீதா இடத்தில் இவளை வச்சி பாத்திருப்பா”, என்று எண்ணிக் கொண்டு அவள் முதுகை ஆதரவாக தடவி விட்டான்.

 

அவள் அழுகை குறைய வில்லை என்றதும் “தேனு, இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க? அங்க அவ்வளவு தைரியமா பேசிட்டு இப்ப வந்து அழலாமா?”, என்று கேட்டான் கதிர்.

 

அவன் நெஞ்சில் இருந்து நிமிராமலே “என்னை நீங்க எவ்வளவு பெரிய அவமானத்துல இருந்து காப்பாத்திருக்கீங்கன்னு எனக்கு இன்னைக்கு தான் புரிஞ்சது. நாம இன்னைக்கு கீதாவை காப்பாத்திட்டோம். ஆனா அன்னைக்கு நீங்க இல்லைன்னா என்னோட நிலைமை? யாருமே என் வீட்ல என்னை நம்பிருக்க மாட்டாங்க. தேங்க்ஸ் அத்தான். நான் உங்களை சரியா புரிஞ்சிக்கலையோன்னு இப்ப தோணுது. நீங்க விளையாட்டுக்கு பேசினதை எல்லாம் நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னு இப்ப தான் தோணுது. என்னை மன்னிச்சிருங்க அத்தான்”, என்றாள்.

 

அவள் அவனை புரிந்து கொண்டது அவனுக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. இதை தானே அவனே எதிர் பார்த்தான். “நீ என் கிட்ட மன்னிப்பு எல்லாம் கேக்க வேண்டாம் தேனு. நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கணும்னு நினைச்சேன். ரொம்ப வருஷமா பிரிஞ்சி இருக்குற நம்ம குடும்பம் ஒண்ணு சேரணும்னு நினைச்சேன்”, என்று சொன்னதும் அடுத்த நொடி அவனை விட்டு விலகி நின்றவள் “சரி நான் கீழே போறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

“என்ன திடீர்னு விலகிட்டா. இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம்ல?”, என்று எண்ணமிட்டவனுக்கு யார் சொல்வது அவன் இப்போதும் அவள் எதிர் பார்த்த காதலை சொல்ல வில்லை என்று.

 

குடும்பம் ஒண்ணு சேரனும்ன்னு தான் கல்யாணம் நடந்தது என்ற அர்த்தத்தில் அவன் பேசிய பிறகும் அவளால் எப்படி அவனோடு ஒட்ட முடியும்? அதனால் தான் அவள் விலகி சென்று விட்டாள். இது தெரியாமல் தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான் கதிர்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் தேனு.உன்னை விட்டுக் கொடுக்க பிடிக்காமல் தான் கல்யாணம் செஞ்சேன்”, என்று அவன் சொல்லி இருந்தால் அவனை இன்னும் இருக்க கட்டிக் கொண்டிருப்பாள்.

 

அவள் போன பிறகும் அதே இடத்தில் அமர்ந்திருந்தான் கதிர். தேன்மொழியைப் பற்றியே அவன் நினைவுகள் வட்டமிட்டது. பஞ்சு பொதி தன்மேல் சாய்ந்திருந்தது போல இருந்த அவள் தேகத்தை எண்ணி இப்போது சிலிர்த்தது அவனுக்கு.

 

“எவ்வளவு சாஃப்டா இருக்கா என் பொண்டாட்டி.இன்னும் கொஞ்ச நேரம் கைக்குள்ளே இருந்துருக்கலாம்”, என்று எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டே அமர்ந்திருந்தான்.

 

காதல் தீயை நீர் அணைக்குமா?…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!