Skip to content
Post Views: 1,997
அத்தியாயம் 10
நந்தன் சொன்னதை மனதில் கொண்டு, “வெற்றி, இன்னைக்கே கனிகிட்ட பொறுமையா..(?!) எல்லாத்தையும் பேசி சரி செய்திடனும்.
அவள் மேல உனக்கிருக்கற நேசத்தை சொல்றதுக்கு முன்னாடி இன்னொரு முறை இப்படியான விளையாட்டு விசயத்தை செய்ய கூடாது.. ன்னு அவளுக்கு புரியற மாதிரி பேசனும்.
அதோட அவகிட்ட உன்னோட எதிர்பார்ப்பு என்னன்னு தெளிவாக்கிட்டா போதும்.
நம்ம பேசப்போனா கண்டிப்பா அவ எதாவது கோக்கு மாக்கா தான் செய்வா..(சரியா புரிஞ்சுக்கிட்ட).
Advertisement
ஆனா, நீ எதுக்கும் டென்ஷன் ஆகிட கூடாது..” என தனக்கு தானே மனதில் உறுப்போட்டவன்,
ஸ்டேஷன் சென்றால் அங்கிருக்கும் சதீஷூக்கு வேறு எல்லாவற்றையும் சொல்லி.. விளக்கம் கொடுக்க வேண்டும்.
அவனும் நந்தனை போல தான் பேசுவான்.. என்பதால் அங்கே செல்லாது வெளியே பார்க்க வேண்டிய சில வேலைகளை மட்டும் முடித்துவிட்டு வீட்டிற்கு மாலையில் வந்திறங்கினான்.
Advertisement
கனிகாவிடம் எப்படி பேச வேண்டும் என்பதை மீண்டும் மனதுக்குள் ஒத்திகை பார்த்த படியே வீட்டினுள் நுழைந்தவன் அது இருந்த அமைதியில் திகைத்து நின்றான்.
Advertisement
“மாமாவும் அத்தையும் கிளம்பிட்டாங்களா..? இந்த அராத்து இருக்கற இடத்துல இவ்வளவு அமைதியா..?
வாய்ப்பே இல்லையே..? ஒரு வேள நான் தான் யோசனையிலயே வந்தால வீடு மாறி வந்திட்டேனா..?” என யோசித்தவன்,
Advertisement
மீண்டும் வாசலுக்கு சென்று திரும்பவும் பார்த்து சந்தேகத்தை தீர்த்துக்கொண்டவன், “நம்ம வீடு தான்..” என சொன்னபடி மீண்டும் வீட்டினுள் காலடி எடுத்து வைத்த நொடி, “பட்.. பட்டார்..!” என பெரிதாய் சத்தம் கேட்டது.
ஒரு நொடி அதிர்ந்த போதும், அவனின் மூளை என்னவென ஆராய சொல்லி உந்த.. சத்தம் வந்த திசையை அனுமானித்து அவ்விடம் நோக்கி விரைந்தான்.
அங்கே கனிகா செய்து வைத்திருக்கும் வேலையை பார்த்தவனுக்கு பொறுமை மெல்ல பரக்க, அவளை அடிக்கவா.. இல்லை, அவளின் நிலையை எண்ணி சிரிக்கவா.. என்ற நிலை தான்.
“ஏய் லூசு.. கீழ படுத்துட்டு என்ன பண்ணற…?” என அவள் விழுந்து கிடக்கும் நிலையை கண்டு வந்த சிரிப்பை அடக்கியபடி வெற்றி கேட்க,
“ம்ஹும்.. வேண்டுதல் மாமா உங்க ரூம்ல இப்படி அங்கபிரதட்ஷம் செய்யணுமின்னு..” என கீழே விழுந்த கடுப்பில் இடுப்பை தடவியபடி கனிகா சொல்ல,
தனது உடைகளை குப்பை போல அறையெங்கும் குவிந்து கிடக்கும் நிலையை பார்த்து வந்த ஆத்திரத்தை அடக்க முடியாது பல்லை கடித்தபடியே, “எதுக்குடீ இப்படி பண்ணி வச்சிருக்கே என் ரூமை.. என்னோட ட்ரஸ்ஸ யாரு உன்னை தொடச்சொன்னா..?” என கோபமாய் கேட்டபடியே கனிகாவிடம் வந்தவனை,
“யோவ் மாமா, உங்க விசாரணையை எல்லாம் அப்புறம் ஆரம்பிக்கலாம். முதல்ல வந்து என்ன தூக்கி விடுங்க…!” என்ற கனியின் வார்த்தையில்,
அவனின் அமைதி தூள் தூளாக இருந்தாலும் காலையிலிருந்து உருப்போட்ட விசயத்திற்காக அமைதியாய் இருக்க,
தன்னை இந்த நிலையிலும் நெருங்காது நிற்கும் வெற்றி மீதான கடுப்பில்,
“டேய் மாமா, உன்ன தான்டா சொல்றேன்.. வந்து என்னை தூக்கி விடு..” என்ற கனிகாவின் வார்த்தையில் மொத்த அமைதியும் பறிபோக,
“நீ பண்ணி வச்சிருக்கற வேலைக்கு உன்னை தூக்கிவிட்டு சேவகம் வேற பண்ணனுமோ..?
மரியாதை இல்லாம பேசறதுக்காகவே அப்படியே ஒண்ணு விட்டன்னா உன் பல்லூ எல்லாம் ஆட்டம் கண்டிடும் பார்த்துக்க..” என கைகளை ஓங்கிட,
“என்ன பாட்டுக்கு மாமா..?” என கண்களை சிமிட்டியபடி ஏதும் அறியா பிள்ளையாய் கேட்ட கனியின் வார்த்தையில், தூக்கிய கையோடு, ‘ஙே..!’ என பார்வையை செலுத்தி,
“என்னது.. பாட்டா.. என்ன பாட்டு..?” என்றான் வெற்றிவேல் புரியாமல்.
“அதான் மாமா.. இப்போ நீங்க சொன்னீங்களே.. பல்லூ ஆடுமுன்னு.. அதான் என்ன பாட்டுக்குன்னு கேட்டேன்..” என்று சொல்லிட,
அவளை அடிக்கவென ஓங்கிய அதே கையை தனது நெற்றியில் அறைந்தவன், “அடேய் வெற்றி.. இவ உன்னை கொலைகாரனா மாத்தாம விடமாட்டா போலடா..” என முனுமுனுத்தபடி,
“உன்ன..!” என அவளை நெருங்கியவன், அப்போது தான் தனது கபோர்ட் கவிழ்ந்து கிடப்பது தெரிந்தது.
அதில் இன்னும் அதிர்ந்து அவள் புறம் பார்த்தவன்,
“இப்ப எதுக்குடீ என் கபோர்டை ஆமை மாதிரி கவுத்து போட்டு வச்சிருக்கே..?
அதுல தான் முக்கியமான கேஸ் ஃபைல்ஸ், டாக்குமெண்ட்ஸ் எல்லாமே வச்சிருந்தேன். அதப்போய் இப்படி பண்ணி வச்சிருக்கே..? இடியட்.
உன்னையெல்லாம் வீட்டுல வச்சு தான் உங்க அம்மா வளர்த்தாங்களா..? இல்ல ஜூ லையா..?” என திட்டிய படி,
தனது துணி குவியலில் கால் வைக்காமல் தாண்டி சென்றவன், கண்ணில் தனது ட்ரஸ் கபோர்ட் முழுவதும் ஆக்கிரமித்திருந்த கனிகாவின் துணிகள் விழ மீண்டும் பல்லை கடித்தபடியே அதை காட்டி, “இதெல்லாம் என்ன..?” எனக்கேட்க,
கீழே கிடந்தவள் சாவகாசமாய் உக்கார்ந்து கொண்டு கெத்தாய்,
“ட்ரஸ் மாமா.. எல்லாமே என்னோடது தான்..” என சிரிப்போடு சொல்ல,
“அதெல்லாம் உன்னோடதில்லாம உன் ஆயாவுதுன்னா கேட்டேன்.
அதை எதுக்கு என்னோட ட்ரஸ் இருந்த இடத்துல வச்சே..? அதுவும் என்னோட ட்ரஸ் பூராவும் எடுத்து இப்படி குப்பை மாதிரி வெளியே தூக்கி போட்டுட்டு..” என எகிறிட,
“என்ன மாமா புரியாம.. லூசு மாதிரி பேசிட்டு..” என்றதும், தன்னை மீண்டும் ஒரு முறை மரியாதையில்லாது பேசுபவளை வெற்றி முறைக்க,
“முறைக்காதீங்க மாமா. நீங்க பாட்டுக்கு காலைல சாப்பிடவும் இல்லாம எங்கிட்ட போயிட்டு வர்றேன்னும் சொல்லாம போயிட்டீங்க.
இங்கே இருக்கற பெருசுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சவளுக்கு தானே தெரியும் அவங்கள எப்படி சமாளிச்சேன்னு..
அவங்க வேற நா எப்படி சொன்னாலும் நீங்க என்னைய பெட்டிய கட்ட சொன்ன எஃபெக்ட்ல பார்த்து வச்சாங்களா.. அவுங்க கிட்ட தப்பிக்கறதுக்காக..
மாமா என் ட்ரஸ்ஸெல்லாம் அவரோட கபோர்டுல அடுக்க சொன்னாங்க. நான் போய் அடுக்கறேன்னு கெத்தா சொல்லிட்டு மேல எஸ்கேப் ஆகி வந்துட்டேன்.
வந்தவ சும்மா இருந்து.. அதை அத்தம்மா வந்து பார்த்தா என்ன ஆகும் சொல்லுங்க..?
அதான் பொய்யா சொன்னதை உண்மையாக்க என்னோட ட்ரஸெல்லாம் அடுக்க ஆரம்பிச்சனா.. என்னோட ட்ரஸ் வைக்க வைக்க கபோர்டுல இடமே பத்தல மாமா.
அதனால உங்க ட்ரஸ்ஸ கொஞ்சமே கொஞ்சம் வெளியே எடுத்தேன்…” என அசட்டு சிரிப்போடு காரணத்தை அடுக்கியவளை வெட்டவா குத்தவா என்ற பார்வையோடு பார்த்தவன்,
“எது.. இது கொஞ்சமா..? அடீயேய்.. என் ட்ரஸ் ஃபுல்லா வெளிய தான் இருக்கு…” என நக்கலாக ஆரம்பித்தவன் முடிக்கும் போது கடுப்பில் முடிக்க,
“உங்க கபோர்ட் ரொம்ப சின்னதா இருக்க நானா பொறுப்பு மாமா..?
உங்க கூட இன்னும் ஒருத்தி இருப்பாளே அவளுக்கும் இடம் தேவைப்படுமே ன்னு நீங்க தான் யோசிச்சு அதுக்கு தக்க எல்லாத்தையும் சரி பண்ணி வச்சிருக்கனும்..” என அதற்கும் அவனையே குற்றம் சுமத்தியவளிடம் கேட்டால்
‘அந்த இன்னொன்னு தா இதுண்ணே..’ மாதிரி திரும்ப அதே வரும் என நினைத்து.. இதழ் குவித்து ஊதி தனது கடுப்பை கொஞ்சம் அடக்கியவன், அடுத்த பிரச்சனைக்கு தாவினான்.
error: Content is protected !!