Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-18

“சீனியர்…, வேதாபாய்…., தாத்தா…. எங்க இருக்கீங்க” என்று நடு வீட்டில் இருந்து கத்திக்கொண்டு இருந்தான் கார்த்திக்.

“டேய் காலையிலிருந்து எங்கடா போன இப்ப எதுக்குடா வந்து நடு வீட்ல நின்னு கத்துக்கிட்டு இருக்க. ஆமா சாப்பிட்டியா இல்லையா” என்றார் புஷ்பராணி.

“நான் சாப்பிட்டேன் மா சீனியர் எங்க அவர எங்கேயாவது பாத்தீங்களா”

“ஏண்டா மாமாவ தேடுற. அவர் இந்த நேரத்துல எங்க இருப்பாருனு தெரியாதா”



Advertisement

“ ஓ ரீல்ஸ் எடுக்க போயிருப்பார்ல. இதை எப்படி மறந்தேன் சரிமா நான் அங்க போய் பார்க்கேன்” என்று அவரை தேடி வேகமாக வெளியே ஓடினான்.

“டேய் நில்லுடா எதுக்குடா அவர தேடுறான்னு கடைசி வரைக்கும் சொல்லாமலே போயிட்டான் இவனோட. இதுங்களுக்கு இதுவே வேலையா போச்சு ஏதாவது கேள்வி கேட்க வேண்டியது அதுக்கு பதில் நம்ம சொன்ன உடனே போக வேண்டியது. நாம கேட்கிற கேள்விக்கு மட்டும் ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டான். இனி அம்மா, பிளவர் குயின் சொல்லி எவனாவது வரட்டும் அதுக்கு பிறகு இருக்கு” என்று தனியாக ஹாலின் என்று புலம்பிக்கொண்டிருந்த தனது அம்மாவை பார்த்துக்கொண்டு உள்ளே வந்த திரு, “ என்னமா ஏதாவது பிரச்சனையா எதுக்கு தனியா நின்னு புலம்பிக்கிட்டு இருக்க” என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தவனின் கண்கள் அவனின் மனையாளை தேடியது.

“ ஓ நீயா வாப்பா. நைட் பதினோரு மணிக்கு அவசரமா வெளியே போனவன் இப்ப மணி மதியம் மூணு இப்ப வந்து நிக்கிற. கொஞ்சமாவது உனக்கு கல்யாணம் ஆயிட்டுனு பொறுப்பு இருக்கா. ஒரு பொண்ண தாலி கட்டி இங்க விட்டுட்டு போனியே அந்த பொண்ணு முதல் நாள் இங்கே எப்படி பொருந்தி போவானு கொஞ்சமாவது அக்கறை இருக்காடா உனக்கு. உன் வேலைய பாரு யாரும் வேண்டாம்னு சொல்லல ஆனா அதுக்காக உனக்காக காத்துட்டுயிருக்கிறவர்கள மறந்துவிடாத. ப்ரொபஷனல் லைப் நல்லா இருக்கிறதுக்காக பர்சனல் லைஃபை கோட்ட விட்றாதபா”

Advertisement

“என்னம்மா நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க. அவளுக்கு என்னோட வேலைய பத்தி நல்லா தெரியும் அதனால டென்ஷன் ஆக மாட்டா”

Advertisement

“ நீ சொல்றது ஒரு விதத்தில் கரெக்ட்டு தான் பா ஆனா இருந்தாலும் இன்னைக்கு தான் நம்ம வீட்ல அந்த பொண்ணுக்கு முதல் நாளு இந்த வீட்டிலேயே அவளுக்கு ரொம்ப தெரிஞ்சது நீ மட்டும் தான். அப்படி இருக்கும்போது நீ தான அந்த பொண்ண பாத்துக்கணும். என்கிட்ட வந்து அம்மா இந்த பொண்ணு எனக்கு எப்படியாவது கட்டி வையுங்கன்னு கெஞ்ச மட்டும் செஞ்ச. இப்ப அந்த பொண்ணு உன் கிட்ட வரும்போது இப்படி கண்டுக்காம உன் வேலையை நீ பாக்குறது எந்த விதத்தில் சரிப்பா”

“ அம்மா புரியுதுமா இருந்தாலும் ஒரு சூசைட் கேஸ்மா. என்னால போகாம இருக்க முடியாது அதனால தான் போனேன். நீங்க சொல்ற மாதிரி அவளுக்கு இந்த வீட்டுல முதல் நாள் தான். ஆனா அவளோட அன்பான,ஸ்வீட்டான, பாசமான அவளோட மாமியார் அவ கூட இருக்கிற வரைக்கும் எதுவும் அந்நியமா அவளுக்கு தெரியாது. காலைல நடந்தது எதுவுமே எனக்கு தெரியாதுனு நினைக்காதீங்கம்மா என்னோட தம்பி எல்லாத்தையும் எனக்கு வீடியோ எடுத்து அனுப்பிட்டான். சோ டெரர் மம்மியா என்ன திட்டுவதை விட்டுட்டு காம்ப்ளான் மம்மியா போய் எனக்கு ஒரு காபி எடுத்துட்டு வாங்க போங்க” என்று அவரின் தோலை பிடித்து சமையலறையை நோக்கி திருப்பி விட்டான் திரு.

“ அப்பா இந்த அம்மாவ அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிட்டு நானே என் பொண்டாட்டிய பாக்க முடியாம காலையில இருந்து கடுப்புல திரியுறேன் இந்த அம்மா வேற இருந்திருந்து இன்னைக்கு தான் அட்வைஸ் பண்ணும். பையன் நைட் வெளியே போனானே காலையிலிருந்து அவன் பொண்டாட்டிய பாக்கலையே அவன சீக்கிரம் ரூமுக்கு அனுப்பி விடுவோம்னு இல்லாம. இந்த நேரத்துல தான் உட்கார்ந்து அட்வைஸ் பண்ணுது இந்த அம்மா” என்று மெதுவாக அவனுக்குள் சொல்லிக் கொண்டவன், “ அம்மா நான் ரூமுக்கு போறேன் காபி போட்டு உங்களோட மருமகள் கிட்ட குடுத்து விடுங்க” என்றவன் மேலே செல்ல படி எறி போக

Advertisement

“டேய் அவ உன் ரூம்ல தாண்டா இருக்கா” என்று அவர் பின்னாடி இருந்து கத்தியதை கேட்காமல் வேகமாக தனது அழைத்துச் சென்றான்.

 

@@@@@@@@@@@@@

 

“ ஐயோ கடவுளே ரொம்ப போர் அடிக்குது. இந்த திரு மாமா வேற எங்க போச்சுன்னு தெரியல. அம்மா வீட்டுக்கு வேற இன்னைக்கு போகக்கூடாதாம். அவங்க வேற காலையில மட்டும் போன் பண்ணி பேசிட்டு உன் வீட்டு வேலையை பாருன்னு சொல்லி வச்சுட்டாங்க. திரும்ப போன் பண்ணா  எடுக்க மடக்காங்க. இந்த தடியனுக்கு போன் பண்ணி பேசலாம்னு பார்த்தா நாளைக்கு அவனுக்கு ரிசல்ட் அதனால பிரெண்ட்ஸ் கூட வெளியே அவுட்டிங் போய் இருக்கான். சும்மாவே நம்ம கால் பண்ணா பேச மாட்டான் இதுல அவன் ஃப்ரெண்ட்ஸ் கூட வேற இருக்கான் சுத்தமா அட்டென்ட் கூட பண்ண மாட்டான். ஐயோ கடவுளே எனக்கு தனியா பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்குதே திரு மாமா எப்ப தான் வருவீங்க” என்று தனது கட்டிலில் திரும்பி இருந்து புலம்பி கொண்டு இருந்தவளை பார்த்து புன்னகை புரிந்தவன் மெதுவாக சத்தம் செய்யாமல் அவளின் அருகே போய் குனிந்து அவள் காது அருகில் சென்று, “ உன் திரு மாமா வந்தா என்ன செய்வ” என்றான் மெதுவாக.

“ அவர் ஏன் வரப்போறாரு. இந்நேரம் அந்த செத்துப்போன பாட்டிக்கு காவலா உக்காந்துட்டு இருப்பாரு. கொஞ்சமாவது புது பொண்டாட்டி வீட்டுல இருக்கான்னு அறிவு இருக்கா. அங்கங்க கல்யாணம் முடிஞ்ச ரெண்டாவது நாள் எல்லோரும் ஹனிமூன் போவாங்க இங்க நான் மட்டும்தான் இப்படி தனியா உக்காந்து என் மூனு எப்போ வரும்னு பொலம்பிட்டு இருக்கேன்” என்றாள் அலுத்துக் கொண்டு

“ஏம்மா உன் திரு மாமா கிட்ட சொல்லி நீயும் ஹனிமூன் போக வேண்டியது தான”

“ எங்க அவர் கிட்டயா ஃபர்ஸ்ட் நைட் அதுவுமா எவனாவது பொண்டாட்டியை தனியா விட்டுட்டு வெளியே போவானா. உலகத்திலேயே இவர் மட்டும் தான் இப்படி பண்ணுவாரு. பக்கத்துல இருக்க என்னையே கவனிக்க காணும் இவர் எங்கே ஹனிமூன் கூட்டிட்டு போவாரு. இந்த ஜென்மத்துல அந்த கொடுப்பினை எனக்கு இல்லை. வெளியே சொன்னா வெட்கக்கேடு இதுல லவ் மேரேஜ் வேற என்னத்த சொல்ல. ஒருவேளை நம்ம ஆளுக்கு அந்த விஷயத்துல விவரம் பத்தலையோ” என்றாள் யோசனையுடன்

 அவள் சொன்னதைக் கேட்டு காண்டானவன் வேகமாக அவளின் முன்னே வந்து , “ஏய் என்னடி ஓவரா பேசுற. ஏதோ ஒரு நாள் அர்ஜெண்டா ஒரு கேஸ் விஷயமா வெளியே போயிட்டா அதுக்காக என்ன பத்தி இப்படி நினைக்கியா நீ. ஏண்டி நமக்கு கல்யாணமாகி ஒரு நாள் தான் ஆகி இருக்கு. என்னமோ பத்து வருஷம் வாழ்ந்து வாழ்க்கையே சலிச்சி போன கெளவி மாதிரி பேசுற. நான் கூட அந்த விஷயத்துல நீ கொஞ்சம் தத்தினு நெனச்சேன் டி ஆனா நீ இப்படி இருப்ப நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. இன்னைக்கு ராத்திரி உனக்கு இருக்குடி. மொத்தமா பேசுனா இந்த வாயை அப்படியே பிடிச்சி சாக்லேட் மெல்லுற மாதிரி மென்னு திங்கள என் பெயரு திருக்குமரன் இல்லடி” என்று அவளின் இடுப்பில் ஒரு கையை வைத்து தன்னோடு சேர்த்து அழுத்தி பிடித்துக் கொண்டு ஒரு கையால் அவள் கீழ் உதட்டை இழுத்து பிடித்து சொன்னவன். அப்படியே முத்தமிட நெருங்க

அவன் அப்படி பிடித்து அருகில் வந்தும் அதிர்ந்து போய் அவன் தோளில் இருக் கையை வைத்து இறுக்கமாக அவனைப் பிடித்துக் கொண்டு அடுத்து அவன் தரப்போகும் முத்தத்திற்காக கண்களை இறுக்கமாக மூடி காத்திருந்தாள் பாரதி.

அப்போது, “டேய் மகனே இது பட்டப் பகல்டா. உனக்கு காபி வேணுமா வேண்டாமா” என்று கீழே இருந்து கத்தினார் புஷ்பராணி.

“ இந்த அம்மாவோட” என்று கடுப்பாக சொன்னவன் அவள் உதட்டை விட்டு விட்டு, “ போடி அப்படியே மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி நிக்காத போய் உங்க அத்தை கிட்ட காபி வாங்கிட்டு மேல வா” என்று அவன் சொல்ல அதில் மயக்கம் களைந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு மெதுவாக அறைய விட்டு வெளியே சென்றாள்.

“ ம் என்று பெருமூச்சு விட்டவன் இப்படியே ஆள பார்த்து பார்த்து உசுப்பேத்துறது இவ வேலைய போச்சு. இந்தக் கடவுள் எனக்கு பஸ்ட் நைட் நடக்கவே கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டான் போல நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்” என்று சொல்லி டவலை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான்.

 

@@@@@@@@@@@@@

 

“வழி நெடுக காட்டுமல்லி…

யாரும் அத பாக்கலியே…

எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…

வருமா வருமா வீட்டுக்குள்ள…

காடே மணக்குது வாசத்துல…

என்னோட கலக்குது நேசத்துல…”

 என்ற பாடலுக்கு தோட்டத்தில் வேலை செய்ய வந்திருந்த மல்லிகாவுடன் சேர்ந்து மல்லிகைப்பூ தோட்டத்தில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த வேதாச்சலம் தாத்தாவை பார்த்து கடுப்பான கார்த்திக், “காலைல இருந்து  நான் கிறுக்கு மாதிரி அங்க இங்க தேடிட்டு இருக்கேன். இங்க எப்படி இந்த வயசுலயும் லவ்ஸ் பண்றாரு பாரு இவர” என்று கடுப்பானவன்

“ சீனியர் யோவ் சீனியர் நான் கூப்பிடறது உனக்கு கேக்கலையா” என்று கத்தி கொண்டு அவர்களின் அருகில் வந்தான் கார்த்திக்.

 வீட்டில் இருந்தால் யாராவது ரீல்ஸ் எடுக்க விடாமல் தொல்லை செய்வார்கள் என்று மல்லி தோட்டத்திற்கு காவலாக இருப்பதாய் சொல்லி இங்கே வந்தவர் அங்கே வேலை செய்யும் மல்லிகாவுடன் சேர்ந்து டூயட் பாடி கொண்டிருக்க அதனை முழுதாக செய்ய விடாமல் பாதியில் வந்த தடுத்த கார்த்திகை பார்த்து கோபம் கொண்ட வேதா தாத்தா, “டேய் வீட்ல தான் உங்க தொல்லை தாங்க முடியலன்னு தோட்டத்துக்கு வந்தா இங்கேயும் வந்து ஏன்டா என்னை தொல்லை பண்றீங்க. நிம்மதியா ஒரு ரீல்ஸ் எடுக்க விடுறீங்களாடா. உங்களோட இதே வேலையா போச்சு. இப்ப என்னடா தல போற அவசரம் என்னை தேடி வந்திருக்க” என்றார் கடுப்பாக.

“ ஏன் சொல்ல மாட்ட தாத்தா. அறுபது வயசான கிழவன் நீ உனக்கே  ரொமான்ஸ் டயத்துல டிஸ்டர்ப் பண்ண கோவம் வருது இல்ல அந்த மாதிரி தான எனக்கும்”

“ உனக்கு தான் லவ்வர் இல்லையே எங்கிருந்துடா உன் ரொமான்ஸ் டைம்ல நான் டிஸ்டர்ப் பண்னேன்”

“தாத்தா லவ்வர் இல்லை என்கிற காரணத்துக்காக  நீ என்னை என்னலாம் பண்ற. உன்கிட்ட நான் கேட்டேனா தாத்தா நான் சிங்கிளா இருக்கேன் நீ மிங்கிள் பண்ணி விடுனு”

“ஏண்டா வந்ததுல இருந்து தப்பு தப்பா பேசுற என்ன தான் நடந்துச்சி சொல்லி தொலையேன்”

“ நேத்து என்ன பண்ணீங்க சீனியர்”

“ ஏண்டா என்ன பண்னேன். என் பாலோவர்ஸ் எல்லாத்துக்கும் திருவோட கல்யாணத்தை லைவ் தான் பண்ணுனேன். வேற என்ன டா பண்ணனேன் நான்”

“ நீ ஒன்னும் பண்ணலையா. லைவுக்கு நடுவுல என்ன வச்சு என்ன தாத்தா பண்ண நீ”

“ அது எல்லாரும் திருவோட  கல்யாணம் நடக்குறனால ஃபீலிங்ஸ்ல இருந்தாங்கடா அதான் நான் உன்னை காமிச்சு அவங்களுக்கு ஆறுதல் சொன்னேன் ஏன் என்ன ஆச்சு”

“ நல்லா ஆறுதல் சொன்னீங்க சீனியர் அதோட விடாம ஏன் என்னோட ஐடிய அவங்க கிட்ட கொடுத்தீங்க” என்றான் கடுப்புடன்

“ இல்லடா எல்லாரும் ஐடிய கேட்டாங்களா அதான் சரி சும்மா ஒரு ஜாலிக்கு கொடுத்தேன்”

“ தாத்தா உன் ஜாலிக்கு கொடுக்க என்னோட வாழ்க்கை தான் கிடைச்சுச்சா நைட்டு ஒரு குந்தாணி மெசேஜ் பண்ணி இருந்தா தாத்தா”

“ ஏண்டா உனக்கு இதுவரைக்கும் கம்பெனி மெசேஜ் தவிர வேற மெசேஜே வராது முதல் தடவ ஒரு பொண்ணு மெசேஜ் பண்ணி இருக்கு அத சந்தோஷமா அனுபவிக்க வேண்டியது தானடா. அத விட்டுட்டு ஏண்டா இந்த கிழவன் கிட்ட வந்து மல்லு கட்டிட்டு இருக்க”

“ ஏன் சொல்ல மாட்ட தாத்தா. நைட்டு ஹாய் எப்படி இருக்கீங்க மெசேஜ் பண்ணா அத பாத்துட்டு நானும் ரிப்ளை பண்னேன். சாப்டீங்களான்னு கேட்டா நானும் நான் சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா அப்படின்னு கேட்டேன். நான் சாப்பிட்டேன் சொல்லி என்ன சாப்பிட்டீங்கனு கேட்டா  அப்படியே ரெண்டு பேரும் 12 மணி வரை பேசிட்டு இருந்துட்டு தூங்க போனோம். திரும்ப காலையில சாப்பிட்டீங்களா டார்லிங் மெசேஜ் பண்ணா ஆமா நீ செல்லம்னு நானும் மெசேஜ் பண்னேன். அப்படியே மதியம் வரைக்கும் பேசிக்கிட்டே இருந்தோம். இப்ப என்னன்னா திடீர்னு அவ மாசமா இருக்களாம் அதுக்கு நான் தான் காரணமாம். நாளைக்குள்ள அவள நான் கல்யாணம் பண்ணனுமாம் இல்லனா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன் வேற சொல்றா தாத்தா” என்றான் பயத்துடன்

“டேய் லூசு பயலே நீ தான் அந்த பொண்ண பார்க்கவே இல்லல. அப்படி இருக்கும்போது எப்படி டா குழந்தை வரும் அதுவும் ரெண்டே நாள்ல”

 “உனக்கே இந்த டவுட் வரும்போது எனக்கு வராத தாத்தா. அதான்

நான் இதுவரைக்கும் உன்ன பார்த்ததே இல்ல உன் குழந்தைக்கு எப்படி நான் தகப்பனாகுவேன்னு கேட்டா என்ன கனவிலேயே கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க போறாளாம். இதெல்லாம் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க சாட்சிக்கு என்ன பண்ணுவேன்னு கேட்டா இதுவரைக்கும் நீ பண்ண மெசேஜ் மட்டும் போதும்னு சொல்லி என்னை பயம் காட்டுறா தாத்தா. ப்ளீஸ் தாத்தா என்ன எப்படியாவது அந்த பஜாரி கிட்ட இருந்து காப்பாத்து.  ப்ளீஸ் தாத்தா என்னை எப்படியாவது இந்த பிரச்சினையில இருந்து வெளியே கொண்டு வந்துடு தாத்தா உனக்கு புண்ணியமா போகும்” என்று அவரின் கையை பிடித்து அழ தொடங்கினான் கார்த்திக். 

 “அய்யய்யோ பையன பாக்க பாவமா இருக்கே. இருந்தாலும் நம்ம சைத்து டார்லிங் விடமாட்டாளே இப்ப என்ன பண்றது” என்று தாத்தா யோசிக்க தொடங்க

“என்ன தாத்தா யோசிக்கிற என்ன காப்பாத்துவியா மாட்டியா” என்று அவரின் கையைப் பிடித்து கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தார் அவர்.

 இப்போது கையைப் பிடித்து கெஞ்சும் கார்த்திக் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் இவர்தான் என்று தெரிந்தால் என்ன செய்வானோ!!!…..

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!