Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மீண்டும் ஒருமுறை -7

பாகம்-7

“தெரியும். இவர் குரு. அன்னைக்கு ஃபைர் ஆக்சிடென்ட் அப்போ எனக்கு உதவி செஞ்சாரு” என்று கூறி குருவை பார்த்தவாறு, வேலினி, ஜானவி கேட்ட, “இவரை உனக்கு தெரியுமா?’ என்ற கேள்விக்கு பதில் கூறினாள்.

“ஹாய் ஜானவி, நைஸ் டு மீட் யு”, என்று குரு கூறவும், “உங்களுக்கு எப்படி என் பேர் தெரியும்” என்று ஜானவி வேகமாக கேட்டாள். “இவ்வளவு நேரம் இரண்டு பேரும் மாறி மாறி ஜானவி, வேலினி-னு கூப்பிட்டு தான பேசிட்டு இருந்தீங்க. அதுல தான் தெரிஞ்சிக்கிட்டேன்” என்றான் குரு.

வேலினி உடனே சந்தேகத்துடன் கண்களை சுருக்கி கொண்டு, “இன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம் தெரிஞ்சுச்சு. அன்னைக்கு எப்படி என் பேர் வேலினி-னு தெரிஞ்சுச்சு”, என்று கேட்டாள்.



Advertisement

அதற்கும் அவன் உடனே பதில் கூறினான். “அன்னைக்கு தான் உன் பிரண்ட்ஸ் வெளியே நின்னு வேலினி, வேலினி-னு கத்திட்டு இருந்தாங்களே, நீ ஃபயர்ல மாட்டிக்கிட்டப்போ. அப்படித்தான் தெரியும்” என்று அவன் இயல்பாக கூறியது, அவர்கள் நம்பும்படியாக தான் இருந்தது.

“எல்லாம் சரிதான் நாங்க பேசறது இப்படி ஒட்டு கேக்குறீங்களே இது மட்டும் தான் தப்பா இருக்கு” என்றதும்,

அவன், “நீங்க ரெண்டு பேரும் ரகசியமா பேசினீங்க. என் முன்னாடி உட்கார்ந்து பேசிட்டு இருந்தீங்க எனக்கும் கேட்டுச்சு. நல்ல காரியமா இருக்கேன்னு, நானும் பேசலாம்னு நினைச்சேன். இதுல என்ன தப்பு இருக்கு”

Advertisement

“சரி தான். நீங்க சொன்ன காரணம் எல்லாத்தையும் நான் ஏத்துக்கிட்டேன். இப்ப என்னமோ ஐடியா இருக்குன்னு சொன்னீங்களே. அத சொல்லுங்க”

Advertisement

“ஆக்சுவலா. ஐடியாலாம் ஒன்னும் இல்ல. நீங்க பேசிட்டு இருந்தீங்க. நானும் சும்மா போரிங்கா இருக்கேன்னு பேசுனேன்”, என்று கூறவும் வேலினிக்கு கோபமாக வந்தது.

“நீங்க ஐடியா இருக்குன்னு சொல்லவும், நான் ..நான்… உங்களை யாரு என்கிட்ட பேச சொன்னது” என்று வேலினி குருவை கோவமாக திட்டிவிட, ஜானவிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“நம்ம பிரச்சினை நமக்கு, அதுக்காக அவரை திட்டுவியா? என்று கேட்க, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதுவும் தோன்றவில்லை வேலினிக்கு.

Advertisement

மன்னிப்பு கூட கேட்க முயற்சி செய்யாமல் கோபமாக அமர்ந்திருக்கும் தனது தோழியை பார்த்துவிட்டு திரும்பி குருவை சங்கடமாக பார்க்க, அவனோ வேலினியை தான் சுவாரஸ்யமாக சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று மனிதர்களின் மனங்களைப் படிக்க தெரிந்த ஜானவிக்கு, அவன் பாவனை ஏதோ உணர்த்த, “இவிங்களுக்கு நடுவுல நாம தான் மாட்டி கிட்டோமோ?” என்று கேள்வி எழுப்பியது மனம்.

“இதுக்கு மேல எதையும் பேசாம இவங்கள வேடிக்கை மட்டும் பார்த்துட்டு அமைதியா இருந்தா நமக்கு நல்லது” என்று மீண்டும் ஒருமுறை தனக்கே கூறிக் கொண்டவள் இவர்கள் இருவரையும் இப்போது இவள் சுவாரசியமாக பார்க்க ஆரம்பித்தாள்.

அவ்வளவு நேரம் அவள் கோபத்தை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்த குரு வேலினின் முகம் சோர்வுறுவதை கண்டதும், வேகமாக அவளிடம், “சும்மாதான் சொன்னேன் வேலினி. நீங்க பேசறது கேட்டதும் எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு, உண்மையா” என்றதும் பட்டென்று அவனை அவள் திரும்பி பார்த்தாள்.

அவன் தொடர்ந்து, “ஆனா அப்படி பண்ணனும்னா இன்னொருத்தரோட பர்மிஷன் வேணும். அதனால அதைக்கேட்டு உனக்கு கன்பார்ம் பண்றேன். ஓகேவா?” என்றான்.

” யார் பர்மிஷன் வேணும்?”

“சொல்றேன். இப்ப இல்லை. ஆனா கண்டிப்பா உனக்கு பாஸிட்டிவ் ஆன்சர் தான் கிடைக்கும். என்னை நம்பு” என்றவன் வார்த்தைகள் அவளை அதற்கு மேல் எதையும் கேட்க விடவில்லை. நம்பினாள்.

அதனால் புன்னைகையுடன் சரியென தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.  அவளின் செயல் ஜானவிக்கு ஆச்சரியமாக இருந்தது. காலையில் இருந்து நினைத்ததை நடத்தியே தீர வேண்டும் என்று பொறுமை இல்லாமல் சுற்றியவள், இரண்டு முறை மட்டும் சந்தித்த ஒருவன் சொன்னதை கேட்டதும் அமைதியாகி விட்டாளே என்று.

இருவருக்கும் இடையே இப்போது மௌனம் நிலவியது. ஜானவி அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக, “ஆமா அண்ணா,.. உங்கள அண்ணா-னு கூப்பிடலாம்ல?”, என்று கேட்க,
“நிச்சயமா. நான் உனக்கு அண்ணா தான்” என்று என்று அவனும் மனதார கூறினான்.

“உங்கள பத்தி சொல்லுங்களேன்” என்று கேட்க, அவனும், ஒரு நிறுவனத்தின் பெயரை சொல்லி அங்கு ஒரு உயர்ந்த பதவியையும் குறிப்பிட்டு பணி புரிவதாக கூறினான்.

அதை கேட்டதும் தோழிகள் இருவருக்கும் வியப்பாக இருந்தது. அவ்ளோ பெரிய கம்பெனியா..! இன்ஜினியரிங் படிக்கிற எல்லாத்துக்கும் அந்த கம்பெனில ஒர்க் பண்றது ட்ரீம் ணா”என்றாள் ஜானவி.

“ஆனா என்னோட ட்ரீம் அது கிடையாது.”, என்று கூறவும்,
“அப்போ உங்களுக்கு என்ன ட்ரீம்?” என்று மிக ஆர்வமாக கேட்டாள் வேலினி. அவள் குரலில் எழுந்து ஆர்வத்தை கண்டு இவனும் ஆர்வமாக, “எனக்குன்னு சொந்தமா ஒரு ஐடி கம்பெனி ஓபன் பண்றது தான் என்னோட ட்ரீம்” என்றான்.

இப்போது ஜானவி, “வாவ் அப்ப நாங்க காலேஜ் முடிச்சுட்டு உங்க கம்பெனில வந்து ஜாயின் பண்ணிக்கலாம். அப்படிதானே?” என்று கேட்க, “நிச்சயமா. நீங்க ரெண்டு பேரும் ஜாயின் பண்றது என்ன? ரெண்டு பேரும் கம்பெனியவே நடத்துங்க யார் வேணாம்னா? என்று புன்னகையுடன் கூறினான்.

அதற்கு வேலினி அவனை முறைத்து பார்த்து, “உங்க கம்பெனிய எதுக்கு நாங்க நடத்தனும்? நீங்களே நடத்துங்க. எங்களுக்கு இப்ப நீங்க வேலை பாக்குற கம்பெனியோட பெரிய கம்பெனியில செம்மையான வேலை கிடைக்கும்” என்று கூறிவிட்டு திரும்பி கொண்டாள்.

மீண்டும் அவன் புறம்‌ திரும்பி, “அக்சுவலா எனக்கும் வேற ட்ரீம் தான்” என்று அவனிடம் கூற,

“அப்படியா? உனக்கு என்ன ட்ரீம்”,

“டீச்சிங் தான் என் ட்ரீம்”,என்றாள்.

உடனே அவன், “சூப்பர். அப்ப நீ வருங்கால டீச்சரா?”

“எங்க ஆக எங்க அம்மா இன்ஜினியரிங் தான் படிக்க சொல்றாங்க”

“இன்ஜினியரிங் படிச்சவங்களும் டீச்சர் ஆகலாமே”

“ஆமால?” என்றாள் வேகமாக.

“இந்த ஐடியா கூட நல்லா இருக்கே இது ஏன் ட்ரை பண்ண கூடாது. இத்தனை நாள் நான் யோசிக்கவே இல்லை. இன்ஜினியரிங் படிச்சிட்டு ஐடி கம்பெனில தான் வேலை பார்க்கணும்னு மைண்ட்ல ஃபிக்ஸ் ஆயிடுச்சுப்பா”, என்று அவனிடம் அவள் பேச்சை வளர்த்துக் கொண்டிருக்க, அவனும் அவளின் பேச்சை விடாமல் பிடித்துக் கொண்டு பேசினான்.

ஜானவி இருவரையும் மௌனத்தையும் கலைத்து, இருவரையும் பேச வைத்து விட்டு இப்போதும் அப்பாவியாக இருவரையும் பார்த்து அமர்ந்திருந்தாள். அவர்கள் இறங்கும் நிறுத்தம் வந்துவிட, வேலினிக்கு அவள் தான் ஞாபகப்படுத்த வேண்டி இருந்தது.

“ஸ்டாப் வரப்போகுதுடி பேசுனது போதும் இறங்கலாம் வா” என்று கூறியதும் தான் நிறுத்தம் வந்து விட்டதை அறிந்தாள். ஜானவி அவனிடம் முறையாக விடைபெற,

இவள் அவனிடம், “அப்புறம் பேசுறேன் பாய்”, என்று கூறிவிட்டு, வேகமாக பேருந்து நின்றவுடன் இறங்கி ஓடினாள். இவளை பார்த்து சிரித்தவாறு அவன் பேருந்தின் அந்த இருக்கையில் அமர்ந்திருந்தான்.

ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது அன்று கல்லூரிக்கு புறப்படலாம் என்று ஏழ முயற்சித்த வேலினிக்கு உடல் நெருப்பாக கொதித்தது. முடியாமல் கண்களை இறுக மூடி படுத்தே கிடக்க, தெய்வானை தான் வந்து அவளின் உடல் நிலையை புரிந்து கொண்டு, அவள் தோழிகள் மூலம் இரண்டு நாள் கல்லூரிக்கு விடுமுறை கூறிவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

இரண்டு நாட்கள் வீட்டினர் யாருக்கும் வேலை ஓடாமல் அவள் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தனர்.

அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் தருணிகாவும் ஜானவியும் முதல்நாள் மாலை அவளை பார்த்துவிட்டு சென்றிருந்தனர். இரண்டு நாளில் குணமடைந்தவளை மூன்றாம் நாள் கல்லூரிக்கு அனுப்பாமல் பிடித்து வைத்துக் கொண்டனர் வீட்டினர், முழுதாக குணமடையட்டும் என்று.

அன்று தெய்வானைக்கு ஒரு சிறிய பிறந்தநாள் விழாவிற்கு உணவுக்கான ஆர்டர் வந்திருக்க அந்த வேலையில் அவர் தீவிரமாக இருந்தார்.

இதற்கு இடையில் தந்தைக்கு மதிய உணவை தயாரித்து வைத்திருக்க, அதை கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம், அதைக் கொண்டு போய் தானே கொடுக்கிறேன் என்று வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டு தந்தையை பார்க்க அவர் கடை நோக்கி சென்றாள் வேலினி.

கடைக்கு சென்று தந்தையை பார்த்ததும் இவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஆறுமுகம், கடையில் மின்சாரம் தடைப்பட்டு இருக்க வேர்க்க விறுவிறுக்க ஏதோ ஒரு துணியை வேகமாக தைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

“வேகமாக கொடுக்க வேண்டிய ஆர்டரா இருக்கும். இரண்டு நாள் காய்ச்சலில் படுத்திருந்த என்னையே சுத்தி வந்தாரு. இதை மறந்திருப்பார் அதனால இப்போ இவ்வளோ வேகமாக வேர்க்கிதுன்னு கூட பாக்காம தச்சிட்டு இருக்காரு”என்று புரிந்து கொண்டவளாக, அவரிடம் சென்றாள்.

“அப்பா சாப்பிட வாங்க”

 

“அட… வாடா பாப்பா. நீ ஏன் வந்த ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான” “நான் நல்லா தான் இருக்கேன். நீங்க தான் டையர்டா தெரியிரிங்க. வாங்க சாப்பிட”,

“இல்லடா பாப்பா. இத முடிச்சிட்டு வந்திடுறேன்”.
“அப்பா இதுல இன்னும் பினிஷிங் நிறைய வேலை இருக்கு. எனக்கு தெரியும். தயவுசெய்து வந்து சாப்பிடுங்க”, என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக இழுத்து அமர வைத்து சாப்பிட வைத்தாள்.

கூடவே அங்கிருந்த அட்டையை எடுத்து அவருக்கு விசிறி விட்டவாறு அமர்ந்து கொண்டாள். அவள் தந்தை, “அதெல்லாம் வேண்டா பாப்பா கை வலிக்கும் உனக்கு”, என்று கூற, “ஆமா கொஞ்ச நேரம் விசுறதுக்கு எல்லாம் கை வலிக்குது. பேசாம சாப்பிடுங்க. ……..

அப்பா எனக்கு தான் காச்ச அடிச்சுது. அதுக்கு நீங்க சட்டை தைக்காம இருப்பீங்களா. இப்ப பாருங்க கடைசி நிமிஷத்துல அவசர அவசரமா தைக்கிறீங்க. கரண்ட் இல்லனா கொஞ்ச நேரம் இங்க காத்தோட்டமா உட்கார்ந்து இருக்கலாம் இல்ல” என்று அவள் சோகமாக கூற,

“இதுல என்னடா பாப்பா இருக்கு. ரெண்டு நாளா காய்ச்சல். நீ எந்திரிக்க முடியாம கிடந்த, எனக்கு எங்க வேலை பார்க்க முடியுது. தப்பு தப்பா தச்சிட்டா. அப்புறம் சட்டைக்காரன் கிட்ட பேச்சு வாங்கணும்.

அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. கடைசி நிமிஷம் ஆனாலும் அப்பா ஒழுங்கா நிதானமா தைச்சுருவேன். நீ கவலைப்படாத”, என்று கூறிவிட்டு தந்தை வேகமாக சாப்பிட, அவர் பசி உணர்ந்து அவளும் அமைதியாகி அவர் சாப்பிடுவதை மட்டும் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

இந்த கடையை ஆறுமுகம் லீசுக்கு தான் வாங்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். தையல் தொழில் பார்க்கும் ஆறுமுகத்திற்கு இந்த சிறிய கடையே குறைந்த விலையில் கிடைத்தது. அது ஒரு பழைய கட்டிடம் என்பதால் அங்கு கரண்ட் வயர்கள் அனைத்தும் சற்று பழுதாகி இருக்க, அதில் ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது வேலை வந்து கொண்டிருந்தது.

மாதத்தில் ஒரு பகுதி வருமானம் இதற்கே சென்று விடும், இதை எப்படி சரி செய்வது என்று ஆறுமுகத்துக்கும் தெரியவில்லை. கடையை மாற்றும் எண்ணமும் அவருக்கு இதுவரை வந்திருக்கவில்லை.

கடையை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் வேலினிக்கு முந்தைய வாழ்க்கையில் தந்தை பொருளாதர ரீதியாக சரிந்து போகும் நிலை நினைவுக்கு வந்தது.

எப்படி இதை மறந்தோம்… தாய் மேல் கவனம் வைத்த நாம் ஏன் தந்தையை மறந்து விட்டோம் என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக தன்னையே மனதிற்குள் திட்டிக் கொண்டவள், எப்படியாவது இவர்களை உயர்த்த வேண்டும்.

தாயும் கொஞ்சம் உழைப்பை தரவில்லையே வீட்டு வேலைகளையும் செய்து, இப்படி அடிக்கடி உணவு தயாரிக்க என்று அடுப்படியில் வெந்து தான் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இருவரையும் ஒரு இடத்தில் இருந்து ஓய்வெடுங்கள், நான் வேலைக்கு செல்கிறேன் என்றாலும் அமைதியாக இருக்கப் போவதே கிடையாது.

இவர்கள் இருவரும் வேலை செய்தாலும், பெரிதாக உடல் உழைப்பு இல்லாதது போல, ஏதாவது ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணினாள். என்ன செய்யலாம் என்று யோசித்தாள் இந்த கடையை நன்றாக சுற்றி பார்த்தாள். எதிர்ப்புறம் ஒரு கடை காலியாகிக் கொண்டிருப்பதும் இவள் கண்களுக்கு தெரிந்தது.

மனம் மிக வேகமாக கணக்கு போட ஆரம்பித்தது. இன்னும் கணக்குகளை நேர்படுத்துவதற்கு அடுத்து என்ன என்று யோசித்தவள், ஒரு முடிவோடு தந்தையிடம், “அப்பா ஒரு 50 ரூபாய் தாங்க”, என்று வாங்கிக் கொண்டாள்.

குடுத்த பின் அவர், “எதுக்குடா?” என்க,

“எனக்கு ஒரு பைல் வேணும்பா. அதான் வாங்க போறேன். நான் வாங்கிட்டு நான் வீட்டுக்கு போறேன். நீங்க அம்மாக்கு உடனே கூப்பிட்டு நான் வந்துட்டேனான்னு கேட்காதீங்க. சரியா? என்று கூறிவிட்டு நகன்றாள்.

அவர், “வெயில் அடிக்குது… காய்ச்ச உனக்கு வேற…..”, என்று அவர் தடுக்க முயற்சிக்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன் வேணும்னா உங்க திருப்திக்கு, இந்த குடைய எடுத்துட்டு போறேன்”, என்று கூறி குடையை பிடித்துக் கொண்டு உணவு கூடையையும் கையில் பிடித்தவாறு வேகமாக அந்த சாலைகளில் நடக்க ஆரம்பித்தாள் வேலினி.

அந்த ஏரியாவின் ஒவ்வொரு தெருக்களையும் ஒன்று விடாமல் சுற்றி வந்தாள் வேலினி. அங்க சில தெருக்கள் வெறுமையாகவும் சில தெருக்கள் அந்த மதிய வேளையிலும் ஆள் நடமாட்டத்தோடும் இருந்தது.

அங்கிருந்த சில கடைகள் வெறுமையாக காட்சியளிக்க, சில கடைகளில் சுடும் வெயிலில் கூட மக்களின் கூட்டம் நிறைந்து வழிந்தது. இப்படி ஒவ்வொரு இடத்தையும் நுண்ணியமாக கவனித்து ஆராய்ந்து, இருக்கும் கட்டிடங்களையும், அங்கிருந்த மனிதர்களின் வசதிகளையும் நன்றாக கவனித்து மனதில் கணக்கு போட்டு கொண்டு வாங்க வேண்டிய ஃபைலையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

அன்றைக்கு முழுவதுமே அவள் மனதில் திட்டம் ஓடிக்கொண்டே இருந்ததே தவிர, அது முழுமை பெறவில்லை. முழுமை பெறுவதில் சில சிக்கல்கள் இருப்பதும் அவளுக்கு நிச்சயம் விளங்கியது. அதை எப்படி சரி செய்ய என்று அவளுக்கு தெரியவில்லை.

ஏனெனில் அவள் செய்யும் விஷயம் அனைத்தும் புரிதல்லவா. மிகவும் குழப்பிக் கொள்ளக்கூடாது இதைப் பற்றி யாரிடமாவது தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து மறுநாள் கல்லூரிக்கு புறப்பட்டாள்.

கல்லூரியில் அவளுக்காக ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. கல்லூரி வாசலில் இறங்கியதிலிருந்து அவள் கண்ட காட்சி அவளை பெரு மகிழ்ச்சி உள்ளாக்க வேகமாக ஜானவியை தேடிச் சென்றவள், அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு,

“சூப்பர் டி…ஜான்வி. இது எப்படி நடந்துச்சு? எப்ப நடந்துச்சு?”

“நீ இப்படி சந்தோஷப் படுவன்னு தெரிஞ்சு தான் உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன். மூணு நாள் லீவு எடுத்துட்டு மேடம் இன்னிக்கு ஜாலியா வந்திருக்கீங்க. ரொம்ப தெம்பா இருக்கீங்க போல. இந்த குதி குதிக்கிறீங்க”, என்று அவள் அவளை கேலி செய்ய, அவள் கேலி எல்லாம் அவள் கண்களுக்கு தெரியவில்லை.

“ஆமா இது எப்படி நடந்துச்சு? திடீர்னு முடிவு பண்ணி. அதுவும் இவ்வளவு வேகமா ப்ரோக்ராம்ஸ் எதுவும் நடக்காதே? 3 நாள்ல எப்படி இது நடந்தது? ”

“நீ காய்ச்சல்ன்னு லீவ் போட்ட முத நாளே அனௌன்ஸ்மென்ட் பண்ணிட்டாங்க. ரெண்டு நாளுக்குள்ளையே இது ஆரம்பிச்சிடலாம். பேரன்ஸ் எல்லாரையும் வர சொல்லுங்க. முத நாள் வரமுடியாத பேரன்ஸ் எல்லாம் சண்டே வர சொல்லுங்க-ன்னு சொல்லிட்டாங்க.

ரெண்டு நாள் கேம்ப் நடக்க போகுது. இங்க படிக்கிற ஸ்டூடன்ட்ஸோட பேரன்ஸ் ரிலேடிவ்ஸ் எல்லாருக்குமே கேன்சருக்கான டெஸ்ட் பண்ண போறாங்க. லேடீஸ் மட்டும் கிடையாது, ஜென்ஸுக்கும் தான். நமக்கு வேண்ட பட்டவங்களை கூட்டிட்டு வந்து இங்க ப்ரீயா டெஸ்ட் பண்ணிக்கலாம்.

“அது தான் டி எப்படி மேனேஜ்மென்ட் இதுக்கு ஒத்துக்கிட்டாங்க. நாள் இல்ல, நேரம் இல்ல, ஹாஸ்பிடல் எல்லாம் அணுக முடியாதுன்னு, என்னென்னமோ காரணம் சொன்னாங்களே” என்று அவள் குழப்பமாக கேள்வி கேட்க,

ஜானவி, “ஆமா எல்லாமே சொன்னாங்க. ஆனா இது ஒரு ஹாஸ்பிடல் தானா முன் வந்து நாங்க இந்த மாதிரி ஒரு கேம்ப் வருஷ வருஷம் பண்ணலாம்னு பிளான் பண்ணி இருக்கோம். ஃபர்ஸ்ட் உங்க காலேஜ்ல இருந்து ஸ்டார்ட் பண்றோம். இது உங்க காலேஜுக்கும் பெருமை அப்படி இப்படின்னு நிறைய சொல்லிருப்பாங்க போல.

இந்த விஷயத்தை பத்தி எனக்கு காத்து வாக்குல நியூஸ் வந்துச்சு. அதுதான் மேனேஜ்மென்ட் ஓகே பண்ணிட்டாங்க. அண்ட் இதுல முக்காவாசி ஷேர் அவங்களோடது தான். கொஞ்சமான ஷேர் மட்டும் தான் காலேஜ் போடுறாங்க. அதனாலதான் இவ்வளவு வேகமா இது நடத்திறதுக்கு ஒத்துக்கிட்டாங்க.
ஸ்டூடண்ட்ஸ்க்கு ரெண்டு நாள் முன்னாடியே அவெர்நெஸ் க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. முதல் நாள் அனோன்ஸ் பண்ணதுல இருந்து ரெண்டு நாளா கேன்சர் பத்தின நிறைய விஷயங்களை தெரிய படுத்தினாங்க. ஸ்டுடென்ட்ஸ் அவங்க பேரன்ட்ஸ் ஓட வந்துட்டு இருக்காங்க. நீ நினைச்ச ஒரு பெரிய விசயம் நடக்கப் போகுது டி” என்றாள்.

இது நான் நெனச்ச விஷயம் மட்டும் இல்ல டி. எல்லாருக்கும் கிடைக்க வேண்டிய ஒரு விஷயம். இது நிச்சயமா கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல . ஆனா இதை இந்த ஹாஸ்பிடல் அவங்க பெருமைக்கு பண்றாங்களோ? இல்ல நல்லெண்ணத்துல பண்றாங்களோ, அவங்களால ஒரு பெரிய நல்ல விஷயம் நடக்கப் போகுது.
அவங்களுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும். அவங்க எல்லாம் வருவாங்களா? இல்ல டாக்டர்ஸ் மட்டும்தான் வருவாங்களா?”

“அதை பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா செக்கப்க்கு முன்னாடி ஒரு குட்டி ப்ரோக்ராம் இருக்கு. ஒரு 1/2 hour நடக்கும்-னு சொன்னாங்க. அதுல வேணா, நீ சொல்ற மாதிரி யாராவது வந்து பேசலாம்” என்று கூறவும்,
“ஓகே ஓகே, நம்ம அங்க வந்து பாத்துக்கலாம. இப்போ நான் போய் என் பேர வாலன்டியர்ஸ் லிஸ்ட்ல குடுத்திட்டு வந்துடறேன்”, என்று கூறிவிட்டு நிகழ்வின் கண்கானிப்பாளரிடம் வேகமாக சென்றவள், தானும் தான் தன்னார்வலராக பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தாள்.

அவரிடம் தன்னார்வலர்க்கான அடையாள அட்டையையுப் வாங்கி மாட்டிக் கொண்ட பின்னே நிம்மதியானாள்‌. அதன்பின் வேகவேகமாக அவர் கூறும் வேலைகளையும் தானாக சில நிறைய உதவிகளையும் செய்தவள், அன்றைய நிகழ்ச்சியை ஆரம்பித்த போது, “ஹாஸ்பிட்டல் சேர்மனையும் யார்” என்று பார்த்து வைத்துக் கொண்டாள்‌.

அவர் மூலமாகத்தான் இது நடக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டவள், அன்றைய நாள் முழுவதும் வேறு எதை பற்றியும் சிந்திக்காது, தான் எடுத்துக் கொண்ட பொறுப்புகளை சிறப்பாக செய்து முடித்தாள்.

மாணவர்களும் பெற்றோர்களும் வீடு திரும்பியிருக்க, மீதம் இருந்தது தன்னார்வர்க் குழுவை சேர்ந்த சிலர் மட்டுமே. அவர்கள் அனைவரும் வெளி பேருந்துக்கு செல்வதால் சிறிது நேரம் தாமதித்து செல்லலாம் என்று பொறுமையாக அமர்ந்து நொறுக்கு தீனிகளை குறித்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் தான் வேலை முடிந்த கிளம்பி தயாரான மருத்துவர்கள் இடம் ஏதோ பேசிக் கொண்டு வந்த அந்த மருத்துவமனையின் பொறுப்பாளரை தூரத்திலிருந்து கண்டாள் வேலினி.

உடனே வேலினி தன் கையில் இருந்த உணவுப் பொட்டலத்தை தன் அருகில் இருந்த ஜானவியிடம் திணித்துவிட்டு, வேகமாக அந்த பொறுப்பாளரை நோக்கி ஓடினாள். இவள் ஓட்டத்தை கண்டு பயந்த ஜானவியும் அவள் பின்னே ஓடினாள்.

நாற்பதின் தொடக்கத்தில் மத்திய வயதை எட்டியிருந்தார் அந்த பொறுப்பாளர். இவர்கள் வேகமாக ஓடிவருவதைக் கண்டு அவர் இவர்களை கேள்வியாக பார்க்க, வேலினி, அவரிடம், “ஹலோ சார். நான் வேலினி. நான் இங்கே தான் செகண்ட் இயர் இ. சி. இ. படிக்கிறேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவள் வேலினி என்று கூறியதுமே அவர் முகத்தில் சிறிதாக ஒரு ஆச்சரியமும் புன்னகையும் வந்தது. அதை வேகமாக ஓடி வந்து நின்று ஜானவி சட்டென்று கண்டு கொண்டாள்.

“ஹலோ வேலினி”, என்று அவர் புன்னகையுடன் கைநீட்ட இவளும் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே அவர் கைபிடித்து குலுக்கினாள்.

இப்போது அவர் ஜானவியை கேள்வியாக பார்க்க, “இவ என்னோட பிரண்ட் ஜானவி. இவளும் இங்க செகண்ட் இயர் படிக்கிறா. சி. எஸ். சி” என்று கூறவும் அவர் அவளுக்கும் கை கொடுத்தார். அவளும் புன்னகையுடனே கை கொடுத்துக் கொண்டாள். இருந்தும் அவரை ஆராய்ச்சியாக பார்ப்பதை மட்டும் விட்டு விடவில்லை.

வேலினி, “உங்களை மீட் பண்ணதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் சார். இப்படி ஒரு விஷயம் பண்றதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் சார்.

“ஆக்சுவலா கேன்சர் பற்றின பெரிய பயம் எனக்கும் இருந்துச்சு. என்னோட அம்மாவுக்கும் கூட நான் டெஸ்ட் பண்ணி இருக்கேன். பேமிலி எல்லாருக்கும் ஒரு ஃபுல் செக்கப் பண்றதுக்கான முயற்சிகளையும் ஈடுபட்டுட்டு இருக்கேன்.

இவ அம்மாவும் பண்ணிருக்காங்க. ஆனா மத்த ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னப்போ அவங்க யாரும் இதை பண்றதுக்கு பேரண்ட்ஸ் ஒதுக்கவே இல்லைன்னு சொல்லிட்டாங்க. சரி எப்படியாவது காலேஜ் மூலமா இதை பண்ண வச்சிடலாம்னு காலேஜ்ல கூட பேசினேன்.

ஆனா வாய்ப்பே கிடைக்கல. பட் நீங்க….நான் நினைச்சு ஒரு வாரம் கூட ஆகலை சார். அதுக்குள்ள நீங்களா வந்து கேட்டு இந்த விஷயத்தை பண்ணி இருக்கீங்கன்னு நினைக்கும் போது எனக்கு எவ்வளவு ஷாக்கிங் இருந்தது தெரியுமா? அண்ட் இது ஒரு கிரேட் திங்ஸ் சார். உங்ககிட்ட தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சு தான் இங்க வந்தேன். ஒரு பிக் பிக் தேங்க்ஸ் சார்” என்று அவள் பேசிக் கொண்டே போக,

ஜானவிதான் அவள் கையைப் பிடித்து அவளை என்று அமைதிபடுத்த, அந்த பொறுப்பாளரோ புன்னகையுடனே அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார்.

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க இப்படி ஒரு முயற்சி பண்ண நெனச்சு இருக்கீங்க. இந்த சின்ன வயசுல உங்களுக்கு இவ்வளவு பெரிய இவ்ளோ பெரிய விஷயத்தை நினைச்சு இருக்கீங்க. அதுவே பெரிய விஷயம் தான். அண்ட், இந்த வயசுல அதுவும் இந்த பொறுப்பில் இருக்க நான் இதை செய்யறது பெரிய விஷயமே கிடையாது. உங்க வயசுல நீங்க நினைச்சது தான் ரொம்ப பெரிய விஷயம்.

வேலினி உடனே விளையாட்டாக, “அதனால தான் கடவுள் இதை உடனே உங்க மூலமா செஞ்சு கொடுத்துட்டாரு போல” என்று கூற, அதை அந்த பொறுப்பாளர் தவறாக எடுத்துக் கொள்ளாமல் மிக அழகாக எடுத்துக் கொண்டார். வேலினிக்கு தலைகால் புரியாமல் மகிழ்ச்சி, அதனால் தன் முன் இருப்பவர் யார் என்று உணராமல் வெகு விளையாட்டாக பேசினாள். ஜானவிக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.

எப்போதும் விளையாட்டுத்தனமாக பேசுகிற ஜானவி இன்று மிகப் பொறுப்பாக அமைதியாக நின்று கொண்டிருக்க, அவளுக்கு பதிலாக வேலினி மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்தாள். அங்கு ஜானவிக்கு கூட அவள் பேச்சு சங்கடமாகவும் ஒருபுறம் ஆச்சரியமாகவும் இருந்தது.

ஆனால் பொறுப்பாளரோ அவளுக்கு பதில் கூறும் விதமாக, “நிச்சயமா, நீங்க நினைச்சதுனால தான் வேலினி, இந்த விஷயம் நடந்திருக்கு. இல்லன்னா எப்படி நடக்கும் கடவுளுக்கு நீங்க தான் டைரக்டான தூதுவர்னு நினைக்கிறேன்”, என்று கூற உடனே வேலினி சிரித்து விட, அவரும் அவளுடன் சேர்ந்து பலமாக சிரித்தார்.

அங்கிருந்த மற்றவர்கள் அனைவரும் அவர்கள் உரையாடலை வியப்பாக பார்த்துக் கொண்டிருக்க, சிரித்து முடித்தவர் இவர்களிடம் திரும்பி, உங்களுக்கு வண்டி வந்துருச்சு. நீங்க கிளம்புங்க”, என்று கூறி அனுப்ப, அவர்களும் இவர்களை புன்னகையுடன் பார்த்துவிட்டு அங்கு இருந்து நகர்ந்தனர். இப்போது வேலினி, ஜானவி அந்த பொறுப்பாளரும் மட்டும் அந்த தனித்த வெளி மைதானத்தில் நின்றிருந்தனர்.

“சரி உங்கள காப்பாற்றின கடவுள் யாரு? அது உங்களுக்கு தெரியுமா?” ‌ “இது என்ன கேள்வி வேற யாரு முருகன் தான். அவர்தான் என் நினைச்சதெல்லாம் நிறைவேத்திக் கொடுப்பாரு”, என்று அவள் கூறவும், “கண்டிப்பா முருகன் கிடையாது. ஆனால் இன்னொருத்தர்”, என்று கூறி, அலைபேசியை ஏதையு தேடி அழுத்தியவர், காதில் வைத்து பேசிவிட்டு வைத்தார்.

அடுத்த ஐந்து நிமிடம் எதையோ பேச ஜானவியும் வேலினியும் கண்களாலேயே “யாரா இருக்கும்?” என்று கேள்வி கேட்டுக் கொண்டனர். ஐந்து நிமிட இடைவெளியில் தொலைபேசியை வைத்தவர் அவர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடர்ந்தார்.

அவர்களும் அவரிடம் கிடைத்த அந்த பொன்னான பொழுதில் நிறைய பேசி தெரிந்து கொண்டனர். முதலில் அவர் பொறுப்பாளர் மட்டுமல்ல மருத்துவர் என்பதை அறிந்து கொண்ட, வேலினி தனக்கிருக்கும் நிறைய சந்தேகங்களை அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தாள். ‌பொறுப்பாளரும் சற்றும் சலிக்காமல் பதிலளித்துக் கொண்டே இருந்தார். அந்த சமயத்தில் பின்னிருந்து,

“அப்பா!!! எவ்வளவு கேள்வி? போதும் மா, வேலினி”, என்று ஒரு குரல் சொல்ல, அந்த குரலை கேட்டதும் எப்போதும் போல் இவளுக்கு அடையாளம் தெரிந்து விட்டது. “குரு”, என்று சொல்லிக் கொண்டே திரும்ப அங்கே நிச்சயமாக அவளின் குரு தான் நின்றிருந்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!