Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் தேடும் காதல் நீ

நான் தேடும் காதல் நீ….16

நான் தேடும் காதல் நீ….16

இரண்டு வாரங்கள் கழித்து,

செல்வம் மகனின் மனதை அறிந்த பின் தாமதிக்கவில்லை மாமனாரின் உடல் நிலை வேறு நிலையில்லாமல் இருக்க அவர் இருக்கும் போதே அவரின் ஆசையை நிரவேற்றி வைத்துவிட வேண்டும் என்ற வேகம்.அதனால் சதாசிவத்திடம் கூறி தீர்த்தாவிடம் பேச சொல்லிவிட்டார்.தான் சென்று பேசலாம் தான் ஆனால் தன்னிடம் அத்தனை உரிமையுடன் தீர்த்தா இருக்கமாட்டாள் அதோடு தான் கேட்டு அவள் பிடிவாதமாக மறுத்துவிட்டாள் அதனாலே அவர் சதாசிவத்தை முன்னிருத்தி தான் அனைத்தும் செய்தார்.

சதாசிவத்துக்கும் நிமலனை மறுக்க எந்த காரணமும் இல்லை என்பதால் அவருமே தீர்த்தாவிடம் கேட்டு பார்த்துவிட்டு கூறுவதாக கூறினார் அதன் படி இதோ தீர்த்தாவின் சம்மதமும் கிடைத்துவிட இதோ அடுத்த கட்ட பேச்சிற்கு வந்திருந்தனர் அவர்கள்.



Advertisement

தீர்த்தா அமைதியாக நின்றிருந்தாள் அவளின் முகத்தில் எந்த உணர்வுமே இல்லை.அவளையே பார்த்துக் கொண்டிருந்த சிவன்யாவிற்கு மனது கனத்து போனது.தமக்கையின் மனதை அவள் நன்கு அறிவாளே ஆனாலும் அது நடக்க வாயப்பில்லை என்ற போது அதை பற்றி நாம் சிந்திப்பது கூட தவறு தான்.

“என்னமா இவன் சொல்லுறது எல்லாம் உண்மை தானா….நீ இதுக்கு முழுமனசா தான சம்மதிச்ச….”என்று செல்வம் கேட்க,தீர்த்தா எதிரில் அமர்ந்திருந்த சதாசிவத்தை பார்த்தாள்.

“நீயே சொல்லுமா….”என்று அவர் கூறினார்.

Advertisement

“எங்க அக்காவுக்கு இதுல சம்மதம்….எனக்கும் இதுல சந்தோஷம் தான்…..”என்று சிவன்யா முந்திக் கொண்டு பதில் கூற,செல்வத்துக்கு சிரிப்பு தான் வந்தது.

Advertisement

“சந்தோஷம்டா…..தீர்த்தாவும் ஒத்த வார்த்தை சொல்லட்டும்…..”என்று அவர் கூற,இப்போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் தீர்த்தா.மனதில் புயல் அடிப்பது போல் இருந்தது தான் செய்வது சரியா தவறா என்ற யோசனை இப்போதும் இருக்க தலைகுனிந்திருந்தவளின் காதில் அன்று சதாசிவம் கூறிய வார்த்தைகள் தான் எதிரொலித்தன,

அன்று,

காலை கடையை திறந்து சில மணி நேரத்திலேயே தீர்த்தாவை காண வந்துவிட்டார் சதாசிவம்.அவரைக் கண்டவுடன் மனதில் பதட்டம் தான் வந்தது,

Advertisement

“வாங்க அங்கிள்….என்ன திடீர்னு வந்திருக்கீங்க….”என்று அவரை வரவேற்று வீட்டில் அமர செய்ய,வீட்டின் பின் புறத்தில் இருந்த சிவன்யாவும் வந்துவிட்டாள்.

“வாங்க அங்கிள்….எப்படி இருக்கீங்க…..”என்று நலம் விசாரிக்க,

“என்னமா நீ காலேஜ்ல இருப்ப…நீ இங்க….”என்று சிவன்யாவை பார்த்து அவர் கேட்க,சிவன்யா தயக்கமாக தன் சகோதரியை ஒரு நிமடம் பார்த்துவிட்டு அவரிடம் நேற்று நடந்தவற்றை சுருக்கமாக கூற,

“என்ன அமரனா இப்படி செஞ்சது….”என்று அவரும் அதிர்ந்து தான் விட்டார்.சிறு வயதிலிருந்தே அமரனை தெரியும் அவருக்கு தந்தையின் இறப்புக்கு பின் தனியாளாக மண்டியை எடுத்து நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளான் அதோடு இங்கு அவனிற்கு உண்டான மதிப்பும் நன்கு அறிந்தவர் தானே அதனாலே அதிர்ந்து கேட்க,

“இல்ல அங்கிள் தெரியாம தான் நடந்துச்சு…அதோட என்னோட தப்பும் இருக்குது நானும் கவனமா இருந்திருக்கனும்….”என்று தீர்த்தா மறுத்து கூறினாள்.சிவன்யாவிற்கு புரிந்தது சதாசிவம் அமரனை தவறாக நினைக்கக்கூடாது என்று கூறுகிறாள்.

“என்னமா நீ பார்த்து இருந்திருக்க கூடாது….”என்றவரின் மனதில் நிமலனை பற்றிய நல்லணெண்மும் வலுக்க துங்கியது.இதுவரை சரிவருமா என்று நினைத்தவருக்கு நேற்று நிமலன் தீர்த்தாவிற்கு உதவியதை கேட்டவுடன் ஏன் கேட்டு பார்த்துவிடக் கூடாது என்ற நினைத்துவிட்டார்.

“என்ன அங்கிள் காலையிலேயே வந்திருக்கீங்க….என்ன விஷயம்….”என்று தீர்த்தா கேட்க,அவளை நிமிர்ந்து பார்த்தவருக்கு உள்ளுக்குள் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது,தீர்த்தாவிற்கு அவரின் பார்வையில் என்ன இருந்தது என்று தெரியவில்லை ஆனால் எதையோ கூற முடியாமல் தவிக்கிறார் என்று மட்டும் புரிந்தது.

“என்ன அங்கிள் எதுவா இருந்தாலும் சொல்லுங்க….”

“அது…நான் இதை பத்தி பேசலாமானு தெரியலை ஆனா பேசாமலும் இருக்க முடியலை….தீர்த்தாமா நீ எனக்கு பொண்ணு போல….இல்லை என் பொண்ணு தான் வச்சுக்கோயேன்….”என்றவரின் பீடிகையில் சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன அங்கிள் இந்த கடை சம்மந்தமா எதாவதா….இன்னும் இரண்டு மாசம் இருக்கே….அதுக்குள்ள நான் எதாவது செஞ்சுடுவேன் அங்கிள்….”என்றாள் தீர்த்தா.அவளின் நினைவு முழுவதும் இந்த கடையிலேயே இருந்தது.இப்போதெல்லாம் அவள் அதிகம் அமரனை கூட நினைப்பதில்லை எப்படி கடையை மீட்பது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

“நீ முதல்ல என்னை அப்பா ஸ்தானத்துல தான வச்சிருக்க அதை சொல்லு….”என்று கேட்க,

“என்ன அங்கிள் நீங்க இப்படி கேட்குறீங்க….நான் அப்பானு உங்களை கூப்பிடலைனாலும் நீங்க எங்களுக்கு அப்பா மாதிரி தான்….”என்றவளின் பதிலில் சற்று நிம்மதி அவருக்கு.

“சந்தோஷம்மா….நான் ஏன் இதை கேட்டேன்னா நான் பேச வந்திருக்குற விஷயம் உன் எதிர்காலம் சம்மந்தப்பட்டது அதனால தான் கேட்டேன்….”

“அச்சோ பீடிகை எல்லாம் போதும் அங்கிள்…..விஷயத்தை சொல்லுங்க…”

“உனக்கு நான் ஒரு வரன் ஒண்ணு பார்த்து இருக்கேன்….அது வேற யாரும் இல்லை நிமலன் தான்….”என்றவுடன் தீர்த்தா அந்த இடத்தை விட்டு கோபமாக போக பார்க்க,

“நில்லுமா…நான் சொல்லுறதை முழுசா கேட்டுட்டு அப்புறம் நீ உன் மனசுல உள்ளதை சொல்லு….எனக்கு தெரியும் இதுக்கு நீ ஒத்துக்கமாட்டனு….”

“அப்புறம் எதுக்கு அங்கிள் இதை என்கிட்ட கேட்குறீங்க….”

“கோபப்படாதமா……நான் மட்டும் இதை உடனேவா உன் கிட்ட பேச முடிவெடுத்திருப்பேன்…..நானும் ஒருவாரமா இதை பத்தி யோசிச்சு தான் உன்கிட்ட பேச வந்திருக்கேன்….”என்று கூற,

“க்கா….கொஞ்சம் பொறுமையா அங்கிள் என்ன சொல்லுறாங்கனு கேளேன் அதுக்கு அப்புறம் உன் மனசுல உள்ளதை நீயும் சொல்லு….”என்று சிவன்யாவும் கூற தீர்த்தா சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.எப்போதும் இப்படி எல்லாம் தன்னை நிதானபடுத்தியதெல்லாம் இல்லை தனக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்று நிற்பாள் ஆனால் அமரனின் பிரிவுக்கு பின் தன்னை கொஞ்சம் மாற்ற துவங்கியுள்ளாள்.ஏனென்றால் அவளின் கோபத்தை கட்டுபடுத்தபவனே அமரன் தான் அவனே விலகிய பின் தன்னை தானே தேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறாள்.தீர்த்தாவின் அமைதியை சம்மதமாக ஏற்ற சதாசிவம் நிமலனை பற்றிய விபரங்களை கூற துவங்கினார்.அவனது நேர்மை தொழிலில் அவனது திறமை என்று அனைத்தையும் கூறியவர் செல்வம் கூறியவற்றையும் கூறினார்.

“நானும் உன்னை போல தான் முதல்ல முடியவே முடியாதுனு நின்னேன்….ஆனா கல்யாணம் ஆனவுடனே தனி குடித்தனம் தான் வைக்க போறேன்னு அவன் சொன்னதுக்கு அப்புறம் கொஞ்சம் யோசிச்சேன்….அதனால தான் இதோ உன்கிட்ட ஒருவார்த்தை கேட்டு பார்க்கலாம்னு வந்துட்டேன்…எனக்கு நிமலன் மேல ஒரு நம்பிக்கை நல்ல பையன் உன்னையும் சிவன்யாவையும் நல்லா பார்த்துப்பான்….இனி நீ தான் யோசிக்கனும்…”என்றவர் சிவன்யாவிடம் திரும்பி,

“சிவாம்மா…உன் அக்கா யோசிக்கட்டும் நீ எனக்கு ஒரு காபி எடுத்துட்டு வாயேன்….”என்று கூற,

“இதோ வரேன் அங்கிள்….”என்றுவிட்டு நகர்ந்தாள்.அவள் சென்றவுடன் தீர்த்தாவிடம் திரும்பிய சிவம்,

“தீர்த்தாமா…உடனே நீ எனக்கு பதில் சொல்லனும் இல்லை…நல்லா யோசிச்சு பதில் சொல்லு….அதோட இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தையும் நீ யோசி அது சிவன்யா…அவளுக்கு உன்னை விட்டா வேறு யாரும் இல்லை அவளையும் நீ பார்த்தக்கனும்னா அதுக்கு தகுந்த மாதிரி தான் உன் வாழ்க்கை துணையும் அமைஞ்சா நல்லது….இதையும் யோசி….”என்று கூற தீர்த்தாவின் முகம் யோசனையாகுள்ளாக அதனை பார்த்தவுடன் சிவம் அமைதியாகிவிட்டார்.

சிவன்யா வந்தவுடன் அவளுடன் சற்று நேரம் பேசியவர் தீர்த்தாவிடம்,

“சரிமா….நீ நல்ல யோசிட்டு பதில் சொல்லுமா…..”என்றுவிட்டு அவர் சென்றுவிட்டார்.

“என்னக்கா….என்ன சொல்லிட்டு போறாரு…..”என்று தீர்த்தாவிடம் கேட்க,

“ஒண்ணுமில்ல…”

“க்கா….நீ நல்லா யோசிச்சு பதில் சொல்லுக்கா….ஆனா நான் ஒண்ணு சொல்லுறேன்…கேட்பியா….”என்று சிவன்யா தீர்த்தாவின் அருகில் அமர்ந்தவள்,

“சொல்லு….”

“க்கா….எனக்கு சம்மதம்….அவர்…நிமலன் நல்ல மனுஷன் போல தெரியுரார்…..அதனால நீயும் யோசிக்கா…..”என்றவள் தீர்த்தாவை பார்க்க,

“போடி போ காலேஜ் கிளம்பு….”என்றுவிட்டு அவள் கடைக்கு சென்றுவிட்டாள்.அதன் பின் தீர்த்தா யாரிடமும் பேசவில்லை அவளே யோசிக்கட்டும் என்று மற்றவர்களும் அமைதி காத்தனர்.அந்த வாரக் கடைசியில் தீர்த்தாவே சிவத்திற்கு அழைத்து தன் சம்மதத்தை தெரிவித்திருந்தாள்.

இன்று,

“தீர்த்தா….தீர்த்தா….”என்ற செல்வத்தின் அழைப்பிலும்,

“க்கா…க்கா…”என்ற தங்கையின் அழைப்பிலும் நிகழ்வுக்கு வந்தவள்,

“எனக்கு சம்மதம்….”என்று கூறிவிட்டாள்.அனைவருக்கும் மகிழ்ச்சியாக பெரியவர்கள் அடுத்த என்ன செய்யலாம் என்று பேசிக் ஆரம்பித்தனர்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

“கண்ணா….கண்ணா….”என்று அகிலா கதவை தட்டும் சத்ததில் கண்களை மூடி படுத்திருந்த அமரன் எழுந்து கதவை திறக்க,

“என்னப்பா உடம்பு முடியலையா….”என்று கேட்க ஒரு நிமடம் தன் அன்னையிடம் கூறிவிடலாமா என்ற ஒரு எண்ணம் பிறந்து அது உடனே மறைந்தும் விட்டது.

“இல்லமா….எனக்கு தலைவலி…அதான்….”என்று அவனின் குரலே கரகரப்பாக இருக்க அகிலாவும் அது உண்மை என்று நம்பி,

“அச்சோ என்ன கண்ணா சொல்லியிருக்கக்கூடாது….இரு சூடா காபி குடி….நான் தைலம் எடுத்துட்டு வரேன்….”என்று விட்டு அகிலா நகர மீண்டும் தன் படுக்கையில் அமர்ந்தவனின் முகத்தில் யோசனை ரேகை தான்,

“என்ன செய்யலாம்….எப்படி தெரிந்து கொள்வது….”என்று சிந்தனையில் இருக்கும் போதே கற்பகம் காபியுடன் வந்துவிட்டார்.

“என்ன கண்ணா தலைவலிக்குது சொன்னியாம்….இந்தா காபி….”என்று கொடுத்துவிட்டு செல்ல,அமரனுக்கு மனது மேலும் பலீனம் ஆனது போல் இருந்தது கூடவே தாமரையின் மீது கோபமும் பெருகியது.

“என்ன செஞ்சிக்கிட்டு இருக்கா அவ….பொய் சொல்ல கூட தெரியுமா அவளுக்கு….”என்று பல்லை கடித்தவனின் நினைவில் சென்றவாரம் நடந்த நிகழ்வு தான் மனதில் எழுந்தது.

கோவை செல்வதாக கூறிவிட்டு அமரன் சென்றது பெங்களூருக்கு தாமரை சந்திக்க தான்.ஆனால் அவன் சென்று விடுதியில் விசாரித்த போது அவள் எங்கோ நண்பர்களுடன் வெளியில் சென்றிருப்பதாக கூற அமரன் முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.ஆனால் மாலை ஆகியும் அவள் வராமல் இருக்க மீண்டும் விடுதிக்கு வந்து விசாரிக்க அவர்கள் இன்னும் அவள் வரவில்லை என்று கூற எங்கு சென்றிருப்பாள் என்று நினைத்துக் கொண்டே அவன் வெளி வரும் நேரம் தான் விடுதிக்கு எதிரில் தாமரை ஒரு காரில் இருந்து இறங்குவது தெரிந்தது.

“இவ இவளோட பிரண்ட்ஸ் கூட தான போயிருக்கானு தான சொன்னாங்க….”என்று யோசித்தவாரே அங்கு ஒரு இடத்தில் மறைந்து பார்க்க அவள் யாரோ ஒரு ஆடவனுடன் பேசுவது தெரிந்தது.அவனின் பின் புறம் மட்டுமே தெரிந்தது.அமரனுக்கு தன் கண்களையே நம்பமுடிவில்லை அனைத்திற்கும் பயப்படுபவள் தாமரை அவள் காதலிக்கிறாள்.அவர்கள் பேசிக்கொள்வதை பார்த்தால் இது இப்போது ஆரம்பித்தது போல் இல்லை இது ஆரம்பித்து வருடங்கள் கடந்திருப்பது போல் இருந்தது.அப்படியானால் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தா எத்தனை தைரியம் இவளுக்கு என்று நினைத்தவன் அவள் விடுதிக்குள் வரும் முன் உடனடியாக விடுதியின் உள் சென்று தான் வந்து சென்றதை பற்றி தாமரையிடம் கூற வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தான்.சற்று நேரம் பேசிவிட்டு அவள் விடுதியின் உள்ளே செல்ல அவள் வந்ததை அங்கிருந்த காப்பாளரிடம் கேட்டு உறுதி செய்தவன் இனி அவள் எங்கு சென்றாலும் என்னிடம் தெரிவியுங்கள் என்று கூறிவிட்டு வந்தான்.

தன் நினைவுகளின் பிடியில் இருந்தவனின் கைபேசி இசைக்கவும் நிகழ்வுக்கு வந்தவன் பேசியை பார்க்க தாமரையின் விடுதியில் இருந்து தான் அழைப்பு வந்திருந்தது.

“ஹலோ….சொல்லுங்க….”என்றவனுக்கு உள்ளுக்குள் பதட்டம் அதிகரித்தது.

“சார் அந்த பொண்ணு நாளைக்கு எங்கோ வெளில போகுதாம் சார்….அது கூட அதோட பிரண்ட்ஸ் ஐஞ்சு பேரு இருக்காங்க….அவங்களும் சேர்ந்து தான் போறாங்க….”என்று வார்டன் கூற,

“நல்லா கேட்டீங்களா….அவ தனியா போகலை தான….”என்று கேட்க,

“இல்ல சார்….இல்ல சார்….நல்லா கேட்டுடேன்….பிரண்ட்ஸ்ங்க கூட தான் போகுது….”என்று அவர் கூற,

“சரி எதுவும் சொல்ல  வேண்டாம் விடுங்க….நான் பார்த்துக்குறேன்….”என்றவன் வைத்துவிட்டு உடனே தான் புக் செய்து வைத்திருந்த டிடக்டிவ் ஏஜன்ஸிக்கு போன் செய்து தாமரை இன்று வெளியில் செல்கிறாள் என்ற விபரத்தை பகிர்ந்தவன் அவளை பின் தொடர்ந்து எனக்கு கூறுமாறு தெரிவித்தான்.ஆம் தாமரை விரும்புகிறாள் என்று தெரிந்தவுடன் அமரன் உடனே ஒரு டிடக்டிவ் ஏஜன்சிக்கு சென்று அவர்களிடம் விபரம் கூறி வைத்திருந்தான்.மீண்டும் அவள் வெளியில் செல்லும் போது அவள் யாரை பார்க்கிறாள் என்று எனக்கு தெரியபடுத்துங்கள் என்று கூறியிருந்தான்.ஆனால் அவன் நினைத்தது போல் தாமரை அடுத்த ஒருவாரம் எங்கு வெளியில் செல்லவில்லை என்பதால் அவர்களை நிறுத்தி வைத்திருந்தவன் இன்று அவள் வெளியில் செல்கிறாள் என்று தெரியவந்தவுடன் அவர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டான்.

அகிலாவிடமும்,கற்பகத்திடமும் இதை கூறிவிடலாம் தான் ஆனால் நிச்சயம் அவர்கள் இதை தாங்கிக்கொள்ளமாட்டார்கள் அதோடு நம் வீட்டின் பெண்ணின் விஷயம் வெளியில் தெரிவது நல்லதற்கு அல்ல என்று நினைத்து தான் இந்த முடிவிற்கு வந்தது.ஆனால் அவன் தாமரையை சற்று குறைவாக இடை போட்டிருந்தான் ஆனால் அவள் தன் நலத்திற்காக எதையும் செய்ய துணிந்தவள் என்று அவள் செய்ய போகும் காரியம் அனைவரின் வாழ்வை புரட்டி போடப்போகிறது என்று அறியும் போது அமரனின் நிலை என்னவாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!