Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 11

அத்தியாயம் 11

மாலை கனிகாவுடன் இருந்த நெருக்க நிலை, வெற்றிவேல் செழியனை மெல்ல தடுமாற வைத்திருக்க, இரவு உணவு சாப்பிட்ட கையோடு, 



Advertisement

“சீக்கிரமா மேல ரூமுக்கு வா..” என சந்திரா அறியாதவாறு கனிகாவுக்கு சிக்னல் கொடுத்து விட்டு வந்தவன், அவளின் வரவுக்காக ஆவலாக காத்திருந்தான் தனது பால்கனியில்.

நேரம் கடந்த போதும் அறைக்கு வராமல் இருந்தவளின் மீது எழுந்த கடுப்பில், “லூசு.. நா சிக்னல் கொடுத்துட்டு வந்து எவ்வளவு நேரமாச்சு. 

Advertisement

Advertisement

புருஷன் வர சொன்னானே ன்னு கொஞ்சமாச்சும் இருக்கா இவளுக்கு..

இதுல என்னைய மட்டும் குறை சொல்ல வந்திடுவா..

Advertisement

இப்படி ரூமுக்கு வர்றதுக்கே லேட் பண்ணா, நா பேச வேண்டியதை எல்லாம் எப்போ பேசி முடுச்சு மத்ததை பார்க்க..? 

விடிஞ்சிடும் போ..” என உலாத்தியபடி புலம்பியவனின் குரல் கனிகாவிற்கு எங்கே எட்டியது..?!

அவளோ அவனின் கடுப்பை மேலும் கிளப்பும் விதமாக தனது அத்தம்மாவோடு ஜாலியாய் கடலை போடும் பணியில் அல்லவா ஈடுபட்டிருந்தாள் தீவிரமாக. 

“அத்தம்மா நீங்க என்ன இந்த மாதிரி தமிழ் சீரியல் பார்த்து ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க..? டூ பேட்..

இதெல்லாம் ஓல்டீஸ் பார்க்க வேண்டியது. உங்கள மாதிரி என்றும் 16 எல்லாம் பார்க்கறதுக்காகவே விதவிதமா கொரியன் சீரியல்ஸ் வருதே. ஏன் அதை நீங்க ட்ரை பண்ண கூடாது..?” என்ற கனிகாவின் ஆலோசனைக்கு,

“கனிம்மா, அதெல்லாம் நானும் பார்க்கனுமுன்னு தான் நினைப்பேன்.

ஆனா புரியாத பாஷைல பார்த்தா எப்படிடா புரியும்..? அத யோசிச்சு தான் அதையெல்லாம் பார்க்கற ஐடியாவை ட்ராப் பண்ணிட்டேன்..” என சந்திரா சொல்ல,

“அத்தம்மா.. பாஷையா நமக்கு முக்கியம். சீன் தான் முக்கியம்.

முதல்ல நீங்க அதை பாருங்க. அப்புறமா நீங்களே அது என்ன டைலாக்கா இருக்குமின்னு பக்காவா சொல்லிடுவீங்க.  

உங்க கிரியேட்டிவிட்டிய தூண்டி விட ஒரு நல்ல சான்ஸ் அத்தம்மா..” என விளக்கி விட்டு, புதிதாக வந்திருந்த ஒரு கொரியன் சீரியலில் அத்தையும் மருமகளும் மூழ்கி விட, வெற்றியின் நிலையோ கடுப்பின் உச்சத்தில்..

தனது அத்தம்மாவோடு பேசி.. சிரித்து.. பார்த்துக் கொண்டிருக்கும் அந்த சீரியலையும் அதில் வந்த நாயகன் நாயகியை கலாய்த்து.. என நேரம் கடத்தியவளோடு பேசியபடியே நேரத்தை பார்த்த சந்திராவுக்கு தூக்கி வாரி போட்டது கடிகாரம் காட்டிய நேரத்தை கண்டு.

“கனிம்மா.. இவ்வளவு நேரமாவா தூங்காம உக்காந்திருக்கோம்..?

கண்ணா வேற மேல உங்க ரூமுக்கு போய் ரொம்ப நேரமாச்சு. 

நீயும் போடா.. நம்ம நாளைக்கு கண்ணா வேலைக்கு போன பின்னாடி கூட இது பத்தி பேசிக்கலாம்..” என்று படபடத்தார், 

மாலை நடந்த நிகழ்வை பார்த்த பின்பும்  பொறுப்பில்லாது மருமகளை கீழே பிடித்து வைத்த மடத்தனத்தால்.

சந்திராவின் படபடப்பு எதனால் என நன்றாக தெரிந்தும், “இப்போ என்ன அத்தம்மா, கொஞ்சம் தான் லேட் ஆச்சு. அதுவும் உங்க கூட தானே இருந்தேன்.

அதனால மாமா அப்படியெல்லாம் கோபப்பட மாட்டாங்க. அப்படியே கோபப்பட்டாலும் இந்த கனிக்கா அவரை சமாளிக்க தெரியாது.. யூ டோண்ட் வொரி அத்தம்மா..” என கெத்தாய் சுடிதார் காலரை தூக்கிவிட்டவள் மனசாட்சியோ,

“அடியேய் கனி, நீ என்னத்துக்கு நேரம் ஓட்ட உக்காந்திருக்கன்னு அவங்களுக்கு வேணுமுன்னா தெரியாம போகலாம்.

ஆனா ஐ நோ ஆல் யுவர் டீட்டைல்ஸ். 

உனக்கு பாடி மட்டும் தான் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் ரொம்ப வீக்குன்னு.. எனக்கு நல்லாவே தெரியும்..” என சம்மன் இல்லாது ஆஜர் ஆக,

“இங்கே பாரு.. நானே மாமா என்கிட்ட வந்ததுல இருந்து எனக்குள்ள என்னமோ ஆகிடுச்சோன்னு.. குழம்பி போய் இருக்கேன். 

இதுல நீ வேற டீடைய்யிலூ..  பால்டாயிலூன்னு.. அடச்சீ ஓடிப்போ..” என மனசாட்சியோடு மல்லுகட்டியவளை,

சந்திராம்மா, “கனிம்மா, போடா உங்க ரூமுக்கு.. நானும் போய் தூங்கறேன்..” என கட்டாயபடுத்தி மேலே அனுப்ப, 

“கடவுளே.. கடவுளே.. இது வரைக்கும் உங்க கிட்ட எந்த டீலும் வச்சுக்கிட்டதே இல்ல. 

பஸ்ட் டைம் நமக்குள்ள ஒரு டீல். இது மட்டும் சக்சஸ்புல்லா முடுஞ்சா, நம்ம காண்ட்ராக்ட் அடிக்கடி போட்டுக்கலாம்.. சரியா..?” என கடவுளிடமே மனு  போட்டவள் தொடர்ந்து,

“இப்போ நம்ம முதல் டீல் என்னன்னா, நா ரூமுக்கு போகும் போது மாமா நல்லா தூங்கியிருக்கனும். ஓகே..” என்ற படி, மெல்ல பூனை போல சத்தம் காட்டாது நடந்து அவர்கள் அறை வாசலில் நின்றவள் மெதுவாக தலையை உள்ளே விட்டு பார்த்தாள்.

அறை முழுவதும் பரவியிருந்த இருளில் உள்ளே இருக்கும் எதுவும் புலப்படாமல் இருக்க, 

“லைட்ஸ் ஆஃப் ஆகியிருக்கறத பார்த்தா மாமா தூங்கிட்டாங்க தான் போல. 

ஓ காட்..! நம்ம பஸ்ட் டீல் சக்சஸ்.. தேங்க்யூ.. சோ மச்..” என இரு கையையும் கூப்பி கும்பிடு போட்ட படியே ஜாலியாய் உள்ளே வந்து கதவடைத்த நொடி அறை முழுவதும் ஒளி வெள்ளம் பாய்ந்தது வெற்றிவேல் செழியனின் கைங்கர்யத்தால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!