Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 13

அத்தியாயம் 13

நாட்கள் இரண்டு வேகமாய் கரைந்திருக்க படுக்கையில் நல்ல உறக்கத்தில் இருந்த கனிகாவின் காதோரம் மெல்ல உரசிய மீசையாலும், “கனிம்மா..” என்ற அழைப்பிலும் சிணுங்கலோடு,



Advertisement

“போங்க மாமா.. சும்மா தூங்க விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டு…” என்ற படி கண்விழிக்க, எப்போதும் போல இப்போதும் அருகே யாருமில்லா வெற்றிடம் அவளை மிகவும் தோய்வுற செய்தது.

மீண்டும் தொப்பென படுக்கையில் விழுந்த வேகத்தில் புரண்டு வெற்றிவேல் செழியன் படுக்கும் பகுதிக்கு வந்தவள் அவனின் தலையணையை பார்த்தவாறு குப்புறப் படுத்து,

Advertisement

Advertisement

“யோவ் மாமா.. வரவர நீங்க ரொம்ப என்னைய அவாய்ட் பண்ணறீங்க.. இது சரியில்ல பார்த்துக்கோங்க. 

கனவுல மட்டும் டெய்லி வந்து  கனிம்மா.. முனிம்மா.. ன்னு கொஞ்ச வேண்டியது.

Advertisement

நேர்ல வர்றதும் இல்ல.. வந்தா மட்டும் என்ன நடக்குது.. சும்மா முறைக்க வேண்டியது..

அய்யோ இப்படி தனியா புலம்ப விட்டுட்டாங்களே.. இவரு தான் வேணுமுன்னு அவ்வளவு போராடி கல்யாணம் பண்ணது இதுக்கா..?

அடியேய் கனி இப்படியே போனா.. கனவுலையே தனியா குடித்தனம் நடத்தி.. புள்ளகுட்டி கூட கனவுல தான் பெத்துக்க போறே..” என புலம்பியவள்,

கோபமாக அந்த தலையணையையே வெற்றியின் சட்டையை பிடிப்பது போல பிடித்து, “இதோ பாருங்க மாமா, ஏதோ முக்கியமான கேஸ்.. அதுவும் குழந்தைங்க சம்மந்தமானதுன்னு தான் நானும் விட்டு கொடுத்து அடக்க ஒடுக்கமா இருந்தேன்.

ஆனா அந்த கேஸ் முடுஞ்சு ரெண்டு நாள் ஆகியும் கையில சிக்காம ஆட்டமா காட்டறீங்க நீங்க..?

நீங்க மட்டும் என்கிட்ட மாட்டுங்க.. அப்புறம் பாருங்க இந்த கனி என்ன செய்யறான்னு…?” என தனது மனதில் இருந்த ஏக்கத்தை, கோபத்தை அவளின் பாணியில் வெளிப்படுத்தியபடி இருந்தவள்,

“உன்கிட்ட மாட்டினா என்னடீ செய்வே..?” என்ற வெற்றியின் குரலில் அடித்துபிடித்து எழுந்தபடியே தடுமாற்றத்தோடு, 

“மாமா.. எப்போ வந்தீங்க நீங்க..?” என பதட்டத்தோடே கேட்க,

“ஹும், நீ தலகாணி கூட சண்டை கட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே வந்துட்டேன்..” என சொல்ல,

கனியின் மனமோ, ‘தான் பேசியதை அப்போ முழுசா கேட்டிருப்பாரோ..?’ என்பதை விட அதிதீவிரமாய், 

‘அப்போ காலைல காதுல கிசுகிசுப்பா கிஸ் பண்ணி பேர் சொல்லி கூப்பிட்டது கனவா.. இல்ல நிஜமாவே..?

ஒருவேள மாமா தான் அப்படி பண்ணியிருப்பாங்களோ..?!’  என்று யோசித்து வைத்தது. 

அதே சிந்தனையில் நின்றிருந்தவளை பார்த்தவன்,

“இப்படியே எத்தன மணி நேரம் நிற்க போறே..? இத்தன நாள் கழிச்சு புருஷன்னு ஒருத்தன் வீட்டுக்கு வந்திருக்கான்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா..? 

போ, போய் அம்மா கஞ்சி வச்சிருந்தா எடுத்துட்டு வா..” என சிடுசிடுக்க,

‘இதோ வந்ததும் ஆரம்பிச்சிட்டாரு.. கனவுல மட்டும் நல்லா கொஞ்சறீங்க மாமா. 

நிஜத்துல இப்படி தான் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறி மாறி நடக்கறீங்க. இதெல்லாம் சரியில்ல.. 

எனக்கும் ஒரு நேரம் வராமலா போகும்.. அப்ப பாருங்க நா யாருன்னு..’ என மீண்டும் மனதினுள்ளே பேசிக்கொண்டு நின்றவளை, வெற்றி பார்த்த பார்வையில் சட்டென சுதாரித்தவள்,

“இதுலையெல்லாம் குறச்சலே இல்ல. எப்ப பார்த்தாலும் முறச்சுக்கிட்டு.. பொண்டாட்டிய பார்த்து விடுற லுக்கா இது… மக்கு..

நல்லவேளை மாமாக்கு மூணாவது கண் இல்ல. அப்படி மட்டும் இருந்திருந்தா அவ்வளவு தான்.. இந்நேரம் நா காலி.. 

கனி.. முதல்ல போய் கஞ்சிய கொண்டு வந்து அவரு கையில கொடு.  

எல்லாத்தையும் மொத்தமா குடுச்சிட்டு இன்னும் கொஞ்சம் வெரப்பா நிக்கட்டும்..” என்று முனுமுனுத்தபடியே கீழே சென்றவளை பார்க்க வெற்றியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 

அவள் வெளியேறிய அடுத்த நொடி, அவளின் செய்கையில் இதுவரை கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெளியிட்டவன்.. குளியலறை சென்று தன்னை சீர்படுத்தி கொண்டு தனது உடையை மாற்றிவிட்டு கீழே சென்றான்.

 

அந்த குழந்தைகள் கடத்தல் கேஸ் சம்மந்தமான அனைத்து வேலைகளும் இரு நாட்களுக்கு முன்பே முடிந்திருந்தாலும், 

மேலும் இனி அவ்வாறு நடக்காமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி.. அதற்கு தேவையானதை உடனடியாக செயல்படுத்தி என அலுவல் வேலையோடு,

வேறு ஒரு வேலையையும் முடித்துவிட்டு.. விடியற் காலையில் தனது அறைக்கு வெற்றி வர, கனிகா படுத்திருந்த கோலம் கண்டு அவனின் இளமை உணர்வு அவனை ஆட்டுவிக்க ஆரம்பித்தது.

அவனின்‌ உணர்வின் தூண்டுதலால், ‘இப்போதே அவள் வேண்டும்..’ என்ற எண்ணம் தோன்றினாலும், 

திருமணத்தின் போது நடந்ததை கொண்டு அவளை கொஞ்சம் சுத்தலில் விட்டு, பின் சர்ப்ரைஸ்ஸாக எதாவது செய்யலாம்.. என்று முடிவு செய்தவன் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான் தனது அறையின் பால்கனியில் நின்று.

நினைத்ததை நல்லபடியாய் முடித்துவிட்ட திருப்தியோடு 

அவளருகே சென்று மெல்ல முத்தமிட்டு அவளை அழைக்க, 

‘கனவு..’ என நினைத்து கொண்டு சிணுங்கியவளை பிரிய மனமில்லாது இருந்தாலும், நினைத்தது நடக்க வேண்டுமே.. என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டு சட்டென விலகி நின்றவன், தனது திட்டப்படி அவளை வெறுப்பேத்தி கீழே அனுப்பி வைத்திருந்தான்.

அவனின் எண்ணம் போலவே கடுப்போடு கிச்சனுக்கு வந்தவள், “அத்தம்மா.. உங்க பையன் கிட்ட சொல்லி வைங்க.. இந்த கனி பொறுமையா இருக்கற வரைக்கும் தான் கூலா இருப்பா.. கோபம் வந்திச்சு.. குலுக்கின கோலா மாதிரி பொங்கிடுவா..” என அலப்பரையை கூட்ட,

என்ன தான் அன்று, வெற்றிக்காக பேசினாலும் சில தினங்களாய் அவளின் அமைதியும், யோசனையோடு கூடி முகமும், சந்திராவையும் கவலைபடவே செய்தது. 

இப்போது பழைய படி பேசும், தன் ஆசை மருமகளை பார்த்தவர், “என்னாச்சு கனிம்மா.. கண்ணா என்ன சொன்னான்.. நீ இப்படி காண்டாகற மாதிரி..?” என அவரும் அவளுக்கு இணையாக பேச்சை வளர்த்த படி திரும்ப,

தனது இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டியபடி கிச்சன் வாயிலில் சாய்ந்து நின்றிருந்த வெற்றி சைகையில், ‘தான் இங்கே இருப்பதை சொல்ல வேண்டாம்..’ என்றிட, 

சரியென தலையசைத்தவரும் கனியின் பதிலுக்காக அவளையே பார்த்திருக்க,

அது எதுவும் அறியாத கனிகாவோ, “நீங்க கஞ்சிய கொடுத்து உங்க புள்ளைய நெட்டகொக்கா மட்டுமில்லாம..  நல்லா வெறப்பா வேற வளர்த்து வச்சிருக்கீங்களே ஒழிய.. வெவரமா வளர்க்காம போயிட்டீங்க அத்தம்மா..

அதென்ன எப்ப பார்த்தாலும் மூஞ்சிய வெறப்பா.. முறப்பா வச்சிட்டு சுத்தறது..? 

அப்படி முறைக்கும் போது அவரோட அந்த ஷார்ப்பான மூக்குலையே நங்குன்னு குத்தனும் போல இருக்கு…!” என, 

பேச்சுக்கு தகுந்த நடிப்போடு சொல்லிக்கொண்டிருக்க.. தாயும், மகனும் அவளின் பேச்சு, செயல் இரண்டிலும் வரத்துடித்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி நின்றனர் அவளின்  சேட்டையை ரசித்தபடி.

“புதுசா கல்யாணம் பண்ணோமே.. பொண்டாட்டி ன்னு ஒருத்தி வீட்டுல அம்சமா அழகா இருக்காளே.. வந்தோமா அவள கொஞ்சுனோமா.. அவளை குஷிபடுத்தி பார்த்தோமான்னு இல்லாம, போ.. போய் கஞ்சி கொண்டு வா, சோறு கொண்டு வான்னு… சரியான சோத்து மூட்ட..” என்றவள் தொடர்ந்து,

“அத்தம்மா.. தெரியாம தான் கேட்கறேன்.. உங்க பையனுக்கு ‘அதுல..’ வெவரம் ரொம்ப கம்மியா இருக்கும் போலவே..! 

நம்ம இந்த வாரம் பார்த்தோமே செம ரொமாண்டிக்கா நாலு கொரியன் சீரியல்.. அதை போட்டு பார்க்க வச்சா என்ன..?” என கேட்க, 

மகனின் முகம் போன போக்கை பார்த்து கஷ்டப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்தியவர், “அதை என்கிட்ட கேட்கறதுக்கு பதிலா உன்னோட மாமா பின்னாடி தான் நிக்கறான், பார்க்கறானா ன்னு அவனையே கேளு..” என்றபடி கிச்சன் மேடையை நோக்கி அவர் திரும்பிக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!