Skip to content
Post Views: 2,318
அதுவரை ஜாலியாக பேசியவளுக்கு தான் பேசியதை வெற்றி கேட்டுவிட்டான்.. என தெரிந்ததும் தயக்கத்தோடு ட்ரேட் மார்க், “ஈ….!!” என்ற அசட்டு சிரிப்போடு அவனை திரும்பி பார்க்க, உள்ளே பொங்கி சிரிப்பை அடக்கி, வெளியே முன்பை விட அதிகமாய் முறைத்தபடி நின்றவன்,
“அராத்து, நீயெல்லாம் சப்ஸ்ட்யூட் இல்லாத பீஸ்டீ.
Advertisement
எப்படி.. எப்படி நாங்க வெரப்பா, முறப்பா திரியறோமா..? எவ்வளவு கொழுப்பு உனக்கு.. அதுவும் என் மூக்குலயே குத்தனுமுன்னு வேற சொல்ற.. அடிங்க..” என்ற படி விரட்ட,
“அத்தம்மா.. ப்ளீஸ் சேவ் மீ..” என்ற படி கனியும்,
Advertisement
Advertisement
“சிக்கினா.. உனக்கு இருக்கு டீ..” என்று வெற்றி சிரித்தபடியும், சந்திராவை இடையே விட்டு இருவரும் துரத்தியபடி இருக்க,
நடுவில் நின்றிருந்த சந்திராவிற்கோ இருவரின் இந்த சிறுபிள்ளை விளையாட்டு மனதுக்கு நிறைவை தந்தது என்றால் மிகையில்லை.
Advertisement
வெற்றி தேவைக்கு சிரிப்பானே ஒழிய, இதுபோல மலர்ந்து சிரித்தது எல்லாம் கிடையாது.
அவன் தந்தையின் இறப்பு.. அதன் பின் அவனின் வேலை என்றான பிறகு, அவனின் புன்னகையே குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்போது கனியால் அவன் சிரிப்பதும், சிறுபிள்ளை போல துரத்தி கொண்டிருப்பதும் பார்க்கும் போது மனம் முழுவதும் நிறைந்து போயிற்று தாயாய் சந்திராவிற்கு.
இந்த மாற்றத்திற்காக தானே அவரும் அவனின் திருமணத்தை நடத்த அந்த பாடு பட்டார்.
இன்று அது நிறைவேறி விட்ட திருப்தி.. அவரின் கண்ணில் லேசான ஆனந்த கண்ணீராய் வெளியேறியதை அறியாது.. இளம் ஜோடிகள் இரண்டும் துரத்தியபடியே வெளி தோட்டத்திற்கு சென்று சேர்ந்திருந்தது.
“மாமா.. வேணாம்.. மூச்சு வாங்குது..” என்றபடி முன்னும் பின்னுமென அங்கிருந்த கல் மேடையை சுற்றி ஆட்டம் காட்டியவளை, அந்த கல் மேடையை ஒரே தாவில் தாண்டி மறுபுறம் வந்திருந்த வெற்றி பிடித்திருக்க,
“நோ.. மாமா.. இது சீட்டிங்..” என்றபடி அவனிடமிருந்து விலகி ஓடப்போனவளின் போக்கில் விட்டவன், மீண்டும் துரத்தவென அவர்கள் ஓட்டம் அந்த தோட்டம் முழுவதும் தொடர்ந்தது.
அப்போது அவன் கண்களில் அங்கே தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பைப் பட்டு விட, அவனை போலவே அதை கண்ட கனிகாவும் அதனருகே ஓடியிருந்தாள்.
ஆனாலும் அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாததால் முதலில் கைப்பற்றிய வெற்றி கனிகாவை மொத்தமாய் நனைய வைத்திருந்தான்.
அப்போதும் அடங்காது அவனோடு மல்லுக்கட்டி அதை பறித்த கனிகாவும் வெற்றியை முழுவதுமாய் நனைத்து விட்டே ஓய்ந்தாள்.
அதுவரை ஓட்டமும், ஆட்டமும் என கழிந்த பொழுதின் முடிவில் இருவரும் மொத்தமாய் கலைத்து போய் அங்கிருந்த புல்லில் மல்லார்ந்து படுக்க, இருவரின் முகமும் அந்த தோட்டத்து மலர்களை போல மலர்ந்து கிடந்தது.
மூச்சு வாங்க சிறிது நேரம் வானத்தை பார்த்து கிடந்தவர்கள்.. சில நிமிடத்திற்கு பின் ஒருவரை ஒருவர் பார்க்க, வெற்றியின் பார்வையில் இருந்த தாபத்தில் முகம் இன்னும் வெக்கத்தால் மலர்ந்து சிவந்து போனது கனிகாவிற்கு.
ரோஜா மீதான பனித்துளி போல் கனிகாவின் முகத்தினில் அங்கங்கே வீற்றிருந்த நீர்துளி இருக்கும் இடத்தை மறந்து அவனை அதை பருக அழைப்பு விடுப்பதாய் தோன்ற..
அவளின் நீர்துளியை தாங்கி நின்ற முகத்தை.. தன் இதழ் கொண்டு துடைக்க நினைத்து நெருங்கும் நேரம்,
பெண்மைக்கே உரித்தான நாணமும், இருவரும் இருக்கும் இடம் பற்றிய கவலையும் கனிகாவை வெற்றியின் நெருக்கத்தை அனுபவிக்கவிடாது தடுத்தது.
அவன் இதழ் அவளின் முகத்தை நெருங்கும் முன்பே.. அவளின் கரம் கொண்டு அவனின் இதழுக்கு தடை போட்டவள், தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக்கொண்ட போதும், ‘அவனின் செயலுக்கு அணை போட்டே தீரவேண்டும்..’ என்ற உந்துதலால்,
“மாமா.. இங்கே வேணாமே..” என்று சொல்ல,
அதுவும் சத்தமின்றி காற்றாகி தான் போனது.
அவளுக்கே ஆச்சர்யம் தான்.. ‘வாயாடி..’ என்ற பட்டம் பெற்ற தன் நிலைமையை நினைத்து..!!
அவளின் முகத்தையே பார்த்தபடி இருந்த வெற்றிக்கு.. அவளின் வார்த்தை தெளிவாக புரியாத போதும், அவளின் கண்களின் தெரிந்த தவிப்பும், தவிர்ப்பும்.. இருக்கும் சூழலை தெளிவாக்க..
சிறு புன்னகையோடு, தன் இதழுக்கு தடையாய் இருந்த அவளின் மென்மையான கரத்திற்கு முத்தத்தை பரிசாக்கினான் வெற்றி.
அவன் இதழில் கரம் வைத்திருந்த கனிகாவிற்கோ.. அவன் மூச்சு காற்றின் சூடாலும், இப்போது அவன் தந்த முத்தத்தினால் வந்த கூச்சத்தாலும் அவனிடமிருந்த தனது கரத்தை பிரித்தவள்.. அவனை திரும்பியும் பாராமல் தங்களின் அறையை நோக்கி ஓட்டமெடுத்தாள்.
அவள் விலகி சென்றாலும் மனதில் ஒருவித நிறைவோடு.. மீண்டும் தனது இரு கரத்தையும் தலைக்கு கீழ் கோர்த்து வானத்தை நோக்கி படுத்தவன்.. நடந்த நிகழ்வின் இனிமையை சுகமாய் கண்மூடி ரசிக்க துவங்கினான்.
எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ.. சந்திராவின் அழைப்பில் அதே சிரிப்போடு வீட்டிற்குள் வந்தவன், கனிகாவை தேட.. அவளோ தனது அத்தம்மாவை கேடையமாக்கி அவருக்கு பின் மறைந்திருந்தாள்.
“அம்மா, நா போய் பிரஸ்ஸாகிட்டு வர்றேன்.. டிபன் எடுத்து வைங்க..” என ஓரக்கண்ணால் கனிகாவை பார்த்து நமுட்டு சிரிப்போடு மேலே சென்றான்.
அவன் சிரிப்பை கவனித்த கனிகாவிற்கு, ‘அது ஏன்..?’ என்ற கேள்வி எழ,
அதற்கு விடையாக வெற்றிவேல் செழியன் வரும் போதே வெளியே செல்வது போல பார்மல் உடையணிந்து.. கையில் ஒரு ட்ராவல் பேக்கோடு வர..
அதுவரை இருந்த நிலை மாறி கனிகாவின் முகம் மெல்ல சுருங்கி போனது.
*********
கனிகாவை போலவே சந்திராவிற்கும் மகனின் இந்த செயல் கோபத்தை கொடுக்க,
“கண்ணா.. என்ன நினச்சிட்டு இருக்க உன் மனசுல..?
முக்கியமான கேஸ் அது இதுன்னு.. இத்தன நாள் வீட்டுலையே தங்கல.
சரி அதுவும் முக்கியமான விசயமாச்சே போனா போகுதுன்னு விட்டா, வந்த கொஞ்ச நேரத்துல மறுபடியும்.. அதுவும் பேக்கோட கிளம்பி நிக்கறே.
இதுக்கு தான் இந்த கருமம் புடுச்ச வேலையே வேணாமின்னு சொன்னேன். கேட்டையா நீ..
கல்யாணம் வேணாமின்னு சொன்னவனை பொய் சொல்லி கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணி வச்சது தப்பு தான்.
அதுக்காக அவள இப்படி தவிக்க வச்சிட்டு நீ சுயநலமா இருக்கறதும் சரியில்ல.
இந்த லட்சணத்துல இவ உன் வேலைக்கு அவ்வளவு சப்போர்ட் வேற..” என கோபமாய் அவரின் ஆதங்கத்தையும் சேர்த்து கொட்ட,
அவருக்கு எந்த பதில் சொல்லாமல் வந்து டைனிங் டேபிளில் சிறு புன்னகையோடு அமர்ந்தவன்,
“ம்மா.. செம பசி. மொதல்ல சாப்பாட்ட போடுங்க. காலைல கஞ்சி கேட்டும் யாரும் கொடுக்கல.
அந்த கேஸ் டென்ஷன்ல சரியா சாப்பிடவே இல்ல. சாப்பிட்டு அப்புறமா மத்ததை பேசலாம்..” என்றவன், இடைவெளி விட்டு யோசிப்பது போல நிறுத்தி,
“அச்சோ.. அது கூட கஷ்டம் தான் ம்மா. ஏன்னா.. ஏர்போர்ட் வேற போகணும்.
இன்னும் ப்ளைட்டுக்கு கொஞ்ச நேரம் தான் இருக்கு..” என சாவகாசமாய் சொல்லிட,
அவனின் அலட்சியமான இந்த போக்கில் கடுப்பான கனிகாவிற்கோ பக்கத்தில் இருக்கும் சாம்பாரை அவன் மேல் ஊத்திடும் அளவிற்கு கோபம் வந்தாலும்,
‘பசி..’ என்று அமர்ந்தவனை மனதில் கொண்டு, அவனின் மற்றொரு பிரிவை எண்ணி கண்ணில் நீர் துளித்தாலும்.. ஏற்கனவே தாயிடம் வாங்கிகட்டிக்கொண்டிருப்பவன்..
இப்போது தானும் பேச போய்.. சாப்பிடாமல் சென்றுவிட்டால்… என்ற எண்ணத்தோடு, அவசரமாய் தனது கண்ணீரை கட்டுபடுத்திக்கொண்டு அமைதியாய் வெற்றிக்கு தட்டை வைத்து பரிமாற தொடங்கினாள்.
“ஆஹா.. ம்மா என்ன தான் சொல்லுங்க.. உங்க சமையலை அடுச்சுக்க ஆளே இல்லை.
வெளியே பைவ் ஸ்டார் ஹோட்டல்லயே சாப்பிட்டாலும் உங்க பக்குவத்துல சமச்சதை சாப்பிடற சுகமே தனி.
அதுவும் உங்க மருமக பார்த்து பார்த்து பரிமாற அழகு இருக்கே… வேலைக்காரங்க தோத்தாங்க போ. அட.. அட.. சொர்க்கம் தான்..” என சிலாகித்து கூற,
அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் பொங்கிட,
“ஏன்டா மாமா, என்னை பார்த்தா எப்படி தெரியுது..? உனக்கு வேலை செய்ய வந்த வேலைக்காரி மாதிரியா இருக்கு.
பசிக்குதுன்னு சொன்னையேன்னு சாம்பார மேல ஊத்தாம போனதுக்கு இந்த பேச்சு எனக்கு தேவை தான்..” என அவனின் முதுகில் அடித்த படியே கண்ணில் நீர் வடிய கேட்டவளின் கரத்தை தன் இடக்கரத்தால் பிடித்தவள்,
கொஞ்சம் முகத்திலிருக்கும் புன்னகை மாறாமல், “அடியேய் அராத்து.. போதும்டீ அடுச்சது. பாரு ட்ரஸ்ஸெல்லாம் கசங்குது.. இப்படியே ஏர்போர்ட் போனா நல்லாவா இருக்கும்..?” எனக் கேட்க,
தன் கண்ணீரையும் பார்த்துவிட்டு.. சிரிப்போடு தன் உடையையும், போகுமிடத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு பேசுபவனை இனி அடித்தும்.. கேட்டும் என்ன பிரயோஜனம்..? என்ற நிலையில், அவனிடமிருந்து கையை பிரித்து எடுத்து அவ்விடம் விட்டு வேகமாய் விலகி செல்ல போனவளை,
மீண்டும் தனது இடதுகரம் கொண்டு இழுத்தவன், அவனுக்கு அருகே இருந்த சேரில் அமர்த்தி, “சட்டுன்னு நீயும் சாப்புடுடீ.. என் பொண்டாட்டி. போறது நா மட்டுமில்ல.. நம்ம ரெண்டு பேரும் தான்..” என்று சொல்ல,
அவனின் இழுப்பில் வந்து அமரந்தாலும், அவன் செய்த செயல்களால் அவன் இறுதியாய் சொன்னது காதில் விழுந்தாலும், அதை உணராது இருந்தவளை,
“கண்ணா.. வெற்றி.. என்னப்பா சொல்றே..? நிஜமாவே கனியே கூட்டிட்டு வெளியூர் போறையா..?” என மகன் சொன்ன செய்தியில் ஆனந்த அதிர்ச்சி அடைந்த சந்திரா கேட்க,
“இப்ப, நா தமிழ்ல தானே சொன்னேன். உங்க மருமகள பாருங்க.. பொறுப்பே இல்லாம உக்காந்திருக்கா.
ஒரு குழந்த பையன் என்ன சொல்ல வர்றான்னு கூட கேட்காம.. நீங்க பாட்டுக்கு திட்டறீங்க.. உங்க மருமக அடி வெளுக்கறா..
அழகா அம்சமா ஒரு பொண்ணை கட்டி வைக்காம, ரவுடிய போய் கட்டி வச்சிட்டீங்களே… இது நியாயமா..?” என்று வெற்றி கிண்டலாக கேட்க,
“போலீஸ் ஆபிஷருக்கு.. ரவுடி சரியான ஜோடி தான்…” என அவனுக்கு பதில் சொன்ன சந்திரா,
“கனிம்மா.. என்னடா அவன் சொன்னது புரியலையா..?
சீக்கிரமா போய் உன்னோட ட்ரஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு கிளம்புடா.. ஏற்கனவே லேட் ஆச்சுன்னு சொன்னான் தானே.. கேட்கலையா..?” என அவளை அசைத்து சொன்ன பின்பே,
அவன் தன்னையும் உடன் அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருப்பதை கிரகித்தது அவளின் மூளை.
அவனின் சீண்டலில் மனம் நொந்து போய் ஊடல் கொண்ட மங்கையோ,
“இல்ல அத்தம்மா, நா அவரோட போகல.” என சொல்லி,
வேகமாய் அவர்கள் அறைக்கு சென்றுவிட,
‘அட ஆண்டவா.. இதுங்க ரெண்டும் பண்ணற ரவுசு தாங்களடா.
ஒண்ணு இறங்கி வந்தா.. இன்னொன்னு முறுக்கிட்டு நிக்குது.
இதுங்க ரெண்டும் இந்த ஜென்மத்துல சேர்ந்து நம்மள பாட்டி ஆக்கின மாதிரி தான்..’ என மனதிலேயே புலம்பிய சந்திரா,
வெளியே வெற்றியை, ‘இது அத்தனைக்கும் நீ தான் காரணம். உன் விளையாட்டு தான் வினையாகி போச்சு..’ என சொல்லாமல் சொல்லி முறைத்து வைத்தார் அவரின் மகனை.
ஊடல் கொண்ட மங்கை மனதை கரைப்பானா காவலன்…??!!!
error: Content is protected !!