Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 14

அத்தியாயம் 14

மலைகளின் இளவரசி என பேர் எடுத்த ஊட்டியின் அந்த பிரபலமான உயர்தர ஹோட்டலில் தாங்கள் தங்கியிருந்த அறையின் பால்கனியில் நின்று தூரத்தில் தெரிந்த மலை முகட்டை பார்த்திருந்தாலும், 



Advertisement

அதன் இயற்கையின் அழகு கொஞ்சமும் கனிகாவை கவரவில்லை என்பது அவளின் நிர்மூலமான முகத்திலிருந்தே தெரிந்தது வெற்றிவேல் செழியனுக்கு.

வீட்டில் ஊடல் கொண்டு தங்களின் அறைக்கு சென்றவளை, “நமக்காக இல்லன்னாலும் பெரியவங்களோட மனத்திருப்திக்காகவாவது நீ என்கூட வந்து தான் ஆகனும்.

Advertisement

Advertisement

எனக்கும் இப்போது கிடைச்ச மாதிரி லீவ் மறுபடியும் சாத்தியமா தெரியாது.. 

இனி நீயே முடிவு பண்ணு.. நம்ம போறோமா இல்லையான்னு.. 

Advertisement

நா கீழ வெயிட் பண்ணறேன்.. வர்ற ஐடியா இருந்தா இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வா.. இல்ல.. நோ ப்ராப்ளம்..” என சொல்லிவிட்டு வெற்றி சென்றுவிட,

யோசனை செய்து பார்த்த கனிகாவிற்கும் சந்திராவின் மகிழ்ச்சியான முகம் மனதில் உலா வர.. மறுப்பின்றி கிளம்பி ஒரு வழியாய் ஊட்டிக்கு வந்து சேர்ந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.

அந்தி மாலை நேரத்தென்றல் இளம் காற்றும், சுற்றிலும் இருக்கும் இயற்கை அழகும் வெற்றிவேல் செழியனுக்கு தந்த இதத்தை கனிகாவிற்கு தராது போனதை வேதனையோடு பார்த்தவன், 

‘சாரிடீ.. நா சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன். நீ எத்தன நாள் என்கிட்ட விளையாண்டே.. அதையே நா செஞ்சா இப்படி ரியாக்ட் பண்ணறே.. உன்னை எப்படி மலையிறக்க போறேன்னே தெரியல..’ என மனதினுள்ளேயே புலம்பியவன் மெல்ல அவளை நெருங்கி..

“கனி, கொஞ்சம் ரெஃப்ரஸ் ஆகிட்டு வா, வெளிய போயிட்டு வரலாம்..” என சொன்னதும், மறுப்பு, இல்லை.. விரும்பம் என

எந்த விதமான பாவனையும் இல்லாது.. வெறுமையான முகத்துடன் குளியலறை நோக்கி சென்றவளை பார்க்க பார்க்க, தன் மீதே கோபமாய் வந்தது வெற்றிக்கு.

‘எப்படியாவது அவளை சமாதானம் செய்துவிட வேண்டும்..’ என்ற எண்ணத்தை மட்டும் கொண்டு, 

கனிகா தயாராகி வந்ததும் இருவரும் சேர்ந்து பொட்டானிக்கல் கார்டன், ரோஸ் கார்டன் என சுற்றி வந்தாலும்.. வெற்றியே வழிய போய் பேசிய போதும்.. பேச்சு என்பது இல்லாது ஒருவித அமைதியோடே சுற்றி வந்தவளை எப்படி சரி செய்வது என புரியவே இல்லை அந்த காவலனுக்கு..

‘படபடன்னு பட்டாசு மாதிரி எதாவது பேசிட்டே இருப்பா.. இப்போ எப்படி இவ்வளவு நேரம் ஆகியும் ஒரு வார்த்த பேசாம இவளால இருக்க முடியுது..?! எப்பா சாமீ.. என் கேரியர்ல எத்தனையோ சிக்கலான கேஸ் டீல் பண்ணியிருக்கேன். 

ஆனா, இப்படி மண்டைய பிச்சுக்கிட்டது ஒண்ணு கூட கிடையாது. என்ன செஞ்சா இவ சரியாவா..?’ என தெரியாமல், 

அவளின் முகத்தையே ஏக்கமாய் பார்த்து பார்த்து திரும்பும் அவனை நினைத்து.. மனதுக்குள் விழுந்து விழுந்து சிரித்தாலும் வெளியே முகத்தை சீரியஸ்ஸாக வைத்தபடி நடந்தவளின் மனசாட்சியோ,

“இது உலக மகா நடிப்புடா சாமி.. ஏன்டீ இப்படி அவர போட்டு படுத்தறே..?” என கேட்க, 

“அவர நா படுத்தரேனா.. எவ்வளவு தில்லிருந்தா.. என்னை அவாய்ட் பண்ணிட்டு போகறேன்னு சொல்வாரு. நா யாருன்னு அவங்களுக்கு தெரியல. காட்டறேன் பயபுள்ளைக்கு..” என சொல்ல,

“ஆகமொத்தம் அவர வச்சு செய்யறதுன்னு முடிவு கட்டிட்டே.. நீ நடத்து..” என்று சொல்லிவிட்டு, 

‘நீ நடிக்கற விசயம் மட்டும் அவருக்கு தெருஞ்சா நீ என்ன ஆக போறையோ..’ என அதுவும் அவளரியாது மனதினுள்ளேயே புலம்பிவிட்டு சென்றுவிட, தனது நடிப்பை தொடர்ந்தபடியே வெற்றியோடு அவர்களின் அறைக்கு வந்து சேர்ந்தாள்.

அறைக்குள் வந்ததும் வெற்றி தன்னை சுத்தப்படுத்தி வர பாத்ரூம் செல்ல, கனிகாவோ அவன் உள்ளே சென்று கதவடைக்கும் வரை அமைதியாய் நின்றவள், அவன் சென்று விட்டதை உறுதி செய்து கொண்டு, அதற்கு பிறகு அங்கிருந்த கண்ணாடி முன்பு சென்று நின்றவள் புன்னகையோடு, 

“வாவ் கனி..! சும்மா சொல்லக்கூடாது அசத்தற போ..! இதையே கண்ட்டின்யூ பண்ணறே.. அவர கதற விடுறே.. 

இனி ஒரு தரம் உன்னை விட்டுட்டு வீட்டு வாசல் படி தாண்ட கூட யோசிக்கணும். 

அப்படியே போனாலும் நீ ஓகே சொன்னா தான்.. சரியா..?” என்றபடியை, 

அவளுக்கு அவளே நெட்டிமுறித்து திருஷ்டி கழித்து முடிக்கவும்,

வெற்றி கதவை திறந்து வரும் அரவம் கேட்கவும் சரியாக இருக்க, சட்டென தன் முகத்தை உம்மென மாற்றிக்கொண்டு, தனது உடையோடு அவனை கடந்து உள்ளே சென்றுவிட்டாள் தானும் படுப்பதற்கு தயாராவதற்காக.

கனிகா திரும்ப வந்து பார்த்த போது வெற்றி ஒருபுறம் அமைதியாய் படுத்து உறங்கியிருக்க, 

“என்னடா இது.. எப்படியும் நம்மகிட்ட வந்து கெஞ்சுவாரு.. எப்படியெல்லாம் முறுக்கிக்கலாமின்னு ப்ளான் போட்டு வந்தா, கண்டுக்காம தூங்கறாரூ..?” என்று முனுமுனுத்தபடி அவனின் அருகே சென்று குனிந்து அவனின் முகத்தை பார்க்க நல்ல உறக்கத்தில் இருந்தான் வெற்றிவேல் செழியன்.

அவனின் செய்கையில் சுறுசுறுவென கோபம் வர, “லூசு.. லூசு.. பொண்டாட்டி கோவமா இருந்தா.. அவள சமாதானப்படுத்தாம இழுத்து போத்திட்டு தூங்கறத பாரு..  தூங்கு மூஞ்சி..” என வாய்விட்டே திட்டியவள், கட்டிலின் மறுபுறம் வந்து படுத்தாள்.

ஆனால் அவனுக்கு எளிதாக வந்த உறக்கம் கனிகாவிற்கு ஆட்டம் காட்ட, கொஞ்ச நேரத்திற்கு மேல் அமைதியாய் படுத்திருக்க முடியாமல் போனது.

மெதுவாய் வெற்றியின் புறம் திரும்பி படுக்க, அவனும் அவள் புறம் பார்த்து தான் படுத்திருந்தான். 

“தூங்கற பாரு ஒன்னுமே தெரியாத புள்ள மாதிரி. அச்சோ..! இப்போ எனக்கு தான் தூக்கமே வரமாட்டிங்குதே.. என்ன செய்வேன்..?” என வாய்விட்டே சொன்னவள், 

மீண்டும் மறுபுறம் திரும்பி படுக்க.. அடுத்த நொடி அவளின் இடையோடு வலுவான கரம் கொண்டு இறுக்கி அணைத்திருந்தான் வெற்றி.

“ப்ராடு மாமா.. தூங்கற மாதிரி நடிச்சீங்களா..?” என அவனின் கரத்தை எடுத்தவிட கனி செய்த முயற்சியை எளிதாக முறியடித்தவன், 

அவளை தன்னை நோக்கி திருப்பிய வேகத்தில் அவள் மீது படர்ந்து, “ஏய் அராத்து.. யாரு ப்ராடு..  நீயா.. இல்ல நானா..? என்னம்மா ஏக்ட் விடுறே கோபமா இருக்கற மாதிரி..” என்றதும்,

‘அச்சச்சோ.. கண்டுபிடிச்சிட்டாரா..?’ என அதிர்ந்த போதும், 

எப்போதும் போல, “ஈ…!” என அசடு வலிந்தபடி, 

“எப்படி மாமா கண்டுபிடிச்சீங்க..?” என்று கேட்க, 

“அதா.. நா பாத்ரூமை திறந்தது கூட தெரியாம கண்ணாடி கூட சேர்ந்துட்டு ப்ளான் போட்டதை தான் நா மொத்தமா கேட்டுட்டேனே..!”. என்றவன், 

“இப்படி என்கிட்ட கோபமா இருக்கற மாதிரி விளையாண்ட உன்னைய எதாச்சும் இப்போ செய்யணுமே. என்ன செய்யலாம்..?” என யோசிப்பது போல பாவனை கட்டியவன்,

அவள் எதிர்பாரா நேரத்தில் அவளின் கரத்தை தன் ஒற்றை கரம் கொண்டு மேல் நோக்கி கெட்டியாக பிடித்தபடி கழுத்து வளைவில் தனது மீசையை வைத்து குறுகுறுப்பூட்ட, 

அவனின் செயலில் கூச்சமும், வெக்கமும் வந்து பாடாய் படுத்த, “மாமா.. மாமா ப்ளீஸ்.. இனி விளையாட மாட்டேன். விடுங்க மாமா..” என கெஞ்ச தொடங்கினாள்.

“என்னது விடறதா..? இனி விடற ஐடியாவெல்லாம் சுத்தமா இல்ல.. என்னோட அருமை அராத்தே..” என்றவன், 

தன் மீசை கொண்டு செய்த செயலை தனது உதடு கொண்டு செய்ய துவங்க, அவனின் மற்றைய கரமோ அவளை மெல்ல உணரத்துவங்கியது. 

அவன் வசமாய் இருந்த போதும் அவளின் இயல்பு இன்னும் குறையாதிருக்க, “மாமா, பட்டாம்பூச்சி பறக்கற மாறி இருக்கு..” என பினாத்தினாள்.

அதில் அவளின் கழுத்து வளைவை ஆராய்ந்து கொண்டிருந்தவன் மெல்லிய சிரிப்போடு முகத்தை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தபடியே, “எங்கே.. இங்கேயா..?” என்று சொல்லி அவன் கரம் பதிந்த இடத்தை கண்டு மங்கையின் விழியோ அதிர்ச்சியில் விரிய,

அதில் இன்னும் தூண்டப்பட்ட உணர்வோடு.. அவளை நெருங்கி முழுதாய் உணர முயன்றவனுக்கு

அவர்களின் ஆடைகளே தடையாக.. அதை களைய ஆவணம் செய்தவனின் செயலில் எழுந்த அவஸ்தையான உணர்வில் மேனி சிலிர்க்க, 

“வேணாம் மாமா..” என பலகீனமான மறுப்பை வெளிப்படுத்தினாள் பாவையவளும். 

சற்று நேரத்தில் கணவனாய் மனைவியிடம் அவன் எடுத்துக்கொள்ளும் உரிமைக்கு இடமளிக்க சொல்லி அவளின் பெண்மை கட்டளையிட.. அதனால் வந்த எண்ணத்தால் அந்த மறுப்பும் மறைந்து போக.. மொத்தமாய் அவன் வசமாகியிருந்தாள் பெண்ணவள்.

ஆனா போதும் அவனின் நெருக்கத்தில் அவனின் ஆதிக்கத்தை நினைத்து பயம் கொண்ட மங்கையோ, “மாமா, அன்னைக்கு.. ஏதோ பேசனுமின்னு சொன்னீங்களே..? 

அதை இன்னும் நீங்க பேசவே இல்ல.. இப்போ பேசலாமே..?” என அவனின் வேகத்திற்கு முட்டுகட்டை போட்டபடி சொல்ல,

அவளின் மேனியில் பதிந்திருந்த தனது முகத்தை நிமிர்த்தியவன், “கனி, அன்னைக்கே நா ஒரு விசயம் சொன்னேன் நியாபகம் இருக்கா..?” என சீரியஸ் டோனில் கேட்க,

“என்ன மாமா..?” என யோசனையோடு கேட்டவளை பார்த்து, 

“எனக்கு குறுக்க பேசினா பிடிக்காதுன்னு சொன்னேன், நியாபகம் இருக்கா..? இனி நீ பேசுவே..!” என கேட்டு கண் சிமிட்டியபடி அவன் முகம் புதைந்த இடத்தில் லேசான தண்டனை அவன் தர,

‘அடப்பாவி, அப்போ நீங்க எதுக்கு சொன்னீங்க..! இப்போ எதுக்கு கனெக்ட் பண்ணறீங்க..?’ என்ற எண்ணம் முற்று பெறும் முன்.. 

அவன் அளித்த தண்டனையில் அதிர்ந்து விழி விரித்தவளை பார்த்தவாறே, அவளின் இதழ்களை சிறை செய்தவனின் கரங்கள் செய்த மாயத்தில், கனிகாவும் பயம் கலைந்து மெல்ல வெற்றியோடு முழுமையாய் கரைந்திருந்தாள்.

முற்றும் முழுதான கூடல்.. முந்தைய இருவரின் ஊடல்களையும் மொத்தமாய் மனதிலிருந்து கரைத்து தூக்கி போட வைத்திருந்தது.

கூடலின் நிறைவில் வெற்றி கனிகாவை விட்டு விலக, “நா உயிரோட தானே இருக்கேன்..?” என்ற அவளின் வார்த்தையில் பதறி துடித்து போனான் ஆணவன்.

“ஏய்.. கனிம்மா, என்னடா ஆச்சு..? மாமா ஹர்ட் பண்ணிட்டேனா..?” என பதட்டத்தோடு வெற்றி அவளின் முகம் பற்றி கேட்க,

அவனை பார்த்து திருதிருவென விழித்தவள்.. பதில் சொல்ல எடுத்துக்கொண்ட சில நொடி கூட அவனுக்கு நரகமாய் தான் தெரிந்தது. 

அதன் பின் அவள் சொன்ன பதிலில் மீண்டுமொரு ஊடல் அவனிடம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!