Skip to content
Post Views: 2,463
கோபத்தில் அவளை விட்டு வேகமாய் விலகி.. மறுபுறம் திரும்பி வெற்றி படுத்துவிட, நிமிடத்திற்கு பிறகே தான் சொன்ன வார்த்தை அவனை எப்படி பதற வைத்திருக்கும் என்பது புரிய,
“மாமா.. சாரி மாமா.. நிஜமா எனக்கு சொர்க்கத்துக்கு போயிட்ட ஃபீல்.. செத்தா தானே அங்கே போவாங்க.. அதை தான் நா சொன்னேன்..” என்று மீண்டும் அதையே அவள் சொல்ல,
Advertisement
“அடியேய் வேணான்டீ.. மரியாதையா ஓடி போயிடு.. கிட்ட மாமா கீமான்னு வந்தே.. நிஜமாவே சொர்க்கத்துக்கு பேக் பண்ணிடுவேன் பார்த்துக்க..” என வெற்றி கோபத்தில் கத்த,
Advertisement
“சும்மா கத்தாத மாமா.. என்னோட ஃபீலை நா உங்ககிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்வேணாம்..” என அவள் நியாயம் பேச,
Advertisement
பட்டென எழுந்து அவள் புறம் பார்த்தவன் விழியில் சக்தியிருந்திருந்தால் அவள் நிச்சயம் எரிந்து சாம்பலாகி இருப்பாள்.
Advertisement
அவள் சொன்னதில் ஆணாய் அவன் கர்வம் கொள்ள வேண்டும் தான்.. ஆனால், சொன்ன விதம் அவளின் வார்த்தை தந்த அந்த நிமிட வலி, பயம்.. பதட்டம்.. மற்றொரு முறை அவனால் அவளை நெருங்க முடியுமா..? என்ற எண்ணத்தை அவனுள் உண்டாக்க,
“வேணாம் கனி, நிஜமாவே நீ சில நேரம் பேசறது, புரிஞ்சு.. சரியா பேசறையா.. இல்லையான்னு நீயே ஆலோசனை பண்ணி பாரு..
எதிர் இருப்பவங்கள அது எப்படி உணர வைக்குமுன்னு யோசி.. அப்ப புரியும் என்னோட வலியும் பயமும்..” என சொல்லும் போதே அவன் விழி காட்டிய உணர்வை அப்போது தான் சரியாக கவனித்த கனிகாவிற்கு அவனின் எண்ணம் முழுதாய் புரிவதாய்..
‘அய்யோ.. என்ன பேசி வச்சிருக்கேன்..’ என அப்போது தான் உணர்ந்தவள்,
“மாமா… ப்ளீஸ் மாமா.. எனக்கு அப்போ அதை எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணன்னு நிஜமா தெரியாம.. உங்கள ஹர்ட் பண்ணனுமுன்னு நா செய்யல..” என்றவளுக்கும் மனது என்னவோ செய்தது தான்.
அழகான தருணத்தை இப்படி மாற்றி விட்ட தன் மடத்தனத்தை நொந்தவள், அவனை ஏறிட்டு அப்பாவியாய் ஒரு பார்வை பார்க்க, அதுவரை இருந்த நிலை மாறி வெற்றியின் முகமும் இளக்கம் கொண்டது.
ஆனாலும் அவளின் இப்படி பேசும் விதத்தை கண்டிப்பாக மாற்றும் முயற்சியை இனி செய்தே ஆகவேண்டும் என உறுதியான முடிவோடு,
“சரி தூங்கு..” என்ற படி வெற்றி படுக்கையில் சரிய,
“எதே.. தூங்கறதா..? யோவ் மாமா.. நா அத்தம்மாகிட்ட ப்ராமிஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். இங்கிருந்து வரும் போதே புள்ளையோட தான் வருவேன்னு.. நீங்க பாட்டுக்கு இப்படி ஆரம்பிச்சதும் எண்ட் கார்ட் போட்டா அதெப்படி நடக்கும்..?” என எப்போதும் போல அவள் ஆரம்பிக்க,
“உன்னோட வாயெல்லாம் பேசி அடக்கவே முடியாதுடீ..” என்றபடி இழுத்து அவளின் இதழணைத்தவன், அதன் பின் அவளை பேச அனுமதிக்கவே இல்லை.
சற்று நேரம் அவளை வன்மையாக கையாண்டவன், சற்று ஓய்வு கொடுத்து தன் முகத்தை நிமிர்த்தி,
“இனி தேவையில்லாம எதாவது இப்படி ஏடாகூடமா பேசி வச்சே மவளே.. வாயிருக்கும் பேச நாக்கு இருக்காது.. கடுச்சு துப்பிடுவேன் பார்த்துக்கோ..” என்றவனின் விழிகளே சொன்னது அவன் அதை செய்ய தயங்க மாட்டேன் என்பதை.
அதில் லேசாக ஜர்க் ஆனாலும் இயல்பு குணம் மாறுமா அவளுக்கு..?!
அதன் பின் தண்டனையாக மீண்டும் தொடங்கிய எல்லாமே கூடலுக்கு வித்தாக அவர்களிடமிருந்த மொத்த சக்தியும் தீரும் வரை அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டாடி மகிழ்ந்தவர்கள் மொத்த ஊடலையும் கூடலாய் மாற்றிக்கொண்டு மெல்ல இருள் விலகி.. விடியலை நோக்கி செல்லும் போது தான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றனர்.
நேரம் வெகுவாய் கரைந்த பின் மெதுவாக கண்விழித்த வெற்றிக்கு தன் கையணைப்பில் மலர்ந்த முகத்தோடு இரவு நடந்த நிகழ்வுக்கு ஆதாரமாய் நலுங்கிய சிற்பமாய் இருந்தவளை மென்னையாய் தன்னோடு இறுக்கியவன் அவளின் காதருகே சென்று, “கனிம்மா..!” என்றிட,
நேற்றைய காலை பொழுதினை போலவே, “போ.. மாமா.. சும்மா தூங்கவிடாம..!” என அவள் சிணுங்கிட அவனின் அணைப்பு மேலும் இறுக்கம் கொண்டது.
அவனின் அணைப்பு கொடுத்த அழுத்ததில் தூக்கம் கலைந்து எழுந்தவளுக்கு அப்போது தான்.. தான், இருக்கும் நிலையும், நேற்றைய நிகழ்வும் நினைவுக்கு வர நேற்றைய கூடலில் மலர்ந்திருந்த அவளின் மதிமுகம் செவ்வானமாய் மாறி போயிட அதை மறைக்க வெற்றியின் மார்பிலேயே முகம் புதைத்தாள்.
அவள் எழுந்து முதல் அவளின் முகத்தையே பார்வையால் தொடர்ந்தவன், அவளின் வெக்கத்தையும், அதை மறைக்க தன்னிடமே அடைக்கலம் ஆனவளை ஆசையாய் அணைத்துக்கொண்டாலும், நேரம் அறிந்து,
“கனிம்மா, எழுந்து ரெடியாகுடா.. பாரு மணி என்ன ஆகுதுன்னு.. நா ப்ரேக்பாஸ்ட் ஆர்டர் பண்றேன்..” என சொல்ல,
‘தான் இருக்கும் நிலையில், எப்படி வெற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து செல்வது..’ என்று தவிப்போடு அவனை பார்க்க,
அவளின் பார்வைக்கு அர்த்தம் புரிந்தாலும்.. அவளின் வெக்கத்தை ரசிப்பதற்காகவே, “என்ன கனி, சொல்லிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு ஜாலியா படுத்துட்டு இருக்க..? போ, போய் ப்ரஸ்ஸாகிட்டு வா..” என கோபம் போலும் சொல்லிய நொடி,
இருவரையும் மறைத்திருந்த போர்வையை சட்டென உருவி எடுத்து தன்னை முழுதாக மறைத்தவள், பாத்ரூம் நோக்கி சென்றிட,
அவளை வெக்கப்பட வைக்க நினைத்தவன் தான் வெக்கிப்போனான் தன் நிலையை எண்ணி..
******
புதிதாய் திருமணமான ஜோடிகளுக்கே உரித்தான விதத்தில் அடுத்து வந்த பொழுதுகள் சுகமாய் கழிந்தாலும், கனிகாவிடம் பேச வேண்டியதை பேசிவிடுவது.. என்ற முடிவோடு இருந்தவன், “கனி, கொஞ்சம் அப்படியே வெளியே வாக் மாதிரி போயிட்டு வருவோமா..? அப்படியே சில விசயத்தை பேசனும்..” என்றிட,
குளிருக்கு இதமாய் வெற்றிவேலின் கையணைப்பில் இருந்தபடியே, “இந்த நேரத்துலையா..? போங்க மாமா குளிரும்.. இங்கையே சொல்லுங்க. நா இப்படியே கேட்கறேன்..” என்று அவனோடு ஒன்றியபடி அவள் சொல்ல,
“செல்லமில்ல, ரூம்ல இப்படி இருந்தா நா சொல்ல வர்றத நீயும் கேட்க மாட்டே..
என்னாலையும் முழுசா பேச முடியாதுடா.. மைண்ட் டைவர்ட் ஆகும்.
அதனாலதான் சொல்றேன் வெளிய போலாம்.. அங்கே போயும் உனக்கு குளிர் அடுச்சா அதை போக்க நானாச்சு..” என கொஞ்சி கெஞ்சி,
அவளுக்கு லஞ்சமாய் சில பல முத்தங்களை வாரி கொடுத்து தாஜா செய்தவன், ஒருவழியாய் அவளை கிளப்பிக்கொண்டு வரும் போது,
“போலீஸ்கிட்டையே லஞ்சம் வாங்கின ஆள் நீயா தான்டீ இருப்போ..” என கிண்டல் செய்தபடியே அழைத்து வந்து பேசுவதற்கு தோதாய் ஒரு இடத்தில் அமர வைத்தான்.
“கனி, தயவு செஞ்சு முதல் நாள் மாதிரி குறுக்க பேசி டைவர்ட் பண்ணிடாதே. என்னை முழுசா பேச விடு..” என சொன்னவனின் குரலிலேயே,
தனது விளையாட்டுதனத்தை விடுத்து.. அடுத்து அவன் சொல்வதை கேட்கும்படி அமர்ந்தவளை பார்க்கும் போது நந்தன் சொன்னது அனைத்தும் மனதில் வலம் வந்தது.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தவன், தூரத்து நிலவை பார்த்தபடியே, “கனி, உனக்கே நல்லா தெரியும் நா கல்யாணம் செஞ்சுக்கறதுல அவ்வளவா ஆர்வம் இல்லாம இருந்தது.
அதுக்கு முக்கிய காரணமே என்னோட அம்மா தான்.
அவங்க என்னோட வேலையை விடச்சொல்லும் ஒவ்வொரு முறையும், நாளைக்கு உன்னை நம்பி வர்றவ நீ இப்படி ராத்திரி பகல் ன்னு பார்க்காம ஓடுனா ஒத்துப்பாளா..?
அவளோட நல்லபடியா வாழனுமுன்னா இந்த வேலை விட்டு தான் ஆகனும்..
அப்படின்னு சொல்ல, சொல்ல… அப்போ எனக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி ன்னு ஒருத்தி வந்தா.. என்னோட முதல் காதலான இந்த யூனிஃபார்முக்கு விடை கொடுக்க வேண்டி வருமோன்னு தான் கல்யாணம் பண்ணறதையே அவாய்ட் பண்ணேன்”.
“முதல் தடவ உன்னை அந்த மால்ல பார்த்தப்போ.. நீ பேசின மாதிரி மட்டும் வேற யாராச்சும் பேசியிருந்தா கண்டிப்பா கன்னம் பழுத்திருக்கும்.
உன்கிட்ட ஏனோ அப்படி என்னால கோபப்பட முடியல. அப்பவே ஏன்னு எனக்குள்ள ஒரு குழப்பம்.
அப்புறம் நீ பிரகாஷ் மாமா பொண்ணுங்கறது தெரிஞ்சு சந்தோஷப்படறதுக்குள்ள, உன்னோட உயிர் கொஞ்ச நாள் தான்.. அப்படின்னு சொன்னதும், நா நானாவே இல்ல.
மேபி, வேற யாருக்கோ இப்படி ஒரு இஸ்யூ ன்னு சொல்லியிருந்தா ஹாஸ்பிட்டல்லையே உண்மைய கண்டுபிடிச்சிருப்பேன்.
உனக்கு அப்படி இருக்க கூடாது ன்னு மட்டுமே அப்போ மனசுல ஓடிட்டு இருந்ததால அங்கே நடந்த மத்த விசயங்களை நான் கவனிக்கல.
நந்தன் வந்து உனக்கு எதுமில்லன்னு சொன்னதும் ஒரு புறம் நிம்மதியா இருந்தாலும்..
என்னை ஏமாத்திட்டீங்க.. அப்படிங்கறதோட இப்படி கல்யாணத்துக்காக நாடகமாடற நீ, நாளைக்கு இந்த வேலையை விட வைக்கவும் நாடகமாடுவியோன்னு தான் கோபம் வந்துச்சு.
அது மட்டுமா..! என்ன வாய்டீ உன்னோடது..? அப்பப்பா.. என்னாலையே முடியல..
அப்போ நீ செய்யற சின்ன சின்ன விசயம் கூட தப்பாவே தெரிஞ்சுது.
நந்தன் அப்பவே சொன்னான்.. எங்களுக்கு தெரிஞ்ச கனிகா வேற. நீ இப்போ அவள புருஞ்சுக்கல. அதனால அவசரப்படாம அவள நல்லா தெரிஞ்சிட்டு முடிவு பண்ணுன்னு..
அவன் சொன்ன மாதிரி தான் நாளுக்கு நாள் உன்னோட ஒவ்வொரு முகமா தெரிய வந்துச்சு எனக்கு.
அம்மாகிட்ட அன்னைக்கு நீ போலீஸ் வேலையை பத்தி உயர்வா பேசும் போதே பாதி ஃப்ளாட் ஆகிட்டேன்.
மிச்சத்தையும் அடுத்த ரெண்டு நாள்ல உன்னை பத்தி விசாரிச்சு தெரிஞ்சிட்டேன்.
நீ, கார்த்தி.. என்னோட அப்பா ன்னு இழந்ததை விட, நா போனதும் எவ்வளவு கஷ்டப்பட்டே… ன்னு மாமா சொன்னாங்க.
பெரியவனா இருந்த எனக்கே அது அவ்வளவு வலிய கொடுத்தது ன்னா சின்ன பொண்ணு உன்னோட நிலைமை.. நிச்சயமா அதீதம் தான்.
அந்த நிலைமையில கூட உன்னோட அப்பா அம்மா முகத்தை பார்த்து.. அவங்க வருத்ததை போக்க நீ எடுத்த ஆயுதம் இந்த விளையாட்டு தனமுன்னு மாமா சொன்னாங்க.
அப்ப இருந்து நீ உன் சேட்டையை கூட்டி உன்னையே அதுல தொலைக்க ஆரம்பிச்சிட்டேன்னு அவர் சொன்னப்போ உன்னோட இந்த விளையாட்டுதனத்துக்கு பின்னால இருக்கற வலி எனக்கு நல்லா புரிஞ்சது.
ஆனா அந்த விளையாட்டு தனத்தோட சேர்ந்து உனக்குள்ள இருக்கற இன்னொரு பாகத்தையும் தெரிஞ்சுக்கிட்டப்போ பெருமையா இருக்குடீ.
நீயும், உன் ப்ரண்ட்ஸ் சில பேரும் சேர்ந்து கிராம புற பெண்களுக்காகவும், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு சம்மந்தமா நடத்தற கூட்டம் எல்லாமே.. உன்னோட சமுதாய அக்கறையை எனக்கு வெளிச்சம் போட்டு காட்டிடுச்சு.
அப்படி அக்கறையோட செயல்படற நீ என்னோட வேலை விசயத்துல மட்டுமல்ல, நாளைக்கு எனக்கு ஏதாவது ஆனா கூட இழப்பை தாண்டி அந்த சூழ்நிலையிலையும் எப்படி நடக்கணுமின்னு தெரிஞ்சு நீ உன்னோட சேர்த்து மத்தவங்களையும் பார்த்துப்பேன்னு நம்பிக்கை வந்திடுச்சு..
முதல் தடவ பேசனுமுன்னு நான் உன்கிட்ட வந்தப்ப கூட உன்ன பத்தி முழுசா தெரிஞ்சுக்காம புருஞ்சுக்காம ஜஸ்ட் ஒரு அஷம்சன்ல தான்,
உன் கேரக்டர மாத்திக்கோ.. அது தான் என்கூட நீ வாழ சரியா இருக்குமின்னு.. சொல்லிட நினச்சிருந்தேன்.
ஆனா இந்த இடைவெளியும் நல்லது தான்னு இப்ப தோணுது.
இப்போ முழுசா உன்னை நல்லா தெரிஞ்சிட்டு புரிஞ்சிட்டு தான் உன்னை முழு மனசா மனைவியா முழுசா ஏத்துக்கிட்டேன்.
ஆனா நிச்சயமா நீ உன் பேச்சுல இருக்கற இந்த விளையாட்டு தனத்தை கொஞ்சமே கொஞ்சம் மாத்திக்கிறது பெட்டர்.
இல்லன்னா இதுவே எப்பவாவது நமக்குள்ள தேவையில்லாத சண்டையை கொண்டு வந்து விடுமோன்னு தோணுது.
நா சொல்றது புரியுது தானே கனிம்மா.. அப்புறம் முக்கியமா நா சொல்ல ஆசைப்பட்டது..
ஐ லவ் யூ கனிம்மா..!” என உருக்கமாக பேசிக்கொண்டு இருந்தவன் மறுபுறமிருந்து எந்த பதில் வராது போக,
‘இவ்வளவு தூரம் பேசிட்டு, அதும் என்னோட காதலை சொன்னா பதிலே சொல்லாம அப்படி என்ன பண்ணறா..?’ என யோசித்தபடி தான் பார்வையை கனிகாவிடம் வெற்றிவேல் செழியன் திருப்ப,
அவள் செய்து கொண்டிருந்த வேலையில், அவனின் முகம் அஷ்டகோணலாய் மாறியிருந்தது.
அவன் இவ்வளவு நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசியதை கேட்டாளா.. இல்லையா.. என தெரியாமல் விழிக்க வைக்கவே,
அவனின் செல்ல அராத்து அவள் அமர்ந்திருந்த இருக்கையிலேயே நன்றாக தூங்கியிருந்தால்.. அவனும் தான் என்ன செய்வான்..?! (ஹா…ஹா..)
ஊடல் கண்டினியூ..
error: Content is protected !!