Skip to content
Post Views: 3,558
இதோ.. இதோ.. என் பல்லவி
அத்தியாயம் – 25
Advertisement
எபிலாக்
Advertisement
Advertisement
பைரவியும் செல்லத்துரையும் லண்டன் வந்து இரண்டு வாரங்கள் முடிந்திருந்தது..
Advertisement
பைரவிக்கு மகளை விட்டு போக மனமில்லை. அவர்கள் வீட்டிலும் இருக்க விருப்பம் இல்லை.
பைரவி மகளிடம் நாங்க தனியா வீடு பாக்குறோம் பல்லவி. உங்க வீட்டுலே எவ்வளவு நாள் இருக்குறது..
இனிமே உன் பக்கத்துல தான் நாங்க இருப்போம் என்று சொல்லி வீடு பார்க்க நினைக்க..
விக்ரம் அவர்கள் இருக்கும் தெருவிலே ஒரு வீட்டை வாங்கி. அதை பைரவி, செல்லத்துரையின் பெயரில் அந்த வீட்டை பதிந்து அவர்களிடம் குடுத்து விட்டான்..
இது என்ன என்பது போல் அனைவரும் பார்க்க. செல்லத்துரை அந்த வீடு வாங்குன பணத்தை தருவதாக சொல்ல..
“உங்க பையன் உங்களுக்கு வீடு வாங்கி தந்தா இப்படித்தான் கேட்பீங்களா” என்றான்..
“இல்லை” என்பது போல் பைரவியும், செல்லத்துரையும் தலையாட்ட, “அப்போ வாங்கிக்கோங்க” என்றான்..
பைரவி தன் மகளுக்கு எங்க வீட்டில் இருந்து தான் டெலிவரி பார்க்கனும் என்று ஆசை. அதனால இங்கே சில மாதங்கள் வாடகைக்கு வீடு பார்க்கலாம், அப்படி இல்லை என்றால். ஒரு வீட்டை சொந்தமாக வாங்கி இங்கே தங்கிக்கலாம் என்று நினைக்க.
மருமகன் செய்த காரியத்தால் அகம் மகிழ்ந்து போனர்கள்..
பல்லவிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை பக்கத்தில் அம்மா வீடு.. அவளை சுத்தி அனைவரும் அவளை நன்றாக பார்த்துக்கொள்ள.. அவளோ நன்றாக சாப்பிட்டு, தூங்கி எழுந்தாள்..
பைரவி மகளை நன்றாக பார்த்து கொண்டார்.. பிள்ளைகளும் பைரவி பாட்டி, பைரவி பாட்டி என்று பைரவியை சுத்தி வர. சாயங்காலம் என்றால் அனைவரும் பைரவி வீட்டில் தான். அவர் செய்யும் இந்தியா உணவு வகைகள் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் பிள்ளைகள் ஸ்கூல் சென்று விட்டு வந்து. பைரவின் வீட்டுக்கு தான் வருவார்கள். பைரவி தினமும் பிள்ளைகளுக்கு வித, வித மான ஈவ்னிங் உணவை செய்து கொடுக்க. பிள்ளைகள் எல்லோருக்கு விரும்பி சாப்பிடுவார்கள்..
விக்ரம் கூட சில முறை “அத்தை எனக்கு இந்த உணவை செய்து தாருங்கள்” என்று சொல்லி வாங்கி சாப்பிடுவான்..
பல்லவிக்கு டெலிவரி நாள் வந்தது..
அன்று காலையிலே பல்லவிக்கு சிறு, சிறு வலி எடுக்க, வலியை பொறுத்து கொண்டு இருந்தாள் பல்லவி..
“என்னடி உன் மூஞ்சு ஒருமாதிரி இருக்கு” என்றான் விக்ரம்..
“இல்லங்க வலி வித்தியாசமா உடம்புல வலிக்குது ” என்றாள்..
“வா பல்லவி ஹாஸ்பெட்டல்” போலாம் என்றான்.
“இல்ல கொஞ்ச பொறுங்க வலி நல்லா வரட்டும் அப்பறம் போலாம்”என்றவளை..
“சும்மா இரு” என்றவன் பைரவிக்கு போன் போட.. போன் போட்டவுடவே வந்தவர்.. மகளின் முகம் பார்த்து. “எங்க வலிக்கு” என்றார்..
மகள் காதில் சொல்ல..
“அப்போ பிள்ளை வலி தான் வா” என்று அனைவரும் பல்லவியை அழைத்துக்கு கொண்டு ஹாஸ்பெட்டல் சென்றனர்..
பல்லவி டெலிவரி வார்டில் கத்திய சத்தத்தில், இங்கே விக்ரமுக்கும். பைரவிக்கும் வயிறு வலியே வந்துவிட்டது. விக்ரம் பல்லவி கதறும் சத்தம் கேட்டு கண்கலங்கி நின்றான். இதயம் வேற பட, படவென அடித்துக்கொள்ள..
பைரவியோ பல்லவியின் ஒரு, ஒரு கதறலுக்கும் , “ஐயோ என் கத்துறாளே என் அடி வயிறு கலங்குதே” என்று அழுதவர். “கடவுளே என் பொண்ணுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கனும்” என்று கடவுளை வேண்டிக்கொண்டு இருக்க.
விக்ரமோ பல்லவியின் அழுகுரல் கேட்க இது வரை அவனுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து விக்ரம் அழுததாக நினைவு இல்லை சுந்தருக்கு, ஆனால் இன்று மனைவியின் அழுகுரல் கேட்டு கண்கலங்கி நிற்கும் மகனை பார்த்து அணைத்துக்கொண்டார் சுந்தர்..
“அப்பா என்னால முடியலப்பா அவ கத்துற சத்தம் கேட்டு. அவ ஒரு, ஒரு வாட்டியும் கத்துறது கேட்கும் போது என் இதயம். வலிக்குதப்பா” என்றவனை தோளில் தட்டி கொடுத்தவர், “இன்னும் கொஞ்சம் நேரம் விக்ரம், உன் குழந்தையை பார்த்த எல்லாம் சரியாகிரும்” என்றார்.
சிறிது நேரம் பல்லவியின் சத்தம் வராமல் இருக்க. திடிர் என்று பல்லவி கத்தும் சத்தம் கேட்க. மறுபடியும் அமைதியாகி விட. மீண்டும் ஒரு சத்தம் “ஈஸ்வரா, ஈஸ்வரா” என்று பல்லவி கத்தும் சத்தம் கேட்டு கொஞ்ச நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்க..
அப்பாட என்று இருந்தது அனைவருக்கும்..
டெலிவரி வார்டில் இருந்து ஒரு நர்ஸ் விக்ரமிடம் வந்து “சார் உங்களுக்கு பையன் பொறந்து இருக்கு” என்று சொல்லி செல்ல..
அனைவருக்கும் சந்தோஷம் நிம்மதியாக இருந்தது..
நர்ஸ் சிறிது நேரம் கழித்து விக்ரமனின் ஆண் குழந்தையை தூக்கிக்கொண்டு வர..
“பல்லவி எப்படி இருக்க” என்றான் நர்சிடம்.
“அவங்க மயக்கத்துல இருக்காங்க சார் கொஞ்சம் நேரத்துல ரூம்புக்கு மாத்திருவாங்க அப்போ போய் பாருங்க என்று விக்ரமிடம் குழந்தையை தர.. பைரவி ஆசையாக குழந்தையை பார்த்தார்..
“குழந்தையை வாங்கிக்கோங்க அத்தை என்றவன். நர்சிடம் இருந்த குழந்தையை வாங்கி பைரவிடம் தர..
சுந்தர் வந்து குழந்தையை பார்த்து “விக்ரம் நீ பொறந்தப்போ இப்படிதான் இருந்த” என்றார். பைரவியும், செல்லத்துரையும் குழந்தையை பார்க்க. விக்ரமனின் முகம் வடிவம் போல் அச்சு அசல் விக்ரமே வந்து பிறந்தது போல் பிறந்திருந்தான் விக்ரமனின் மகன்..
பைரவி விக்ரமிடம்”மாப்பிள்ளை உங்க பையன் உங்கள மாதிரி இருக்கான்”.. என்றார்..
விக்ரமுக்கு ஆச்சரியம் அவனுடைய சின்ன வயதில் எடுத்த போட்டோவை பார்த்திருக்கிறான். அவன் சின்ன வயது போட்டோவில் இருப்பது போலவே இருந்த மகனை ஆசை தீற பார்த்தவன்.. “அடி பாவி என்னையே!.. பார்த்து, பார்த்து, என்னை மாதிரி பெத்து குடுத்துருக்கா” என்றான் மனதில்..
பைரவி அனைவரிடம் குழந்தையை காண்பித்தார். சூர்யாவும், ஆஷிக்கும் “எனக்கு தம்பி பாப்பா வந்துருச்சு” என்று சொல்ல. சிவாவும் எனக்கு தம்பி பாப்பா வந்துருச்சு. என்று குஷியாகி குதிக்க.
பல்லவி தனி அறைக்கு மாற்றப்பட்டாள்.. அனைவரும் பல்லவியை சென்று பார்க்க. பல்லவி மயக்கத்தில் இருந்தாள்.. விக்ரம் இன்னொரு அறையை ஏற்பாடு பண்ணி அனைவரையும் அங்கே தங்க சொல்லி விட்டு அவன் மட்டும் இருந்தான் பல்லவி அறையில். பல்லவிக்கு இன்னும் மயக்கம் தெளியாமல் இருக்க குழந்தையோடு அமர்ந்து விட்டவன்.. மகனோடு பேச. அவனும் பல்லவி மாதிரி கண்களை மூடிய படியே, விக்ரம் பேசுவதற்கு சிரிக்க…
விக்ரமின் பேச்சு சத்தம் கேட்டு பல்லவிக்கு மெல்ல விழிப்பு வந்தது. கண்திறந்து பார்த்தவள், விக்ரம் தன் மகனை மடியில் அணைத்து வைத்துக்கொண்டு பல்லவியை பார்த்து சிரிக்க..
“என்ன குழந்தை அத்தான்”..
“குட்டி விக்ரம்” என்றான் பொங்கிய சிரிப்போடு..
“ஐ”! என்றவள் “நான் நெனச்ச மாதிரியே” என்றவளை..
“ஏன்டி உனக்கு பையன் தான் வேணுமா, ஏன் எங்க கிட்ட நீ முன்னாடியே சொல்லல்ல” என்றான்..
“நீங்க பொண்ணு வேணுமுன்னு நெனச்சீங்க ஆனா எனக்கு உங்கள மாதிரியே, ஒரு குட்டி விக்ரம் வேணுமுன்னு தோணுச்சு எப்படி” என்றவளிடம். குட்டி விக்ரமை தர. தன் மகனை பார்த்தவள், அவனை வாங்கி மார்போடு அணைத்து வைத்து கொண்டவள். என் விக்ரம் குட்டி என்று கண்கலங்க மகனை பார்த்தவள்..
“உங்கள மாதிரியே இருக்கான். கடவுள் எனக்காக இன்னொரு விக்ரமை அனுப்பி வச்சு இருக்கார், பார்த்துக்க சொல்லி” என்றாள்..
பல்லவியின் தலையை வருடி விட்டவன். அவளின் நெற்றில் முத்தமிட்டு. “நான் ரொம்ப லக்கி பொண்டாட்டி, நீ எனக்கு கிடைக்க.” என்றான்..
பல்லவியும், விக்ரமும் மாறி, மாறி தங்கள் துணையை பத்தி, பிறந்த பிள்ளையை பத்தி பேசிக்கொண்டு இருக்க..
பைரவி கதவை தட்டி விட்டு வந்தவர்.. மகளின் கையை பிடித்துக்கொண்டு என் பேரனை பாத்தீயா டி, மாப்பிள்ளை மாதிரியே இருக்கான்” என்று சந்தோஷப்பட்டு பேச..
பிள்ளைகள் அனைவரும் வந்து குட்டி விக்ரமை பார்த்து “தம்பி” என்று கொஞ்ச.. அந்த இடமே சந்தோஷ கடலில் மூழ்கியது..
5 நாள் கழித்து பல்லவியை ஹாஸ்பெட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணி குழந்தையோடு அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு செல்ல கார் பார்கிங் வர..
“அண்ணா” என்று சத்தம் கேட்க. அனைவரும் திரும்பி பார்க்க..
ஞானதுரை இவர்களை பார்த்து அருகில் வந்து கொண்டு இருந்தார்..
விக்ரம் பல்லவியை காரில் ஏறு. இவன் மூச்சு காற்று கூட உங்க மேல பட கூடாது என்றான்..
பல்லவிக்கு ஞானதுரையின் முகத்தை பார்க்கவே பிடிக்க வில்லை காரில் குழந்தையோடு ஏறியிருந்தாள்..
பைரவி கணவனை முறைத்து விட்டு. பத்து நிமிசம் தான் காருல வந்து ஏர்றீங்க. “அண்ணி” என்று ஞானதுரை பைரவியை அழைக்க. “சீ” என்றவர். பிள்ளைகளை வண்டியில் ஏற சொல்லிவிட்டு. செல்லத்துரையிடம் “கார்ல வெளியே நிக்குறோம் வாங்க”என்றவர். இவன் பார்வைகூட என் பிள்ளைகள் மேல் படக்கூடாது காரில் ஏறி. “மாப்பிள்ளை காரை எடுங்க” என்றிருந்தார்..
விக்ரம் செல்லத்துரையிடம் “வெளியில் நிக்குறோம் வாங்க மாமா ” என்று சொல்லி விட்டு சென்று விட்டான்..
விக்ரம் சொன்ன மாதிரியே பத்து நிமிசத்தில் வந்து சேர்ந்தார் செல்லத்துரை..
செல்லத்துரை காரில் ஏறியதும் கார் கிளம்ப..
” என்னவாம் அந்த கொலகார பாவி பயலுக்கு, இன்னும் யார் குடியை கெடுக்க அவனும், அவன் பொண்டாட்டியும் அழையுறாங்கலாம்”..
“ஏய் சும்மா இரு பைரவி அப்படி பேசாத” என்றார்..
“வேற எப்படி பேச”? அண்ணாண்ணு சொன்னவுடனே பாசம் பொங்கிருச்சோ” என்று பைரவி செல்லத்துரையை திட்டிக்கொண்டே வர..
விக்ரம் தான். “அத்தை மாமாவை திட்டாதீங்க ஆயிரம் இருந்தாலும், அவர் தம்பி இல்லன்னு ஆகிருமா” என்றான்..
“மாப்பிள்ளை அப்படி எல்லாம் எனக்கு அவன் மேல பாசமும் இல்லை, வேற ஒன்னும் இல்லை மாப்பிள்ளை” என்றவர்..
“அவன் நிலமை தெரிஞ்சும், அவன் கிட்ட பேசமா வர முடியல, அதுதான் ஒரு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்”.. என்றார்
“என்ன ஆறுதல் அந்த ஈன பயலுக்கு, நல்லா தானே இருக்கான் அவனுக்கு என்ன கேடு வந்துச்சு” என்று பைரவி திட்ட..
செல்லத்துரை பைரவியிடம் “அவன் பையன் ஜான் ஆக்சிடண்டில் செத்து இரண்டு வருஷம் ஆச்சு பைரவி” என்றார்..
பைரவி அதிர்ச்சியானவர் பின்பு, அடுத்தவன் குடியை கெடுக்க நெனச்ச, அவன் குடும்பம் தானா கெடும்முன்னு சும்மாவா சொன்னான்,, என்றார்..
மனதில் வருத்தம் இருந்தாலும், ஞானதுரை செய்த செயலில், உயிர் போனது கூட பெரியதாக தெரியவில்லை பைரவிக்கு..
“ஏன் அவன் பொண்டாட்டி மகளும் நல்லா தானே இருக்காங்க” என்றார் பைரவி..
“இல்ல பைரவி அவன் பொண்ணு இருக்காளே அந்த ஐஸ்வர்யா இப்போ மூனாவதா, ஒரு பையனை கல்யாணம்
பண்ணி இருக்காள்.. ஞானதுரை பொண்டாட்டி ரோசிக்கு கிட்னி பெய்லியர் ஆகிடுச்சு, ஒரு நாள் விட்டு ஒரு நாள், டாயலஜிஸ்டு பண்ணுறாங்க. ஞானதுரை ஒரு வருஷமா ஹாஸ்பெட்டலில் தான் இருக்கான்..
அவன் வீட கூட வித்துட்டான்.. வீட வித்துதான் அவன் பொண்டாட்டி பாத்துக்கிறான். வைத்திய செலவுக்கு இன்னும் அதிக பணம் தேவைப்படுது போல அதுக்கு தான். அவன் இந்தியாவில் முன்னாடி வாங்கி போட்டா இடத்தை விக்க ஏற்பாடு பண்ண சொல்லுறான்.. என்றார்..
‘சரி இதோட ” முடிச்சுக்கோங்க”
இனி அவன் பேச்சு இந்த வீட்டுல வேண்டும் என்றவர்.
பல்லவி அமைதியாக வருவதை பார்த்தவர் , “நீ என்னடி ஒன்னும் சொல்லாம வர” என்றார் பைரவி..
“என்னம்மா பேசுறது, ஒரு தன் நல்லா இருந்து, நம்மலுக்கு தொந்தரவு கொடுத்த, திருப்பி அடிக்கலாம். செத்து போன பாம்பை திரும்ப அடிக்க முடியுமா”?.. என்றவள்.
error: Content is protected !!