Skip to content
Post Views: 1,903
அத்தியாயம் -13
புதிதாய் பார்க்கும் நாட்கள் ஒவ்வொன்றும் புதிதென புரிந்து கொள்!! என யாரோ ஒரு கவிஞன் கூறியது போல ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவத்தை கொடுத்து கொண்டிருந்தது வாழ்க்கை.
Advertisement
கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்திருந்தது, அந்த சம்பவம் நிகழ்ந்து முடிந்து. அனைவருமே அதிலிருந்து ஓரளவு மீண்டு இருந்தனர்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட வெண்பாவோ வெற்றியின் ஆதரவில் முழுமையாகவே அதிலிருந்து வெளி வந்திருந்தாள்.
Advertisement
Advertisement
அன்று அவன் மார்பிலே ஆறுதல் தேடி தஞ்சம் புகுந்தவளை அணைத்து ஆறுதல் படுத்தினான் வெற்றிதிருக்குமரன்.
“தமிழ்.., அழுதது போதும். எவ்வளவு நேரம் அழுதுட்டு இருப்ப. விடு எல்லாம் முடிஞ்சு போச்சு” என அவளை ஆறுதல்படுத்த, அவளோ,
Advertisement
“நான் ரொம்ப பயந்துட்டேன் மாமா. நீங்க மட்டும் உண்மையை சொல்ல வைகலைனா..” என்றவள் இன்னும் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.
“உனக்கொரு பிரச்சனைன்னா, நான் இல்லாமல் எப்படி?” நான் இருக்கிற வரை நீ எதுக்கும் கலங்க கூடாது..” என அரவணைத்து கொண்டவன்,
“இருந்தாலும், எனக்கு உன்மேலே கொஞ்சம் கோபம் தான்” என்றதும் பட்டென்று அவனிடமிருந்து விலகி, கேள்வியாய் அவனை பார்த்தாள்.
கண்ணீர் அவள் முகமெங்கும் பரவி இருக்க, அதனை மெதுமாக துடைத்து விட்டு, கலைந்திருந்த முடியை காதோரம் சொருகி விட்டவன்,
“ஆமாம், கோபம் தான். தமிழ் எப்போதும் எது நடந்தாலும் என்கிட்ட சொல்லுவானு நம்பிட்டு இருந்தேன். ஆனால் என்கிட்ட எல்லாமே மறைச்சு இருக்க நீ..”
“அந்த பொறுக்கி, கைபிடிச்சு இழுத்த அன்னைக்கே என்கிட்ட சொல்லி இருந்தா இப்போ இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா? என்கிட்ட மட்டும் சொல்லி இருக்கணும் நீ. அன்னைக்கே கையை ஒடைச்சு ஊருக்கு அனுப்பி இருப்பேன். ஏன் சொல்லல?” என கேட்க, அவளோ தலையை குனிந்து கொண்டாள்.
“சரி நீதான் சொல்லல, பார்த்த மீனாட்சியையும் சொல்ல வேண்டாம் சொல்லி இருக்க?” என்றதும் அவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் வெண்பா.
“என்ன பார்க்கிற? மீனாட்சி தான் எல்லாத்தையும் சொன்னா” என்றதும் அவளோ,
“அது.. அது.. வந்து..” என என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
அன்று கிஷோர் நடந்து கொண்டதையும், அதற்கு வெண்பா அடித்ததையும் அந்த வழியாக சென்ற மீனாட்சி பார்த்து விட்டாள்.
அறையை விட்டு வெளிவரும் பொழுது, மீனாட்சி நின்றிருக்க, அவளை கண்டதும் திக்கென்று இருந்தது வெண்பாவிற்கு.
“மீனாட்சி..” என வெண்பா அழைக்க, மீனாட்சியோ,
“என்ன வெண்பா இது? அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும். உன் கையை பிடிச்சு இழுகிறான். இவனுக்கெல்லாம் பிடிச்ச கையை தனியா கழட்ட வச்சா தான் சரியா இருக்கும். அண்ணா கிட்ட சொன்னா போதும், அவரே முடிச்சு விட்டுடுவார்” என கோபப்பட, வெண்பாவோ,
“மீனாட்சி, வேண்டாம் விடு. நம்ம வீட்டுக்கு விருந்தாளியா வந்து இருக்காங்க. எதுக்கு தேவையில்லாத பிரச்சனை? நான் தான் அடிச்சுட்டேன்ல. மாமாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான், பெரிய பிரச்சனை ஆகிடும். இதை இப்படியே விட்டுட்டு. யார்கிட்டயும் சொல்லாதே! இன்னொரு தடவை இப்படி நடந்தா, அப்போ சொல்லிக்கலாம் ” என அவளை சமாதானப்படுத்த, மீனாட்சியும் வெண்பாவின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து யாரிடமும் சொல்லாமல் இருந்தாள்.
நேற்று இந்த சம்பவம் நடந்ததும், மீனாட்சிக்கு கிஷோர் மீது தான் சந்தேகம் எழுந்தது. இருந்தும் ஆதாரம் இல்லாமல் எதை பேசுவது என்று தான் அமைதியாக இருந்தாள்.
பிரச்சனை பெரிசாகியதும், வெற்றியிடம் உடனே கூற வேண்டும் என்று அவனுக்கு அழைக்க, அழைப்பு செல்லவில்லை அவனுக்கு.
மீண்டும் மீண்டும் முயச்சித்ததன் பலனாக காலையில் தான் அவனை தொடர்பு கொள்ள முடிந்தது.
அனைத்தையும் கூறியிருக்க, கிஷோரை வெட்டி போடும் ஆவேசத்துடன் தான் அங்கிருந்து புறப்பட்டான்.
தந்தையிடம், “அப்பா வீட்டில் பெரிய பிரச்சனை, நான் முன்னே போறேன். நீங்க அப்புறம் வாங்க” என்றவன் அங்கிருந்து புறப்பட்டு நேராக வந்து நின்றது என்னவோ வெண்பாவின் வீட்டிற்கு தான்.
“இனி இதுபோல் பண்ணாதே! என்ன நடந்தாலும் என்கிட்ட எதையும் மறைக்காமல் சொல்லிடு” என்றவனுக்கு சரியென்று தலையாட்டினாள் வெண்பா.
“சரி, இனி இங்க உன்னை அனுப்ப மாட்டேனு அத்தே சொல்லிட்டாங்களே! என்னையெல்லாம் பார்க்காம உன்னால் இருக்க முடியுமா?” என்று கேட்க,
“முடியாது தான் மாமா. ஆனாலும் அம்மா சொல்றதை மீற முடியாதே!! அம்மா ரொம்பவே பயந்து போய்ட்டாங்க. எங்கே மறுபடியும் இதுபோல நடந்திடுமோனு தான் என்னை இங்க அனுப்ப முடியாது சொல்லிட்டாங்க” என அவள் வருத்தமாய் கூற,
“சரி கவலைப்படாதே!! உன்னை தானே அனுப்ப மாட்டேன்னு சொன்னாங்க . என்னை வரவேண்டாம்னு சொல்லலையே!! தினமும் வருவேன். தமிழ் கையால சாப்பிடாமல் எனக்கு நாளே ஓடாது. அதனால் இனி நான் அங்க வந்து சாப்பிட்டுகிறேன் சரியா” என்றதும் அவளும் மலர்ந்த முகத்துடன் சரி என்று கூறினாள்.
இவையனைத்தும் தவறாமல் நாச்சியார் கண்ணில் பட்டது. அவர் தவறு செய்து விட்டார் தான், அதற்காக மன்னிப்பு கேட்டு விட்டார். அதோடு அந்த பிரச்சனை முடிந்தது.
ஆனால், வெற்றியுடன் வெண்பா இணைந்து நிற்பதை பார்ப்பதற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் போய் கேட்கவும் முடியாது. வெற்றி வேறு உடன் இருக்கிறான். என்ன தான் செய்வது என தவித்து போனார்.
வெண்பாவை முறைத்து பார்த்தப்படி, அவர் நின்றிருக்க, எதேர்ச்சையாக வெண்பா நிமிர்ந்து பார்த்தாள். அங்கே நாச்சியார் நின்றிருப்பதை கவனித்தவள், அவர் பார்வையை அப்பொழுது தான் உணர்ந்து கொண்டாள்.
சட்டென்று வெற்றியிடம் இருந்து விலகி நின்றவள், அப்பொழுது தான் அவளுக்கே புரிந்தது இத்தனை நேரம் அவனை நெருங்கி நின்றது. ஏதோ உணர்ச்சி வசப்பட்டு உரிமையில் அப்படி நின்று விட்டாள். இதற்கு நாச்சியார் என்ன சொல்வாரோ என கலவரமாக இருந்தது அவளுக்கு.
“சரி.., நான் கிளம்புறேன்” என அவசரமாக அவனிடமிருந்து விடைபெற்று கொண்டு நடக்க, வெற்றியோ சட்டென்று அவள் கைப்பிடித்து தடுத்து நிறுத்தினான்.
திக்கென்று இருந்தது வெண்பாவிற்கு, உடனே அவள் பார்வை மேலே தான் சென்றது. வெற்றி அதனை எல்லாம் கவனிக்கவே இல்லை.
“நடந்ததையே நினைச்சுட்டு உன்னை வருத்திட்டு இருக்காதே!! எப்பவும் போல இரு” என அவன் அறிவுரை வழங்க, அவளும் சரிஎன்று அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றாள்.
செல்லும் போது நாச்சியாரை திரும்பி பார்க்க தவறவில்லை அவள்.
அன்று சொன்னது போலவே, வெண்பாவின் வீட்டிற்கு தினமும் இல்லையென்றாலும் அடிக்கடி சென்று வந்தான் வெற்றி.
அவன் வரும்போதெல்லாம் அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்து வைப்பாள் வெண்பா.
பெரிய வீட்டிற்கு செல்லவில்லை என்பது மட்டும் குறையாய் இருந்ததே தவிர, தினமும் விசாலாட்சி அழைத்து பேசுவார். சமையலை பற்றிய சந்தேககங்களை அவளிடம் தீர்த்து கொள்வார்.
மீனாட்சி, கதிர்வேல், திருநாவுக்கரசு என யாரேனும் ஒருவர் அவரிடம் தொடர்பு கொண்டு பேசி கொண்டே தான் இருந்தனர்.
அனைவரிடமும் சகஜமாக பேசியதாலே என்னவோ, பழைய கசப்பான விஷயங்கள் எதுவும் அவள் நியாபகத்தில் இல்லை.
முன்பை விட தற்பொழுதெல்லாம் சற்று உற்சாகமாகவே காணப்பட்டாள் வெண்பா.
அன்று அடிவாங்கி காயத்துடன் மருத்துவமனையில் சேர்ந்த கிஷோர் ஒரு வாரம் சிகிச்சையில் இருந்து விட்டு, மீதியை ஊருக்கு சென்றே பார்த்து கொள்கிறேன் என்று அவசர அவசரமாக கிளம்பி சென்று விட்டான். இனி இந்த ஊர் பக்கம் வரவே மாட்டேன் என்று திட்டவட்டமாக இளங்கோவிடம் கூறிவிட்டே புறப்பட்டான்.
இந்த ஒரு மாத காலமும் இளங்கோ, பெரிய வீட்டில் எந்த பேச்சு வார்த்தையும் வைத்து கொள்ளவில்லை.
அவரது யோசனை எல்லாம் மகளை எப்படியாவது வெற்றிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதிலே இருந்தது. அதற்கு என்ன வழி என்பது தான் அவருக்கு சதா யோசனையாக இருந்தது.
ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில், இனிமேலும் அமைதியாய் இருப்பது நல்லதல்ல என்று, மனைவியிடம் இதைப்பற்றி பேசினார்.
“அமுதா, உங்க அம்மா ராகினிக்கும் வெற்றிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொல்லி தானே நம்மளை வர சொன்னாங்க. இப்போ என்ன கிணத்துல போட்ட கல்லு மாதிரி எதுவும் பேச மாட்டேங்கிறாங்க. என்ன இதெல்லாம்? ஏதாச்சும் ஒன்னு சொன்னா தானே இங்கேயே இருக்கிறதா? இல்ல ஊருக்கு கிளம்புறதானு முடிவு பண்ண முடியும்” என கோபமாக கேட்க, அமுதாவோ,
“அது பேசி முடிகிறதுக்குள்ள தானே, கிஷோர் இப்படி பண்ணிட்டான். அதுக்கு நீங்களும் சப்போர்ட் பண்ணீங்க. அதனால தானே வெற்றி நம்பள வீட்டை விட்டு போக சொல்லிட்டான்” என அவரும் பதிலுக்கு பேச, ஓங்கி அவர் கன்னத்திலே அரை விட்டார் இளங்கோ.
“நான் சொல்றதை மட்டும் செய். அதிகபிரசங்கி தனமா பேசின வாயை உடைச்சுடுவேன் பார்த்துக்கோ” என அவர் கோபமாய் கத்த, வலித்த கன்னத்தை பற்றி கொண்டே அவரை பயத்துடன் பார்த்தார் அமுதவல்லி.
“உங்க அமமாவுக்கு போன் போடு நேர்ல பேசணும்னு கோவிலுக்கு வர சொல்லு. கல்யாணத்தை பத்தி பேசு. நீ என்ன பண்ணுவியோ? ஏது பண்ணுவியோ? எனக்கு தெரியாது. கல்யாண தேதியை முடிவு பண்ணிட்டு வர. இல்ல நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என திட்டவட்டமாக கூற, அமுதவல்லிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“என்னங்க, என்ன நீங்க இப்படி சொல்றீங்க? நான் போய் என்னனு பேசுறது?” என அவர் கேட்க,
“என்னத்தையோ பேசு, ஆனால் முடிவு நமக்கு சாதகமா தான் இருக்கனும். உனக்கு உன் பொண்ணு வாழ்க்கை மேலே அக்கறை இருக்குல, அதே போல தானே உங்க அம்மாவுக்கும் அவங்க பொண்ணு வாழ்க்கை மேலே அக்கறை இருக்கும். அதை மனசில வச்சிட்டு முடிவு சொல்ல சொல்லு” என கிட்டத்தட்ட மிரட்டவே செய்தார் அமுதவல்லியை.
“ஏங்க, நீங்க என்ன சொல்றீங்க?” என அவர் அதிர்ந்து கேட்க,
“சும்மா என்கிட்ட கேள்வியா கேட்டுட்டு இருக்காதே!! போய் உங்க அம்மா கிட்ட பேசு அவ்வளவு தான்” என அவர் கேள்விக்கு பதில் சொல்லாது உள்ளே சென்று விட, செய்தறியாது கைகளை பிசைந்து கொண்டு நின்றார் அமுதவல்லி.
error: Content is protected !!