Skip to content
Post Views: 736
“அத்த வேற எதாவது வேலை செய்யணும் மா”என்றாள் பாரதி.
“அம்மாடி மருமகளே நான் உன் புருஷன் இல்லமா நீ ஏன்மா என்ன சுத்திட்டு இருக்க. இந்தா இந்த பிளாஸ்க்க பிடி. போய் நீயும் அவனும் குடிங்க” என்று அவளை அனுப்பி விட்டு, “சப்பா என்ன பிள்ளைங்களோ இதுங்க இரண்டும் கண்ணாப்பூச்சி ஆட நம்ம தான் கிடைச்சமா. அவன் என்னடானா என் பொண்டாட்டிய தூங்க விடாம ரொம்ப வேலை வாங்குறியா நீன்னு சண்டைக்கு வாரான். இவ என்னனா மேல போக சொன்னா போகாம என் பின்னாடி அலையுறா. என்னத்த சொல்ல எல்லாம் அரை மென்டலா இருக்குதுங்க. இதுல இந்த நாலு வானரமும் ஒண்ணா வேற இருக்கு அதுங்க என்ன பண்ண போகுதோ”என்று புலம்பிக் கொண்டு தனது அறைக்கு சென்றார் புஷ்பா.
“ ஐயோ இந்த அத்தை கூட இருந்து எப்படியாவது தப்பிச்சிடலாம் நினைச்சா அவங்க நம்மளை மேல அனுப்புறதே குறியா இருக்காங்க. சும்மா இருந்த மாமா வேற மத்தியானம் தேவையில்லாம பேசி உசுப்பேத்தி விட்டாச்சி. கடவுளே ரூமுக்கு போகலாமா இல்லை இப்படியே திரும்பி ஓடிருவோமா” என்று திருவின் அறை வாசலில் நின்று வாக்கிங் செய்து கொண்டு இருந்தவளை கையைப் பிடித்து இழுத்து ரூமுக்குள் போட்டவன், “என்ன மேடம் மதியம் வாய் கிழிய பேசினீங்க இப்ப என்ன உங்களுக்கு பயம்” என்று ரூம் கதவை பூட்டி விட்டு அது மேல் சாய்ந்து அவளைப் பார்த்து பேசிக்கொண்டு மெதுவாக நெருங்கி வர அவள் அப்படியே பின்னால் நகர்ந்து கபோடில் போய் முட்டி நின்றாள்.
அப்படியே இரு பக்கமும் அவளுக்கு அணை கட்டி பிடித்தார் போன்று இரு கைகளை வைத்து சிறை செய்தவன், “ என்ன செல்லம் நீ தானே மாமா ஒண்ணுமே பண்ணலன்னு மதியம் ஃபீல் பண்ண இப்ப கிட்ட வந்தா இப்படி பயந்து போற. ஆமா கையில என்ன வச்சி இருக்க” என்றான் அவளிடம் இன்னும் நெருக்கமாக நெருங்கிக் கொண்டு
Advertisement
“ மா…மா மா…மா அது பால்” என்று வார்த்தைகள் அவளுக்கு தந்தியடிக்க
“ ஓ ஃபர்ஸ்ட் நைட்ல வேஸ்ட்டா போன பால்ல இப்ப கொண்டு வந்திருக்கியா சரி குடிச்சிட்டு ஆரம்பிக்கலாமா இல்ல பாதியில டயர்ட் ஆகும் போது குடிக்கலாமா செல்லம்” என்றான் அவள் கையில் இருந்த பாலை வாங்கி டேபிளில் வைத்து விட்டு
அவள் அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, “ என்ன பாரு குட்டி எதுக்கு முழிக்கிற. நீதான கேட்ட உன் மாமா அந்த விஷயத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ்ஸா இல்லையான்னு பார்க்க வேண்டாமா” என்றவன் அவள் நெத்தியில் முத்தமிட அப்படியே கண்ணை மூடி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
Advertisement
கிறங்கிப்போய் தனது நெஞ்சில் சாய்ந்து நின்றவளை பார்த்து, “என்ன செல்லம் ஆரம்பிக்கலாமா” என்று முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் முத்தமிட
Advertisement
அதற்கு அவள் பதில் சொல்ல நிலையில் இல்லாததால் கண்களை மூடி சரி என்பது போல் தலை அசைக்க அவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்ட திரு படுக்கையில் கிடைத்தி,
“வரவா வந்து
தொடவா
உன் ஆடைக்கு விடுதலை
தரவா….”
என்று பாடிக்கொண்டு அவளின் இடையில் சொருகிருந்த சேலையை பிடித்து இழுக்க
அதில் மயக்கம் தெளிந்தவள், “ மாமா என்ன பண்ற என்ன விடு” என்று அவனை தள்ளி விட்டு படுக்கைக்கு அந்த புறம் போய் நிற்க
Advertisement
“ஏன் டி நீ தானடி கேட்ட உன் மாமா அந்த விஷயத்துல எப்படின்னு அதான் உனக்கு தியரி படிக்க கஷ்டமா இருக்கும்ல. அதான் மாமா பிராக்டிகல் கிளாஸ் எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் வாடி என் செல்லக்குட்டி” என்று அவன் சேலையை பிடித்து இழுத்தான்.
“ மாமா நீ ஒரு போலீசு இந்த மாதிரி பொறுக்கித் தனம் பண்ணாத” என்று தனது முந்தானையை பிடித்துக் கொண்டு அவனிடம் கெஞ்ச
“ உன்கிட்ட எதுக்குடி மாமா போலீசா இருக்க போறேன். உன்ன பொறுத்த வரைக்கும் மாமா போலீஸ் இல்லடி பொறுக்கி” என்றவன் அவளை தனது கைகளுக்கு கொண்டு வர, “மாமா ப்ளீஸ் மாமா நான் தெரியாம பேசிட்டேன் என்ன விட்டுவிடு” என்று பாரதி அவனிடம் கெஞ்ச
அதனை சிறிதும் தனது காதுகளில் வாங்காமல்,
“இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு…..
இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு
கிள்ளவா
உன்னை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா…”
என்று பாடியே தனது இளமைக்கு தீனியாக அவளின் சின்ன சின்ன கெஞ்சல்களுடன் ருசித்துக் கொண்டான் திரு.
@@@@@@@@@@@@
“ அம்மா நம்ம வீட்ல சரியா நெட்வொர்க் கிடைக்க மாட்டேங்குது. அதனால நான் பக்கத்துல இருக்குற பிரவுசிங் சென்டர் போய் ரிசல்ட் பாத்துட்டு வரேன் மா” என்று வாசலில் நின்று கத்தினான் சுபாஷ்.
“சரிடா செல்லம் பார்த்து போயிட்டு வா. எப்படியும் நல்ல மார்க் தான் வாங்குவ இருந்தாலும் மார்க்கு கம்மியாக வந்தாலும் பீல் பண்ணாதடா சரியா” என்றாள் இந்திரா.
“அதெல்லாம் நீ பீல் பண்ணாதம்மா எப்படி நான் ஸ்கூல் பஸ்ட் வந்துருவேன் பாரு” என்றவன், “ ஆமா அக்காவும் மாமாவும் எப்ப வராங்க. அக்காவுக்கு இன்னைக்கு என்னோட ரிசல்ட்ன்னு தெரியும் தானம்மா” என்றான் ஏக்கமாக
“ அதெல்லாம் அவளுக்கு தெரியும்டா. ஒருவேளை அவளுக்கு தெரியலனாலும் நீ அவகிட்ட கேட்காத டா. அவ குடும்பத்தை பார்க்கிறதுக்கு தான் அவளுக்கு டைம் கரெக்டா இருக்கும்”
“என்னம்மா இப்படி சொல்ற அவ என்னதான் இருந்தாலும் என்னோட அக்கா. அவகிட்ட எனக்குன்னு உரிமை இருக்கு அத யாராலும் என்கிட்ட இருந்து பறிக்க முடியாது”
“நீ சொல்ற உரிமை எல்லாம் அவளுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் தான். அதுக்கப்புறம் நாம எல்லாம் அவளுக்கு இரண்டாம் பட்சம் தான். இருந்தாலும் இன்னைக்கு உனக்காக அவ கரெக்டா 11:00 மணிக்கு வாரேன்னு சொல்லி இருக்கா. நீ போய் பாத்துட்டு உன் பிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தாமா சீக்கிரமா வீடு வந்து சேரு சரியா”
“ சரிமா நான் போய் பாத்துட்டு வரேன்” என்று தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு ரோட்டிற்கு வர
அப்போது அங்கே வந்த கருப்பு நிற காரில் இருந்து இறங்கிய நால்வர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை காரில் ஏற்றுக்கொண்டு பறந்தனர்.
திடீரென்று நடந்த இந்த நிகழ்வை பார்த்து இந்திரா என்ன செய்வது என்று தெரியாமல் சம்மித்து போய் நின்றவள் , “ஐயோ யாராவது வாங்களேன் சுந்தரி அக்கா, சேகர் அண்ணா, சுதா அக்கா யாராவது வாங்களேன். என் பிள்ளையை யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க. ஐயோ சுபாஷ் உன்னை யாருடா தூக்கிட்டு போனது” என்று மார்பில் அடித்துக் கொண்டு சத்தமாகஅழ அடுத்ததாய் வந்து நின்ற கருப்பு நிற ஜீப்பிலிருந்து இறங்கிய முகமூடி அணிந்த ஒரு நபர் இவளையும் ஜீப்பில் தள்ளி கதவை அடித்து விட்டு யாரும் பார்க்கும் முன் ஜீப்பில் ஏறி வேகமாக அந்த கருப்பு நிற காரை பின் தொடர்ந்து சென்றான் அவன்.
இருவரையும் கடத்தி சென்றதற்கு சான்றாக அந்த சைக்கிள் மட்டும் ஆள் நடமாட்டம் இல்லாத நடு ரோட்டில் தனியாக கிடந்தது.
error: Content is protected !!