Skip to content
Post Views: 1,798
எப்படியும் அன்னையிடம் திருமணத்தை பற்றி பேசி தான் ஆக வேண்டும். என்ன இருந்தாலும் மகளின் வாழ்க்கை அல்லவா? பேசி ஒரு முடிவு எடுத்துவிட வேண்டும் என நாச்சியாருக்கு அழைத்தார் அமுதவல்லி.
அமுதவல்லியின் அழைப்பை ஏற்ற நாச்சியார்,
“அமுதா, எப்படி டி இருக்க? இந்த அம்மாவுக்கு இப்போ தான் போன் பண்ணனும்னு தோணுச்சா உனக்கு” என அவர் குறைபட்டு கொள்ள, எதிர்முனையில் இருந்த அமுதவல்லியோ,
Advertisement
“எப்படி ம்மா பண்ண சொல்ற? நடந்த பிரச்சனையில் எனக்கு எதுவுமே ஓடல. யார் பக்கம் தப்பு, யார் பக்கம் சரினு எதையும் முடிவு பண்ண முடியல. நீங்க வேற என் மேலே கோவமா இருப்பீங்களோன்னு பயமா இருந்துச்சு. அதான் ம்மா பண்ணல” என அவர் விளக்கம் கொடுக்க,
Advertisement
“அப்படியெல்லாம் இல்ல டி. ஏதோ கெட்ட நேரம் இப்படி நடந்து போச்சு. உன் மேலே என்ன தப்பு இருக்கு சொல்லு. மாப்பிள்ளை மேலே கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு. எவ்வளவு நாளைக்கு தான் சுமந்துட்டு இருக்க முடியும். போனது போட்டும்னு இருக்கேன். சரி சொல்லு என்ன விஷயமா கூப்பிட்ட?” என அவர் கேட்டதும்,
Advertisement
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ம்மா. போனில் சொல்ல முடியாது. நாளைக்கு கோவிலுக்கு வரீங்களா. அங்க பேசுவோம்” என கூற, நாச்சியாரும் சரியென்று கூறி அலைபேசியை அணைத்தார்.
Advertisement
சொன்னது போலவே, ஊரில் மிகவும் பிரசித்து பெற்ற கோவிலில் அமுதவல்லி நாச்சியாரை சந்தித்தார்.
பொதுவான நலம் விசாரிப்புக்கு பின், நாச்சியார்,
“சொல்லு அமுதா, என்ன விஷயம்? ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் சொன்ன? என கேட்க,
“என்ன ம்மா? நான் என்ன கேட்க போறேன்னு தெரியாதா? என்றவர்,
“என் பொண்ணு கல்யாணத்தை பத்தி மறந்துடீங்களா ம்மா. அவளுக்கும் வெற்றிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்போ அதை பத்தி எதுவுமே பேச மாட்டேன்கிறீங்க.
அவர் வேற சும்மா அடிக்கடி அதையே சொல்லி சொல்லி காட்டுறார். இதுக்கு எதுக்கு நம்மள வர வைக்கணும்? ஒழுங்கா ஊரிலே இருந்து இருப்போம். தேவையில்லாமல் இங்க வந்து அசிங்கப்பட்டது தான் மிச்சம்.
முடிவா என்ன சொல்றாங்க கேளு. இஷ்டம் இருந்தா மேற்கொண்டு பேச சொல்லு. இல்லைனா, நாம கிளம்பலாம். இனி இந்த ஊருக்கே வர தேவையில்லை. எந்த சொந்த பந்தமும் வேண்டாம்னு முடிவா சொல்றார் ம்மா.
எங்கே சொன்னது போல செய்வாரோனு பயமா இருக்கு. என் பொண்ணுக்கு நம்ம வீட்டு சொந்தம் எல்லாம் வேணும். அவ ஒத்த பொண்ணு, வெற்றிக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சா, எல்லாரும் அவளுக்கு துணையா இருப்பாங்க. எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு ம்மா, என் நம்ம வீட்டில் தான் என் பொண்ணு வந்து வாழனும்னு.
நீங்க என்ன ம்மா சொல்றீங்க? முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க ம்மா” என அவர் நாச்சியாரின் கையை பிடித்துகொண்டு அழுதார்.
“அமுதா, என்ன டி இது? அழுதுட்டு இருக்க. யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க. முதலில் அழுறதை நிப்பாட்டு” என அதட்டியவர், அவர் கண்ணீரை துடைத்து விட்டு,
“நான் தானே ராகினிக்கும், வெற்றிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னேன். அதை மறப்பேனா!!
வெற்றி கிட்ட இன்னும் பேசல. ஆனால் உன் அண்ணன் கிட்ட பேசிட்டேன். அவன் வெற்றிக்கு பிடிச்சு இருந்தா, அவனுக்கும் சம்மதம்னு சொல்லிட்டான்.
அந்த சம்பவம் நடந்ததுலேருந்து, வெற்றி கிட்ட பேசவே எனக்கு தயக்கமா இருக்கு. அவன் எப்பவும் போல தான் இருக்கான். எனக்கு தான் ஒரு மாதிரி இருக்கு.
அன்னைக்கே நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைகல அப்பத்தா. இனி இதுபோல நடந்துக்காதீங்கனு சொன்னான். அப்படி சொன்னத்திலிருந்து முன்னே போல என்னால் அவன் கிட்ட பேச முடியல” என நடந்ததை அவர் விவரிக்க, அமுதவல்லிக்கோ தன் நோக்கம் நிறைவேறாது போல என்ற எண்ணம் வந்தது.
“என்ன மா, இப்படி சொல்றீங்க. அப்போ வெற்றி கிட்ட பேச முடியாதா? இந்த கல்யாணம் நடக்காதா?” என கவலையுடன் கேட்க,
“ஏன் டி அபசகுணமா பேசுற. நான் வெற்றி கிட்ட பேசுறேன். அவனை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீ தைரியமா போ. வர வெள்ளிக்கிழமை நம்ம அம்மன் கோவிலுக்கு நம்ம சொந்த பந்தம் எல்லாரையும் வரவச்சு கல்யாணத்தை பத்தி பேசி முடிவு பண்ணுவோம்.
எல்லார் முன்னாடி பண்றது தான் நல்லது. நீ உன் வீட்டுக்கார், ராகினியை கூட்டிட்டு வந்துடு. நானும் எல்லாரையும் வர வைக்கிறேன். முடிஞ்சா அங்கேயே தட்டு கூட மாத்தி உறுதி படுத்திடுவோம்” என நம்பிக்கை ஊட்ட, அமுதவல்லிகோ முகம் மலர்ந்து போனது.
“உண்மையாவா ம்மா. நீ சொன்னது எல்லாம் நடக்குமா?” என அவர் சந்தேகமாய் கேட்க,
“கண்டிப்பா நடக்கும். அன்னைக்கு என் பேரனுக்கு கல்யாணத்தை முடிவு பண்ணாம விட மாட்டேன் பாரு” என உறுதியாக கூறியவரின் வார்த்தைகள் அமுதவல்லிக்கு நிறையவே நம்பிக்கை ஊட்டியது. சந்தோஷமாகவே அங்கிருந்து புறப்பட்டார் அமுதவல்லி.
வீட்டுக்கு வந்த நாச்சியார் வெற்றியிடம் இதைப்பற்றி பேச அவனுக்காக காத்து கொண்டிருந்தார்.
வேலை முடிந்து வந்த வெற்றி உண்டு விட்டு உறங்க அவனறைக்கு வந்தவன், கட்டிலில் அமர்ந்து கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருந்தான். அந்த நேரம் அவனின் அறைக்கு வந்த நாச்சியார்,
“உள்ளே வரலாமா ராசா” என கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தவன்,
“என்ன அப்பத்தா? என் ரூமுக்கு வர எதுக்கு பெர்மிஷன்லாம் கேட்டுட்டு. உள்ள வாங்க” என அழைத்தான்.
கட்டிலில் அவனுக்கு எதிரே வந்து அமர்ந்தவர்,
“சொல்லுங்க அப்பத்தா. இந்த நேரத்தில் வந்து இருக்கீங்கன்னா கண்டிப்பா, முக்கியமான விஷயமா தான் இருக்கும். சொல்லுங்க என்ன விஷயம்?” என கணக்கினை பார்த்து கொண்டே கேட்க, அவரோ,
“ஆமாம் ராசா, முக்கியமான விஷயம் தான். அதேசமயம் ரொம்ப சந்தோஷமான விஷயமும் கூட” என்றதும் அவனோ,
“அப்படி என்ன சந்தோஷமான விஷயம் அப்பத்தா” என கேட்க,
“எல்லாம் உன் கல்யாணத்தை பத்தி தான் ராசா” என்றார் புன்னகையாக.
“கல்யாணமா?”
“ஆமாம் ராசா. உனக்கும் வயசாகிட்டே போது. காலா காலத்துலே கல்யாணம் பண்ணிட்டு, பிள்ளை குட்டியை பெத்துகிட்டா தானே நல்லது.
அதுக்கு தான் அப்பத்தா உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். பொண்ணு கூட பார்த்துட்டேன், எல்லாம் நம்ம ராகினி தான்” என படப்படவென அனைத்தையும் கொட்ட, அவனிடம் எந்த சலனமும் இல்லை.ஒரு சிறு அதிர்வு கூட இல்லாமல் அவரது பேச்சை கவனித்தான்.
“ராகினி பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல. உனக்கே தெரியும். நல்ல படிச்சவ, நாகரீகம் தெரிஞ்சவ. அவ உனக்கு பொண்டாட்டியா வந்தா, எல்லா வகையிலும் உனக்கு பொருத்தமா இருப்பா. வர வெள்ளிக்கிழமை, நம்ம சொந்தகாரனுங்க முன்னாடி பேசி கல்யாணத்தை முடிவு பண்ணிடுவோமா பா” என்றவர் அவனை பார்க்க, அவன் தன்னுடைய கோப்புகளிலே கவனத்தை செலுத்தி கொண்டிருந்தான்.
“என்ன பா, எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்லிட்டு இருக்கேன். நீ எதுவுமே சொல்லாமல் இருக்கியே! என அவர் குறைபட்டு கொள்ள,
“வேற என்ன என்னை சொல்ல சொல்ற அப்பத்தா. எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுற. நல்ல விஷயம் தானே|| அலட்டி கொள்ளவே இல்லை அவன்.
அப்போ உனக்கு ராகினியை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? என மகிழ்ச்சியுடன் கேட்க, அவனோ,
“அப்பா, அம்மா என்ன சொன்னாங்க?” என்று திருப்பி கேட்டான்.
உனக்கு சம்மதம்னா அவங்களுக்கும் சம்மதம் தானா? உன் முடிவு தான் முக்கியம் சொல்லிட்டாங்க. நீ என்ன பா சொல்ற?” என கேட்க, சிறிது யோசித்தவன்,
இப்பவே சொல்லணும்னு இல்லைல, வெள்ளிக்கிழமை என் முடிவை சொன்னால் போதுமா?” என கேட்க,
“சரி ராசா, அன்னைக்கே உன் முடிவு சொல்லு . நீ சொன்னதும் உடனே பாக்கு வெத்தலை மாத்தி தேதியை குறிச்சுடுவோம்.
“சரி அப்பத்தா, அப்படியே பண்ணிடுவோம். என கூற, நாச்சியாருக்கோ சந்தோஷம் தாளவில்லை.
“என் ராசான்னா ராசா தான். சீக்கிரமே கல்யாண கோலத்தில் உன்னை பார்க்கணும். என் தாய் மீனாட்சி எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சு கொடுப்பா” என சந்தோஷத்தில் அவனுக்கு நெட்டி முறித்து அங்கிருந்து வெளியேற, செல்லும் அவரையே பார்த்தவனின் மனதில் ஏகப்பட்ட திட்டங்கள் அணிவகுத்து நின்றன.
என்ன தான் செய்ய சொல்கிறாய் என்னை?
சட்டென்று திரண்டு நின்ற
உன்ன நினைவுகள்
உன் முகத்தை காண ஏங்க வைக்கிறதே!!
வாய்ப்புகள் குறைவு என
அப்படி சொல்வேன் நான்
கனவுகள் தொடரும்…
error: Content is protected !!