Skip to content
Post Views: 1,295
அந்த அசிட்டென்ட் டாக்டரை காண வென்று தனியாக ஒரு ரூமில் அவர்கள் வெயிட் செய்ய,
அங்கே சற்று நேரம் கழித்து இரு இளம் டாக்டர்கள் வந்தனர்.
அதில் அவள் மகன் வயது தான் இருக்கும் இளையவன், அவள் முன் அமர்ந்து கேள்வி கேட்க ஆரம்பிக்க, அதை மற்றொரு டாக்டர் குறிப்பாய் சேமிக்க பக்கத்தில் நிற்க,
அவள் முன் அமர்ந்தவன், ஒரு நிமிடம், அவளை நேராக நோக்கியபின், சினேகமாய் சிரித்தபடி ” ஹாய் நான் கைலாஷ், என்னை ஞாபகம் இருக்கா, ” என்று சற்று நிறுத்த….
அவளுக்கு அவனை அடையாளம் தெரியாமல் முழிக்க, அதற்குள் பின்னால் வந்த அவள் கணவர் சட்டென்று அடையாளம் கண்டு ” இது ஹேமா பையன் கைலாஷ்” என்று அவளுக்கு விளக்க,
Advertisement
இப்போது அவளுக்கு புரிப்பட்டது , பிரைமரி படிக்கும் போது,மகனை பள்ளியில் இறக்கி விட்டு, மற்றும் மதியம் போய் பிக்கப் செய்யும் போது,காத்திருக்கும் வேளைகளில், அது போல் வரும் வேறு சில, மம்மிஸ் கூட, இயல்பாய் சிநேகம் ஏற்பட, ஒரு ஹாய் பை சொல்ல, பின்னே நாள் செல்ல செல்ல, நெருங்கி பழகி,மொக்கை போடுவது போய், யாராவது ஒருத்தர் காரில் அமர்ந்து, நன்றாக கணவர், மாமியார், நாத்தனாரை, அலசி பிழிய, என்று கழிந்த பொழுதுகள் ஞாபகம் வர…
சற்றே சுதாரித்து “அம்மா நல்லா இருக்காங்களா, வயசாயிட்டுது, பல்பு எரிய கொஞ்சம் நேரம் ஆகுது ” என்று சிரிக்க
அவனும் சிரித்தபடி, ” அம்மா யூ எஸ், போயிருக்காங்க, மேகா, அங்க யூ ஜி பண்ரா ” என்று முடிக்க
பரிட்சை சமயங்களில் அவர்கள் அவன் தங்கை வெளியே வர வெயிட் செய்யும் பொழுதுகளில், சிறு பையனாய் அவன் மொட்டு போல் காரில் சமர்த்தாக உட்கார்ந்து படிக்கும் காட்சி அவள் கண் முன்னே விரிய,உலகம் எத்தனை சிறியது… என்பது எவ்வளவு உண்மை, என்று தோன்றியது,
ஹையர் செகண்டரி ஸ்கூல் போது வேறு இடம் இவர்கள் மாற, விட்டு போன தொடர்பு, இப்போது வளர்ந்து அவள் முன்னால் கம்பீரமாக அமர்ந்து அவளை கேள்வி கேட்கிறது!
Advertisement
” அம்மாவை கேட்டேன்னு சொல்லு ” என்று ஒரு வாறு முடிக்க
Advertisement
” சொல்லுங்க உங்களுக்கு என்ன கம்பளைண்ட் ” என்று மென்மையாய் அவன் விசாரிக்க
அவள், அவள் கால் வலி,என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியாமல் திணறியது, கடைசியாய் வாஸ்குலர் டிசிஸ், என்று வந்து நிற்பது, என்று சகலமும் சொல்லி முடிக்க, கூடவே அவளுக்கு ஏற்பட்ட சந்தேகம் ஆன, தன் வாழ்க்கை முறையில் குறைபாடாக இது வந்திருக்குமோ, கணவர் சொல்வதை போல் அதிகம் கவலை பட்டு இந்த வியாதியை இழுத்து விட்டுக்கொண்டாளா, என்று அவன் தெரிந்தவன் என்பதால் தைரியமாய் கேட்க,
” நோ, நோ, இது நீங்க செய்த எந்த செயலாலும் வருவதல்ல, நீங்க நினைச்சா தடுக்கவும் முடியாது ” என்று அழகிய ஆங்கிலத்தில் பதில் கூறி அவள் நெஞ்சில் பாலை வார்க்க, திரும்பி அவள் கணவனை அர்த்தமுடன் பார்த்தாள்!
Advertisement
எல்லோரும் ஒரு திசையில் செல்ல, ஏனோ அவள் கணவர் மட்டும் வேறு திசையில் சென்றார், இருந்தும் டாக்டர் முருகன் அடித்த வேப்பிலையில், சற்றே தெளிந்து, கிட்னி பயயாப்ஸிக்கு, அதில் கைதேர்ந்த, தன் நண்பர் ஒருவரிடம், அப்பொயின்மென்ட், வாங்கி இருக்க, அது மறுநாள் என்று முடிவாக, இன்று இங்கே இவர்களை பார்க்க, நேரடியாக, டாக்டர் முருகன், பேசி முடித்திருக்க, நேரம் வளர்த்தாமல், வந்து நின்றனர்.
” உங்க டீடெயில்ஸ் நான் குறிச்சிட்டேன், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சீப் உங்களை பார்ப்பாங்க ” என்று இனிய அதிர்ச்சியை கொடுத்து அவன் விலக,
அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது, அப்பாயிண்ட்மென்ட், இல்லை என்ற நிலை மாறி அவரை பார்க்க முடிந்ததில், ஆசுவாசமாக வெளியில் வந்து அமர,
அதே ஹாஸ்பிடலில் வேறு பிரிவில் சர்ஜன் ஆக பணி புரியும், அவள் கசின் டாக்டர் கணேஷ் , அவர்கள்,அங்கே வந்திருப்பதை அறிந்து, வந்து சந்தித்து, தானும் ஒரு வார்த்தை சொல்லி இருப்பதாக கூறி , டாக்டரை பார்த்த பின், தன்னிடம் விவரம் பகிர சொல்லிவிட்டு நகர,
பெரிய திருவிழா கூட்டம் போல், அங்கு கூட்டம் இருந்தது, வைத்தியம் பார்க்க வந்த நோயாளி, அவர் கூட துணைக்கு ஒருவரோ, இருவரோ வந்து இருக்கையை நிரப்பி இருக்க, எழுதப்பட்ட விதியோ, நோயாளி மட்டுமே அமரலாம், கூட வந்தவர் நிற்க வேண்டும் என்பதே, அதை ஓட்டி அவர்கள் அவ்விடம் வர, ஒருவர் பவ்வியமாக எழுந்து இடம் கொடுக்க,
காலியான அந்த இருக்கையில் அவள் சென்று அமர, அவளை கொஞ்சம் ஏற, இறங்க பார்த்தது பக்கத்தில் உட்கார்ந்திருந்த சனம்!
அவர்கள் வயதில் முதிர்ந்த தன் தாய்க்கு தான் ஏதோ கோளாறு என்றும், அவர் நின்று கொண்டு இருக்க இவள் உட்காருவானேன் என்ற தவறான புரிதலில், சற்றே முறைக்க…..
” எனக்கு தான் பிரச்சனை ” என்று இவள் கூற சற்று நிலைமை இலக்குவானது
சற்று நேர காத்திருப்புக்கு பின் அவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர்.
இந்த நேப்ரோலசிஸ்ட் டாக்டர் வேலாயுதமும், டாக்டர் முருகனை, போல், வயது முதிர்ந்த அனுப்பவசாலியாக இருந்தார்.பின் வரும் நாட்களில் அவள் தாய் இவரை தெய்வமாக கொண்டாட போகிறார் என்று அப்போது தெரியவில்லை யாருக்கும்!
” சொல்லுங்கம்மா என்ன பண்ணுது உங்களுக்கு ” என்று கனிவுடன் விசாரிக்க…
அவள் ஆவலுடன், “கொஞ்ச நாட்களாக, கால் வலி டாக்டர், வாக்கிங் போனதால வந்ததுன்னு நினைச்சிட்டேன் ” என்று சொல்லும்போதே அவர் ஒரு சின்ன புன்னகையுடன் இருக்காது என்பது போல் தலை அசைக்க…
இவளும் ஒரு புன்னகையுடன் ” அது காரணம் இல்லன்னு இப்போ தெரியுது ” என்றுவிட்டு, தொடர்ந்து அவர்கள் காரணம் கண்டு பிடிக்க முடியாமல் விழித்தது, டாக்டர் முருகன் வழிகாட்டி இங்கு வந்து சேர்ந்திருப்பதில் முடிக்க
“வாங்க, பி பி பார்க்கலாம்,இப்படி வந்து படுங்க ” என்று பக்கம் இருந்த படுக்கையை காட்ட,
இவள் அதில் சென்று அமர, அப்படியே இருக்குமாறு சைகை செய்துவிட்டு, அவர் ஸ்டேத் மாட்டி அருகில் வர, அவளோ என்ன பார்த்து சொல்வாரோ என்ற எண்ணத்தில் பதட்டமாக இருக்க, கையில் துடிக்கும் நாடியில் ஸ்டேத் வைத்த அவர், மறுபடி அவளை பார்த்து புன்னகைத்து,
” என்ன பயம் இப்போ, பல்ஸ் இப்படி துடிக்குது, பி பி தானே பார்க்க போறேன் ” என ,
அவள் பார்வை கணவரிடம் சென்றது, பார் இதை இதை தான் உன்னிடம் எதிர்பார்த்தேன் என்பது போல…
அவர் மேலும் பேசி அவளை சகஜமாக்யபடி பரிசோதனை செய்து முடித்து…
” கிட்னி கிரியாட்டினின் சற்று கூட இருப்பதால், ஒரு பயாப்சி, செய்து பார்த்துவிடலாம் எங்க “
இவள் அவசரமாக ” என் கணவருக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம், இந்த பரிசோதனை மேற்கொள்ளலாமா” என்று கேட்க…
பொதுவாக அவர்கள் அதே மருத்துவமனையில் தான் அதை செய்ய பரிந்துரைப்பார்கள், ரிசல்ட்ஸ் தரம் பற்றிய அவர்கள் நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம் என்பதால்,
ஆனால் அவர் அப்படி எதுவும் சொல்லாமல், டெஸ்ட் ரிசல்ட்ஸ் பரிசோதனை பண்ணும் லேப் மட்டும் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல…
இப்போது இவள் கணவர், அந்த டாக்டரும் அதே லேப்பில் தான், பரிசோதனைக்கு தருவார் என தகவல் தர,
அந்த விஷயம் அத்துடன் முடிந்தது, அந்த முதல் கட்ட வைத்தியத்தில், அவரின் அந்த கனிவான புரிதல் அவளுக்கு ஆனந்தத்தை கொடுத்தது, கணவரை தவிர மற்ற எல்லா விஷயமும் சரியாக செல்லும் திருப்தி!
இந்த விவரங்களை அவள் கசினிடம் பகிர்ந்துவிட்டு, இவர்கள் கிளம்ப…
” நீங்க ஏற்கனவே, டாக்டர் முருகன் சொல்ல, பயாப்சி பிக்ஸ் பண்ண விஷயம் ஏன் சொல்லல, நான்ல தைரியமா சொன்னேன் ” என்று அவரை அவள் சீண்ட
” டாக்டர்ஸ், அவங்க நம்பிக்கைக்கு உகந்த, டீம் ஒன்னு வச்சுருப்பாங்க, அவர்களுக்குள், நல்ல புரிதல் இருக்கும், இவர்களின் நோக்கம் புரிந்து டெஸ்ட் செய்வார்கள், அதில் நாம் தலையிட்டு மாற்றுவது, அவர்களுக்கு பிடிக்காமல் போகலாம், அவர் மேல் நமக்கு, நம்பிக்கை இல்லை என்று கூட எடுக்கலாம் ” என்று அவர் விளக்க
“இவ்வளவு விஷயம் இருக்கா இதில், நான் அவர் உங்கள் நண்பர், கூடவே அதில் பிரசித்தி பெற்றவர்ன்னு சொன்னிங்க, அதை ஏன் மாத்துவானேன்னு, அப்படி சொல்லிட்டேன், கொஞ்சம் தயக்கமாக தான் இருந்தது, ஆனா அதை அவர் நல்ல முறையில் எடுத்துக்கிட்டார், எனக்கு புடிச்சிருக்கு அது ” என்று அவள் சிலாகிக்க, எல்லோரும் அதை ஆமோதித்தனர்.
இருந்தும் அந்த பரிசோதனை பற்றி லேசாய் பயம் இருந்தது, அப்படி எதுவும் அவள் பயப்பட தேவை இல்லை, என்பதை மறுநாள் கண்டாள்.
மகனின் முதல் பிறந்தநாள் வந்தவுடன், அவர்கள் வழக்கப்படி, வைத்தீஸ்வரன்கோயில் சென்று மொட்டை போட்டு, குல தெய்வம், அங்காள பரமேஸ்வரி கோயிலில், அபிஷேகம் செய்து காது குத்தி, அப்படியே இஷ்ட தெய்வம் ஆன, திருக்கடையூர் அபிராமி கோவிலில், ஆயுஷு ஹோமமும் செய்தனர்.
பின் வீட்டில் பெரியவர்கள், நண்பர்கள் சூழ, முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட்டங்களை முடித்து வைத்தனர்.
நாட்கள் வெகு வேகமாக உருண்டு ஓட, மகனுக்கு இரண்டரை வயது ஆக,
ப்ரீ கே ஜி கான்செப்ட் அப்போது தான் தலை தூக்கி இருக்க, அவளுக்கு சின்ன குழந்தையை, அதில் சேர்த்து கொடுமை செய்ய மனதில்லை.
கணவனுக்கு, ஸ்கூல் செல்வதற்கு இது ஒரு பயிற்சி போல் ஆகும் என்பது எண்ணம், அவர்கள் முடிவு செய்திருந்த, ஸ்கூலில் அடுத்த வருடம் , அவன் வயது மூன்று பூர்த்தி ஆனபின் தான் சேர்க்க முடியும் என்றாலும், அப்போது அவர்கள் எல் கே ஜி கூட அரை நாள் வைக்காமல் முழு நாளும் வைத்திருந்தார்கள்.
ஸோ, அதற்கு ஒரு பயிற்சி போல், சில மணி நேரம் பக்கத்தில் ஒரு வீட்டில் வைத்து நடத்திய பிளே ஸ்கூலில் அவனை சேர்க்கலாம் என்று பேசியே அவன் அவளை கரைக்க….
அதே தெருவில் சற்று தள்ளி இருந்த ஒரு வீட்டில் இருந்த ” சட்னி ” ( காரண பேரோ, குழந்தைகளை நசுக்குவது )என்ற பிளே ஸ்கூலில் அரை மனதாக சேர்த்தாள்.
முதல் நாள், தாயுடன் சேர்ந்து இருந்ததால், பிரச்சனை இல்லை.
மறுநாள் அவனை கிளாசில் உட்கார வைத்து விட்டு அவள் சற்றே அகல, அலறிக்கொண்டு அவள் பின்னே அவன் ஓடி வர….
மறுபடி அவனுடன் சற்று நேரம் இருந்துவிட்டு , மிஸ் ” நீங்கள் ஆயாவிடம் விட்டு செல்லுங்கள், அங்கிருந்து என்னை தேடி வந்தாலே அவனுக்கு ஆசுவாசமாக இருக்கும் ” என்று கூற….
அதன்படி ஆயா போக்கு காட்ட, ஓட்டமும் நடையும் மாக அவனை விட்டு வரும்போது வருத்தமாக தான் இருந்தது.
ஆனாலும் மிஸ் கூறியபடியே, அவன் ஒரு படிமானதுக்கு வர, ஒரு மூன்று மாதங்கள் அங்கே சென்றபின், வயத்து கோளாறு வந்து அதற்கும் ஒரு முடிவு வந்தது, ஆனாலும் கணவனின் கணிப்பு படி ஸ்கூல் போகும் பழக்கமும், மாலையில் வீடு திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையும் மகன் மனதில் தோன்றி, மெயின் ஸ்கூல் அனுப்புவது சிரமம் இன்றி இருந்தது.
error: Content is protected !!