காலையில் உணவு எடுத்துக்கொண்டபின், பயாப்ஸி செய்ய வந்து சேர சொல்லி இருந்தார்கள்.
காலையில் இரண்டு இட்லியை முழுங்கியபின், மருத்துவமனை வந்து சேர, சற்று நேரத்தில், கணவரின் நண்பர் டாக்டர் சண்முகம் வர………
” சாப்பிட்டீங்களா ” என்று விசாரித்து,
அதை உறுதி செய்தபின்” இன்னும் அஞ்சு ஆறு மணி நேரம் ஒன்னும் சாப்பிட முடியாது, இப்போது நான் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, வலி மறக்க ஊசி போட்டபின், சின்ன ப்ரோஸிசர் தான், செய்துடலாம் ” என்று அவளுக்கு விளக்க..
குப்புற படுத்திருந்த அவளிடம் ” உங்க சன் கல்யாணம் நல்லா நடந்ததா, நான் வெளியூரில் இருந்தேன் அதான் அட்டென்ட் செய்யலை ” என்று பேச்சு கொடுக்க
Advertisement
அதற்கு அவள் பதில் கொடுத்த வேளையில், ஸ்கேன் செய்வதை உணர, அப்படியே அவருக்கு பதிலும் கொடுக்கும் போதே, சிறு அழுத்தத்தை உணர்ந்தாள்,
” தட் இஸ் ஆல் மா, டன் ” என்று அவர் வேலை முடிந்தது என்று கோடி காட்ட
அசந்து போனாள் அவள், முதுகின் வழியே துளைத்து, சிறு ஊசி மூலம், துளி அளவு, கிட்னி சதையை எடுப்பது தான் பயாப்ஸி,
Advertisement
இதை அவள் விதம் விதமாக கற்பனை செய்து, துளி சதையை எடுத்தபின், தன் கிட்னி ரத்தகலரியாய் ஆகிவிடும், என்றெல்லாம் அவள் ரகசியமாய், மண்டை காய,
Advertisement
இவரோ, கண் மூடி திறக்கும் நொடியில் அதை முடிக்க, சும்மா ஒன்றும் அதில் பிரசித்தி பெற்றவர் என்று பெயர் எடுக்கவில்லை, என்று அவரை மனதில் பாராட்டிக்கொண்டே, வெளிப்படையாய் நன்றியும் சொன்னாள்.
இரண்டு நாட்களில் அதற்கு ரிசல்ட் வர, ஒரு வழியாய், அவள் இத்தனை நாள் அனுபவித்த வேதனை, டாக்டர் முருகன் சந்தேகப்பட்டது போல் ‘வாஸ்குளைடிஸ் ‘ தான் என்று தெரிந்தது.
கையோடு அதை கொண்டு டாக்டர் வேலாயுதத்தை, பார்க்க, அன்றே அங்கு அட்மிட் செய்தார்.
Advertisement
மறுநாள் காலையில் ஊசி மருந்து ட்ரிப்ஸ் மூலம் மெதுவாக ஏறி முடிக்க, முழுதாய் ஒரு பொழுது ஆனது.
அன்று இரவும் அங்கே இருக்குமாறு அவர் பணிய,
மறுநாள் காலை விடியலே மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்த்தது.
மிகவும் சாதாரணமாக எழுந்து, வலி இல்லாமல் அவள் ரெஸ்ட் ரூம் சென்று வர, டாக்டர் உட்பட அனைவர்க்கும் நிம்மதி ஆனது.
” ஒரு டோஸ் இப்போ கொடுத்து இருக்கேன், கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இந்த வியாதி உங்கள் உடம்பில் இருந்ததால், இன்னொரு டோஸ் ஒரு மாதம் கழித்து தரலாம், இந்த இடைப்பட்ட ஒரு மாத காலம், நீங்கள் வெகு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்”.
” உங்கள் உடம்பில் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாய் இருப்பதால், வியாதி தொற்று, சுலபமாய் நடந்துவிடும், நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், வீட்டிலும், மாஸ்க் போட்டு கொண்டு, கவனமாக இருங்கள் ” தெளிவாக அறிவுரை சொல்லி வீட்டிற்கு அனுப்பினார்.
அவள் கூடவே அவளுக்கு துணையாக அம்மாவும் தங்கி,
மறுபடியும் ஒரு சிறு குழந்தையை பார்த்துக்கொள்வது போல் அவளை பார்த்துக்கொள்ள,
தன்னால் முடிந்த அளவு கணவரும் இப்போது அவளை பார்த்துக்கொண்ட போதும், அவர் மருத்துவர் என்ற காரணத்தால், நோயாளிகளுடன் இருந்து விட்டு வரும் அவரிடம் இருந்து அவளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், வேறு வேறு அறையில் இருந்துகொண்டனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மாவுடன் படுத்து உறங்குவதும் வெகு இதமாக இருந்தது.
இரவில் நீண்ட நேரம் கதை பேசிவிட்டு, அம்மாவின் மெல்லிய வருடலுடன் தூங்குவது பரம சுகமாய் இருந்தது.
கட்டுப்பாடான உணவு என்ற போதும், அம்மாவின் கை பக்குவம் அமிர்தமாய் இருந்தது, அந்த முதிய வயதில் அவர்களை தொல்லை செய்வது சற்று மனதுக்கு நெருடல் என்ற போதும், அம்மாவே சொல்வது போல், அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, நீ உடம்பு தேறி வந்து உன் குடுத்தனத்தை எடுத்து கொள், அது போதும் எனக்கு, என்றுவிட,
கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் அவளும் ஜாக்கிரதையாய் இருக்க, பதினைந்து நாள் ஓடி மறைந்தது. அது அவள் நிம்மதியாக இருந்த கடைசி பொழுது என்றும் ஆனது .
இப்போது இடையில் ஒரு முறை டாக்டர் தன்னை வந்து பார்க்க சொல்லி இருந்தபடி போய் பார்க்க,
சோதனை செய்து பார்த்துவிட்டு, ” ஷி இஸ் பைன் ” என்று முதுகில் தட்டி கொடுத்து, அடுத்து பத்து நாட்கள் சென்றபின் தன்னை வந்து பார்க்குமாறு கூறி அனுப்ப….
எல்லோரும் நிம்மதியாக வீடு வந்து சேர, அவர் கொடுத்த தைரியத்திலும், தன் உடம்பும் சற்று தேறி இருந்ததால், கொஞ்சம் பிரீயாக , தன் வேலைகளை சந்தோசமாக செய்து கொண்டு அவள் இருக்க…
அவள் கணவருக்கு சளி பிடித்தது, நெஞ்சு சளியும், பயங்கர இருமலுமாய் அவர் இருக்க, அவர் இருக்கும் திசை பக்கம் அதிகம் அவள் போகாமல் இருந்தாலும், முகமூடி போட்டுக்கொள்வதில் சற்று அசைட்டையாக இருக்க, அதற்கு உண்டான விலையை கொடுத்தாள்.
இரண்டு மூன்று நாட்களில் அவளுக்கு வறட்டு இருமல் வர, அது தொடர்ந்து , இரண்டு மூன்று நாட்கள் இருக்க, இனி தாமதிக்க முடியாது என்று டாக்டரை தொடர்பு கொள்ள…
அவர்கள் கோவிட் டெஸ்ட் எடுக்க சொல்லி பரிந்துரைக்க…
இவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது, கோவிட் காலங்களில் கூட வெகு ஜாக்கிரதையாய் இருந்து, இரண்டு டாக்டர்கள் இருந்த வீட்டில் தப்பி பிழைத்து இருந்த அவளுக்கு இப்போது, நாட்டிலே அது பரவலாக இல்லாத போது எப்படி வரும் என்ற கேள்வி எழ….
சந்தேகம் வேண்டாம் அவளுக்கு கோவிட் தான் என்று வந்தது ரிசல்ட்..
அவள் கணவருக்கு வந்தது கோவிட், சின்ன வியாதியை கூட எதிர்க்க சக்தி இல்லாத அவள் உடல் கோவிடை வைத்துக்கொண்டு என்ன செய்யும்!
உடனே சென்று மருத்துவரை சந்திக்க, “நன்றாக உன் கணவரை மொத்தினியா ” என்று கேட்டப்படி மருத்துவர் அவளை கோவிட்டுக்கு மருந்து எடுத்துக்கொண்டு, மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டில் இருக்க பணிந்தார்.
பின்னே, ஒரு ஒரு நாளாக ராக்கெட் கவுண்ட் டோவ்ன் போல் அவள் எண்ணி கொண்டிருக்க, கடைசியில் ஊசி போட இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், த்து போல ஒரு பின்னடைவை, யாரும் எதிர்பார்க்கவில்லை.
அதிலும் சாதாரமான சளி ஜுரம் என்று இல்லாமல், தி கிங் ஒப் இன்னபிக்ஷன் கோவிட் தாக்குவது என்றால்….
சென்னையில் மறுபடி லேசாக கோவிட் தலை தூக்கி இருக்கிறது என்பதே அவளுக்கு செய்தி!
பொதுவாக இது போன்ற வைரஸ் தொற்று ஒரு முறை வந்துவிட்டால், ஹெர்ட் இம்முநிட்டி (herd immunity ) எனப்படும் தொற்றை எதிர்க்கும் சக்தி ஓரவிற்கு எல்லோரிடமும் இருக்கும், அதனால் அலை போல் அது பரவாது என்ற போதும், வைரஸ் சற்றே உரு மாறி மச்சம் தாடி வைத்து கொண்டு வரும் என்பதால் சிலருக்கு பாதிப்பு ஏற்படும், அப்படியே அமிங்கியும் போய்விடும், ஆனால் இவளை போன்று எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், நன்றாவாக மாட்டி கொள்வார்கள்.
மறுபடி கோவிட்கான மருந்தை ஏற்றி கொள்ள, மருத்துவமனை சேர்ந்து, அவளுக்கு என்று ஒதுக்கப்பட்ட தனி அறையில் தனியே இருக்க பழகி கொண்டாள்.
டாக்டர் வேலாயுதம், காலை மாலை இரு வேளையும் அவளை வந்து, அவள் நலம் விசாரித்து, தவறாமல் ஸ்டேத் வைத்து அவள் நுரையீரல் நிலைமையையும் கவனித்து வந்தார்.
அது போக அந்த பிரபலமருத்துவமனை, சுத்தத்திற்கு பேர் போனது என்பதால், அடிக்கொருவர் வந்து சுத்தம் செய்தனர், காலை மாலை இருவேளை கூட்டி, மாப் செய்து, ரெஸ்ட் ரூம் கிளீன் செய்ய ஒரு டீம், அவர்கள் சரியாக செய்கிறார்களாஎன்று கண்காணிக்க ஒரு படை, பெட்ஷீட் மாற்றி வைக்க ஒரு தனி டீம், மற்றும் உணவு அது தனி துறை.
தினமும் ஒருவர் வந்து மறுநாளுக்கான, உணவு பட்டியலை கூறி அவள் விருப்பம் அறிந்து கொண்டு செல்ல, அதை அவர்கள் நியூட்ரிஷன் டீம் சரிபார்த்து அவளுக்கு தேவையான சத்துக்கள் அடங்கிய பிரத்தியோக உணவு அவளை நாடி வரும், அதுவும் ஒரு ஆட்டவணைப்டி…
காலையில் ஆறுக்கு காபி, எட்டு மணிக்கு பிரேக் பாஸ்ட், இட்லி தோசை, பொங்கல், இடியப்பம், பேசறட் என்று ஏதோ ஒன்று…, பதினோரு மணிக்கு சூப், மதியம் இரண்டு கூட்டு கறி, சப்பாத்தி சாதம், மற்றும் ஒரு கப் பழம், மாலை காபி சுண்டல், இரவு உணவு மற்றும் பால்.
இதற்கு இடையில் நர்சிஸ் அவ்வப்போது வந்து, மருந்து கொடுப்பது, அவள் வைடல்ஸ் செக் செய்வது என்று…
ஒருவர் மாற்றி ஒருவர் அவ்வப்போது வர, தனியாக இருக்கும் உணர்வின்றி, சாதாரணமாக கழிந்தது பொழுது.
அதையும் மீறி போர் அடித்தால், டிவியில், ஆம் அதும் இருந்தது, பழைய படம் என பொழுது கழிய, ஐசோலேஷன், நாளையுடன் முடிகிறது எணும் நிலையில், மறுபடி ஒரு பின்னடைவு வந்தது.
ப்ளூ கலர் ஷர்ட் அண்ட் குட்டி பிளாக் பாண்ட், கழுத்தை சுற்றி ஒரு குட்டி போ டை, என்று மகனை கிளப்பிவிட்டு அவள் ரசிக்க… இன்று அவர்கள் பிளே ஸ்கூலில் குரூப் போட்டோ, எடுக்க போகிறார்கள், அதற்கு தான் இந்த அலங்காரம்.
தள்ளி நின்று அவனை ரசித்துவிட்டு, அவனை நெட்டி முறிக்க…
அவசரமாய் அவள் அருகிக் வந்து அவள் நெஞ்சில் கை வைத்து, அவன் நெஞ்சிலும் அடுத்து கை வைத்து, “நீ மாறி… நா மாறி ” என்று அவன் கொஞ்ச முதலில் புரியாமல், பின் புரிந்தபோது அவள் வாய் விட்டு சிரித்தாள்,
அவனும், அவளும் ஒரே ப்ளூ கலர் டிரஸ் போட்ருப்பதை தான் அவன் மழலையில் குறிப்பிட, அன்றிலிருந்து அதுவே கோட் வர்ட் ஆனது.
காலையில் இருந்து இரவு வரை மகனே அவள் உலகம் என்று ஆனது.
அவனும் அந்த மூன்று வயதுக்கு, அருமையான, அடம் பண்ணாத பையனாக இருந்தான்.
சின்ன சின்ன, ஜி ஐ ஜோ, எனப்படும் அந்த குட்டி பொம்மைகள் தன் அவன் உலகம், தனி தனியாக, அதற்கு பெயர்கள் உண்டு, அவர்களை மனிதர்கள் போல் பாவித்து ஓடுறான், சுடுறான், என்று தனியே கூட சமர்த்தாக விளையாடும் அருமையான குட்டி.
மாலையில் மட்டும், கொஞ்ச நேரம், பக்கத்து வீட்டு பையன் கூட விளையாட்டு, காலையில் இரண்டு மணி நேரம் ஸ்கூல் போக மிச்ச நேரம் எல்லாம் அவனுக்கு அம்மாவுடன் தான் கழிந்தது.
பில்டிங்ப்ளாக்ஸ் அடுக்குவது, பஸில்ஸ், மினி ட்ரெயின், ஜி ஐ ஜோ, அதற்குரிய வாகனங்கள், குட்டி ஹாட் வீல்ஸ் கார் ரேஸ் …. என்று நேரம் சுவையும், சுவாரிசியமாகவும், கழிந்தது. விளையாடி முடித்து அத்தனை பொடி சாமான்களையும் சேகரித்து அதற்குரிய இடத்தில் வைப்பது, என்று அது தந்தையின் ஒழுங்கை சுபாவமாய் கொண்டிருந்தது!!