முழுமை பெற்ற காதல் என்றால் 11
‘ ஐ ஸி யூ ‘ வில் ஒரு மாதிரி அவள் ரொட்டீன், செட் ஆனது, ஆம் ரொடீன் தான், அந்த இடத்தில், சுய நினைவுடன், நன்றாக பேசிக்கொண்டிருந்த, ஒரே ஆள் அவளாய் தான் இருக்கும்!
ஆம் அப்படித்தான் அவளை கவனிக்க வந்த நர்ஸ் கூறியது, சற்றே ஆச்சரியமாக!
அவள் காபி சூடாக வேண்டும் என்று கேட்க, அப்போதுதான் அந்த நர்ஸ் அதுபோல் சொன்னது.
அதாவது உயிர் போராட்டத்திற்கு நடுவே, சூடாக காபி கேட்பது ஒருபுறம் இருக்க, அங்கே மிக கிருட்டிக்கலான, நினைவை இழந்தவர்களை தான் கொண்டு வந்து சேர்ப்பது, மேலும் அவர்களை எந்த நோயும் அனுகாமல் ஒரு சுத்தமான, இடத்தில், ஜன சஞ்சாரம் இல்லாமல் பாதுகாப்பாய் வைத்து பராமரிக்கவும், உயிரை சற்றே தக்க வைத்துக்கொள்ள, ஆயுசை, செயற்கையாய் நீட்டிக்க தேவையான, உபகரணங்களும், அவற்றையும் சுத்தமாக, வைக்க தான், அந்த இடம்.
எட்டு மணிக்கொரு முறை மாறி மாறி, நர்ஸ் வந்தபோதும், நாளைந்து பேர் தான் மாற்றி மாற்றி வந்தார்கள், மிக திறமையான ஆட்களை தான் நிர்வாகம் அங்கே கொண்டு வந்தது,
அங்கு வந்தபிறகும், ஒரு மூத்த நர்ஸ் கூட நிற்க, அவர்களின் வழி காட்டல் படியே இவர்கள் பணி இருந்தது.
விடியகாலை நான்கு மணிக்கு அவர்கள் நாள் தொடங்கும், பிரஷ் செய்ய உதவி, உடம்பு துடைத்து, கவுன் மாற்றி, ட்ரெஸ்ஸிங் ஏதும் மாற்ற வேண்டி இருந்தால் மாற்றி, ரத்தம் எடுக்க வேண்டி இருந்தால், அதையும் முடித்து, அவளை ஒரு புறமாய் திருப்பி, பெட் சீட் மாற்றி, அவளையும், அந்த இடத்தையும் சுத்தமாக, வைக்க வேண்டும், ஏழு மணி அளவில், ஹெட் நர்ஸ், ஒருவர் வந்து அனைத்தும், சுத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.
ரூமின் தரை, உபகரணங்கள், மேசை, அனைத்தும் இருமுறை கிருமி நாசினி கொண்டு தொடைக்கப்பட்டது.
சுத்தம் செய்யும் வேலை முடிய, கொடுத்த மருந்துகளை பட்டியலிட்டு, எழுதி, அவர்கள் ஷிப்ட் காலை ஏழு மணிக்கு முடியும் போது ,
அடுத்து வரும் நபரிடம், அனைத்தையும் கூறி, விடைபெற, அடுத்த எட்டு மணி நேரத்திற்கு அவர் தான் பொறுப்பு,
ஐ சி யூ வின் கண்ணாடி கதவின் அந்தப்பக்கம், நின்றப்படியே, அனைத்தையும் , டாக்டர்கள் பார்த்து கொள்ள வசதியாக டிஸ்பிலே இருக்கும்.
கூடவே நர்ஸ்கள் எழுதும் குறிப்பும் அதில் அவளை வந்து பார்க்கும் டாக்டர்ஸ் அவர்கள் பரிந்துரை அனைத்தும் இருக்கும்.
ஏழு மணிக்கு மேல் டாக்டர்கள் வருவார்கள், ஒன்பது மணி வாக்கில், அவர்கள் அனைவரும், ஒரு குழுவாக நின்று கதவின் அந்தப்பக்கம், கலந்து ஆலோசிப்பார்கள்.
அவளுக்கு பேசுவது கேட்காது என்ற போதும், அவர்கள் கூடி பேசி, தன்னை காப்பாற்ற பெரு, முயற்சி எடுப்பதை மௌனமாக பார்த்துக்கொண்டு, படுத்திருப்பாள்.
டாக்டர்ஸ் விசிட் முடிந்தபின், கணவரும், மகனும், உள்ளே வந்து, அவளை பயமுடுத்தாமல், கொஞ்சம் கொஞ்சம், அவர்கள் பேசியது, மற்றும் வைத்திய முறைகளை, சொல்லிவிட்டு, செல்ல, நீண்ட பொழுதுகள், உள்ளங்கையில் உலகை கொண்டு வந்து நிறுத்தும் போனே துணை. ஸ்பெஷல் பெர்மிசன் பெற்று அவள் வைத்துகொண்டிருந்த, செல்போன், சற்று பொழுதை போக்க, மனதை வேறு வழியில் செலுத்த உதவியது. பின்னால் அந்த போனை வாங்கி சென்று சார்ஜ் செய்து கொடுப்பது இளைய மகன் கர்ம சிரத்தையாக செய்யும் வேலையாக ஆனது .
நீண்ட மூச்சிகளை விட்டு , உயிரை இழுத்து பிடித்து கொண்டு இருந்தால், மறுபடி மகன் மாலை வருவான் பார்க்க,
அந்த பொழுதுகளை, வழி மேல் விழி வைத்து பார்த்து காத்திருப்பாள்.
அவளது ரூம் எதிரே நீண்ட நடை இருக்க, அவள் மகன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய அந்த நிதான நடையை, கண்ணில் நிரப்பி கொள்வாள்.
அவன் மறுபடி, அவர்கள் ஆலோசிப்பதை லேசாக கோடி காட்டிவிட்டு, போக, மருந்து, உணவு, ஓயாத சிந்தனை, பின், உறக்கம், என்பதே அவள் ரொட்டின்.
அன்று காலையில் அண்ணனுடன் சேர்ந்து தம்பியும் வர, அவளுக்கு அழுகை வந்தது, நேராக இங்கே வந்து இறங்கி இருக்கும், மகனை காண, ஒரு புறம் சந்தோசமாக இருந்த போதும், மறுபுறம் எவ்வளவு கவலை பட்ருக்கும் பிள்ளை, என்ற கரிசனமும் எழுந்தது.
அவனை அருகில் அழைத்து கைகளை பிடித்துக்கொண்டாள், அவனை வர வைத்ததற்கு, மூத்தவனை லேசாய் முறைக்க, ” மா அவனை பார் ” என்று விலக
Advertisement
தன் மனதில் இருந்த பயத்தை மறைத்து, நன்றாக இருப்பதாக காட்டிக் கொண்டாள்.
எல்லாம் தெரிந்திருந்தும் அவனும் எதையும் காட்டி கொள்ளாமல் சமாளித்தான்.
அடுத்து வந்த நான்கு நாட்கள் மிக கடினமாக, இருந்தது, நாளுக்கு நாள் அவளுக்கு ஆக்ஸிஜன், வைக்கும் அளவு அதிகரிக்க, இதற்கு மேல் வெண்டிலேட்டரை தான் நாட வேண்டும் என்ற கட்டம் வந்தது.
Advertisement
டாக்டர் கணேஷ், அதை பற்றி கொஞ்சம் விரிவாக விளக்கி, இப்போது இழுத்து மூச்சு விட்டு கொண்டிருக்க, சுற்றி இருக்கும் தசைகள் சோர்ந்து போனால், அவசரமாக, அந்த சேவையை நாட வேண்டி இருக்கும்.
அதற்கு இப்போதே அவள் முடிவு எடுத்தால், வெண்டிலேட்டர் கனெக்ட் செய்யலாம், யோசித்து முடிவெடுத்து சொல் என்று, அவள் கஷ்டம் அவள் தான் அறிவாள் என்று முடிவை அவள் கையில் விட…
மகனையும், கணவரையும் அழைத்து அவள் கேட்க,
கணவர் வலியை அனுபவிக்கும் அவளே முடிவு எடுக்க வேண்டும் என்று கூறிய போதும், அப்படி ஒரு இக்கட்டில் அவள் மாட்டி இருக்கிறாளே என்று முகம் வேதனையில் சுருங்கி இருக்க, கண்களும் லேசாக கலங்கியது.
ஆனால் மகன் திடமாக நின்று, வேண்டாம் என்றே நினைக்கிறேன் என்றான்.
ஓரளவிற்கு தெளிவாக பேசிக்கொண்டிருக்கும், அவளுக்கு இப்போது அது வேண்டாம், நாளை இன்னும் நிலைமை மோசமானால் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் கூற, இப்போதைக்கு வெண்டிலேட்டர் வேண்டாம் என்று அவள் முடித்தாள்.
Advertisement
அன்றிரவே இன்னொரு முக்கிய முடிவை எடுத்து, அதை செயல் படுத்தும்போது ஏற்பட கூடிய விளைவுகளுக்கு அவனே பொறுப்பு, என்று டாக்டர்ஸ்க்கு செய்ய, அனுமதி கொடுத்து, அவள் மகன், தான் மருத்துவம் எடுத்து படித்த பயனை முழுமையாக அடைந்தான் , அந்த முடிவு ஒரு பெரிய திருப்பத்தை கொண்டு வந்தது.
புது ஸ்கூல் திறந்து ஒரு மாதம் ஆன பின்னே, டீச்சர்களை, அந்த சனிக்கிழமை சந்திக்கலாம், என்று நிர்வாகம் அனுமதி வழங்க.
இதோ அவள் உள்ளே நுழைந்து, அவள் மகன் பொறுமையாக நடக்கும் பாதையை முதல் முறையாக கடந்து, கடைசியில் இருந்த கிளாசை அடைந்தாள்.
மிஸ் சுதா என்ற அவன் கிளாஸ் டீச்சரை பார்க்க, அவர், மறுநாள் கிளாசிற்கு, கலர் அடிக்க பசங்களுடைய , நோட் புத்தகங்களில், பெரிய ஆப்பிள்களை வரைந்து கொண்டிருந்தார்.
அவளை பார்த்து சிரித்து, இன்னார் என்று அறிந்து ” உங்க மகனை போன்ற ஒரு அருமையான பையனை தான் பார்த்ததில்லை “என்றார், அவன் அமர்த்திருக்கும், நாற்காலியை விட்டு எழுந்து போய் எந்த அடமும் செய்வதில்லை என்றும், இது போன்ற பாய் பேபியை அவர் பார்த்ததில்லை, என்று கூறி அவள் உச்சி குளிர வைத்தார்.
கேள்விகளுக்கு அருமையாக பதில் அளிக்கிறான், அத்துடன் கிளாசில் அருமையாக கவனிக்கிறான், என்று பாராட்டவும் செய்தார்.
Advertisement
அத்துடன் அந்த பாராட்டுக்களை, மூன்று மாதம் சென்ற பின், ரிப்போர்ட் கார்டில் எழுத்து வடிவில் தர..
‘ஹி ஸ் எ பிலெசர் டு டீச் டு’ ( he is a pleasure to teach to ), என்று அவனுக்கு பாடம் எடுப்பது தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று முடித்திருக்க அதை போஸ்டர் எடுத்து ஊர் பூராவும் ஒட்டாத குறையாக கொண்டாடி தீர்த்ததனர் தாத்தா பாட்டி, அவளுக்கும், கணவனுக்கும், பெருமை தாங்கவில்லை, அவன் சமர்ந்து என்பதோடு, இப்போது டீச்சர் கொண்டாடும் புத்திசாலி என்பது பெரும் பெருமை அல்லவோ..
அதை கொண்டாடும் விதமாக, அப்போது புதிதாக வந்திருந்த தீம் பார்க் சென்றனர்.
அதில் தண்ணீர் விளையாட்டுக்கள், மிக அருமையாக இருக்க, அதில் சறுக்கி, குளித்து, முழுவதும் நனைந்து என்று புது அனுபவம் பெற்று என்ஜோய் செய்தார்கள். பின்னால் வந்த ஆயுதபூஜை லீவிற்கு, அவளுடைய, கணவனின், பள்ளி தோழர்கள் கூட சேர்ந்து, குடும்பமாக கொடைக்கானல் சென்றனர்.
அங்கே வைத்துதான் தன் கணவன், எவ்வளவு சொகுசு பேர்வழி என்பதை உணர்ந்தாள்!
நாங்கைந்து பேர் கல்யாணம் ஆகி குடும்பமாக வர, இரண்டு மூன்று கல்யாணம் ஆகாத நபர்கள் என்று கலந்து கட்டி இருக்க,
அவர்கள் பெரும்பாலும் சைல்ட் ஹூட் பிரிண்ட்ஸ் ஆகவும் இருக்க, இரண்டு பெரிய ஸ்டேட் பேங்க் குவார்டெர்ஸ் எடுத்து, தங்கி கொண்டனர்.
அந்த இடம், லேக் ஏரியா வை விட்டு சற்று தள்ளி, கொஞ்சம் மலை ஏறி போக வேண்டி இருந்தது.
வசதிக்காக ஒன்றில், பெண்களும், அடுத்ததில் ஆண்கள் என்று பிரிந்து தங்க, கையோடு சமையல் சாமான் எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டது, ஒரு புது அனுபவமாக இருந்தது.
அந்த கூட்டத்தில் ஆளுக்கு ஒரு வேலையை பார்த்த போது கூட, அவள் கணவன் எதிலும் சிக்காமல் சொகுசாய் சுற்றி வந்தான், மகனை சுமந்து மலை இறங்கும் வேலையை கூட அவன் நண்பர்களே ஆசையாக செய்ய, அந்த நான்கு நாட்கள், அவன் மிக ரிலாக்ஸாக இருக்க, வருடம் ஒரு முறை இது போல் வர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். முடிந்தால் வார கடைசியிலும் இது போல் சேர்ந்து எங்காவது செல்வது என்று பிளான் செய்தார்கள்.
