Skip to content
Post Views: 1,836
“சரி தூங்கு நாளைக்கு கல்யாணம் பட்டு எடுக்க காலையில் சீக்கிரம் கிளம்பனும்” என்றவன், மனைவியை அணைத்து தட்டி கொடுக்க கணவனை நன்றாக அணைத்துக்கொண்டவள். “எனக்கு மூணுபட்டு புடவை வேணும்” என்றாள்.
“எதற்கு” என்றான் கனி..
Advertisement
“அது கல்யாணத்துக்கு ஒன்னு, நிச்சயத்துக்கு ஒன்னு, அப்பறம் கல்யாணம் முடிஞ்சு மறுநாள் கறிவிருந்து வைப்பீங்களாமே. அப்போ ஒரு புடவை வேணும்” என்றவளை பார்த்து சிரித்தவன்..
“சரி நாளைக்கு கடைக்கு வா உனக்கு எத்தனை புடவை வேணுமே எடுத்துக்கோ” என்றான்..
Advertisement
Advertisement
“சரி” என்று பேசிவிட்டு இருவரும் தூங்கி விட..
Advertisement
மறுநாள் இலங்கையில் இருந்து பார்கவியின் தந்தை ஆதிநாரயணன் வந்து இருந்தார். கல்யாணத்தை எப்படி நடத்த என்று பேசிவிட்டு, கல்யாணம் உடையெடுக்க வந்து இருந்தார்..
அனைவரும் சேர்த்து உடை எடுக்க மதுரையில் உள்ள ஒரு புகழ் பெற்ற கடைக்கு சென்றிருந்தனர்..
ஆதிநாரயணனுக்கு சந்தோஷமாக இருந்தது. பார்கவியை அனைவரும் நன்றாக பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து. பெரியசாமி ஆதிநாரயணனை ஒரு நிமிசம் கூட விட வில்லை, அவர் வந்ததில் இருந்தே அவர் கூட தான் இருந்தான். தன் சிங்கப்பூர் சூப்பர் மார்கெட் கடைக்கு ஆதிநாரயணனை அழைத்து சென்று காண்ப்பித்தவன். இன்னுமொரு பெரிய சூப்பர் மார்கெட்டை தொடங்க உள்ளதாக சொல்ல…
ஆதிநாரயணன் மிகவும் சந்தோஷமாக இருந்தது, மகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று..
பெண்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான புடவை வேண்டும் என்று அவர் அவர்களை தேர்வு செய்து கொண்டு இருந்தார்கள்..
யோகா பார்கவியிடம் உனக்கு எது மாதிரியான புடவை பிடிக்குதோ எடுமா பார்கவி என்று சொல்லி இருக்க. அவளோ அவளுக்கு பிடித்த காலரில் புடவை எடுத்துக்கொண்டு இருந்தாள்.
ஆதிநாரயணன் பெரிய சாமிக்கு உடை எடுக்க, ஆண்கள் தளத்திற்கு சென்று விட..
யோகாவும், லட்சுமியும் சொந்தத்திற்கும், மீனாட்சிக்கு வேண்டியதை முதலில் எடுத்துவர்கள்.. அவர்களுக்கு பிடித்த புடவையை எடுத்து கொண்டு கணவரிடம் தனக்கு எது நன்றாக இருக்கும் என்று இரண்டு புடவைகளை காண்பித்து கேட்க..
“இரண்டுமே நல்லா இருக்கு எடுத்துக்கோங்க” என்றிருந்தார்கள்..
ஆண்டவர் கனியும் திவ்யாவும் தனி உலகில் இருந்தனர், கனி மனைவியின் தோளில் மீது பிடித்த புடவையை வைத்து பார்த்து திவ்யாவுக்கு புடவை செலக்ட் பண்ணி கொண்டு இருப்பதை பார்த்த குடும்பத்தார் சிரித்து சந்தோஷபட…
பார்கவி ஒரு நான்கு ஐந்து புடவையை தேர்வு செய்து இருந்தாள்…
அனைவரும் அந்த புடவைகளை பார்த்து நல்லா இருப்பதாக சொல்ல..
பெரியசாமியும், ஆதிநாராயணனும் உடையெடுத்து முடித்துவிட்டு வந்தனர்..
பெரிய சாமி பார்கவியின் அருகில் வந்து நின்று “புடவை எடுத்துட்டீயா” என்று கேட்க..
“எடுத்துட்டேன்” என்றவள்.. அவனிடம் காண்பித்து “நல்லா இருக்க” என்று கேட்க..
பெரியசாமி பார்கவி செலக்ட் பண்ணிய அனைத்தையும் புடவைகளை பார்த்தவன்..”எல்லாமே நல்லா இருக்கு” என்றவன்
அதில் இருந்து இரண்டு புடவையை எடுத்தவன். ஒன்றை எடுத்து “இதை கல்யாணத்துக்கு கட்டிக்கோ. இன்னொன்றை ரிஷப்சனுக்கு கட்டிகோ” என்று சொல்ல…
பார்கவி “சரி” என்று தலையாட்ட. அவளின் கையில் இருந்த புடவையை அவன் வாங்கிக்கொண்டு பில் போட போக..
ராமாசுப்பு “நான் பில் போடுறேன்ட்டா” என்றார்…
அவனோ என் பொண்டாட்டிக்கு நான் தான் எடுத்து கொடுப்பேன்பா என்று சொல்லிவிட்டு பில் போட போக..
யோகா ஆண்வர்கனிடம் “உன் பொண்டாட்டிக்கு புடவை எடுத்தாச்சா” என்றார்..
“ஆச்சு சித்தி” என்றவன் கை நிறைய புடவைகளை எடுத்துக்கொண்டு வர..
“என் கனி? எவ்வளவு புடவை யாருக்கு? இந்தன புடவை” என்று யோகா கேட்க…
“என் பொண்டாட்டிக்கு தான் சித்தி”என்றவன்..
“உங்களதையும் கொடுங்க” என்று அனைத்துக்கு சேர்த்து பில் போட போக..
ராமாசுப்பு, முருகேஷனும் “நாங்க பில் பே பண்ணுறோம்” என்று சொல்ல…
“இல்லப்பா எல்லாம் ஒரே பில் தான் நானே குடுக்குறேன்” என்றவன். அனைத்துக்கும் பில் போட போக..
யோகா ஆண்டவர் கனியின் அருகில் வந்து “எத்தனை புடவை எடுத்த உன் பொண்டாட்டிக்கு” என்றார்..
“தெரியல சித்தி நான் எண்ணல பத்துக்கு மேல இருக்கும்” என்றான்..
“நீ பொளச்சுப்பா டா கண்ணா” என்றவர். “கல்யாண பொண்ணு கூட ஐஞ்சு புடவை தான் எடுத்தா ஆனா நீ உன் பொண்டாட்டிக்கு அதக்கு மேல எடுத்து கொடுத்து இருக்க உம், உம்”… என்று சிரித்துவிட்டு சென்றார் யோக…
அனைவரும் துணி எடுத்துவிட்டு வீடு திரும்ப..
பார்கவி பெரியசாமி கேட்கும் கேள்விகளுக்கு இப்போது நன்றாக சில வார்த்தைகள் பேசினாள்..
பெரியசாமி ஆதிநாரயணனை நன்றாக பார்த்துக் கொள்வதை பார்த்தவள்..
தன்னையும் இவன் நன்றாக பார்த்து கொள்வான் என்று நம்பிக்கை வர. அவனிடம் பேச.
பெரியசாமிக்கு பார்கவி பேசிய ஒரு சில வார்த்தைக்கே வானில் பறந்தான்..
அடுத்த நாள் ஆதிநாரயணன், பார்கவியை அழைத்துக்கொண்டு இலங்கை சென்று விட்டார்… கல்யாணத்துக்கு மூன்று நாள் முன் வருகிறோம்” என்று கிளம்பினார்கள்..
பெரியசாமிக்கும், பார்கவிக்கும் திருமணம் முடிந்தவுடன் இலங்கையில பெரியதாக ஒரு ரிஷப்சன் வைக்க தீர்மானம் செய்து. ரிஷப்சனுக்கு கார்ட் அடித்து அங்கே உள்ளவர்களுக்கு கொடுக்க வென.. பார்கவி இலங்கை சென்று இருந்தாள்..
நாட்கள் விரைவாக முடிய. பெரிய சாமி, பார்கவி கல்யாண நாளும் வந்தது..
இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் என்று முடிவு பண்ணி இருந்தனர்..
மண்டபத்தில் எல்லா சடங்கும் முடிய. மாப்பிள்ளையும், பொண்ணு கையில் காப்பு கட்டி கோவிலுக்கு அழைத்து வர..
அனைவரும் தனி, தனியே காரில் வர. பொண்ணும் மாப்பிள்ளை ஒன்றாக ஒரே காரில் வந்தனர்..
காலை 10.30..டூ 12..மணி மூகூர்த்தம் என்பதால் வைகாசி மாத வெயில் மண்டைய பொழக்க, பெரியசாமி பார்கவியை கைபிடித்து மெதுவாக நிழலிலே அழைத்து வந்தான் கோவில் மண்டபத்துக்கு..
பார்கவி இதுவரை பெரியசாமியை தொட்டு பேசியதில்லை. இன்று தன் கணவனாக போகும் பெரியசாமியை உரிமையோடு பார்த்திருந்தாள்.. இத்தனை நாள் பெரிய சாமியை பார்த்த பார்வை வேறு.
இன்று பெரியசாமியும் தன் வாழ்க்கை துணையாக வரும் பார்கவியை உரிமையோடு கைபிடித்து அழைத்து வர.
இருவரின் பார்வை இன்று தங்கள் துணையை உரிமையோடு பார்த்துக்கொண்டனர்..
ஆண்டவர் கனி திவ்யாஅரிய நாச்சியை சைட் அடித்து கொண்டு இருந்தான்…
அவனுக்கு கல்யாண வேலைகள் நிறைய இருக்க.. மனைவியிடம் சிறிது நேரம் பார்க்க, கொஞ்சம் முடியவில்லை. இன்று திவ்யா அரிய நாச்சி பிங்க் கலர் பட்டு புடவை கட்டி , ஆண்டவர்கனி வாங்கி கொடுத்த நகைகளை அணிந்து தேவதை போல இருந்தவளை கடித்து தின்னும் ஆசை வர . தூரத்தில் இருந்தே மனைவியை பார்த்து ரசித்து கொண்டே கல்யாண வேலைகளை செய்து கொண்டு இருந்தான்..
பொண்ணும் மாப்பிள்ளையும் கோவில் மண்டபத்தில் நின்ற இருக்க…
அவர்களை முருகன் சன்னதிக்கு அழைத்து செல்ல வந்தான்..
முருகன் சன்னதியில் தான் கல்யாணம் நடைபெற உள்ளதால்..
ஆண்டவர்கனி மணமக்களை அழைத்து வர வந்தான்..
திவ்யா அரிய நாச்சி போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தாள்”கல்யாணம் மண்டபத்தில் இல்ல இங்க முருகன் கோவில் சன்னதியில் மச்சான்” என்று கூறிக்கொண்டு இருந்தாள். ஆண்டவர்கனி திவ்யா போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதை கேட்டுக்கொண்டே வந்தவன்..
திவ்யாவின் பக்கத்தில் யாரும் இல்லை என்று பார்த்த ஆண்டவர்கனி திவ்யாவின் இடுப்பை பிடித்து கிள்ளி விட்டு சென்றான்..
“ஆவென” கத்தியவள், வாய் மூடிவிட்டு கனியை பார்த்து முறைக்க…
அவளை பார்த்து கண்ணடித்தவன் “இடுப்பு தெரிஞ்சா கில்லுவோம்” என்று சாடையில் பேசி விட்டு, பெரியசாமியையும், பார்கவியையும் முருகன் சன்னதிக்கு அழைத்து வர சென்றான்..
அனைத்து சொந்த பந்தம் கூடி இருக்க, பெற்றோர் அனைவரும் பிள்ளைகள் கல்யாணத்தை பார்க்க நின்று இருந்தனர்..
ஆதிநாரயணன் அவரின் மனைவி, அஜய் என்று பார்கவியின் பக்கம் நின்று இருக்க.. இங்கே பெரியசாமி பக்கத்தில் மீனாட்சி, திவ்யா, மீனாட்சியின் மகள் அனிகா, யோகா, லட்சுமி என்று நின்று இருக்க.
ஆண்டவர்கனியும், அவனின் தந்தை, சித்தப்பா என்று அனைவரும் மணமக்கள் எதிரில் நின்று இருந்துக்கொண்டு கோவில் புஜாரியிடம் தாலி, மாலையை கொடுத்து பூஜை பண்ணி எடுத்து வர சொல்லிக்கொண்டு இருந்தனர்..
கோவில் சன்னதி கொஞ்சம் சின்னதாக இருக்க. அனைவரும் நெருங்கி நின்று இருந்தனர். பார்கவிக்கு அனைவரும் நெருங்கி நிற்பதால் வேர்த்து தண்ணீர் கொட்ட,. பெரியசாமி தன் கர்சீப்பை வைத்து பார்கவிக்கு முகத்தை துடைத்து விட..
“வேண்டாம்” என்றாள் பார்கவி, அனைவரும் தங்களை பார்ப்பதை பார்த்து.
யாரு பார்த்தால் எனக்கு என்ன என்பது போல் பார்கவியின் முக வேர்வையை துடைத்து விட..
அனைவரும் அவர்களை பார்க்க. பெரியசாமியின் நண்பர்கள் “இப்பவே ஆரம்பிச்சாச்ச” என்று சொல்லி சிரிக்க…
பார்கவிக்கு பெரியசாமி செய்யும் செயலை பார்த்து கூச்சமாக இருந்தாலும்..
மனதுக்குள் சந்தோஷமாகவே இருந்தது.. அவனின் ஒவ்வொரு செயலில் பார்கவியின் மீது அவன் வைத்திருந்த பாசம், காதல் தெரிந்தது..
தான் ஒன்றும் இவருக்கு செய்ய வில்லையே, இனி அவருக்கு மனைவியாகி விட்ட பின். அவரை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து பார்த்தவளை.. கர்ஷிப்பை கொண்டு அவளின் முகத்தை துடைத்து விட்டவன் “போதுமா” என்று கேட்க..
“உம்” என்று தலையாட்டியவள் முதல், முதலில் பெரியசாமியின் கையை பிடித்துக் கொள்ள..
பெரிய சாமி நிமிர்ந்து பார்கவியை பார்க்க. அவளோ அவனை பார்த்து வெட்கப்பட்டு சிரித்து தலைகுனிய. பார்கவியை நெருங்கி நின்றவன். “அழகி” என்றான் பார்கவியின் காதில்..
அவளோ அவனை நிமிர்ந்து பார்க்காமல் சிரித்துக்கொண்டு நின்றிருக்க…
கோவில் பூஜாரி தாலிக்கு பூஜை செய்து,. தாலி ஜெயினை எடுத்து வந்து, “கெட்டி மேளம், கெட்டி மேளம், ” என்று மேளம் அடிப்பவர்களை பார்த்து சொல்லி விட்டு..
தாலியை பெரியசாமியிடம் தர..
பூஜாரி கொடுத்த தாலியை ஆசையாக வாங்கியவனிடம் இருந்த தாலி ஜெயின் அவனிடமிருந்து பரிக்க பட்டு.. பார்கவியின் கழுத்தில் அன்பு தாலியை ஜெயினை போட்டு இருந்தான்..
அனைவரும் அர்ச்சதை தூவ. பார்கவி தனக்கு தாலிகட்டிய பெரிய சாமியை நிமிர்ந்து பார்க்க. அவள் பக்கத்தில் அன்பு நின்றிருந்தான்..
அன்பு பெரியசாமியை ஒரு தல்லு, தல்ல. கீழே விழுந்திருந்தான் பெரியசாமி.
பெரியசாமி அன்புவை பார்த்து “ஏய்” என்று அவனை தாங்க வர..
மயங்கி சரிந்திருந்தாள் பார்கவி….
error: Content is protected !!