Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 11

நீங்காத  நினைவு  நீ

அத்தியாயம் – 11



Advertisement

Advertisement

Advertisement

  யாருக்கும்  அங்கே  என்ன  நடந்தது  என்று  தெரிவதற்குள்  அனைத்தும்  நடந்து  முடிந்து  இருந்தது.

Advertisement

அன்பு  இப்படி  செய்வான்  என்று  யாரும்  நினைத்திருக்க  வில்லை..

பெரியசாமி  பார்கவி   கல்யாணத்துக்கு  ஸ்ரீஜெயமும்  வந்திருந்தார். கொஞ்சம்  தள்ளி நிற்றிருந்தால் அவருக்கு சம்பவம்  நடந்தவுடனே  அன்பின்  அருகில்  வர.பெரியசாமியும்  அன்புவும்  சண்டை போட்டு  கொண்டு  உருண்டனர்..

யாராலும்  இருவரையும்  பிரிக்க முடியவில்லை. இருவரும் ஆக்ரோஷமாக  தாக்கி கொண்டிருக்க..

ஆதிநாரயணன்  பார்கவிக்கு  தண்ணீர் தெளித்து  முளிப்பு  வர  வைத்தவர்..

நேராக  வந்து.  அன்புவின் கழுத்தை பிடித்து  தூக்கி  இருந்தார்..

பெரியசாமி  அன்புவை  நிமிர்ந்து பார்க்க, அன்பு தன் கை, கால்களை  ஆட்டிக்கொண்டு  இருந்தான்..

அனைவரும்  வியந்து பார்க்க.. 7 அடி உயரம் உள்ள ஆதிநாரயணன் தினமும்  சிம்முக்கு சென்று எக்சசைஸ்  பண்ணி  பாடி  பில்டராக  உடம்பை வைத்து இருந்தவர்.. அன்புவை  அசால்ட்டாக  தூங்கியிருந்தார்.. அனைவரும் பயந்து  போயி  அன்பு பக்கம் ஓடிவர..

“யாருக்குடா?  தாலி கட்டுன. என் அனுமதி  இல்லமால்   எப்படி  நீ என் பொண்ணு  கழுத்தில்  தாலி கட்டலாம், சாவுடா”  என்று  மேலும் அன்புவின் கழுத்தை பிடித்து தூக்க..

ஆண்டவர் கனி  ஓடி  வந்து  ஆதிநாரயணின்  கையை  பிடித்து  இறங்க  வைக்க.

ஸ்ரீ ஜெயம்  வந்து  அன்புவை  பிடித்து இழுத்து இருந்தார்..

ஆதிநாரயணன்  “விடு கனி  அவனை  கொன்னா தான்   என் ஆத்திரம்  அடங்கும்.. விடு”  என்று கனியை தள்ளி விட்டு மீண்டும் அன்புவை  அடிக்க போக…

ஸ்ரீஜெயம்  ஆதிநாரயணன் அன்புவை  பிடிக்க  முடியாத  படி  முன் நின்றார்..

“நீ யாரு  தள்ளு  அவனை”..  என்று பல்லை  கடித்துக்கொண்டு  அன்புவை  அடிக்க வர..

“என்னை  தாண்டி  தான்  என்  மருமகன் கிட்ட நீ போக முடியும் வா”   என்று   சண்டை போடுவது போல்   நின்றார்  ஸ்ரீ ஜெயம்…

“ஏய்”  என்று  ஆக்ரோஷமாக கத்திய ஆதிநாரயணன். ஸ்ரீஜெயத்தை தள்ளி விட்டு அன்புவை  பிடிக்க  போக..

ஸ்ரீஜெயம்  ஆதிநாரயணன்  கைபிடித்து  முறுக்கி இருந்தார்..

“என்  ஊருக்கு வந்து  என்  மருமகன் மேல் கை வைப்பீயா”  என்று ஸ்ரீஜெயம்  ஆதிநாரயணனை அடிக்க..

கம்புமூடை.  உழுந்து மூடை என்று  மூடைதூக்க ஆட்கள்  வராமல் இருந்தால், சில முறை  ஸ்ரீஜெயமே  மூடை தூக்குவார். மூடை தூங்கி, தூங்கி  தன் உடம்பை இரும்பு போல் வைத்திருந்தார்   ஸ்ரீ ஜெயம்.

ஆதிநாரயணன்  “எனக்கேவா”  என்று ஸ்ரீஜெயத்தை தன் பலம் கொண்டு  அடிக்க. இருவரும் சரிசமமாக சண்டை போட.. ஆண்டவர்கனி ஆதிநாரயணனை பிடித்தக்கொள்ள.

அன்பு ஸ்ரீ ஜெயத்தை பிடித்துக்கொண்டான்.. ஊர் பெரியவர் இதை பார்த்து “கோவிலுக்குள்ள  சண்டை வேண்டாம். கூட்டம் போட்டு விசாரிக்கலாம் எல்லாரும் வாங்க” என்று  சொல்ல..

 அனைவரும் கூட்டம் இருக்கும் இடம் சென்றனர்.. அன்புவும், பார்கவியும் எதிரே நிற்க.. ஆண்டவர் பெரியசாமியை பிடித்து வைத்திருந்தான்..

ஊர் தலைவர் “ஏன்  அன்பு இப்படி பண்ண”  என்று கேட்க..

ஆதிநாரயணனுக்கு  கடும் கோபம் என்ன சின்ன பிள்ளைகள் தப்பு பண்ணியது போல்  விசாரிக்குறார்கள்  என்று  கடுப்போடு பார்க்க..

அன்பு ஊர் தலைவரிடம் தனது போனில் இருந்து ஒரு வீடியோவை ஆன் செய்து கொடுத்தான்..

அன்பு கொடுத்த வீடியோவை பார்த்த ஊர் பெரியவர்.

“அறிவு  கெட்டவனே ஏன்டா இப்படி பேசி தொலச்ச”   என்று திட்ட.

அந்த  போனில்  உள்ள வீடியோவை  அந்த அறையில் உள்ள  டிவி யில் கனெட்  பண்ண சொல்ல..

பெரியசாமி  அப்படி  நாம  என்ன வீடியோவில் பேசினோம் என்று  டிவியில் பார்க்க.

அந்த ஹாலில்  ஊர் பெரியவர்கள்,  ஆண்டவர் கனியின்  குடும்பமும். ஸ்ரீஜெயந்தில் குடும்பமும், என்று  அனைவரும் சேர்ந்து  இருக்க..

 போனில்  உள்ள வீடியாவை  டி. வி யில்   கனெக்ட் பண்ணி ஆன்னானது.. அந்த  விடியோவில்   பெரியசாமி  நண்பர்கள் ரோடு  தண்ணீ பார்ட்டில் பேசியது வீடியோவாக இருந்தது.

அதில் பெரியசாமி நன்றாக குடித்துக்கொண்டு அன்புவை பத்தி பேசிக்கொண்டு இருந்தான்..

பெரியசாமியின்  நண்பன் ஒருவன்”எப்படி மச்சான் உன் அண்ணனுக்கு பார்த்த பொண்ணா நீ கட்ட போற. எப்படி உன் குடும்பத்தை சம்மதிக்க   வச்ச”.. என்று ஒருவன்  கேட்க.

பெரியசாமி போதையில் சிரித்து விட்டு. “அழகா அம்சமா  இருக்குற  பொண்ணா என் அண்ணனுக்கு விட்டு  கொடுக்குற ஆளா நானு. பார்த்தவுடனே  பார்கவியை  எனக்கு பிடிச்சு போச்சு.. எப்படியோ  என் அம்மா கிட்ட பேசி  பார்கவியை கல்யாணம் பண்ண  சம்மதம்  வாங்கிட்டேன்”.. என்றான்..

“அது  சரி உன்  அண்ணன்  எப்படி  அந்த   அன்புக்கு  பார்த்த  பொண்ணை  தாலி கட்டுனாரு”  என்றான்… ஒரு  நண்பன்..

“என்  அண்ணனுக்கு  ஏற்கனவே  அந்த  பொண்ணா பிடிச்சு  இருந்துருக்கும்  போல, அதான்  தாலி  கட்டி  கூட்டிட்டு வந்துட்டான்”..

“சரி  இந்த  அன்பு  பயல  ஊருக்குள்ள  காணோம், பங்குனி  பொங்கலோடு  போனவன்  தான் இன்னும் வரல”  என்று  ஒரு  நண்பன்  கேட்க..

“பயந்தா   கோலிடா  அவன், என்  அண்ணனை  பார்த்து பயந்து  ஓடிட்டான்”.. என்று  சிரித்தவன்..

“ஆமா  அவனுக்கு  இனிமே  கல்யாணம்  ஆகும்”.. என்று  அனைவரும்    சேர்ந்து  சிரிக்க…

“கண்டிப்பா  நான்  அவனுக்கு கல்யாணம் நடக்க விட மாட்டேன்”  என்று  பெரியசாமி  பேச..

“என்னடா  உலருர”  என்றான் பெரியசாமியின்  நண்பன்..

“ஏய் உனக்கு ஒன்னு  தெரியுமா  அன்புக்கு  அவங்க  அம்மாவும், அந்த  அன்பு பய மாமன் ஸ்ரீஜெயமும்  சேர்ந்து அன்புக்கு  தீவிரமா  கல்யாணத்துக்கு  பொண்ணு  பாத்துட்டு  இருக்காங்க. அப்பறம் நம்ம  பந்தல்குடி   ஊருல  பெரிய மரகடை வச்சு  இருக்காரே, அவர் பொண்ணா   பார்த்து  பேசி   கல்யாணம் விசயம் பேசி  முடிக்குற  நேரத்துல..  நான்  எனக்கு  தெரிஞ்ச  ஆள வச்சு அந்த  கல்யாண பேச்சை  நிறுத்திட்டேன் எப்படி”  என்று பெரியசமி சிரிக்க..

“சூப்பர் டா   மாப்ள”  என்று  அனைவரும்  சிரிக்க..

“ஆமா  ஏன்டா  அவன்  கல்யாணத்தை  நிறுத்துன”  என்று ஒருவன் கேட்க..

“அந்த  அன்பு  பயலுக்கு  கல்யாணமே  ஆக கூடாது. அவன் மாமன் ஸ்ரீ ஜெயம்  மாதிரி அவனும்  கல்யாணம் ஆகாம  மொட்ட பய மாதிரி சுத்தனும்.. அவன்  வீட்டுல மறுபடியும் ஏதாவது  பொண்ண  பார்த்தா  அதையும்  நான் கெடுத்து விடுவேன்.. இப்படி இரண்டு மூணு சம்பந்தம் போச்சுன்னா.. அவன்  ராசியில்லவன், என்று  ஊருக்குள் பேசி அவனுக்கு கல்யாணம் ஆகாத   மாதிரி  செஞ்சு  விடுவேன்  எப்படி” என்று தண்ணி அடித்துக்கொண்டு நடனம் மாடி சிரித்து   பேச..

அந்த  வீடியோவை பார்த்த  பார்கவி  பெரியசாமியை  பார்த்து “சீ”   என்று  முறைத்து நிற்றாள்..

அனைவரும் கொலை  வெறியில்  இருந்தனர்.. பெரியசாமி பேசியதை கேட்டு..

ஸ்ரீ ஜெயம்  பெரியசாமி பேசியதை கேட்டு  கோபப் பட்டு  பெரியசாமியை  அடிக்க வர..

ஆண்டவர் கனி தம்பியை  பிடித்து இழுத்துக்கொண்டான்.

ஸ்ரீ ஜெயம் “விடு  ஆண்டவர்கனி , அவன்  என்  மருமகனை  பத்தி  எப்படி  எல்லாம் பேசி இருக்கான்”, என்று  அடிக்க போக…

“வேண்டாம்  ஸ்ரீமாமா  அவன் செஞ்சது  தப்பு தான் அதுக்காக  நீங்களும்  அவனை  அடிச்சு  தப்பு  பண்ணாதீங்க”   என்றான்  ஆண்டவர்கனி..

“அவன் என் அன்புவை எப்படி பேசலாம் கல்யாணத்தை  நிறுத்தலாம்”  என்று கோபமாக பேச.

ஊர் தலைவர் “சண்டை போடாதீங்கப்பா  பேசி  முடிவுக்கு வாங்க”… என்றவர்.

அன்புவை  பார்த்து”நீ என்னப்பா சொல்ல  போற”  என்றார்..

” என் மாமாவை  அவன் எப்படி மொட்ட  பயலுன்னு   சொல்லலாம், அதான்  நான்  அவன்  கல்யாணத்த நிறுத்தி.  நான் தாலி  கட்டி இப்போ அவனை மொட்ட  பயலா நிக்க வச்சு இருக்கேன். நான் அந்த  பொண்ணு அனுமதி இல்லாம  தாலி கட்டுனது தப்பு தான்”.. என்றவன்..

“நீங்க என்ன சொன்னாலும்  சரி, அந்த  பொண்ணு  என்கூட வந்தாலும்  சரி. இல்ல இந்த கல்யாணத்தை  நான் ஒத்துக்க  மாட்டேன்னு  சொன்னாலும் சரி,  இல்ல  விலகி போனாலும் சரி, எல்லாம்  அந்த   பொண்ணோட  விருப்பம்  என்று சொல்ல”…

 அனைவரும் பார்கவியை   பார்த்தனர்..

அவளுக்கோ  இப்போது  பெரியசாமியையும்  பிடிக்க  வில்லை, அன்புவையும் பிடிக்க வில்லை.

“நீ  என்னம்மா  சொல்லுற”  என்று ஊர் தலைவர் கேட்க..

பார்கவி  தந்தையை பார்த்தாள்..

“இது  உன் வாழ்க்கை  உன் முடிவு தான்”  என்றார்..

“எனக்கு  இதுல  விருப்பம் இல்ல. இந்த கல்யாணத்த  நான்  ஏத்துக்க  மாட்டேன். பெரியசாமி  போனுல, அவர பத்தி பேசுனா. இவங்க என்று அன்புவை காட்டியவள்..  இது இவங்க  இரண்டு பேரோட  பிரச்சனை இதுக்கு ,    அவங்க ரெண்டு பேரும் பேசி தீர்த்துக்கணும்.. அத விட்டுட்டு, என்று பெரியசாமியை முறைத்தவள்.. இவர்  பேசுனா  நான் என்ன செய்வேன். இவர்  ஏன் என்  கழுத்துல தாலி கட்டுனாரு என்று அன்புவை  பார்த்து சொன்னவள்..

“என்  சம்பதம் இல்லாமல்  நடந்த   கல்யாணத்தை  நான்  ஏத்துக்க  மாட்டேன்”. என்றவள்.

தாலி ஜெயினை  கழட்ட போக..

“அம்மாடி  வேண்டாம்”  என்று  நளினி  பார்கவியின்  கையை பிடித்துக்கொள்ள..

“நீங்க யாருமா”…என்றாள் பார்கவி.

“நான் அன்பு  வோட அம்மாமா, என் பையன்  ஏதோ  பெரிய சாமி பேசுனதுல கோபப்பட்டு  இப்படி உன் கழுத்தில்  தாலி கட்டிட்டான். அவன் பண்ணுனது தப்பு தான். அவன் பண்ண தப்புக்கு  நான் மன்னிப்பு கேட்கிறேன்.தாலியை மட்டும் கழட்டாதமா”  என்று கேட்க..

“அந்த  தாலியை  கழட்டி போடு பார்கவி”  என்று  பெரியசாமி கத்த..

ஆண்டவர்கனி “வாயை  மூடுடா அவளுக்கு என்ன  தோணுதோ  அத  செய்யட்டும்” என்றான்..

பெரியசாமி  பார்கவியின்  அருகில்  வந்து, “அந்த  தாலியை  கழட்டி  தூங்கி அன்பு மூஞ்சியில்  எறி பார்கவி, இன்னும் முகூர்த்த நேரம்  முடியல  நாமா  மறுபடியும் கல்யாணம்  பண்ணிக்கலாம்”  என்று பேச..

பளார்  என்று  பெரியசாமியின்  கன்னத்தில் அறைந்திருந்தாள் பார்கவி.. “உனக்கு அவ்வளவு தான் மரியாதை போயிடு. என்னை என்னன்னு நெனச்ச, நான்  என்ன பொம்மையா!   ஒரு ஒருத்தனும் வந்து தாலி கட்ட. யாரு  உங்களுக்கு  அந்த  உரிமையை  கொடுத்தது..

நீ   அடுத்தவங்க  வாழ்க்கை  கெடுக்குறவன்னு   தெரிஞ்சு  இருந்தா  உன்னை  நான்  கல்யாணம்  பண்ண  சம்மதம்  சொல்லி  இருக்கவே  மாட்டேன். என் நல்ல நேரம், உன் புத்தி  எனக்கு தெரிஞ்ச  போச்சு'”.. என்று அவனை பார்த்த பார்வையில் பெரியசாமி கூனி குருகி நின்றான்..

பார்கவிக்கு  ஏமாற்றம், எவ்வளவு கனவோடு  இந்தியா வந்தாள்.. தன் தாய் வீட்டிற்க்கு. தன் தாய் வீட்டில்  இருக்க வேண்டும். தாய்  மாமன்  மகனை  கல்யாணம் பண்ணி இங்கேயே  இருக்கவேண்டும் என்று..

இலக்கையில்  அவளின் தாத்தா உருவாக்கி வைத்த   பெரிய வைத்திய சாலையை  விட்டு  எதற்காக  இங்கே வந்தாள்.. உரிமையான்  பாசம், அன்பு அக்கரையான வார்த்தைக்காக  தானே  இங்கே  வந்தது.. இங்கே  நடந்தது எல்லாம்  தலைகீழாக உள்ளது..

யாரையும் பார்க்க பிடிக்காத பார்கவி “அப்பா  வாங்க  நம்ம  இலங்கை  போகலாமா  எனக்கு இங்க யாரும் வேண்டாம்”  என்று பார்கவி  கிளம்ப..

“அம்மாடி”  என்று ஸ்ரீ ஜெயம்  பார்கவியின்  முன் வந்து நிற்க..

“அங்கிள்”  என்று ஸ்ரீஜெயத்தை  பார்த்தவள் அழுதவளை..

“அழுகாதடா  என் மஞ்சு  பொண்ணு  நீ. என் பொண்ணு  மாதிரி  உன்னை  நான் தவிக்க  விட மாட்டேன்  மா”  என்று பேச..

ஆதிநாரயணன் பார்கவி அருகில் வந்து “யாரு  இவரு  ஏன் மஞ்சு பேர சொல்லுறாரு”  என்று கேட்க..

“அப்பா  அங்கிளும், அம்மாவும்  ஒன்னா  காலேஜ்சில்  படிச்சவங்க பேரு ஸ்ரீ ஜெயம்” என்றாள்.

“ஸ்ரீஜெயம் மா”!  என்று  ஆதிநாரயணன்  அதிர்ச்சியாகி பார்த்தவர்..

“நீங்க  மஞ்சு  கூட படிச்சீங்களா”… என்றார்.

“ஒன்னா படிக்கல ஆனா ஒரே காலேஜ்  என் ப்பிரெண்டு”  என்றார்..

“ஓ…” என்றவர். “உங்களை  ஸ்ரீயின்னு  தானே  எல்லாரும்  கூப்பிடு வாங்க”  என்று  ஆதிநாரயணன்  கேட்க..

“ஆமாம்”  என்று ஸ்ரீ ஜெயம்  சொல்ல..

ஆதிநாரயணனுக்கு  பூமி  தலை கீழ்  சுத்துவது  போல் இருந்தது.

என்ன விளையாட்டு இறைவா இது.. யாரை, யாருடன்  சேர்ந்து வைக்க  இந்த  விளையாட்டு என்றவர்..

மகளை  பார்த்து “நான் சொல்லுற கேட்ப தானே” என்றார்..

“இனிமே  நீ  அன்பு  கூடதான்  இருக்கனும்”  என்று  சொல்ல..

“அப்பா”  என்றாள்  அதிர்ச்சியாகி..

“நான்  எது  சொன்னாலும்  உன்  நன்மைக்கு தான் பார்கவி, உன் மாமா  குடும்பத்தை விட. இவங்க உன்னை  நல்லா  பாத்துப்பாங்க”.. என்றவர்..

ஸ்ரீஜெயத்தை  பார்த்து “உங்க  ப்ரெண்டு  பொண்ணா  உங்க பொண்ணு  மாதிரி  பாத்துக்கோங்க”  என்றார்..

ஸ்ரீஜெயம்  ஆதிநாரயணன் கையை பிடித்துக்கொண்டே “ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு “என் பொண்ணு மாதிரியே  கண்டிப்பா  நல்லா  பாத்துப்பேன்”  என்றார்..

இவர்கள் பேசியதை கேட்ட ஊர்தலைவர் “சரிப்பா எல்லாம்  நல்லா படியா  முடிஞ்சது  எந்த  பிரச்சனையும்  இல்லாமல் கிளம்புங்க”  என்றார்..

பார்கவி  ஆதிநாரயணன்  பார்த்திருக்க..

மகளை  தோள் அணைத்து  வெளியே  அழைத்து வந்தவர்..

“உன்  தாத்தா  உன்கிட்ட அடிக்கடி  ஒன்னு  சொல்லுவார்  அது ஞாபகம் இருக்க”.. என்றவர்.

“ஒரு விசயம் நடக்குதுன்னா அது  விதிமா. ஒருத்தனுக்கு  ஒன்னு  கிடைக்கனுமுன்னு  இருந்தா, அது  கண்டிப்பா  அந்த  நேரத்துல  அவனுக்கு கிடைக்கும்.

அதே  ஒரு  பொருள்  ஒருத்தனுக்கு  கிடைக்க  கூடாதுன்னு  இருந்தா, அவன்  தலைகீழாக  நின்னாலும்  கிடைக்காது..

 ஸ்ரீ ஜெயம்  குடும்பத்தை பார்த்த நல்ல விதமாதான்  தெரியுது, நீ  கண்டிப்பா நல்லா  இருப்பா, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு”  என்று  சொல்ல.

பார்கவிக்கு   அன்புவுடன்  செல்லவே  விருப்பம்  இல்லை.. மனதில்    வேதனை  இருந்தாலும்  முகத்தில்  அதை  காண்பிக்காமல்   அமைதியாகி இருந்தாள்..

 இவர்கள்  பின்னாடி  அனைவரும் வர.. ஆண்டவர்கனியின்  குடும்பம் அமைதியாகி  செல்ல. பெரியசாமியை  “வாயை திறந்து பேசக்கூடாது நீ ”  என்று ஆண்டவர் கனி இழுத்து  சென்றிருந்தான்.

ஸ்ரீ ஜெயத்தின்  கைபிடித்த ஆதிநாரயணன். பார்கவியின்  கை பிடித்து அவரிடம் அவளின்  கையை கொடுத்தவர்  பார்த்துக்கோங்க”  என்று  சொல்லிவிட்டு, தன் மனைவி,  தன் மகன் அஜய்யை அழைத்து க்கொண்டு இலங்கை கிளம்பி விட்டார்..

போகும்  தந்தையை  பார்த்து  பார்கவி  கண்கலங்கி  நிற்க..

“வாம்மா”  என்று  ஸ்ரீ ஜெயம் தங்கள்  இல்லம்  அழைத்து வந்தார்..

நளினி  அன்புவுக்கும், பார்கவிக்கும்  ஆராத்தி   எடுத்தே  உள்ளே  விட்டார்..

அன்புவுக்கு  பார்கவியிடம்  மன்னிப்பு  கேட்கலாம்  என்று  அவள்  இருந்த  தன்  அறைக்கு வந்தான்..

பார்கவி தலையை பிடித்து படியே அமர்ந்திருக்க..

அன்பு  ஏதோ அவளிடம்  சொல்ல வர.

பார்கவி அவள்  பக்கம்  இருந்த பொருளை தூக்கி எறிய..

அன்பு  பயந்து  போனான்  பார்கவியின் கோபத்தை பார்த்து..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!