Skip to content
Post Views: 1,919
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் -13
Advertisement
Advertisement
Advertisement
அனிக்குட்டி அப்படி சொன்னதும், அதிர்ந்து நின்ற திவ்யா நானா, நானா என்றவள்.
Advertisement
பின்பு அனிகுட்டியின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவள். “அனிகுட்டி அத்தை அப்படி செய்யலடா, அத்தையை நம்புமா” என்றவள் எழுந்து..
யோகாவின் அறைக்கு சென்றாள். யோகாவை பார்த்து”யோகம்மா” என்று அழைத்து அருகில் செல்ல.
“என்கிட்டை பேசாதே நீ” என்றார்..
“யோகம்மா நான் என்ன பண்ணேன்”.
“நீ சொல்லித்தானே அன்பு கோவிலுக்கு வந்தான்”.
“ஆமாம் நான் சொல்லித்தான் அன்பு மச்சான் அங்கே வந்தார்”.
“அப்போ நீ தான் அவனுக்கு வழி சொல்லி இருக்க”..
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே லட்சுமி வந்தவர் திவ்யா அவகிட்ட மெதுவா பேசு அவளுக்கு உடம்பு சரியில்ல என்று கூறிவிட்டு தங்கையில் அருகில் அமர.
“அத்தை நீங்களாவது என்னை நம்புங்க”.
“நான் நம்பி என்ன ஆக போகுது. நீ அப்படி பெரியசாமியை பேசி இருக்க கூடாது திவ்யா.. என்றார் லட்சுமி..
“அத்தை நான் சொல்லுறத கேளுங்க”என்றாள்..
“நீ சொல்லுறது எல்லாத்தையும் நேத்தே கேட்டாச்சு என் காது குளிர. நீ போமா என்கிட்ட மட்டும் இனி நீ பேசாத கூடாது..
“அத்தை ப்ளீஸ், சொல்லுற கேளுங்க நான் எதுவும் செய்யல நீங்க ரெண்டு பேரும் என் அம்மா மாதிரி. யோகம்மா என்னை மன்னிச்சுருக்க, நான் என் மனசால எந்த தப்பும் செய்யல..
என்று பேசிக்கொண்டு இருந்தாள்..
ஆண்டவர் கனி வெளியில் இருந்து உள்ளே வந்தவன். யோகாவையும், திவ்யாவை பார்க்க.
யோகா கோபமாக இருப்பது போல் தெரிய, “சித்தி நீங்க அமைதியா இருங்க” என்றவன், “அம்மா சித்தியை பார்த்துக்கோங்க” என்றவன். “நீ வா” என்று திவ்யாவை தர தரவென இழுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றவன்.
“நீ சும்மாவே இருக்க மாட்டீயா திவ்யா, இப்போ எதுக்கு சித்தி கிட்ட சண்டை போட்டு கிட்டு இருக்க”..
“நானா!, நானா சண்டை போடுறேன். நான் எதுவும் பண்ணலன்னு சொல்லிட்டு இருந்தேன்”.
“எல்லாம் பண்ணிட்டு, எதுவும் பண்ணலன்னு சொன்னா” என்றான் நக்கலாக..
திவ்யாவுக்கு கோபம் தலைகேற, ஆண்டவர்கனியின் சட்டை பிடித்து இருந்தாள்..
“என்ன ரொம்ப பேசுறீங்க. நானும் நேத்துல இருந்து பாத்துட்டே இருக்கேன், செய்யாத தப்புக்கு என்னை பலி கெடா ஆக்குறீங்க, நான் எந்த தப்பும் செய்யல, நான் எதுக்கு பயப்படனும்,, கூப்பிடுங்க அன்பு மச்சானை, எல்லார் முன்னாடியும் கேளுங்க திவ்யா உங்களை வர சொன்னாளா”.. என்று ஆண்டவர் கனியிடம் கேட்க.
“கண்டவன் எல்லாம் என் வீட்டுக்கு வந்து பேசனுமுன்னு, அவசியம் இல்லை”.
“அப்போ ஒத்துக்கங்க நான் தப்புதான் செய்யலன்னு’..
“நீ அன்புவ கோவிலுக்கு வர சொன்னீயா, இல்லையா”
“வர சொன்னேன், ஒருதர் கல்யாணம் எங்க நடக்குதுன்னு கேட்டா நாமா சொல்ல மாட்டோம், அது மாதிரியே தான் நான் சொன்னேன்.. அது தவிற பெரிய சாமி கல்யாணம் நிக்கனுமுன்னு நான் கனவுல கூட நினைத்தது இல்லா”
‘சரி விடு இனி இத பத்தி பேசாத கொஞ்சம் அமைதியா இரு, யோகா சித்தி கிட்ட பேசாத” என்றான்..
“அது எப்படி ஒரே வீட்டுல இருந்து பேசாம இருக்குறது என்னால முடியாது நான் பேசுவேன்”..
“சொன்னா கேளு திவ்யா, சித்திக்கு வேற உடம்பும் சரியில்ல எனக்கு என் சித்தி ரொம்ப முக்கியம்” என்றான்
“அப்போ நானு உங்களுக்கு முக்கியம் இல்லையா சொல்லுங்க சார்.?. . “ஏய் வாய் ரொம்ப நீளுது”.
” உங்களுக்கு கையு நீலுறப்போ எனக்கு வாயு நீள கூடாதா..
“கொஞ்சம் நாள் அமைதியா இரு திவ்யா யார்கிட்டையும் பேசாத சண்டை போடத” என்றான்..
“நான் ஏன் சண்டை போட போறேன். யாருமே என்னை நம்பாத போது. அதுவும் அந்த பச்ச குழந்தை கிட்ட சொல்லி இருக்காங்க. உன் அத்தைகிட்ட பேச கூடாதுன்னு. நான் என்ன அவ்வளவு கொடுமை காரியா சொல்லுங்க, அப்பறம் நான் கிச்சனுக்குள்ள நுழைய கூடதாம், ஏன் இது என் வீடு இல்லையா”.. என்று கண்கலங்க.
“ஏதோ கோபத்துல அப்படி சொல்லி இருப்பாங்க, நீ கொஞ்சம் பொறுமையா இரு திவ்யா”..
“என்னால முடியாது இனி இந்த வீட்டுல என்னால இருக்க முடியாது”. என்றாள்..
“இந்த வீடு இல்லன்னா வேற எந்த வீடு” என்றான் ஆண்டவர்கனி.
“உங்க கூட நான் எங்க வேனா வர்ரேன் ஆனா, இந்த வீட்டுல இனி ஒரு நிமிசம் கூட என்னால இருக்க முடியாது” என்றாள்…
“நீ சொல்லுறது புரியல திவ்யா, இந்த வீடு இல்லன்னா, நீ என்னை தனியா வர சொல்லுறீயா” என்றான்..
“ஆமாம் என்னால இவங்க கிட்ட பேசாம எல்லாம் இருக்க முடியாது, எல்லாரும் நல்ல மாதிரி இருந்துட்டு, இப்போ பேசாம இருந்த என்னால அது முடியல, ஒரே வீட்டுல இருந்துட்டு அவங்க என்னை வெறுக்குற மாதிரி ஆகி போச்சு, அதனால என்னை வேற எங்கேயாவது கூட்டிட்டு போங்க” என்றாள்.
“ஏய் என்னடி தனி குடித்தனம் போக சொல்லுறீயா, யாரு சொன்னா உனக்கு இந்த ஐடியா, என்னை என் குடும்பத்துல இருந்து பிரிக்க, சொல்லி யாரு டி உனக்கு சொன்னா”..
“என்னது ஐடியாவா!. உங்களுக்கு என்ன கிறுக்கு பிடிச்சுருக்கா, எனக்கு யாரு சொல்லுவா, நான் இப்போ இங்க இருக்க முடியாதுன்னு சொல்லுறேன்.. அவ்வளவு தான். நான் என்ன சின்ன குழந்தையா எல்லாரும் எனக்கு சொல்லி கொடுக்க”..
திவ்யாவை பார்த்து முறைத்த ஆண்டவர்கனி “இந்த வீட்டை விட்டு நான் எங்கேயும் வர மாட்டேன்”..
“அப்போ நான் எல்லார் கூடயும் சண்டை போட்டுகிட்டே இருக்கவா”..
“ஏன் நீ சண்டை போடனும், இரண்டு நாள் அமைதியா இரு எல்லாம் சரியா போகும்”
” நீங்க இங்கே வீட்டுல இருந்து பாருங்க. இவ்வளவு நாள் என் வீடு மாதிரி நெனச்சேன், ஆனா இன்னைக்கு என்னை கிச்சனுக்குள் நுழைய கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. அப்போ இது என் வீடு இல்லை” என்று அழுதவளை..
ஆண்டவர் கனி திவ்யாவின் அருகில் வந்து அவளை மெல்ல அணைத்தவன், “அழாதடி யாரு சொன்னா உன்னை கிச்சனுகுள்ள நுழைய கூடாதுன்னு”..
“உங்க சித்தி தான், வேலைகாரி பொண்ணுகிட்ட சொல்லி இருக்காங்க”..
“நீ ஏன் வேலைகாரி பேச்ச கேட்குற, இது உன் வீடு, உனக்கு எல்லா உரிமையும் இருக்கு, சித்தி ஏதோ கோபத்துல சொல்லி இருப்பாங்க, எல்லாம் கொஞ்ச நாள் ஆனா சரியாகும் அமைதியா இரு” என்றான் அவளை அணைத்தவாறே..
“நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு போயிடுவீங்க நான் தானே இங்கே வீட்டுல இருக்கனும், என்னால முடியாது எனக்கு இங்கே இருக்க பிடிக்கல” என்று மீண்டும் சொல்ல..
“இங்கே இருக்க பிடிக்கலண்ணா, வேற எங்கே இருக்க பிடிச்சுருக்கு” என்றான் கனி..
“இந்த வீடு வேணாம்”..
“நீ வேணா தனியா போயி இருந்துக்கோ நான் வர மாட்டேன், எனக்கு என் வீடு, குடும்பம் தான் முக்கியம்”..
“அப்போ நானு” என்றாள்.
“என் குடும்பமுன்னா அதில் நீயும் தான் அடக்கம்.. நீ தான் இங்கே இருக்க முடியலன்னு சொல்லுறீயே, உன்னை பிடிச்சு வச்சுக்க வா முடியுமா சொல்லு, உனக்கு எங்க இருக்கன்னுமோ போய் இரு. என் கூட இந்த
வீட்டுல எப்போ வாழ முடியுமோ அப்போ வா, நான் என் வீட்டை விட்டு வர மாட்டேன், உனக்கு எங்க போகனுமோ போ, போய் நிம்மதியா இரு, நான் வரமாட்டேன்” என்றான்..
“என்ன சொன்னீங்க , என்னை தனியா போக சொல்லுறீங்களா, அப்போ எதுக்கு என்னை தாலி கட்டி தூங்கிட்டு வந்தீங்க, இப்படி நிம்மதி இல்லாமல் ஆக்கவா”..
“நான் உன்னை சந்தோசமா தான் வச்சு இருந்தேன். நீ தேவையில்லாம எவனுக்கோ உதவி பண்ணி உன் நிம்மதிய தொலச்சா நான் பொறுப்பாக முடியாது”..
“அப்போ எல்லாத்துக்கும் நான் தான் காரணம் அப்படி தானே”..
“அத என் வாயால சொல்லனுமா”.
“சரி உங்க கிட்ட சண்டை போட முடியாது நான் டெல்லி போறேன்”.
“போ தரலாமா போ, உனக்கு எப்போ என்கூட இந்த வீட்டுல வாழ முடியுமோ அப்போ வா, கிளம்பு நான் உன்னை கொண்டு போய் உங்க வீட்டுல விடுறேன்”..
“எனக்கு டெல்லி போக வழி தெரியும், நீங்க உங்க குடும்பத்தை பாருங்க சார்”… என்றவள் அவளின் உடையை எடுத்து ஒரு பேக்கில் அடுக்கி வைக்க.
“சொன்னா கேட்க மாட்டியா, எப்படி தனியே போவ”..
“டெல்லியில இருந்து இங்கே தனியா தான் வந்தேன். எனக்கு டெல்லி போக தெரியும், உங்க வேலையை பாருங்க”.. என்றாள்..
“நைட்டு போலாம் நாச்சியா பிளைட் டிக்கெட் போடுறேன்” என்றான் கனி..
“எனக்கு போக தெரியும், உங்க உதவி எனக்கு வேணாம்” என்று திவ்யா கோபமாக பேச..
“போடி எப்படியோ போ” என்றவன் கடைக்கு சென்றிருந்தான்.
திவ்யாவுக்கு கோபம் ஒரு தப்பும் செய்யாம. நான் ஏன் தண்டனை அனுபவிக்கனும். நான் சொல்லுறதை யாரும் கேட்க மாட்டிக்குறாங்க, நான் என்ன செய்ய, யோகாவின் பாராமுகம் அவளுக்கு பெரிய வலியை
கொடுக்க.. ஆண்டவர் கனியின் பேச்சு வேற உன்னை விட எனக்கு என் குடும்பம் தான் பெருசு என்று சொன்னது. போங்கடா, என்றவன். தன் பேக்கை எடுத்துக் கொண்டு கீழே வர. ஹாலில் யாரும் இல்லாததால் திவ்யா நேராக விருதுநகர் பஸ் ஸ்டாப்பில் மதுரை பஸ்சுக்காக நின்றாள்..
பார்த்துவிட்டார் திவ்யாவை ஸ்ரீஜெயம், , “என்னாட இங்கே நிக்குற”..
“அது சித்தப்பா, மதுரை போறேன்” என்றாள்..
“அது சரி தனியாவா போற , கனி எங்கே” என்றவர்.. திவ்யாவின் முகத்தை பார்த்து.
“நீ முதல்ல கடைக்கு வா” என்றவர். ஆண்டவர் கனிக்கு போன் போட..
“சித்தப்பா அவருக்கு போன் போடாதீங்க அவருக்கு தெரியும் நான் போகுறது”..என்றாள்.
“சரி இரும்மா, ஆண்டவர் கனி வரட்டும்”.. என்ற ஸ்ரீஜெயம் திவ்யாவை கடைக்கு அழைத்து சொல்ல…
“சித்தப்பா வேண்டாம், நான் ஊருக்கு போறேன்”என்றவளை.
“சித்தப்பா சொன்னா கேளுமா வா” என்று அவரின் கடைக்கு அழைத்து வந்திருந்தவர்.
“சொல்லு என்ன ஆச்சு ” என்றார்..
கடையில் யாரும் இல்லாததால், திவ்யா அனைத்தையும் ஸ்ரீஜெயத்திடம் சொல்ல..
அவள் சொன்னதை அனைத்தையும் கேட்டவர்..
“நான் வேனா அன்புவை கூட்டிட்டு வந்து, உன் வீட்டுல சொல்லவா, உனக்கும் அன்பு கல்யாணம் நடந்ததுக்கும் எந்த சம்பந்தம் இல்லன்னு சொல்லவா டா” என்றார் ஸ்ரீஜெயம்..
“நான் சொல்லுறதயே அவங்க யாரும் காது குடுத்து கேட்க மாட்டுக்குறாங்க சித்தப்பா. நீங்க வந்து சொன்னா, நான் பொய் சொல்லி உங்கள கூட்டிட்டு வந்தேன்னு பேசுவாங்க வேண்டாம் சித்தப்பா”… என்றாள்.
“இல்லாடாம்மா ஆண்டவர்கனி வீட்டுல எல்லாரும் நல்ல மாதிரிதான், சொன்னா புரிஞ்சிப்பாங்க, நீ பொறுமையா இரு, ஊர்க்கெல்லாம் போக வேண்டாம், நான் கனி கிட்ட பேசுறேன்.”
“அவங்களே என்னை நம்பல சித்தப்பா, நான் ஒன்னும் பண்ணல, அது என் குடும்பம் சித்தப்பா, அது என் வீடு அப்படி தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன், அப்படி பட்ட நான் அந்த குடும்பத்துக்கு எதிரா ஏதாவது செய்வேனா சொல்லுங்க , ஆனா அங்கே யாரும் என்னை நம்பல, நம்பாத வீட்டுல எப்படி என்னால இருக்க முடியும் சொல்லுங்க, இவர தனியா வேற வீடு போலாம் சொன்னா வர மாட்டேங்குறாரு” என்றாள்…
“திவ்யாமா கொஞ்சம் பொறுமையா இரு உன்ன தப்பா எல்லாரும் புரிஞ்சிட்டு இருக்காங்க நான் வந்து உங்க வீட்டுல பேசுறேன்” என்றார்.
“வேண்டாம் சித்தப்பா” என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே ஆண்டவர் கனி வந்து விட்டான்..
“உன்னை யாரு இங்க வர சொன்னது” என்றவன்.
“வா” என்று அவளை இழுக்க..
“கனி பேசலாம் கொஞ்சம் அமைதிய இரு” என்று ஸ்ரீஜெயம் சொல்ல.
ஆண்டவர் கனி மூன்றாவது ஆளு முன்பு தன் குடும்ப பிரச்சனையை பேச பிடிக்கவில்லை. “வா போலாம் வீட்டுக்கு போய் பேசலாம்” என்றான் திவ்யாவை முறைத்து..
“நான் வரமாட்டேன்” என்றாள் திவ்யா..
“கனி கொஞ்சம் பொறுமையா இருப்பா, திவ்யா எந்த தப்பு செய்யல, நானும் அன்புவும் உங்க வீட்டுல வந்து பேசுறோம், திவ்யா மேல எந்த தப்பும் இல்லை”என்று கூற..
“யாரும் என் வீட்டுக்கு வர வேண்டாம், என் குடும்பத்துல ஏற்கனவே எல்லாரும் நொந்து போயிருக்கோம், நீங்க வந்து ஒன்னும் பேச வேண்டாம், ஏய் வாடி வீட்டுக்கு போலாம்” என்று மறுபடியும் அவளை இழுக்க..
“நான் வரமாட்டேன்” என்றவள்.. “நான் என்ன உங்க வீட்டு நாய் குட்டியா, நீங்க இழுத்த, இழுப்புக்கெல்லாம் வர. நானும் மனுஷி தான், என்னால இனி அந்த வீட்டுக்கு வர முடியாது” என்றவளை.. பளார் என்று ஆண்டவர்கனி திவ்யாவை அறைய.
“என்ன பழக்கம் இது கனி பொம்பள பிள்ளைகளை அடிக்குறது” என்று ஸ்ரீஜெயம் கோபமாக பேச..
“நீ என்கூட வர்ரீயா இல்லையா” என்றான்..
திவ்யா வர மாட்டேன் என்று தலையாட்ட..
“உன்ன கட்டுனதுக்கு நல்ல மரியாதை வாங்கி குடுத்துட்ட. இனி என் மூஞ்சியில் முளிக்காத” என்றவன் கிளம்பி விட்டான்..
ஆண்டவர் கனி அடித்த அடியில் திவ்யாவின் கன்னம் சிவந்து போய், இருக்க.வலியில் தன் கைகொண்டு அழுத்தி பிடித்துக்கொண்டு இருந்தவளின், கண்ணீல் இருந்து கண்ணீர் அருவி போல் கொட்ட.
“ஸ்ரீஜெயம் அழாதம்மா , கனி கோபத்துல இருக்கான், ஆனா ரொம்ப நல்ல பையன். நீ நம்ம வீட்டுக்கு வாடா வந்து இரண்டு நாள் இரு, நானே பேசி கனியோடு அனுப்பி வைக்கிறேன்” என்றார்..
“இல்ல சித்தப்பா நான் அங்க வந்தா இன்னும் அவங்களுக்கு கோபம் தான் வரும் நான் என் வீட்டுக்கு போறேன்”..
“இல்லம்மா” என்று ஏதோ சொல்ல வந்தவர்.
திவ்யாவின் உறுதியை பார்த்து விட்டு. கடை பையனிடம் “கடையை பார்த்து கொள்” என்று சொல்லி விட்டு .
திவ்யாவை அழைத்துக்கொண்டு டெல்லி சென்றவர்.. அவளை அவள் வீட்டில் விட்டு கிருஷ்ணவேணியிடம் கொஞ்சம் நாள் இங்கே இருக்கட்டும், எல்லாம் சரியாகும் என்று சொல்லி விட்டு வந்தார்.
திவ்யாவுக்கு கணவன் அடித்தது தாங்க முடியவில்லை, சும்மா, சும்மா அடிக்குறாங்க நான் எந்த தப்பும் செய்யல என்று அழுதுக்கொண்டு இருந்தாள்.
ஆண்டவர் கனிக்கு அவமானமாக இருந்தது. தன் பேச்சை அவள் கேட்க வில்லை என்று, அதுவும் ஸ்ரீஜெயம் முன் அவர் என்ன நினைத்து இருப்பார். தன்னை என்று நொந்து கொண்டு இருந்தான். வீட்டில் உள்ளவர்கள் அவளை பற்றி ஒன்றும் கேட்காமல் இருக்க.
ஏன் திவ்யாவை பத்தி யாரும் கேட்கவில்லை, என்று வேற மனதில் நினைத்தவன், ஒரு வேலை அவளை எல்லாரும் ஒதுக்கி வைத்து விட்டார்களோ, அதற்கு தான் திவ்யா தனியே போக கூப்பிட்டாளோ” என்று நினைத்து இருந்தான்.
ஸ்ரீஜெயம் அன்புக்கு போன் போட்டு “எப்படி இருக்க அன்பு” என்றார்.
“நான் நல்லா இருக்கேன் மாம்ஸ்”..
“எப்போ உன் பொண்டாட்டி பார்கவியை முப்பை கூட்டிட்டு போக போற”…
“இப்போ அந்த பொண்ணு ஓகேவா, நாற்மளா இருக்காளா”.. என்றான் அன்பு..
“உம்ம.. எல்லார்கிட்டயும் நல்லா பேசுற, ஆன்லைன்ல வேலை பாக்குறா”.
“சரி மாமா நான் வந்தா பார்கவிக்கு பிடிக்குதோ என்னவோ, நீங்களே முப்பை வந்து இங்க கொஞ்ச நாள் இருந்துட்டு. அந்த பொண்ணா விட்டுட்டு போங்க” என்றான்..
“சரி அன்பு, உன் அம்மாகிட்ட சொல்லுறேன்” என்றார் ஸ்ரீஜெயம்..
அன்புக்கு கல்யாணம் ஆனா நாள் இரவு நடந்தது ஞாபகம் வந்தது..
அவளிடம் மன்னிப்பு கேட்க தான், அவள் இருந்த தன் அறைக்கு சென்றான்..
அவளோ, இவன் பேசுறதை கேட்காமல் அனைத்து பொருளையும் தூக்கி கீழே போட்டு உடைக்க..
பயந்து போனான், அவளின் கோபத்தை பார்த்து..
நான் அவள் பக்கத்தில் இருந்தாள், இன்னும் கோபப்படுவாள் என்றே, அடுத்த நாள் முப்பை கிளம்பி வந்து இருந்தான்..
பார்கவியை அழைத்துக்கொண்டு நளினியும், ஸ்ரீஜெயமும் முப்பை வந்து இறங்கினர்..
error: Content is protected !!