Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 14

அத்தியாயம் 14

 

விசாகா கல்லுரி சேர்வதற்காக சித்திகளுடன் ஷாப்பிங், அம்மாவுடன் பேக்கிங் சகோதரர்களுடன் சாட்டிங் என்று பிஸியாக இருந்தாள். இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வள்ளிமயில் கருவுற்றாள். அவளது அமெரிக்கா பயணம் சற்றே ஆட்டம் கண்டது. வெற்றிக்கு மனைவியை உடனே காண வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வள்ளி மயிலும் கணவரின் அருகாமைக்காக மிகவும் ஏங்கினாள். இருவருக்கும் மகிழ்ச்சியை தாண்டி உடனே நேரில் சந்திக்க முடியாவில்லையே என்று வருத்தம் அதிகமாக இருந்தது. அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று பெரியவர்கள் ஒதுங்கிவிட்டார்கள்.

 



Advertisement

விசாகவிற்கு தான் அத்தை ஆக போகிறோம் என்று பெரும் மகிழ்ச்சி. எப்பொழுதும் மகிழ்ச்சி என்றாள் முதலில் அன்னத்திடம் தான் செல்வாள். இப்பொழுது தனக்காக பேசாமல், அவர் மகனிடம் எதிர்த்து பேசியத்திற்கு, முகத்தை காட்டிய அன்னம் மேலே கோவமாக இருந்தாள். நல்லா பேசினா எங்க அம்மாவோட சேர்ந்து, என்னை அப்படியே அமுக்கி மெடிக்கல் காலேஜில சேர்த்திருக்க மாட்டாங்களா? என்னை எப்படி தப்பா நினைக்கலாம் என்று ஆதங்கம் பெண்ணுக்கு.

 

எல்லோரும் ஒதுங்கி விட்டால், யார் தீர்வு காண்பது. முத்து கருப்பன் தான் வெற்றிக்கு அழைத்து பேசினான். அவர்கள் வீட்டில் இருந்து தான் வெற்றிக்கு அழைத்தான்.

Advertisement

 

Advertisement

“சில நிமிடங்கள் வாழ்க்கையில் பொக்கிஷமானது அண்ணா. நீங்க வெளி நாட்டில் வேலை செய்வது உங்க விருப்பம் தான். ஆனால், இந்த நொடி, உங்க வாழ்கையில திரும்ப வர முடியாது இல்ல, அதை மாதிரி தான் நம்ம வீட்டு பெரியவங்களுக்கு உடம்பு முடியலைனா, மனசு பதறும். நினைச்சதும் உடனே வர முடியாத தூரத்துல எதுக்கு இருக்கனும். அதுக்குன்னு வெளி நாட்டில இருக்கிறவங்க எல்லாரையும் நான் குறை சொல்லல. ஒரு ஒருத்தருக்கு ஒரு தேவை இருக்கும். அந்த தேவையை பொறுத்து நாம முடிவு செய்யலாம். இங்க நம்ம எல்லாருக்கும் பணத்தேவை அப்படின்ற நிலைமை இல்லை. அதனால, உங்க ஆசைக்கு மூணு வருஷம் அங்க இருந்துட்டீங்க. அண்ணி கிட்ட பேசுங்க, ரெண்டு பேரும் பேசி முடிவு செய்ங்க“ என்றான் நிதானமாக.

 

“யாராவது வந்துடுன்னு சொன்னா வந்துடலாம்னு இருந்தேன் முத்து.. யாரும் கூப்பிடல.. மயிலும் சென்னையில இருக்க முடியாதான்னு தான் கேக்குறா ” என்றான் வெற்றி பாவமாக.

Advertisement

 

“ஹா ஹா ஹா.. எனக்கு தெரியும் அண்ணா, அதான் நான் போன் போட்டேன். சீக்கிரம் வரப்பாருங்க.. உங்க கம்பெனியிலே சென்னை ஆபிசுக்கு மாத்தி தருவாங்களான்னு கேட்டு பாருங்க.. “

 

“தேங்க்ஸ் முத்து, நான் பேசிட்டு சொல்றேன்“ 

 

முத்து கருப்பன் வெற்றியுடன் பேசிவிட்டு நீளிருக்கையில் அமர்ந்து தன் மடிக்கனினியில் ஒரு மருத்துவ ஆர்டிகிள் படித்துக்கொண்டிருந்தான். 

 

அன்னம் அவனுக்கு காபி கொடுத்துவிட்டு, “நீ ஏன் தம்பி தலையிடற? அப்புறம் ஏன் எங்க அண்ணனுக்கு நீங்க சொல்றீங்கனு முருகு கேள்வி கேக்கவா?” என்றார் ஆதங்கமாக.

 

அப்பொழுது சரியாக சாலா கொடுத்துவிட்ட பால் கொழுக்கட்டையுடன் இவர்கள் வீட்டின் வாயிலில் கால் வைத்தாள் விசாகா. இவர்கள் பேசுவதை கேட்டு ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

 

“என்ன அன்னும்மா இப்படி சொல்றீங்க? அவ சொல்றதை பெருசா எடுத்துக்கிட்டு?”

 

“இல்ல தம்பி தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேற தானே? உன்னை யாராச்சும் எதாவது சொன்னா என்னால தாங்க முடியாது”

 

“அங்க அத்தை வீட்ல  நம்மள எல்லோரும் ஒரே குடும்பமா தான் பார்க்கிறாங்க. அவ ஆசைப்பட்டதை படிக்கனும்னு அப்படி சண்டை போட்டா.. இதுக்கு ஏன் இவ்வளவு சங்கடப்படறீங்க அன்னும்மா? எல்லாம் நாம எடுத்துகிற விதத்தில் தான் இருக்கு அன்னும்மா”

 

“எல்லாம் சரி தான், அரை டிக்கெட் ரொம்ப பேசுறா” என்று நொடித்துக்கொண்டார்.

 

அப்பொழுது தான் வருவது போல, “மாமா மாமா” என்று அழைத்து கொண்டே உள்ளே நுழைந்தாள் விசாகா.

 

எப்பொழுதும் அன்னும்மா அன்னும்மா என்று தான் வருவாள்.

 

“என்ன மாமா மாமான்னு வர.. மாமா இந்த நேரத்துல வீட்லயா இருப்பாரு முருகு?” என்றார் அன்னம்.

 

விசாகா அவர் புறம் திரும்பவே இல்லை.

 

“இந்தாங்க.. பால் கொழுக்கட்டை…. அம்மா கொடுத்துட்டு வர சொன்னாங்க” என்று முத்து கருப்பனிடம் சம்மடத்தை கொடுத்து விட்டு வேகமாக சென்று  விட்டாள் விசாகா.

 

“நான் சொன்னதை கேட்டிருப்பாளா தம்பி” என்றார் அன்னம் அழுது விடுபவர் போல. அவரால் விசாகாவின் முகத்திருப்பலை தாங்கவே முடியவில்லை.

 

“கேட்டா  நல்லது தான் விடுங்க. நீங்க சொன்ன மாதிரி நாமளும் ஒரு எல்லையோடு நிறுத்திக்கலாம்” என்றான் முத்து.

 

அதுவரை இருந்த ஒரு வித மாயை விலகியது போல, பதறிவிட்டார் அன்னம். 

“அச்சோ முருகு கிட்ட பேசாம என்னால இருக்க முடியாது தம்பி.. அங்க சாலாச்சி, பாலு, அண்ணன்கள், எல்லார் கூடவும் எப்படி பேசாம இருக்கிறது? ஏதோ உன்ன சொல்லவும் ஆத்தமாட்டாம பேசிட்டேன்… ” 

 

“ஹா.. ஹா..அன்னும்மா.. அன்னும்மா.. உங்களுக்கு நான் எவ்வளவு முக்கியமோ.. அதுமாதிரி உங்க முருகுவும் உங்களுக்கு ஸ்பெஷல்.. இப்பவாச்சும் தெளிஞ்சிங்களே.. நீங்களாச்சு அவளாச்சு ..ஆளை விடுங்க..”

 

“எல்லோருக்கும் ஐடியா கொடுக்கிற? வெற்றிக்கு இப்ப தானே பக்கம் பக்கமா பேசுன? எனக்கும் ஐடியா கொடு தம்பி..” என்றார் அதட்டலாக.

 

“நீங்களே சமாதானம் செய்ங்க.. சின்ன பொண்ணு தானே.. உங்க முருகு தானே “

 

“கோவம் வந்தா லேசுல மலை இறங்க மாட்டாளே?”

 

“முருகு.. முருகு..” என்று வந்தார் அன்னம்.  அவருக்கு பேச இடமே கொடுக்கவில்லை விசாகா.. தன் செல்ல அன்னும்மா தனக்கு ஆதரவாக பேசவில்லை என்று ஏற்கனவே கோபத்தில் இருந்த பெண் அவர்கள் பேசியதை கேட்டு கோபத்தின் உச்ச நிலையில் இருந்தாள்.

 

சுந்தரம், அருண், சாலா, வீரா, கதிர், சுப்பு, வள்ளிமயில், பாலு, என்று அன்னத்திற்காக அனைவரும் தூது போனார்கள் விசாகவிடம். 

 

முருகம்மை ஆச்சியும் தொலைபேசியில் அழைத்து பேத்தியிடம் அன்னத்திற்காக பேசினார்.

 

எல்லா பாலும் நோ பால் தான்.

 

அன்னம் தவிப்பதை மேலும் பார்க்க முடியாமல், தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த விசாகவிடம் வந்து பேச்சு கொடுத்தான் முத்து கருப்பன்.

“அன்னுமா கிட்ட பேசனும்.. அவங்க பாவம்.. இதானே சொல்ல வந்தீங்க” என்றாள் விசாகா.  

 

“உன் அன்னும்மா தானே? உங்கிட்ட பேசாம ரொம்ப வருத்தப்படறாங்க.. பேசிடேன்”  என்றான் தன்மையாக.

 

“எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.. அவங்க செஞ்சது தப்பு தானே? உங்களுக்காக என்னை தப்பா நினைக்கலாமா?”

 

“அது அப்படி இல்ல விசாகா.. அவங்க எனக்கு அம்மா தான். ஆனால், பதினாலு வயசுல எனக்கு அம்மாவா வந்தாங்க..  ஓவர் ப்ரொடெக்ட்டிவ்னஸ். எங்கே நான் ஒரு நல்ல அம்மாவா இல்லாமல் போய்டுவேனோ? என் மகனுக்கு நான் துணை நிக்கனும். அவனை பத்திரமா பாத்துக்கனும் அப்படினு ஒரு மனப்பாண்மை. ஆழ் மனசுல அவங்களுக்கு எப்பவுமே ஒரு பயம். தன் கடமையை சரியா செய்திடனும்னு ஒரு பரிதவிப்பு, என்கிட்ட மட்டும் இல்ல, அப்பா கிட்ட கூட. அதிக அன்பை காட்டவும் பயப்படுவாங்க.. நானா அவங்களை கவர முயற்சி  செய்றமாதிரி ஆயிடுமோ?  கவனிக்காட்டி, வயசு வித்தியாசம் பார்க்கிறேன்னு நினைச்சிப்பாங்களோ? அப்படின்னு ஒரு குழப்பம். அவங்க அப்பாவை நேசிக்க தொடங்கியதே உன் மூலமா தான்.

 

நாங்க மூணு பேரும் ஒரு குடும்பமா சந்தோசமா தான் இருக்கோம் விசா. ஆனா அவங்க ஆழ் மனசுல இருக்கிற இந்த குழப்பங்களை காலம் தான் சரி செய்ய முடியும்.

 

மத்தவங்க பார்வையில நாம ஒரு சித்தியா பார்க்க படறோமோ அப்படின்னு ஒரு சஞ்சலம் எல்லார்கிட்டயும் அவங்களுக்கு இருக்கு. எந்த ஒரு பயமும், சஞ்சலமும்  இல்லாமல் அவங்க பழகறது உன்கிட்ட மட்டும் தான். அதான் நீ பேசாமல் இருக்கிறது அவங்களை ரொம்ப பாதிக்குது” என்றான் நீண்ட விளக்கமாக.

 

‘எத்தனை உன்னிப்பாக கவனித்துள்ளான்.வெளியே பார்க்கும் யாருக்கும் புலப்படாத நுண்ணிய உணர்வுகளை எவ்வளவு அழகாக புரிந்து கூறுகிறான். அன்னும்மாக்கே புரிந்திருக்குமோ தெரியாது?’ எப்பொழுதும் போல வியப்பாக பார்த்தாள்  எதிரில் நிற்பவனை.

 

“சரி அத்தான் .. நான் சமாதானம் ஆகிடறேன்..” என்றாள்  உடனே.

 

“தேங்க்ஸ் விசாகா” 

 

“எங்க அன்னும்மா கூட சமாதானம் ஆக நீங்க ஒன்னும் தேங்க்ஸ் சொல்ல வேண்டாம்”

 

“ஆறு மாசமா என்கூட சண்டை போட்டுட்டே இருந்தது நீ நினைச்சதை படிக்கத்தானே. ஆறு மாசமா அத்தான் கூப்பிடவே இல்லை, அது என்ன மிஸ்டர்.கருப்பன்?”

 

‘நண்டு பய போட்டு கொடுத்துட்டான் போலயே? ‘

 

“அது எல்லாரும் முத்துன்னு கூப்பிடறாங்களே, நாம வித்யாசமா கூப்பிடலாமேன்னு தான். நீங்க பெரியவங்க.. மரியாதையை எதிர் பார்ப்பீங்க இல்ல அத்தான். அதான் மிஸ்டர்.கருப்பன்”

 

“இப்ப என் கூடவும் சமாதானம் ஆகிடலாம்ல”

 

பிரண்ட்ஸ் என்று கை  நீட்டினாள் சிரித்துக்கொண்டே.

 

முதன் முதலில் ப்ரண்ட்ஸ் என கை குலுக்கிய சின்ன பெண் ஞாபகத்தில்  இதமாக வந்தாள்.

 

இருவரும் சிரித்துக்கொண்டே வருவதை ‘ங்கே’ என்று பார்த்தார்கள் அனைவரும்.

 

“அன்னும்மா” என்று அவளே சென்று அன்னத்தை கட்டிபிடிக்கவும் தேம்பி தேம்பி அழ தொடங்கினார் அன்னம்.

 

நன்றியுடன் மகனை பார்த்தார் அன்னம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!