Skip to content
Post Views: 4,120
ரித்துவின் போன் அடித்தது.
மிகவும் கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தவன், போனை எடுத்துப் பார்த்து, டிஸ்ப்ளேயில் மம்மி காலிங் என்று வர, அட்டென்ட் செய்து, “சொல்லும்மி” என்றான்.
“என்னத்த சொல்ல? ஏண்டா இப்படி இருக்க? நான் அப்ப தானே உன்கிட்ட படிச்சு படிச்சு சொல்லிட்டு வச்சேன். ஹை ஸ்பீட்ல போகாத, போகாதேன்னு, ஏண்டா இப்படி என்னை த்ரட்டன் பண்ணிட்டே இருக்கே?”
“அய்யோ ம்மி, நாம் ஸ்பீடா போய் எல்லாம் கீழே விழல, ஒரு குழந்தை அன்எக்ஸ்பெட்டடா குறுக்கே ஓடி வந்துடுச்சு, அது மேலே மோதாம போக நினைச்சு, நான் ஸ்கிட் ஆகிட்டேன்! நீ பயப்படற அளவுக்கு எல்லாம் பெரிய இஞ்சுரி இல்லை! நீ டென்சன் ஆகாத!”
Advertisement
“எப்படிடா டென்சன் ஆகாம இருக்க முடியும்? நீ ஒரு பிள்ளைக்கு அப்பன் ஆனா தான் உனக்கு என்னோட பயம் பதட்டம் புரியும்!”
அடியேன்னு கூப்பிட என் பொண்டாட்டி பக்கத்துல இல்லையாம்.
இதுல ஒரு பிள்ளைக்கு அப்பன் ஆனா தான் மம்மியோட பயம் என்னன்னு புரியுமாம்!
Advertisement
ஏன் ம்மி காமெடி பண்ணிட்டு இருக்க, நானே அவளைத் தேடி தான் நாய் மாதிரி ஊர் ஊரா சுத்திட்டு இருக்கேன்! மனதிற்குள் நினைத்து சிரித்து கொண்டான் ரித்து.
Advertisement
அவன் அம்மாவோ விடுவதாக இல்லை!
“உடனே உன்னை ஓடி வந்து பார்க்குற தூரத்துல நான் இப்ப இல்ல! பிஸினஸ் விசயமா டெல்லி வந்திருக்கேன். நாலு மாசமா கஷ்டப்பட்டு வாங்கின அப்பாயின்ட்மென்ட். உடனே கேன்சல் பண்ணவும் முடியல!”
“நீ அப்படி கஷ்டப்பட்டு அந்த மீட்டிங் கேன்சல் பண்ணி, அடிச்சு பிடிச்சு பிளைட் ஏறி வந்து இங்க ஆகப் போறது ஒன்னும் இல்ல!
Advertisement
அப்படியே வந்தாலும் என்னைப் பார்த்து அழுதுட்டு இருக்க முடியுமே தவிர, என்னோட பெயின்ல கொஞ்சம் ஷேர் பண்ணிக்க முடியுமா சொல்லு!
அத பெயின் கில்லர் தான் பண்ணப் போவுது!
அதுக்கு எதுக்கு நீ இங்க வந்திட்டு! நீ பேசாம அங்கியே இரு.
போன வேலைய சக்சஸ்புல்லா முடிச்சுட்டு வா ம்மி. எனக்கு நீ பயப்படுற அளவு எல்லாம் அடி இல்லை!”
“நீயே மேனேஜ் பண்ணிப்பியாடா, நான் உனக்காக, நம் புட் பிசினஸ் கூட இன்னொரு பிசினஸும் பேசிட்டு இருக்கேண்டா.
ஒரு ஜப்பான் கம்பெனியோட புது இபைக் டிஸ்ட்ரிபியுட்டர்ஷிப்!
உன் இண்டஸ்ரிலயே! டெல்டா டிஸ்ட்ரிக்ஸ் பூரா நமக்கே தராங்க!
நீ சமாளிச்சுப்பன்னா, நான் இருந்து அதையும் பேசி முடிச்சுட்டு வந்திடுவேன்!”
“பண்ணும்மி, நான் பார்த்துக்கிறேன். அதான் மனோஜ் அண்ணா வேறே வந்துட்டாங்க. அவங்க கூட இருக்காங்க. நீ டென்சன் இல்லாம இரு.”
“அப்ப சரிடா கண்ணா. பீ கேர்புல்! டிஸ்சார்ஜ் ஆனவுடனே பைக்க எடுத்துட்டு கிளம்பி விடக் கூடாது. அங்கேயே பானு ஆண்ட்டி வீட்டில் இரு. நான் நேரே அங்கே வந்துடறேன்.
பானு வேறே வண்டியில இருந்து கீழே விழுந்துட்டா, இல்லன்னா அவ வந்து உன் கூட இருந்திருப்பா!”
“சரிம்மி.. நான் பார்த்துக்கிறேன். நீ போன் கட் பண்ணு. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. தூங்கப் போறேன்.”
“சரிடா. நல்லா ரெஸ்ட் எடு.” என்று சொல்லி போனை வைத்தார் சஷி.
அய்யோ மம்மி. என்னை தூங்க விடாம போன் பண்ணி எழுப்பிட்டியே. தூங்கினா தானே கனவு வரும்! கனவில் என் குட்டிம்மா வருவா.
நேத்துக் கூட கனவில் குட்டிமா வந்தாள். எனக்கு அடிப்பட்டிருப்பதைப் பார்த்துட்டு கதறித் தீர்த்தாள். அப்புறம் என் உடம்பைத் துடைத்து விட்டாள்.
நான் குட்டிமான்னு கூப்பிட்டேன் அவளைக் கூப்பிட்டேன், ஆனா அவளுக்கு அது கேக்கல. என்னால கண்ணைத் திறந்து பார்க்கவும் முடியல! கனவும் முடிஞ்சி அவளும் போய்ட்டா!
ஆனா கனவா இருந்தாலும் அவ்வளவு சந்தோசமா இருந்திச்சு! நானும் இங்க துடை, அங்க துடைன்னு நல்லா அவளுக்கு நகர்ந்து கொடுத்தேன்!
இன்னிக்கு அவ மறுபடியும் வருவாளா? அவன் நேற்று மானு வந்து விட்டுப் போனதை கனவு என்றே நினைத்துக் கொண்டான்!
இன்றும் தூங்கினால், கனவில் அவன் குட்டிம்மா வருவாள் என்று நினைத்துக் கண்களை மூடி படுத்து இருந்தான்.
அவன் ரூம் கதவு திறக்கப் பட்டது. இரண்டு நர்ஸ்கள் வந்தார்கள்.
ஒருத்தி மருந்துகளை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க, இன்னொருவள் அவனின் கேஸ் சீட்டை எடுத்துப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“இன்னும் இவரோட அட்டெண்டர்ஸ் யாருமே வரல போலிருக்கு?”
அந்த குரல்.. அது அவனின் குட்டிம்மாவின் குரலைப் போல இருந்தது.
மெல்ல கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.
அது.. அது. அவனின் குட்டிம்மாவே தான்!
ஆனால் தனக்கு ஏன் யாரைப் பார்த்தாலும் குட்டிம்மாவைப் போலவே தெரிகிறது?
குட்டிம்மா எப்படி நர்சாக ஆக முடியும்! கடைசியாக அவள் தன்னுடன் ஆர்ட்ஸ் காலேஜில் அல்லவா படித்துக் கொண்டிருந்தாள்!
முதல் வருடம் பி எஸ்சி கெமிஸ்ட்ரி!
அடிப்பட்டதில் தன் தலைக்கு ஏதும் ஆகி விட்டதா? இல்லை ஹெவியான டோஸ் மெடிசன்ஸ் ஏதும் அப்படி குழப்பி விடுதா? அவன் குழம்பிக் கொண்டே தூங்குவது போல அவர்களின் பேச்சையும் கவனித்தான்.
அந்த மற்றொரு நர்ஸ் சொன்னாள்.
“ஆமா எம் எம். இன்னும் யாரும் வரல. கூட இருந்து பார்த்துக்கிட்டு, இவர் கைக்கு அதிகம் மொபிலிட்டி கொடுக்காம இருந்தா சீக்கிரம் சரியாகிடும்.
ஆனா செய்யணுமே.
அப்புறம் எம்.எம். நேத்து சுஜி சிஸ்டர் சொன்னாங்க.
இவர் உங்க ரிலேடிவாமே, இவர் யாரையும் ஸ்பன்ஜிங் கொடுக்க அலவ் பண்ண மாட்டேங்கிறார், உங்கள மட்டும் தானே விட்டார்ன்னு.
சிஸ்டர் கோச்சுக்காம, இன்னிக்கும் நீங்களே இன்னிக்கும் பண்ணி விடறீங்களா?
அக்பர் சார் கிட்ட என்னாலையும் திட்டு வாங்க முடியாது!”
“ம்ம். சரி. நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று சொன்னவள், கொஞ்சம் மெதுவாக தனக்குள் சொல்லிக் கொள்வது போல,
“இவர் தூங்கிட்டு தானே இருக்காரு. முழிச்சு என்னைப் பார்த்திட்டா தான் எனக்கு கொஞ்சம் பிரச்சினை..” என்று சொன்னாள்
“ரொம்ப தாங்க்ஸ் எம்.எம்.” என்று சொல்லி, கேஸ் ஷீட்டை எடுத்துக் கொண்டு, கதவை மூடி விட்டு அவள் சென்று விட்டாள்.
மானு மெதுவாக முணு முணுத்ததை அவள் கேட்க வில்லை. ஆனால் ரித்து கேட்டுக் கொண்டு தான் இருந்தான்!
ரித்துவின் அருகில் வந்தாள் மானு.
நேற்றே இந்த பக்கம் வரவே கூடாது, ரித்து கண்ணிலோ, அவனை சேர்ந்தவர்கள் கண்ணிலோ பட்டு விடக் கூடாது என்று முடிவெடுத்திருந்தவள் தான்!
ஆனால் மனசு கேக்க வில்லை. சிசிடிவி கேமரா மூலம் அந்த ப்ளோரை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் அவ்வபோது.
அவன் ரூமிற்கு யாரும் வந்ததாக தெரியவில்லை.
ரிசப்சனில் விசாரத்தாள்.
ரித்தீஷ் பேசண்டுக்கு அட்டெண்டர் வந்து விட்டார்களா என்று!
யாரும் இன்னும் வந்திருக்க வில்லை என்று அறிந்த பின், அவளின் ரித்து இப்படி யாருமே பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் தனியே இருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவன் தூங்கி கொண்டிருக்கும் போதாவது போய் பார்த்து விட்டு வர நினைத்து வந்திருந்தாள்.
அவன் தூங்கி கொண்டுதான் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டு.
ஆனால் போன் கால் வந்து அவனை எழுப்பி விட்டிருக்கும் என்று அவள் நினைத்திருக்க வில்லை!
அவனை நெருங்கியவள் அவனைத் தொட்டு உடம்பைத் துடைத்து விட தொடங்க, நேற்று தூக்கத்தில் கூட அவளின் ஸ்பரிசம் உணர்ந்தவன், அவள் அருகாமையை அவளின் வாசத்தை உணர்ந்தவன், இன்று விழித்திருக்கும் போது உணராமலா இருப்பான்?
அவனுள் அதிர்ச்சி! ஏன் என் குட்டிமா, அவளை நான் பார்த்து விடக் கூடாது என்று நினைக்கிறாள்?
ஏன் முதலில் அவனைப் பிரிந்து, இப்படி சொல்லாமல் கொள்ளாமல் கண் காணாமல் சென்றாள்?
யார் சொல்லி அவள் அப்படி செய்தாள்?
அவள் வீட்டில் யாரும் அப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லையே?
ஒருவேளை அவளுடைய மாமாவின் வேலையா? அவரை அவன் ஒரு முறை தான் பார்த்திருக்கிறான், அவள் அப்பா இறந்த போது! ஆனால் அவர் அப்படி செய்திருப்பாரா?
அல்லது இவனின் மாமன்களில் யாராவதா? அதற்கு தான் நிறைய வாய்ப்புகள் இருக்கு!
யார் என்ன சொல்லியிருந்தாலும் , அதை அவள் அவனிடம் சொல்லியிருந்தால் அவன் அதை சரி செய்து இருப்பானே?
அதை விட்டு விட்டு துடிக்க துடிக்க அவனை விட்டு விட்டு எப்படி அவளால் அவனைப் பிரிய முடிந்தது?
அவனுள் ஏராளமான கேள்விகள்!
அப்போது பிரிந்ததைக் கூட கொஞ்சம் ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளலாம்.
அப்போது அவளும் சிறு பெண்!
கொஞ்சம் மன முதிர்ச்சி இல்லாத அம்மா, அப்பா இறந்த அதிர்ச்சி! சோகம், இவன் மாமன்களின் மிரட்டல் இப்படி எது வேண்டுமானாலும் காரணமாக இருந்திருக்கலாம்!
ஆனால் இன்று!
என்னைப் பார்த்த பின்னும் விலகியே நிற்க காரணம்?
அவனும் இப்போது சின்ன வயது பையன் இல்லையே!
அவனின் இப்போதைய மன முதிர்ச்சி, இப்போது கொஞ்சம் நிதானத்தைக் கடைப் பிடிக்க வைத்தது!
எனவே அவன் தான் கொண்ட அதிர்ச்சியை அடக்கிக் கொண்டு, தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தான், அவள் துடைத்து முடிக்கும் வரை!
துடைத்து முடித்தவள், கதவை நோக்கி ஒரு பார்வையை செலுத்தி விட்டு, அவன் நெற்றியில் இன்றும் ஒரு முத்தம் வைத்தாள்!
ரித்தீஷ் அவளைக் கட்டிக் கொள்ள பரப்பரத்த தன் கைகளை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, அவளை கவனித்துக் கொண்டிருந்தான், கண்களைத் திறக்காமலே!
அவனை முத்தமிட்டு, தலையை ஒரு முறை கோதி விட்டு, கண்கள் கலங்க ஒரு முறை பார்த்து விட்டு நகர நினைத்தவள் கையை வலுவான கரம் கொண்டு பற்றி நிறுத்தினான் ரித்தீஷ்.
அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள் மானு.
சிவந்த கண்களில் கோபம் கொப்பளிக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ரித்து!
அவன் விழிகளை நேரில் சந்திக்க தைரியம் இல்லை மானுவிற்கு!
பயந்து போய் உடல் வெடவெடக்க நின்று கொண்டிருந்தாள்.
“எங்கப் போறீங்க மேடம்? இப்படி நீங்க என்னைக் கண்டு ஓடி ஒளிய என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?” குரலில் கோபத்துடன் நக்கல் வேறு!
“அது.. அது வந்து.. “ அவள் பதில் சொல்ல முடியாமல் திணற,
அவன் மேலும் தொடர்ந்தான்.
“உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்திருந்தா, என் கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம கொள்ளாம, ஊரையே விட்டு போய் இருப்ப?
ஒரு போன் கூட பண்ணல, போன் நம்பரையும் மாத்திட்ட.. என்ன காரணம் அதுக்கு?
யார் சொல்லி நீ இப்படி செஞ்ச? என் மாமாக்கள் யாராச்சும் உன்னை மிரட்டினாங்களா? இல்ல உன்னோட மாமா மிரட்டி கூட்டிட்டுப் போய்ட்டாரா? எதுவா இருந்தாலும் நீ, என்கிட்ட சொல்லி இருந்தா நான் பார்த்து இருப்பேன்ல? உனக்கு என்ன அப்படி தான்தோன்றித்தனம்?
சரி அப்ப தான் ஏதோ ஒரு சூழ்நிலை, போய்ட்ட.. அதயே நான் இன்னும் மன்னிக்கல.
ஆனா நேத்தே நீ வந்து என்னைப் பார்த்துட்டு போய் இருக்க!
ஆனா நான் கண் திறக்கிற வரைக்கும் கூட பக்கத்துல இல்லாம ஓடிப் போய் இருக்க! இதோ இன்னிக்கும் நான் தூங்கிட்டு இருப்பேன்னு நினைச்சு வந்திருக்க!
அப்படி என்ன தான் காரணம், நீ இப்படி ஓடி ஓடி ஒளியறதுக்கு? சொல்லுடி..”
அவன் அவள் கைகளை தன் இடது கை கொண்டு இன்னும் வலுவாக அழுத்திப் பிடித்தான்.
“ஷ்.ஷ். வலிக்குது ரித்து…” அவள் வலியில் முனகினாள்.
“வலிக்குது ரித்து” என்ற இந்த வார்த்தையை அவள் பல மாடுலேசன்களில் பல்வேறு சூழ்நிலைகளில் அவள் சொல்லக் கேட்டிருக்கிறான்!
ஆனால் வலி பொறுக்க முடியாமல் சத்தம் எழுப்பாமல் கதறிக் கொண்டு இது வரை சொன்னதில்லை!
இப்போது அவள் கண்களில் வலியினால் உண்டான வேதனையைக் கண்டு அவனுக்கும் தான் வலித்தது!
“உங்க வீட்டில் இருந்து யாராச்சும் வந்துடுவாங்கன்னு தான்.. அவங்க முன்னாடி வர வேணாம்னு தான்!”
“வந்தா என்ன? யார் உன்னை என்ன பண்ணிட முடியும்? அப்படியே வந்தாலும் என் அம்மா தானே வருவாங்க? அவங்க வந்தா உனக்கென்ன பிரச்சினை?”
“அம்மா மட்டும் இல்ல.. உன்..உன். வொய்ப் வந்திருப்பாங்கன்னு நினைச்சேன்!”
அய்யோ பாவம்! மானுவின் க்ரைம் ரேட் ஏறிக் கொண்டிருப்பது தெரியாமல் அவள் சொல்லியே விட்டாள்
சுள்ளென்று கோபம் வந்தது ரித்துவிற்கு!
என்னை கதற விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டு, இப்ப நான் வேற கல்யாணம் வேற பண்ணி செட்டில் ஆகிட்டு இருப்பேன்னு நினைச்சுட்டு வேற இருக்கியா? உள்ளுக்குள் எரிமலையாய் கோபம்! ஆனால் அடக்கிக் கொண்டு பேசினான்!
“வொய்பா?” அவன் பல்லைக் கடித்துக் கொண்டு, “அவ எங்க என் கூட இருக்கா? கூட இருந்தா தானே வர்றதுக்கு?”
“ஏன் வர மாட்டாங்க, டெலிவரிக்கு ஊருக்குப் போய் இருக்காங்களா?”
அடிப்பாவி, உன்னை கடவுள் தான் காப்பத்தணும்!
“இல்ல, என்னை விட்டுட்டு போய்ட்டா! எங்கியோ போய்ட்டா!”
“என்ன?” மானு அதிர்ந்து போய் கேட்டாள்!
“உன்னைப் போய் வேணாம்னு எப்படி சொல்ல முடியும் ஒரு பெண்ணால? உன்கிட்ட என்ன குறையைக் கண்டாளாம்?” மானுவிற்கு அந்த முகம் தெரியாத பெண்ணின் மேல் கோபம் வந்தது!
என் ரித்துவிற்கு என்ன குறை? அவனைப் போய் விட்டுட்டு போய் இருக்கானா, நிச்சயம் அவ ஒரு முட்டாளா தான் இருக்கணும்! மனதிற்குள் நினைத்தவள், அவன் பதிலை எதிர்பார்த்து அவன் முகம் பார்க்க,
“அத நீ தான் சொல்லணும்!”
“நானா?”
“ஆமா நீயே தான்! நீ தானே என் பொண்டாட்டி! நீ தானே என்னை பிடிக்காமல் விட்டுட்டு போனே? அப்ப நீ தான் சொல்லணும்!”
“அப்ப.. நீ.. உனக்கு இன்னும்.. “ அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் சர்ட் பாக்கெட்டில் இருந்த போன் அடித்தது வைப்ரேட்டில்!
ரித்துவும் அதை கவனித்து விட்டு, “போனை எடு முதல்ல! ஸ்பீக்கர்ல போடு” என்றான்.
போன் கால் ரிசப்சனில் இருந்து!
“எம்.எம். எங்க இருக்கீங்க? இங்க உங்க பொண்ணும் மனீஷ் சாரும் ரொம்ப நேரமா உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க! நீங்க வர்றீங்களா?”
அவள் பதில் சொல்லுமுன், ரித்து சைகையில் அவர்களை இங்கு வர சொல்ல சொன்னான்.
“சிஸ்டர் நீங்க அவங்க ரெண்டு பேரையும் பர்ஸ்ட் ப்ளோர் பர்ஸ்ட் ரூமிற்கு அனுப்புங்க. நான் பார்த்துக்குறேன்.” என்று சொல்லி போனை வைத்தவள் கொஞ்சம் தவிப்புடன் காத்திருந்தாள்.
அய்யோ இந்த ரித்துக் குட்டி என்னை மானும்மான்னு கூப்பிடும். மனிஷ் அண்ணாவை டாடின்னு கூப்பிடுமே! இங்க இருக்கிறவங்க மாதிரி ரித்துவும் என்னை தப்பா நினைச்சுட்டா? அய்யோ! என்று அவள் பதட்டத்துடன் நின்றாள்.
“உங்க பொண்ணு!” என்று போனில் சொல்லியதைக் கேட்ட ரித்துவுக்கும் ஒரே அதிர்ச்சி! அவனும் கொஞ்சம் டென்சனாக தான் காத்திருந்தான்!
கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்த மனீஷிடம் இருந்து குதித்துக் கொண்டு “மானும்மா..” என்றபடி ஓடி வந்தது ரித்துக் குட்டி!
மானுவைக் கண்டு சிரித்த அவளின் கன்னக்குழி சிரிப்பில் ஒரு கணம் சொக்கிப் போனான் ரித்துவும்!
“ஹாய்.. பாப்பா, இங்க வாங்க..” என்று அவன் அருகில் அழைத்து,
“ஹாய்.. உங்க பேர் என்ன?” என்று கேட்டான்.
“எம்.எம். ரிதன்யா” என்றது குழந்தை.
இங்கோ மானுவிற்கோ தவிப்பில் உயிர்ப் போய்க் கொண்டிருந்தது!
“எம்.எம். ரிதன்யா? நைஸ் நேம்!” என்றபடி மானுவை அர்த்தமாய் ஒரு பார்வைப் பார்த்தான்.
மானுவிற்கு கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது இப்போது.
“ஹாய். நான் மனீஷ். மெடிக்கல் ரெப். இன்னிக்கு நைட் நான் கேரளா போகணும். வர ஒரு வாரம் ஆகும். ட்ரைன் ஏறும் முன், மானுவிடம் சொல்லிக் கொண்டு போகலாம்னு வந்தேன்.
கூடவே இவளும் வருவேன்னு அடம் பிடிச்சு வந்திட்டா” என்றான் மனிஷ் ரித்தீஷின் கண்களை நேருக்கு நேர் பார்த்து சிரித்தபடி!
அவன் ரித்தீஸை அடையாளம் கண்டு கொண்டான். மானுவின் மேரேஜ் சர்டிபிகேட்டில் உள்ள ரித்தீஷின் போட்டோவைத் தான் அவன் பார்த்து இருக்கிறானே!
அவனுள் ஏதோ ஒரு நிம்மதி! ஒரு வழியா மானு அவ புருஷனை சந்தித்து விட்டாள்! அவங்க இனிமேயாவது சேர்ந்து வாழணும்! அவனுள் வேண்டுதல்!
“ஹாய். நான் ரித்தீஷ். நான்..” அவன் சொல்லும் முன்பே மனிஷ்க்கு போன் வந்து விடவே, ரித்தீஷ் “நீங்க பேசிட்டு வாங்க. நாம் இன்னொரு நாள் பேசலாம்”. என்றான்.
“சாரி.. நாம பேசணும். நிறைய பேசணும். நான் போன் பண்றேன் உங்களுக்கு” என்றபடி, ரித்துக் குட்டியைத் தூக்கிக்கொண்டு,
“நாங்க கிளம்பறோம் மானும்மா. மானு அத்தைக்கு பாய் சொல்லு ரித்துக் குட்டி.” என்று சொல்லி அவசரமாக வெளியே கிளம்பி விட்டான் மனீஷ்!
அவன் போகும் போதும் அவசரமாக சொல்லி விட்டுப் போனதில் இருந்த செய்தியை அதிர்ச்சியில் இருந்த மானு கவனிக்க வில்லை!
ஆனால் ரித்து கவனித்து விட்டான்!
அவர்கள் போன பின், “கதவை லாக் பண்ணிட்டு வா!” என்றான் ரித்தீஸ் அழுத்தமான குரலில்.
“ஏன்?”
“சொன்னதை செய்!”
அவள் லாக் பண்ணி விட்டு வந்தவுடன் அவளை அருகில் அழைத்தவன், அவன் இடக்கையால் அவள் சர்ட் மேல் பட்டனை எடுத்து விட்டான்.
மானு அதிர்ந்து போய், அவனைத் தடுக்க,
அவனோ விடாமல், அவள் கழுத்தில் போட்டிருந்த செயினை இழுத்து வெளியே போட்டான்!
அது வெறும் முருகன் டாலருடன் கூடிய, ஆனால் கனத்த செயின்!
“என்ன பார்க்குற? புருஷன், குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிட்ட போல இருக்குதே, தாலி இருக்கான்னு செக் பண்ணினேன்! வேற ஒண்ணுமில்ல!”
“ரித்து..” மானு கோபத்தில் பல்லைக் கடித்தாள்.
கோபத்திலாவது உண்மையை சொல்லுவாளா?
சொல்லி விடு வெள்ளி நிலவே தொடரும்.
error: Content is protected !!