Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ 27 (இரண்டாம் பாகம் )

அடுத்த நாள் காலை கொஞ்சம் பரபரப்பாக தான் விடிந்தது…. வழக்கம் போல சுபா தான் முதலில் எழுந்தாள்… எழுந்ததும் முதலில்  அவள் பார்த்தது அர்ஜுனனை தான்… அவன் முகத்தை இரண்டு நிமிடங்கள் நிம்மதியாக பார்த்தவள் அடுத்து பார்த்தது ஆரவை தான்….



Advertisement

அடுத்து அவள் நிரவியை பார்க்க முற்படும் போது ரித்திகா எழுந்துக்கொள்ள அவளுக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு அவளை அழைத்து கொண்டு குளியலறை சென்று முகம் கழுவி விட்டு அவளையும் அழைத்து கொண்டு சமையலறை வந்தாள்…. அவளுக்கு பால் கொடுத்து விட்டு தனக்கும் ஒரு டீ போட்டு கொண்டு குடிக்க ஆரம்பித்தாள்…

Advertisement

Advertisement

அடுத்து ஒவ்வொருவராக எழுந்துகொள்ள அர்ஜுனன் கடைசியாக தான் எழுந்தான்… சுபா அப்போதாவது நிரவியை தேடுவாளா என்று கண்மணி மித்ரா முகுந்தன் மூவரும் எதிர்பார்த்தனர்…. ஆனால் அவளோ அர்ஜுனன் எழுந்ததும் அவனுக்கு தேவையானதை செய்ய சென்றுவிட்டாள்…

Advertisement

சுபா இருந்த வீடு கொஞ்சம் பெரிய வீடு தான்… ஆனால் ஒரு குளியலறை இருந்ததால் பக்கத்தில் இருக்கும் அறையை வாடகைக்கு எடுத்து இருந்தனர்…

அர்ஜுனன் எழுந்தவன் கஞ்சி குடித்துவிட்டு அப்போது தான் நிரவியை பார்த்தான்… அவள் இல்லாமல் போகவே சுபாவிடம் கேட்டான்… அவளும் தெரியவில்லை என்று கூறியவுடன் வீட்டில் அனைவரிடமும் கேட்டான்… யாரும் தெரியவில்லை சசியும் இல்லை அவனுடன் இருப்பாள் என கூறிவிட்டனர்….

கர்ணன் அழைத்து பார்த்தான்…. ஆனால் சசி எடுக்கவே இல்லை… யார் அடித்தும் எடுக்கவே இல்லை…  தேவியின் அப்பா தான் அமைதியாக இருக்கும் மித்ரா கண்மணி முகுந்தனை பார்த்து “சசியும் நிரவி குட்டியும் எங்க… சிவனேஸும் இல்ல… எங்க போய் இருக்காங்க” என்று கேட்டார் …

மூவரும் அமைதியாக இருக்க அவர் மீண்டும் அழுத்தி கேட்டார்… அப்போது தான் முகுந்தன் “ஓஹ் இப்போ தான் இவங்களுக்கு அவ ஞாபாகம் வருதா… கண்மணி மித்ரா ரெண்டு பேரும் குழந்தைகளை கூட்டிட்டு ரூம் போங்க…” என்று கூறினான்..

அனைவரும் அவனையே பார்க்க முகுந்தன் குழந்தைகள் சென்றுவிட்டனரா என்று பார்த்துவிட்டு “சொல்லுங்க ரெண்டு பேரும் இப்போ தான் நிரவி ஞாபாகம் வருதா…. இவங்க ரெண்டு பேரை மட்டும் கேட்கல… எல்லாரையும் தான் கேட்குறேன்… நைட் புல்லா இதை பத்தி யோசிச்சேன்… நம்ம யாருக்குமே ஏன் நிரவி ஞாபாகம் வரல… ஆரவை இங்க ஹாஸ்டல்ல சேர்த்துட்டு ரெண்டு பேரும் அந்த பொண்ணு கூட மதுரை போறாங்க… இங்க எங்க நிரவி வரா… அவ இனிமேலும் தனியா தான் இருக்கனுமா…. சரி அதை விடுங்க… நைட் தூங்குறப்ப கூடவா அந்த பொண்ணு ஞாபாகம் வரல… உங்க கூட தூங்கலாம்னு ஆசையா இருந்த பொண்ணு அவளை நீங்க பாக்கலனு அழுதுட்டே தூங்கிட்டா… என்னையும் சேர்த்து தான் சொல்றேன் சசியும் சிவாவும் நம்மளை போல இல்ல… அவ மேல உண்மையா பாசம் வெச்சு இருக்காங்க… அவங்க அவளை பாத்துப்பாங்க… சசிக்கு கோவம் எந்த பிரச்சனையும் பண்ண கூடாதுனு நேத்து நைட்டே ஊருக்கு ரெண்டு பேரையும் கூட்டிட்டு போயிட்டான்…” என்று கொஞ்சம் கோவமாகவே கூறினான்….

சுபா அழுக ஆரம்பிக்கும் முன்னே “போதும் சுபா அழுது அழுது என்ன சாதிக்க போற…… நீங்க இப்படியே இருந்தா கண்டிப்பா நிரவி உங்களை விட்டு விலகிடுவா… அந்த பொண்ணை நீங்க தான் பாக்கணும்… இல்லனு சொல்லல… ஆனா நிரவி அவளை விட சின்ன பொண்ணு பாத்து இருங்க ரெண்டு பேரும்….” என்று கூறிவிட்டான்…

அர்ஜுனன் சுபா இருவரும் இறுகி போய் நின்று இருந்தனர்… அவர்களுக்கு தப்பு புரிகிறது…. ஆனால் அதை சரி செய்ய மறந்து விடுகின்றனர்…

பின் முகுந்தனே  “சரி எல்லாரும் குளிச்சிட்டு வாங்க கோவிலுக்கு வரோம்னு நேத்தே வாய் விட்டு சொல்லிட்டோம்… இன்னிக்கு போகாம இருக்க முடியாது… கிளம்புங்க நேத்து சொன்ன மாதிரி பண்ணிடலாம்… வேண்டாம்னு சொல்லாதீங்க… இதை சசியும் விரும்ப மாட்டான் நிரவி குட்டியும் விரும்ப மாட்டா…” என்று கூறி சென்றுவிட்டான்…

அர்ஜுனன் சுபா இருவரும் வேண்டாம் நிரவியை பார்க்க போகிறோம் என்று கேட்டு பார்த்து விட்டனர்… ஆனால் முகுந்தன் விடவில்லை… இந்த சூழ்நிலையில் தங்களால் முழுமையாக செய்ய முடியாது… நம்மூர் கோவிலில் அனைத்தும் வைத்து கொள்ளலாம் என முடிவாக கூறி விட்டனர்…

காலை உணவை முடித்து விட்டு அனைவரும் அய்யனார்புரம் நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர்….

நந்தினி ஊரில் தான் இருந்தாள்… அவள் கேரளா செல்லவில்லை…  தற்போது சசியும் கர்ணனும் இருக்கும் வீட்டில் தான் இருக்கிறாள்… முகுந்தன் அவளிடம் கேரளா வருமாறு கூறினான்… ஆனால் தன்னை சுபா பார்த்தால் சங்கட படுவாள் என கூறி மறுத்துவிட்டாள்….  அதிகாலை மூன்று மணிக்கு வீட்டு மணி அழைக்க யாரென்று தெரியாமல் பயத்துடன் தான் கதவை திறந்தாள் நந்தினி…

வெளியே நின்ற மூவரையும் பார்த்து அதிர்ந்துவிட்டாள்… அதுவும் மூவர் மட்டும் தனியாக நிற்பதை பார்த்து “மத்தவங்க எல்லாம் எங்க… பின்னாடி வராங்களா… சுபா ஆரவ் வராங்க தானு..” என்று கேட்டாள்… அவளுக்கு அர்ஜுனன் கேரளாவில் பார்த்தது எல்லாம் தெரியாது…. எனவே சுபா ஆரவை மட்டும் கேட்டாள்…

“அவங்க நைட் தான் வருவாங்க… எனக்கு வேலை இருக்குனு வந்துட்டேன்… இவங்க ரெண்டு பேரும் என் கூடவே வந்துட்டாங்க…. நீங்க போய் தூங்குங்க..  நாங்களும் தூங்குறோம்…”  என்று நந்தினியை தூங்க அனுப்பிவிட்டு இருவரையும் அழைத்து கொண்டு தூங்க சென்றுவிட்டான்…

நந்தினி ஆறு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு காபி குடித்து விட்டு நால்வருக்கும் உணவை தயார் செய்துவிட்டு மற்ற மூவருக்காக காத்து கொண்டு இருக்க அவர்கள் மூவரும் எட்டு மணிக்கு மேல் தான் எழுந்து குளித்துவிட்டு கீழே வந்தனர்….

சசி காலை உணவு உண்ணும் போது தான் அர்ஜுனன் கேரளா வந்ததை சொன்னான்… அதை கேட்ட நந்தினி “சசி உண்மையா என் தம்பி திரும்பி வந்துட்டானா… இதுக்கு மேல என்ன வேணும்… ரொம்ப ரொம்ப சந்தோசம்…” என்று கூறி மேல் நோக்கி கை எடுத்து கும்பிட்டாள்…

அவளிடம் யாரும் அதிகம் பேச்சு வார்த்தை வைத்துகொள்வது இல்லை…. முகுந்தனும் மருதாயி பாட்டியும் மட்டும் தான் தேவைக்கு பேசிகின்றனர்…. அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது…. தற்போது வரை அவளின் கணவன் மகன் இருவரும் பேசுவது இல்லை… ஆனால் அவள் மனதை தேற்றிக்கொண்டாள் தான் செய்த தவறுக்கு இந்த தண்டனை சரி என…

நிரவி சசியுடன் தான் இருந்தாள்… அவனை விட்டு நகரவே இல்லை… எனவே நந்தினியை தவிர்த்து மூவரும் தோப்பு வீட்டிற்கு சென்றுவிட்டனர்… நிரவி விருப்பட்டால் மட்டுமே சசி அங்கு அவளை அழைத்து செல்வான்… மற்றவர்கள் அதிகம் அங்கு செல்லமாட்டார்கள்….

இன்று சென்றதும் ஒரு மணி நேரம் சசியுடன் இருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தவள் விளையாட ஆரம்பித்துவிட்டாள்… அங்கு அவளுக்கு என தனி ஊஞ்சல் உள்ளது சசியும் சிவனேஸும் மாற்றி மாற்றி அவளை அமர வைத்து ஆட்டிவிட அப்போது தான் வரிசையாக கார் அங்கு வந்து நின்றது…

அதில் இருந்து இறங்கியவர்களை பார்த்து சசி அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை… அவனுக்கு தான் தெரியுமே தான் அங்கு இருந்து கிளம்பினால் கண்டிப்பாக விஷயம் அறிந்து இங்கு வருவார்கள் என தெரியும்… ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிரிபார்க்கவில்லை…

அர்ஜுன் சுபாவை பார்த்த நிரவி தானாக சிவனேஸ் சசி இருவரின் நடுவிலும் வந்து நின்றுகொண்டாள்…. சசியும் அவளை தூக்கி தனக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்…

அர்ஜுனன் பேச வர “வேண்டாம் ண்ணா எதுவும் பேசாதீங்க… என் பொண்ணை என்னால பாத்துக்க முடியும்… பாப்பாங்க எல்லாம் சின்ன புள்ளைங்க நிரவியை பாத்துக்க முடியாதுனு சொல்லி தான் அங்க வர்ணன் மாமா வீட்டுல ஜனனி கிட்ட விட சொன்னாங்க… இப்போ பாப்பாங்க கொஞ்சம் பெரியவங்க ஆகிட்டாங்க… அவளை நானே பாத்துப்பேன்… அவளை நீங்க பாத்துக்குவேன்னு சொல்லுவீங்க… அப்புறம் எதோ பிரச்சனை வந்தா அவளை தான் முதல்ல தூக்கி போடுவிங்க….”

“வாணன் மாமா வர்ணன் மாமா… ஏன் ஜனனி கூட உங்களை பார்த்த உடனே நிரவியை மறந்துட்டாங்க… வேண்டாம் இனிமே நிரவியை என் மூத்த பொண்ணா  நான் பாத்துக்குறேன்…” என்று அர்ஜுனனிடம் கூறிவிட்டு மித்ராவிடம் திரும்பி “உனக்கு எதோ பிரச்சனையா நவா” என்று கேட்டான்…

அவள இல்லை என கூறியதும் உங்கள் முடிவு என்ன என்று அர்ஜுனனை பார்த்தாவாரு நின்றான்… அர்ஜுனனுக்கு பதில் சொல்ல முடியா நிலை… சுபா அழுது கொண்டு தான் நின்று இருந்தாள்… நிரவி சுபா அழுவதை பார்த்து சசியிடம் இருந்து இறங்கி சுபாவின் முன் நின்று அவளை குனிய கூறினாள்…. அவள் குனிந்ததும் அவள் கண்களை துடைத்து விட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு செல்ல போனவளை அணைத்த சுபா சத்தமிட்டு அழுதுவிட்டாள்… பார்க்கும் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் இறங்கியது…

ஆனால் சசி மட்டும் எதற்கும் அசையவில்லை…. அர்ஜுனன் நிரவியை தூக்கி இறுக்கமாக அணைத்து கொண்டான்…  ஆரவ் அவனிடம் வர அவனை மற்றொரு கையால் அணைத்து கொண்டான்…. சுபா மூவரையும் தான் பார்த்து கொண்டு இருந்தாள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!