Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு

Vaalibaththai Kolluthadi Vannanilavu 3

“வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு”

அத்தியாயம் -3

கோவிலில் சித்தி சித்தப்பா மாமா அத்தை தாத்தா பாட்டி எல்லோரும் சுழ்ந்திருக்க தன் வருங்கால மனைவியை மட்டுமே அவனின் இரு கண்கள் தேடிகொண்டிருந்தது.

தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை
காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ என் தேவியே கோகிலாலா லா லா லா………



Advertisement

காண வேண்டும் சீக்கிரம்
என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ
என் ஆசை காவியமே…….

என்ன மாப்ள பொண்ண தேடறீங்க போல என்றார் கோகிலாவின் சித்தப்பா.

அப்படிலாம் ஒன்னும் இல்லைங்க கொஞ்சம் வெக்கையா இருக்கு சீக்கிரம் சடங்கு சம்பரதாயம் முடிஞ்சா வெளில காத்தார நிக்கலாம்னு பார்த்தேன் என்றான் மாப்பிளைக்கு உண்டான கெத்துடன்,

Advertisement

ம்…… அது சரி கீழ விலுந்தாலும் மீசையில மண் ஒட்டாத மாதிரில பேசறாரு மாப்ள “தமாசு தமாசு” என்றார் இவரும் கிண்டலாக,

Advertisement

இப்படியே கொஞ்சம் நேரம் சலசலப்பாக பேசிக்கோண்டிருக்க,

முருகனின் சித்தப்பா ராஜகோபால் அட என்னங்கய்ய நீங்க இப்படியே பேசி பேசி ஒன்பது மணி ஆக்கிடுவீங்க போல, தள்ளுங்கய்யா தள்ளுங்கற என்றவர் அங்குள்ள முக்காளியை எடுத்து போட்டு அமர்ந்தவர் அருகிலேயே தன்னுடைய அண்ணனையும் அமர வைத்தார்.

ஏம்பா பொண்ணுக்கு அப்பா,சித்தப்பா மாமா, மச்சா, அண்ண, தம்பி எல்லாரும் வந்து முன்னாடி உட்காருங்க. பேசி பாக்கு வெத்தல மாத்தணும்ங்கற பொறுப்பு யாருக்குமே இல்ல தொணதொணக்கறீங்கப்பா,

Advertisement

நான் மட்டும் மாப்ளயா இருந்திருந்தா பொண்ண தூக்கிட்டு ஓடிருப்ப என் அண்ண மவ பாவம் எம்புட்டு நேரம் காத்திருக்கான்,

சரி சரி கோவப்படாத ராசகோபாலு அதததுக்கு நேரம் காலம் பாக்கணுமிலையா ராசா இப்பதான் நல்ல நேரம் வந்திருக்கு என்றார் அங்கம்மா பாட்டி.

இப்பயாவது வந்துச்சே அந்த நல்ல நேரம் என்றான் மாப்பிளையும் உரக்க குரலில்,

இவன் பேசிய விதத்தில் அங்குள்ள அனைவரும் சிறித்து விட இவனுக்கு வெட்கமாகி போனது.

கோச்சிக்காதிங்க சம்மந்தி என்றவர் பூங்கோத பொண்ண கூட்டிட்டு வாம்மா,

சரிங்க என்றவர் பெண்ணை அழைத்து வர, அங்கே யாரும் எதிர் பாராத நேரம் பார்த்து தரை விரிப்பை விரித்து வாடி வந்து உக்காரு எம்புட்டு நேரம் தான் எம்ம பேரன் காத்திருப்பான். இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கொஞ்சம் கூட மருவாதைன்னா என்னனு தெரில என்றார் அங்கம்மா பாட்டி.

அவசரப்படாதம்மா எல்லா மருவாதையும் தெரிஞ்ச புள்ளை தான்.

“யாரது என்ன அடக்கறது?”

ஈ ஈ ஈ…… என்றவாறு பல்லை காட்டினார் ஜோதிலிங்கம்.

அங்கம்மா பாட்டி பார்த்த நேரம் கையெடுத்து கும்பிட்டு கொஞ்சம் பொறுமையா இரும்மா என கெஞ்சினார்.

ம்ம்ம்ம்…… அந்த பயம் இருக்கட்டும் என்றவர் கோகிலாவை பார்த்து ஏதோ அந்த காலத்துல என்னளவுக்கு அலகா இல்லனாலும் கொஞ்சம் அழகாத்தான் இருக்கா.

இதை கேட்ட முருகன் அம்மாச்சியை பார்த்து ஒரு முறை முறைத்தான் அம்புட்டுதான்,

“கப் சிப்”பென வாயை மூடி கொண்டார். அம்மாச்சி,

மறுபுறம் திரும்ப நீலவான கலரில் பட்டு புடவையும் அதன் இடை இடையே மின்னும் வெள்ளி தங்க ஜரிகையும் அவள் நிறத்திற்கு நன்றாக பொருந்தியிருக்க, இரவு மின் விளக்குகளின் வெளிச்சத்தில் தேவதை போல தோன்றினாள்.

மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்க “வாவ்” என்னா அழகு என்னா அழகு இந்த அழகுக்கும் வெக்கத்துக்கும் சொந்த காரன் நானா நானா என பலமுறை தன்னை தானே கேள்வி கேட்டு கொண்டான் முருகன்.

அருகில் இருந்த அவனுடைய பெரிய மாமா பழனியப்பா முருகா பொண்ண பாருய்யா சூப்பரா இருக்கு.

அப்பொழுது தான் வானத்தில் பறந்து கொண்டிருந்த முருகன் பூலோகம் வந்தான்.

என்ன மாமா கேட்டீங்க?

டேய், பொண்ண பாருன்னு சொன்னேன்டா கேட்டுச்சா காதுக்கு,

மாமா கத்தாதீங்க, வந்ததுல இருந்து நான் அவள மட்டும் தானே பாக்கறேன்.

ம்…. அடி சக்கண்ணனா என் மாப்ளயா கொக்கா? நீ நடத்து மாப்ள நான் பாத்துக்கற என்றவர் மத்த சடங்குகளை கவனிக்க சென்று விட்டார்.

எல்லாம் நல்லபடியாக முடிந்த
பின் மூத்தவர் அனைவரும் எழுந்து நிற்க பெண் பிள்ளையை ஒன்றாக இணைத்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க வைத்தார் கோகிலாவின் அம்மா பூங்கோதை.

கோவிலில் இருந்து நடந்து செல்லாமல் அந்த காலத்து ராஜாக்கள் திருமணத்திற்கு குதிரை வண்டியை தயார் செய்தது போல பெண் வீட்டில் காசினை தண்ணியாக இரைத்து தடபுடலாக பிரமிக்க வைத்திருந்தார் மாயியப்பா கோகிலாவின் தந்தை.

கோகிலாவிற்கு குதிரை வண்டியில் செல்ல நடுக்காமாக இருக்க யாரும் நினைத்து கூட பார்க்காத செயலை முருகன் நொடி பொழுதில் செய்து விட்டான். அவளை கைத்தாங்களாக தூக்கி தன் அருகில் அமர்த்திகொண்டான்.

மாப்பிளை விட்டார் இதை கவனித்து கை தட்டி உற்சாகமூட்ட எல்லோரும் மணமக்களை வாழ்த்தி ஆராவாரம் செய்து ஆட்டம் பாட்டமென இரு வீட்டாரும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்க,

———————————-

மறுபுறம் அங்கே மண்டபத்தில் வல்லரசுவிடம் தங்கம்மா சொன்ன சேதியை கேட்டு தொண்டைக்குழிக்குள் எச்சில் இரங்கவில்லை.

“என்ன சொல்ற தங்கம்மா?”

ஆமாங்க நம்ப மதிவாண தான் சொன்னான்.

இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு மாமாவுக்கு தெரியுமா?

எப்படிங்க சொல்ல முடியும்.

சரி எனக்காவது உடனே தகவல் குடுத்திருக்கலாம்ல.

அழுகையுடன் அவள் கால் ஹிஸ்ட்ரியை காண்பிக்க வல்லரசு தலையிலே அடித்து கொண்டார்.

அதில் ஐம்பத்திரெண்டு முறை அழைப்பை மேற்கொண்டுள்ளால் என திரையில் தெரிய தன்னை தானே நொந்து கொண்டார் வல்லரசு.

(உயர் அதிகாரி வராங்கன்னு நான் தான் போனை சைலண்ட்ல போட்டுட்டேன் “ச்சே “.. தப்பு பண்ணிட்டோமே)

“சரி அழுகாத நம்ப மகன் எங்க? “

அவனை சரியான அடி அடிச்சிட்ட மாமா அழுது அழுது இப்பதான் கண்ணசந்தான்.

சரி வா போகலாம் தங்கம்மா.

“எங்க மாமா? “

நம்ப மகங்கிட்ட தான் அவனை கேட்டா மட்டும் தான் இதுக்கான உண்மை தெரியும். சகலிக்கு தெரியறதுக்குள்ள அவளை கண்டு புடிக்கலாம்.

ம்ம்ம்ம்ம்ம்ம் முடியுமா மாமா?

கண்டிப்பா என்றவர் மகனை நோக்கி விரைந்தார்.

மதி மதி டேய் மதி எழுந்திரிடா மதி?

அம்மா அடிக்காதம்மா நான் ஒன்னும் பண்ணலம்மா ப்ளீஸ்மா அக்காவே தான் போச்சும்மா புரிஞ்சிக்கம்மா அம்மாமாமாமா….ப்ளீஸ்மா

டேய் கண்ண தொரடா நான் அம்மா இல்ல அப்பா வந்திருக்க பாரு இங்க பாருப்பா,

வெம்பிக்கொண்டே கண்களை திறந்தவன் அப்பாவை கழுத்தோடு கட்டிக்கொண்டு அப்பா நான் ஒன்னுமே பண்ணலப்பா அம்மா என்ன அடிசிடாங்க பாருங்க எப்படி வீங்கிருக்குன்னு

“சரி நான் அம்மாவை அடிக்கிற இப்ப கேக்கறதுக்கு தெளிவான பதில் சொல்லணும் சரியா”

சரிப்பா.

“எங்க போனீங்க ரெண்டு பேரும்?”

வளையல் கடைக்கு பிங்க் வளையல் வாங்க போனோம்.

சரி அங்க புதுசா யாராச்சும் இருந்தாங்களா?

சிறிது நேரம் யோசித்தவன் இல்லப்பா.

நல்லா யோசிச்சி சொல்லுப்பா அப்பாவுக்காக என் செல்லப்புள்ள தானே நீ,

ஹாங்… அப்பா இப்பதான் ஞாபகம் வருது அங்க நம்ப தாத்தா வீட்டுக்கு அடிக்கடி ஒரு ராமலிங்கம் புரோக்கர் தாத்தா போட்டோ எடுத்துனு வருவாங்களே அவங்க கூட ஒரு அண்ணாவும் வருவாரே அந்த அண்ணா கூட தான் டாடா காமிசினு போச்சுப்பா பிரேமக்கா

அக்கா என்னையும் கூட்டிட்டு போ அக்கானு பின்னாடியே ஓடின ஆனா அவங்க நிக்கவே இல்ல வேகமா போய்ட்டாங்க. அக்கா எங்கப்பா போச்சி என்றான் கண்களை துடைத்து கொண்டே

அவனுக்கு என்ன பத்தி சொல்வார் வல்லரசு.

உண்மை தெரிந்த வல்லரசு பிரேமாவதியை கண்டு பிடித்து அழைத்து வருவாரா?

தொடர்ந்து பாருங்க அத்தியாயம்-4

நன்றி தங்கம்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!