Skip to content
Post Views: 4,141

உயிர் 1
‘சிறு பொன்மணி அசையும்..அதில் தெறிக்கும் புது இசையும்…’ என மகிழ்ச்சி எப்ஃஎம்மில் பாடல் ஒலிக்க சமையலறையில் பரபரப்பாக சந்தவம் பிழிய சிறு சிறு இட்லிகளை ஊற்றி அடுப்பில் வைத்து, தேங்காய் பாலுக்கு வெல்லம் உடைத்து கொண்டிருந்தாள் தரங்கிணி…பின் நாற்பதுகளில் இருந்தாலும் இளமை குறையாத பொலிவு, சுறுசுறுப்பு என அந்த வீட்டின் ஆணிவேராய் பரந்தாமனின் சரி பாதியாய் இரண்டு அதுவும் வளர்ந்த பிள்ளைகளுக்கு தாயா என ஆச்சரியபடுமளவுக்கு தேனீயாய் சுழன்று கொண்டிருந்தார்.
“தரு..இந்தா நீ கேட்ட சிவப்பு பொன்னாங்கன்னி கீரை..காபி கொடு..” என காலை வாக்கிங் போன பரந்தாமன் பையை அவரிடம் நீட்ட..
Advertisement
“இந்தாங்க..கொஞ்சம் ஷ்ரவனை எழுப்புங்க, இன்னிக்கு பைனல் எக்சாம்..நைட்டெல்லாம் ரிவைஸ் பண்ணிட்டு காலை ல தான் கண் அசந்தான்..
பெரியவரு என்ன பண்றாரு..?..
யோகா முடிஞ்சி கீழ வர்ற டைம் தான்..
Advertisement
ம்ம்..” என இன்னொரு கப் காபியுடன் இளைய மகனை எழுப்ப சென்றார் பரந்தாமன்.
Advertisement
கடலூரில் உள்ள நாகார்ஜூனா ஆயில் கம்பெனியில் மேலாளராய் பணி புரிகிறார் பரந்தாமன்..பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் கடலூரில் தான், காரைக்காலை சேர்ந்த தரங்கிணியை இளம் வயதில் தன் அம்மாவின் வற்புறுத்தலால் திருமணம் புரிந்து மஹிலன், ஷ்ரவன் என இரு பிள்ளைகள், நிறைவான வாழ்க்கை வாழ்பவர்..மஹிலன் பி.ஈ படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்க ஷ்ரவன் எம்.பி.ஏ இரண்டாமாண்டு படித்து கொண்டிருக்கிறான்.
யோகா முடித்து குளித்து பீச் கலர் கால்சட்டை கரு நீல நிற ஷர்ட், சந்தன கலர் டை, கையில் பைலுடன் வாட்சை கட்டியவாறு ஆறடி மாநிறம், கூரான நாசி, அடர் பிரவுன் நிற விழிகள், ஜெல் வைத்து வாரிய கேசம் என அம்சமாய் வந்த அழகனை பார்க்க தெவிட்டவில்லை தரங்கிணிக்கு..அவனுக்கு திருஷ்டி எடுத்தவர்..
“உட்காரு மஹி வந்துடறேன்..” என உள்ளே சென்று கை கழுவி டிபன் பாத்திரங்களுடன் டைனிங் ஹாலுக்கு வந்தார்..அதற்குள் ஷ்ரவனும் பரந்தாமனும் ரெடியாகி வந்து அமர்ந்தனர்..அனைவருக்கும் சுடச்சுட சந்தவம் தேங்காய் பாலை பரிமாறவும்..
Advertisement
“மம்மி, மார்னிங்கே இனிப்பா..? சால்னா பண்ணலயா நீங்க..?” என ஷ்ரவன் சலித்துக்கொள்ள, தருவோ..
“அதும் பண்ணிருக்கேன் டா…முதல்ல இது சாப்பிடு..” என மேலும் தேங்காய் பாலை ஊற்றவும் வேண்டா வெறுப்பாய் முழுங்கும் இளையவனை சிரித்த படி பார்த்த பரமா..
“மஹி…கே.டி.இன்ப்ஃபோடெக் கம்பெனி ல தான கூப்பிட்டுருக்காங்க..?
ஆமா பா, இன்னிக்கு 11.00 மணிக்கு இன்டர்வியூ..
டூ வெல், குட் லக்..
தாங்க் யூ பா..ஆஸ் யூசுவல் மனசுக்கு பிடிச்சா தான் சேருவேன்..
உன் பேரக்குழந்தைகளும் உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு நமக்கு வசதியிருந்தாலும் உனக்கு னு ஒரு தனி அடையாளம் வேணும் டா..இனி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறோம்..கொஞ்சம் சீரியஸா இரு மஹி..” என்றார் பர்மா. கண்களை மூடி சில கணம் இருந்தவன்..
“சரி பா..” என கை கழுவ சென்றான்..இது வரை இரண்டு கம்பெனிகளில் சேர்ந்து லாபத்திற்காக கீழிறங்கி வேலை செய்ய விரும்பாததால் தூக்கி போட்டு வந்தவன்..சிறு வயது முதலே எதிலும் ஒரு நேர்மை, நேர்த்தியை எதிர்ப்பார்ப்பவன்..தப்பென்றால் எவராயிருந்தாலும் தட்டிக்கேட்க தயங்க மாட்டான்..இந்த குணத்தால் இவன் சம்பாரித்தது எதிரிகளையே..ஷ்ரவன் இவனுக்கு நேர் எதிர்..சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றி கொள்வான்.
மாலை சோர்வுடன் வீடு திரும்பிய மஹியை பார்த்ததும் ஊகித்த தரு..
“முகம் அலம்பிட்டு வா மஹி..” என அவனை அனுப்பினாள்…5 நிமிடத்தில் வந்தவனிடம் வெஜ் க்ளியர் சூப் கொடுத்தவள்..
“விடு..வேற எங்காவது ட்ரை பண்ணலாம்..
மா..நானே ஒரு பிசினஸ் பண்ணா என்ன..?..” என கேட்ட மகனை கேள்வியுடன் பார்த்த தரு..
“முன்ன பின்ன அனுபவம் இல்லாம எப்படி டா..?..
என் பிரண்ட் புகழ் யோட அண்ணன் சக்திவேல் புறா வளர்த்து விக்கிற பிசினஸ் பண்றாரு..நல்லா போகுது னு கேள்விப்பட்டேன்..அவர போய் பார்த்துட்டு வர்றேன்..” என்று கூறியவனின் பேச்சை கேட்டவாறே நுழைந்த பரந்தாமன்..
“நீ படிச்சதுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லையே மஹி..?
அப்பா..ட்ரை பண்ணி பார்க்கிறேன்..லோ இன்வெஸ்ட்மென்ட், ஒர்க்அவுட் ஆகும் னு தோணுது..
அப்புறம் உன் இஷ்டம்..” என தன் அறைக்கு சென்றார் பரந்தாமன்..
மறுநாள் காலை தன் நண்பணின் வீட்டிற்கு சென்று அவன் அண்ணனை சந்திக்க..
“விஷயமெல்லாம் கேள்விப்பட்டேன்..புகழ் சொன்னான்..வீட்டிலிருந்து சம்பாதிக்கிறதா இருந்தாலும் நாமளும் மெனகெடனும்..காலை ல எல்லா புறாக்களையும் ஸ்பேரயர் ல இதமா குளிக்க வச்சு தானியங்கள போட்டு சாப்பிட்டதும் காத்தாட திறந்து விட்டுறனும்..மதியம் 3 மணி போல எல்லாம் திரும்ப இங்கயே வந்திடும்..நம்ம குழந்தைகளை வளர்க்கிற மாதிரி தான் நோய் வராம, சுத்தமா பாதுகாக்கனும் மஹி..வா என்னுடைய மாடி ல இருக்கிற செட்டப் எல்லாம் பாரு வா..” என கூட்டிக்கொண்டு போய் காண்பிக்கவும் ஒரு ஐடியா வந்தது மஹிக்கு.
அங்கு மாடி முழுவதும் பல கூண்டுகள் அமைக்கப்பட்டு கிட்டதட்ட 200 புறாக்கள் இருந்தன..அனைத்தும் பார்க்க அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது.
“ஆக்சுவலி மார் வலிக்கு புறா இரத்தம் தடவினா சரியாகும் னு ஒரு நம்பிக்கை..அப்புறம் சேவற் சண்டை மாதிரி புறா சண்டை இங்க மிக பிரசித்தம்..நம்மூரிலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கிற வெள்ளி கடற்கரையில் வருஷா வருஷம் இந்த போட்டி நடக்கும்..அங்க இருக்கிற அடர்ந்த அலையாத்திக் காடுகள்(Mangroove forest) மத்தியில இதுங்க சண்டை போட்டுக்கிறதுக்கு தனியா ட்ரெயின் பண்ணுவாங்க..சோ நஷ்டமில்லாத தொழில்..நான் 100, 200 னு ஒட்டுமொத்தமா ஒருத்தர்க்கிட்ட வித்துருவேன்..அதோட நம்ம வேலை முடிஞ்சிது..இதோட குட்டிங்க வளர்ந்து அடுத்த செட்டப்க்கு தயாராகும்..இப்படியே செயினா போகும் இந்த பிசினஸ்..” என சக்திவேல் புறா வளர்ப்பு முறையை பற்றி விரிவாய் எடுத்துரைத்தான். அனைத்தையும் கவனமாய் கேட்டுக்கொண்ட மஹிலன்..
“அண்ணா முதல்ல இந்த மாதிரி கூண்டுங்க பண்ணிட்டு முதல் ல பத்து புறாக்கள் வாங்கி வளர்க்கிறேன்..எடுத்ததுமே அகலக்கால் வைக்க வேண்டாமே னு..
அதான் நல்லது..கடலூர் GK பெட் ஷாப் ல வாங்கிக்க மஹி..” என அவன் தோளை தட்டிக்கொடுத்தான் சக்தி. மஹிலன்..
“ஓகே ணா..நீங்க தான் என் குரு இந்த தொழில்க்கு..எதுன்னாலும் உங்ககிட்ட தான் கேட்பேன்..
ஷ்யூர்..டிம்பர் பிசினஸ் யோட இதயும் என்னால சரியா கவனிக்க முடியல…எனக்கே ஒரு கை தேவைப்பட்டது..குட் லக் பார் யூர் நியூ பிசினஸ்..” என கை குலுக்க முகம் நிறைய புன்னகையுடன் தன் வீட்டிற்கு சென்றான் மஹிலன்.
மஹிலனின் தலையெழுத்தை இந்த புறாக்கள் மாற்றியமைக்க விதி கைக்கொட்டி சிரித்தது பாவம் அவன் அறியவில்லை..அறிந்திருந்தால்?
தொடரும்.
error: Content is protected !!