Skip to content
Post Views: 4,230
“என்னடி? ரித்து.. கோபம் வருதில்ல..? பல்லைக் கடிக்கிற இல்ல? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?
என் வொய்ப் வந்திருப்பாங்கன்னு நினைச்சாளாம்! வரலைன்னதும் டெலிவரிக்கு போய்ட்டாளான்னு வேற கேக்குற? என்ன ஒரு நினைப்பு உனக்கு? என்னைப் பத்தி என்னன்னு நினைச்ச?
நீ என்னை விட்டுப் போனவுடனே, நான் வேற பொண்ணோட வாழ்ந்துட்டு இருப்பேன்னு நினைச்சியா?
நீ இப்படி தான் நினைச்சுட்டு இத்தனை வருசமா இருந்திட்டு இருக்கியா?
Advertisement
என்னையையும், நம்ம காதலையும் இத விட அசிங்கப் படுத்த முடியாதுடி!
அது தான் நான் அப்படி உன்னைக் கேட்டேன்! உனக்கு எப்படி வலிக்குது?
அப்ப எனக்கு எப்படி கோபம் வந்திருக்கும்? உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?
Advertisement
இத்தனைக்கும் அந்த குழந்தை உன்னை அம்மான்னு கூப்பிடுது. அந்த மனீஷை அப்பான்னு கூப்பிடுது!
Advertisement
இந்த சூழ்நிலையில கூட, நான், என் குட்டிம்மா மனசுலயும் சரி வாழ்க்கையிலும் சரி என்னைத் தவிர வேற யாருக்கும் கனவுல கூட இடம் கிடையாதுன்னு தானே நான் நினைச்சேன்!
ஒரு கணம் கூட உன்னை நான் தப்பா நினைக்கல!
அந்த நம்பிக்கை உனக்கு ஏன் வரல?
Advertisement
அந்த மனீஷ்க்கு என்னை தெரியுமா? நீ நம்ம கல்யாண விவரம் அவர் கிட்ட சொல்லிட்டியா? சொல்லு..” கோபத்தில் உறுமினான் ரித்து!
அவன் பேச பேச வெறுமனே அழுதுக் கொண்டே நின்றிருந்தவளை தன் இடக்கையைக் கொண்டு உலுக்கினான் அவன்.
“இல்ல..நான் யார்கிட்டயும் நம்மள பத்தி எதுவும் இதுவர சொன்னதே இல்லை! என் அம்மாவுக்குக் கூட தெரியாது!
இந்த ஹாஸ்பிட்டல் எம்.டி மேடம்க்கு மட்டும் நான் கல்யாணம் ஆனவன்னும் ஹஸ்பன்டை பிரிஞ்சி இருக்கேன்னும் தெரியும்!
மத்தபடி மனீஷ் அண்ணாவுக்கும், மாலுவுக்கும் எதுவுமே தெரியாது!”.
“அப்படின்னு நீ நினைச்சுட்டு இரு! அவருக்கு என்னை நல்லா தெரியுது! நான் உன் புருசன்னும் தெரியுது! ஏதோ இன்னும் சொல்ல வந்தார்! பாவம் அவருக்கு ஏதோ அவசரம், கிளம்பிட்டார்!
ஆனா போறப் போக்குல கூட, நான் உன்னை தப்பா நினைச்சுடக் கூடாதுன்னு அவர் ஒரு வார்த்தை சொல்லிட்டு போனார், நீ அதை கவனிக்கல, ஆனா, நான் அதை கவனிச்சேன்!
நான் கவனிச்சுட்டேன்றதை, அவரும் தெரிஞ்சுட்டு தான் நிம்மதியா கிளம்பினார்!
அவர் என்ன சொன்னார் தெரியுமா?”
“தெரியல.. நான் கவனிக்கல!”
“அந்த பாப்பாவை, மானு அத்தைக்கு பாய் சொல்லுன்னு சொல்லி, நீ அவருக்கு தங்கச்சி மாதிரி, நான் எதுவும் தப்பா நினைச்சுடக் கூடாதுன்னு ஒரு ஹின்ட் கொடுத்துட்டுப் போறார்!”
மானு ஆச்சரியப் பட்டாள்.
மனீஷ் அண்ணாவிற்கு என் கல்யாண விவரம் எப்படி தெரியும்? அப்ப மாலுவிற்கும் தெரியுமா?
இந்த மனீஷ் அண்ணா, ரித்து கிட்ட மானு அத்தைன்னா சொன்னார்! நான் அத கவனிக்கவே இல்லையே!
அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன!
“நல்லா அழு! நீ அழ மட்டும் தானே செய்வ?
ஆனா ஒன்னுடி, உன்னால மட்டும் தான், உன் உறவுகள் கிட்டயும் சரி நட்பு கிட்டயும் சரி உண்மையை வருசக் கணக்கா மறைச்சு சொல்லாம , அவங்க கூடவே இருக்க முடியும்!
பெத்த அம்மாக்கு, உனக்கு இன்னும் கல்யாணம் ஆகிட்ட விஷயம் தெரியாது!
கூடவே இருந்து ஆதரிக்கிற இந்த நண்பர்கள் மனீஷ் அவர் மிஸ்ஸர்ஸ் ரெண்டு பேத்துக்கும் நீயா சொல்லவே இல்லை!
எல்லாத்துக்கும் மேல் கட்டின புருஷன் நான், எனக்கு, நீ ஏன் என்னை விட்டு இப்படி ஓடி ஒளிஞ்சு வாழறன்னு இந்த நிமிஷம் வரை தெரியாது!
அப்படி இன்னும் எவ்வளவு சீக்ரெட்ஸ் இங்க இருக்கு? சொல்லுடி” அவன் நெஞ்சைத் தொட்டுக் கேட்டான்!
“சொல்லுடி.
உனக்கு இன்னொன்னு தெரியுமா? அந்த ரிதன்யா பாப்பா சிரிக்கும் போது உன்னை மாதிரியே கன்னத்தில் குழி விழுது இல்ல, ஒரு கணம், அவ நம்ம பொண்ணோன்னு கூட நினைச்சேன் தெரியுமா?
ஒருவேளை, அவளை வளர்க்க தான், அவளுக்காக தான் நீ மனீஷ் குடும்பத்தோட இருக்கியோன்னு கூட நினைச்சேன்!
அவ நலனுக்காக தான் மனீஷை அப்பான்னு கூப்ட வச்சுருக்கியோன்னு கூட நினைச்சேன்!”
“அய்யோ.. இல்லை அது மாலுவுக்கும் மனீஷ் அண்ணாவுக்கும் பிறந்த குழந்தை தான்! நம்ம குழந்தை இல்லை! நமக்கு எப்படி.. நாம..” மானு ஏதோ சொல்ல வந்து நிறுத்தி விட்டு, அழுகையின் இடையில் ஒரு கலவையாக கொஞ்சம் வெட்கமும் பட்டு முகம் சிவந்து பேச்சை நிறுத்தினாள்!
“அதான் அவர் ஹின்ட் கொடுத்துட்டுப் போனதுல நானே புரிஞ்சுகிட்டேனே! ஆனா மனசு மூலையில ஒரு வேளை அப்படி இருக்குமோன்னு கூட நினச்சேன்!
ரெண்டு நாள் தானே நாம ஒண்ணா இருந்தோம் அப்போ குழந்தை எப்படின்னு தானே கேக்குற?
இந்த சினிமால, கதையில வர மாதிரி ஒரு வேளை அப்படியும் இருக்குமோன்னு ஒரு நப்பாசை! வேறே என்ன சொல்றது?”
அவன் கசப்பாக சிரித்தான்.
“இவ்வளவு வருஷம் பொண்டாட்டியை தேடி நாய் மாதிரி, ஊர் ஊரா அலைஞ்சதுக்கு, போனசா பொண்டாட்டியோட
பொண்ணும் கிடைச்சுட்டான்னுற நினைப்பு!
உனக்கு தெரியுமா? நான் என் வீட்டில் எந்த கல்யாண ஏற்பாடும் செய்யக் கூடாதுன்னு தான், இந்த பைக்கர் ரோல் எடுத்ததே!
சும்மா இப்படி பைக்கில கண்ணு மண்ணு தெரியாம ஸ்பீடா போய் அடிக்கடி கையை காலை உடைச்சுட்டு வர்றவனுக்கு எந்த பொண்ணைப் பெத்தவன் அவன் பொண்ணைக் கொடுக்க முன் வருவான்? முக்கியமா என் மாமன்கள்!
ஆனா, எனக்கு இப்படி ஒவ்வொரு வாட்டி கீழே விழுந்து அடிபடும் போதும், என் மம்மிக்கு எப்படி இருக்கும்?
அவங்க எப்படி பதறுவாங்கன்னு உனக்கே நல்லா தெரியும்!
என் மம்மிக்கு எல்லாமே நான் தான்! எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவங்க எப்படி துடிச்சுப் போவாங்கன்னும் உனக்கு தெரியும்!
ஆனா இங்க பாரு, என் உடம்பில் எத்தனை தையல்கள்! அத்தனையும் பைக் ஆக்சிடன்டால வந்தது!
என் அம்மா ஒவ்வொரு வாட்டியும் அவ்வளவு அழுவாங்க தெரியுமா?
நானும் எல்லாம் தெரிஞ்சே தான், உனக்காக உன் ஒருத்திக்காக, நான் தொடர்ந்து அவங்கள கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்!
நான் உனக்காக தாண்டி, உன்னைத் தேடி தாண்டி, பயித்தியம் பிடிச்ச மாதிரி, ஒரு வேலை வெட்டிக்கும் போகாம, அம்மாவுக்கு பிஸினெஸ்லயும் ஒரு மகனா ஹெல்ப் பண்ணாம, ஊர் ஊரா உன்னைத் தேடி அலையுறேன்!
நீ என்னன்னா, உன்னை இப்படி மறைச்சுட்டு, எந்த சோசியல் மீடியாவிலும் கூட கனெக்ட் ஆகாம, ரொம்ப உஷாரா கிட்டத்தட்ட உன்னை ஐசொலேட் பண்ணிட்டு இருந்திருக்கிற!
சொல்லு அப்படி என்ன தான் காரணம்? என்னை விட்டுப் போக?”
அவள் இப்போதும் பதில் சொல்லாமல், அவன் உடம்பில் இருக்கும் பழைய தழும்புகளைத் தடவிப் பார்த்து குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டு தான் இருந்தாள்!
“அழறத நிறுத்துடி. முதல்ல இதுக்கு பதில் சொல்லு.
நீ எப்போ இந்த ஊருக்கு வந்த?
நீ எப்படி இங்க நர்ஸ் வேலைக்கு வந்த?
எப்போ நரசிங் படிச்ச? ஏன் நர்சிங் படிச்ச? அதுக்காவது பதில் சொல்லு!”
மானு நிமிர்ந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்.
“என் அப்பா இறந்த பின்னாடி, நானும் அம்மாவும் தனியா இருக்க வேண்டாம்னு மாமா வந்து அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்தாரு. ஆனா என்னோட அத்தை அதுக்கு சம்மதிக்கல!
கூடவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க.”
“அது தான் எனக்கே தெரியுமே, அதுக்கப்புறம் நடந்தத சொல்லு.
அப்ப தானே என் மம்மிக்கும் காலில் அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க. நான் அவசரமா பெங்களூர் போயிட்டேன் மம்மிக்கு ஹெல்ப் பண்ணவென்று.
அப்புறம் உங்க அத்தை ஒத்துக்கிட்டாங்களா?”
“ஆமா, கொஞ்ச நாள் கழிச்சு, அத்தை ஒத்துகிட்டாங்க. ஆனா மறுபடி காலேஜ்ல சேர்த்து விட மாட்டேங்கிற கண்டிசனோட!
மாமாவும் வேற வழியில்லாம, அதுக்கு ஒத்துக்கிட்டார்!
அங்க போய், நான் ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிடல் ரிசப்சனில் வேலைப் பார்த்தேன்!
அப்போ தான் மாலுவும் மனீஷ் அண்ணாவும் அறிமுகம் ஆனாங்க!
அப்போ மாமா வீட்டில், என் அம்மாவை அத்தையும் அவங்க அம்மாவும் வேலைக்காரி மாதிரி ரொம்ப கேவலமா நடத்திட்டு இருந்தாங்க!
என்னால அதை தாங்கிக்கவே முடியல. என் அம்மாவைப் பத்தி தான் உனக்கே தெரியுமே!
என் அப்பா ஒரு குழந்தை மாதிரி அவங்கள நடத்தினாங்க. அவங்கள போய் அந்த வீட்டில். அவள் மீண்டும் அழ,
ரித்து, அவள் கண்ணீரை தன்னிச்சையாக துடைத்து விட்டான்!
அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டு இருந்ததை, நான் மாலுவிடம் ஒரு நாள் புலம்பி விட்டேன்!
மாலு மனீஷ் அண்ணாவிடம் சொல்லியிருப்பாள் போல. அப்ப அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க. அவர் தான் என்னைத் தொடர்ந்து போர்ஸ் பண்ணி, அவருக்குத் தெரிஞ்ச ஒரு ப்ரைவேட் இன்ஸ்டிடியூட்ல சேர்த்துப் படிக்க வச்சார்.
ட்ரைனிங் முடிஞ்சு இங்க வேலை கிடைச்சதும் நான் அம்மாவைத் தனியே அழைச்சுட்டு வந்திட்டேன்.
இங்க மாலுவுக்கும் மனீஷ் அண்ணாவிற்கும் கல்யாணம் ஆகி ரித்துகுட்டி பிறந்து இருந்தாள்!
நீங்க நினைக்கிற மாதிரி அவ நம்ம குழந்தையா இருந்திருந்தா இன்னும் கொஞ்சம் பெரிய பிள்ளையா இல்ல இருப்பா! ரித்துகுட்டி அவங்க குழந்தை தான்!
நாங்க இங்க வந்தவுடன், மாலுவும் மனீஷ் அண்ணாவும் ரொம்பவும் கேட்டுகிட்டதால , அவங்க வீட்டிலயே நானும் அம்மாவும் அவங்களோடவே அவங்க வீட்டில் தங்கிட்டோம்!
இப்ப ஆறு மாசம் முன்னாடி மாலுவுக்கு வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுச்சு!
இப்ப ரித்துக் குட்டி முழுசா என்னோட கேரில் தான் இருக்கா!” மானு சொல்லி முடித்தாள்!
போகுது போ, உனக்கு கெட்ட நேரத்திலும் உனக்கு நல்ல நட்புக்கள் கிடைச்சுருக்காங்க!
உன் மாமா ஊருக்கு போனவுடன் நீ எனக்கு போன் பண்ணி இருக்கணும். ஆனா பண்ணல. உன்னோட சிம்மையும் தூக்கிப் போட்டுட்ட போல!
நான் திரும்ப வந்து பார்த்தா உன்னைக் காணோம். பாபு அண்ணாவிற்கு கூட நீங்க இருக்கும் இடம் தெரியலன்னு சொல்லிட்டாரு. கண்டிப்பா நீ தான் சொல்ல வேணாம்னு சொல்லியிருப்பன்னு இப்ப புரியுது!
ஆனா, உன் மாமா வீட்டில் அவ்வளவு கஷ்டத்திலும் உனக்கு உன் ரித்து ஞாபகம் வரல இல்ல? அவன்கிட்ட போய் சேரணும்னு உனக்கு தோணவேயில்ல!
சரி. இப்ப சொல்லு. என்னை விட்டுட்டுப் போக அப்படி என்ன காரணம்? சொல்லு..” அவன் குரலில் அழுத்தம் கொடுக்க,
இது வரை பேசிக் கொண்டிருந்த அவள், மீண்டும் மவுனம் காத்தாள்!
ரித்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. அவன் பல்லைக் கடித்த படி,
“சரி சொல்லவே வேணாம், நீ உன் அம்மாவைக் கூட்டிக் கொண்டு கிளம்பு! நம்ம வீட்டுக்குப் போகலாம்! இனியும் உன்னை விட்டுட்டுப் போனா, என்னை விட ஒரு கேனயன் யாரும் இருக்க முடியாது!” தீவிரமான குரலில் சொன்னான் ரித்து.
அவனுக்கு, தான் அவளிடம் ரொம்பவும் காரணம் கேட்டு கத்தினால், மீண்டும் எங்காவது சொல்லாமல் கிளம்பி விடப் போகிறாள் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது! கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்ற மன நிலையில் இருந்தான் அவன்.
“அது இப்ப முடியாது ரித்து. மாலுவிற்கு இன்னமும் இங்கே ட்ரான்ஸ்பர் ஆகல.
மனீஷ் அண்ணாவும் புல்லா ட்ராவல்லயே இருப்பாரு.
குழந்தையை அம்மாவும் நானும் தான் பார்த்துக்குறோம். அவ பாவம்! ஏங்கிப் போய்டுவா!
அதுவும் இல்லாம நான் இந்த ஹாஸ்பிட்டலில் காண்ட்ராக்டில் இருக்கேன்!
அவங்க கிட்ட ப்ரீ ட்ரைனிங் படிக்கும் போது போட்டது! இன்னும் நாலு மாசம் இருக்கு முடிய! ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ரித்து!
முதல்ல நீ உடம்பு குணமாகு! அப்புறம் அதப் பத்தி பேசலாம்!”
ரித்து கொஞ்சம் யோசித்தான்.
அவன் அம்மா பிசினஸ் விசயமாக வெளியூர் சென்றிருக்கும் போது அவன் அம்மாவுக்காக ஏங்கிய நாட்கள் நினைவு வந்தது!
இந்த ரித்து மாதிரி அந்த ரித்துக்குட்டி கஷ்டப்பட வேண்டாம்! பாவம்!
ஆனா அவனுக்கு அவன் குட்டிமாவை இன்னுமும் விட்டுக் வைக்க முடியாது! சரி அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுவோம்!
“ம்..ம். சரி. உடனே நாம இப்ப ஒண்ணும் பண்ண வேண்டாம்! ஆனா நீ தான் கூட இருந்து என்னைப் பார்த்துக்கணும் இங்க! அதுக்கு ஓகேன்னா, நான் இப்போதைக்கு இந்த பேச்சை எடுக்கல!”
அதற்கு ஒத்துக் கொண்டவள், ஹாஸ்பிட்டலில் சொல்லி அவளுக்கு அவன் வார்ட் டுயூட்டி வாங்கிக் கொண்டாள்!
முதலில் பகல் ஷிப்ட் வந்தது.
கூட இருந்து நன்றாக கவனித்துக் கொண்டாள்!
இடையில் ஒரு நாள் மனீஷ் அவனிடம் போனில் பேசினான்.
அவனுக்கு அவர்கள் மேரேஜ் பற்றின விசயம் எப்படி தெரிந்தது என்றும் சொன்னான். அப்போது மானு அவன் ரூமில் இல்லை!
“மச்சான்.. நான் உங்கள அப்படி கூப்பிடலாம் இல்ல?”
“நீங்க என் குட்டிமாவிற்கு அண்ணன் மாதிரின்னா, எனக்கு மச்சான் தானே! தாராளமாக கூப்பிடுங்க!” என்றான் ரித்தீஷ்.
“ரொம்ப சந்தோசமா இருக்கு! நீங்க ரெண்டு பேரும் திரும்பவும் சேர்ந்ததுல!
ரொம்ப முக்கியமா நீங்க அவளை தப்பா எதுவும் நினைக்காததுல! நீங்க ரொம்ப கிரேட்!”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல!
எனக்கு என் குட்டிமாவை நல்லா தெரியும்!
ஒன்னே ஒன்னு மட்டும் தான் இன்னும் புரியல!
அவன் ஏன் என்னை விட்டுட்டு வந்திட்டான்னு தான்!
அத மட்டும் சொல்ல வாயைத் திறக்க மாட்டேன்கிறா!”
“சொல்லுவா. மச்சான். காலம் அவளை சொல்ல வைக்கும்! அது தானே இப்ப உங்கள இங்க கொண்டு வந்து சேர்த்துச்சு! கொஞ்சம் பொறுமையா இருங்க!”
“ம்ம். அதுவும் சரி. ஆனா ஒண்ணு மட்டும் நான் ஸ்ட்ராங்கா இருக்கேன். அவ போனதுக்கு என்ன காரணம் வேணா இருந்துட்டுப் போகட்டும்.
இனி அவளை என்கிட்ட இருந்து அந்த கடவுளே நினைச்சாலும் பிரிக்க முடியாது!” ரித்து குரலில் உறுதியைக் கண்டு மன நிறைவுடன் போனை வைத்தான் மனீஷ்.
பகல் ஷிப்ட் முடிந்து மானுவிற்கு அடுத்து இரவு ஷிப்ட் வந்தது. அப்போதும் அவள் ரித்து வார்டையே கேட்டு வாங்கிக் கொண்டாள்!
இப்போது ரித்துவும் கொஞ்சம் தேறி வந்தான்.
அவள் தோளைப் பிடித்துக் கொண்டு அந்த ரூமிற்குள்ளேயே காலை ஊன்றி நடந்தான்.
அவளின் தோளைப் பற்றிக்கொண்டு மெல்ல நடந்து பாத்ரூம் கூட சென்று வந்தான்.
அப்படி ஒரு முறை சென்று வந்த பின்னும் அவளின் தோளில் இருந்த கைகளை அவளின் இடுப்பிற்கு மாற்றினான் ரித்து,
முதலில் பாலன்ஸ்க்காக பிடிக்கிறான் என்று நினைத்தவளுக்கு, பின் அது கணவனின் தொடல் என்று புரிந்தது!
என்னெவென்று அவள் கேள்வியாக அவனைப் பார்த்த அவளை சுவற்றின் அருகே கொண்டு வந்து நிறுத்தி, அவள் தலையை அவன் புறமாக இழுத்து அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டான் அவள் ரித்து!
கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகான முத்தம்!
அவனின் ஏக்கம் புரிந்ததால் அவளால் தடுக்க முடியவில்லை!
மேலும் அவளுக்காகவும் தான்!
அவளும் தான் அவளின் ரித்துவை முத்தமிட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டன!
வெகு நேரம் கழித்தே அவன் அவளை விட்டான்!
தன்னை கொஞ்சம் ஆசுவாசம் ஆக்கிக் கொண்டு மானு பேசினாள்.
“ப்ளீஸ் ரித்து, இனி இப்படி இங்க வச்சு இப்படி பண்ணாத!”
“ஏண்டி, நீ என் பொண்டாட்டி தானே! என் பொண்டாட்டிய கிஸ் பண்ண நான் யாரைக் கேக்கணும்?”
“அப்படி இல்ல ரித்து. இங்க இருக்கிறவங்களுக்கு நீ யாருன்னு தெரியாது. நாம புருஷன் பொண்டாட்டின்னும் தெரியாது.
என்னை மனீஷ் அண்ணாவின் வொய்புன்னும் கூட சில பேர் நினைச்சுட்டு இருக்காங்க!
மாலுவும் அப்படி நினைச்சா நினைச்சுட்டு போகட்டும் அது தான் உனக்கு பாதுகாப்புன்னு சொல்லிட்டா!
ஸோ, இங்க இருக்கிறவங்க கண்ணுக்கு நீ ஒரு பணக்கார பேசண்ட்!
உன்னையும் என்னையும் இப்படி யாராவது பார்த்துட்டா, என்னையை, என் கேரக்டர அசாசினேட் பண்ணிடுவாங்க.
என் ப்ரபொசன் பேரையும் டாமேஜ் பண்ணிடுவாங்க! ப்ளீஸ் இங்க வேண்டாமே!”
ரித்து அவளையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்!
இவ்வளவு யோசிக்க தெரியுமா அவன் குட்டிமாவிற்கு!
குட்டிமா நல்லா வளர்ந்துட்டா!
அவனுக்கு, முன் ஒரு நாளில் அவன் விளையாட்டாய் “அவள்” வேண்டுமென்று கேட்டதற்கு, அதற்கு உடனே தயாராகி அவள் நின்ற கோலம் கண்டு முதலில் கொஞ்சம் கர்வம் கொண்டு, பின் அவளின் செய்கையால் சிரித்த நினைவும்,
அதன் பின் அப்படி செய்தற்காக அவனிடம் மண்டை நிறைய குட்டுகள் வாங்கிக் கொண்டு “வலிக்குது ரித்து” அவள் சிணுங்கியதும் நினைவு வந்து, அவன் முகத்தில் இப்போதும் ஒரு புன்னகையை வர வைத்தது.
பின் அதுவே அவனை, அவளை முதன் முதலில் சந்தித்த நாளிற்கு அவன் நினைவுகளை கொண்டு சென்றது!
error: Content is protected !!