Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கந்தபவனம்

கந்தபவனம் 19

அத்தியாயம் 19

அன்று காலை அனைவரும் பரப்பரப்பாக ஊருக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்கள். நல்லம்மைக்கு ஆபிஸில் முக்கிய வேலை இருந்ததால் லீவ் கிடைக்கவில்லை. அவள் துணைக்கு வீராவும் நின்றுகொண்டான். முத்து கருப்பன் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிக்சை அளிப்பதால் எப்பொழுதும்  அதிக லீவ் எடுக்கமாட்டான். ‘எனக்கும் சேர்த்து நீங்களே வேண்டிக்கோங்க அன்னும்மா’ என்று விட்டான். 



Advertisement

அன்னத்திற்கு சற்று  வருத்தம். இவனும் செத்து பிழைத்துள்ளான், அதற்கு நன்றி சொல்ல தானே கோவிலுக்கு போறோம் என்று. 

சுந்தரம் தான், “அவன் ஒரு உயிரை காப்பாத்த உதவினா அந்த முருகன் அவனுக்கு அருள் புரிவான், நாம போய் நன்றி சொல்லுவோம். முருகன் கோச்சிக்கமாட்டான்” என்று மனைவியை சமாதானம் செய்து இவர்களுடன் புறப்பட்டார்.

Advertisement

Advertisement

பாலுவையும் முத்து கருப்பன் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டான். அவனது பேச்சுக்கு மறுபேச்சு எப்பொழுதும் இருந்ததில்லை பாலுவிடம்.

மாலை மற்றவர்கள் அனைவரும் முருகம்மை ஆச்சி வீட்டில் இருந்தார்கள். 

Advertisement

விசாகா பல மாதங்கள் கழித்து ஊருக்கு வருவதால், வயலுக்கு சென்று வருவதாக கூறினாள். 

“இருட்டறதுக்குள்ள பாத்துட்டு வந்துடு முருகு” என்றார் முருகம்மை.

அன்னம் “நானும் வரேன் முருகு “ என்று இணைந்து கொண்டார். 

சுந்தரம் நான் கூட்டிட்டு போறேன் என்று காரில் அழைத்து சென்றார்.

காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு அத்தை மாமாவுடன் நடந்து சென்றாள்.

அப்பொழுது விசாகாவை பார்த்ததும் அங்கிருந்த குடியானவ மக்கள் மிகவும் பிரியத்துடன் அவளை வரவேற்றார்கள்.

இவர்களுக்கு பெரிய நிலபுலன்கள் கிடையாது, சிறு சிறு இடங்களில் விவசாயம் பார்த்து வந்தார்கள். எளிய பயிர் வகைகள், மண்ணுக்கேற்ற வகையில் என்ன பயிரிடலாம் என்று மண்ணை பரிசோதனைக்கு அனுப்பி, இவள் கூறிய படி பயிர் செய்து கொஞ்சம் நல்ல வருமானம் காண்கிறார்கள் அவர்கள்.

“இப்ப தான் பறிச்சோம் தாயீ, கொண்டு போங்க” என்று கூடை நிறைய சுரைக்காயை கொண்டு வந்து கொடுத்தார் ஒரு பெண்மணி. 

“முதல் விளைச்சல் சாமிக்கு தானே ஆத்தா.. கொண்டு போய் கொடுங்க அப்புறம் நான் வந்து வாங்கிக்கிறேன்” என்று பரிவுடன் கூறினாள் விசாகா.

அந்த முதிய பெண்மணி அவர் தோட்டத்தில் சுரைக்காய் போட்டு சந்தையில் வியாபாரம் செய்து வந்தவர்.

விசாகாவின் யோசனைப் படி, இருந்த சிறிய இடத்தில், மூங்கில் குச்சிகளை வரிசையாக நிறுத்தி அதன் மேல் செடிகளை படர விட்டு அவள் சொன்ன சிறு சிறு குறிப்புகளை மேற்கொண்டதனால் அதிக விளைச்சல் கிடைத்தது. அதில் நல்ல வருமானம் வருகிறது அவருக்கு.

அமைதியாக அன்னமும் சுந்தரமும்  வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றார்கள்.

அவளது முகமே பிரகாசமாக இருந்தது. சென்னையிலும் அவள் மகிழ்ச்சியாக தான் இருப்பாள். ஆனால், இந்த வயலை பார்த்ததும் அவள் கண்ணில் வந்த ஒளி., இந்த விவசயிகளுடன் பேசுகையில் அவள் முகத்தில் ஒரு தேஜஸ் இருந்தது.

ஆசையாக அனைத்து வயல்களையும்  சுற்றி வந்தாள், பின் மாந்தோப்பிற்கு  செல்லலாம் என்றாள்.

“மிச்சத்தை நாளைக்கு பார்ப்போம், வா நேரமாச்சு” என்று அன்னம் வற்புறுத்தி அவளை அழைத்து வந்து விட்டார்.

மறுநாள்  கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். முருகம்மை ஆச்சி குடும்பம் மலையக்கோயிலில் அந்த முருகன் சன்னிதானத்தில் இருந்தார்கள். அனைவரும் விசாகாவையும் முத்து கருப்பனையும் காப்பாற்றி கொடுத்ததிற்காக அந்த முருகனிடம் மனமார நன்றி கூறினார்கள். பாலும், தேனும், சந்தனமும், பன்னீரும் என்று அபிஷேகத்தை கண்குளிர கண்டார்கள்.

“முத்துக்குமரா.. முத்துக்குமரா.. முருகையா வா வா” என்று சாலாவின் கணீர் குரலில் அன்றைய பூஜை நிறைவாக முடிந்தது.

நிறைவான மனதுடன் அனைவரும் பேசிக்கொண்டே கீழே இறங்கி வந்தார்கள். அப்பொழுது ஒரு வயதான தோற்றம் உள்ள ஒருவர் சாலாவிடம் வந்து, கையேந்தினார். மற்றவர்கள் இதனை கவனிக்காமல் முன்னே சென்றனர்.

சாலா தன் கையில் இருந்த மாவிளக்கு, தேங்காய் மூடி, ஒரு வாழைப்பழம்  கொடுத்து, கொஞ்சம் காசும் கொடுத்தார். அவரும்  சிரித்துக்கொண்டே பெற்றுக்கொண்டார்.

அவர் ஜோல்னா பையில் இருந்து ஒரு ருத்ராட்சம் எடுத்து சாலாவிடம் கொடுத்தார். 

“பாதுகாக்க கொடுத்த பொருளை, நேரம் வந்ததும் வாங்கிட்டு போகணும். அவன் பாத்துக்கட்டும்னு அப்படியே விட்டுட கூடாது” என்று கூறி சென்றுவிட்டார்.

சிறிது நேரம் பிடித்தது சாலாவிற்கு அவர் கூறிய செய்தியை உள் வாங்குவதற்கு. மெய் சிலிர்த்து விட்டது அவருக்கு. மீண்டும் யாரையும் கூப்பிடாமல் முருகா சரணம் என்று கூறிக்கொண்டே மேலே ஏறினார்.

கீழே வந்ததும் “எங்கே சாலா” என்று முருகம்மை ஆச்சி கேட்கவும் தான் சாலா இல்லாததை அனைவரும் கவனித்தனர்.

சாலாவின் கைபேசிக்கு அழைத்தான் கதிர், அது அருணின் சட்டை பையில் இருந்து ஒலி எழுப்பியது. 

கதிர் அவரை முறைக்கவும், “டேய், நான் என்ன பண்றது, எல்லாரும் ஒன்னா தானே வரோம்னு வாங்கி வச்சிக்கிட்டேன்” என்றார் பாவமாக.

“மேலே போய் பார்ப்போம்” என்று அனைவரும் கிளம்பினார்கள்.

 

கதிர், “எல்லோரும் எதுக்கு? எல்லோரும் இங்கேயே இருங்க.. நாங்க போய் பார்த்துட்டு வரோம்” என்று வெற்றி, அருண், கதிர் மட்டும் மேலே சென்றார்கள்.

கண்களில்  கண்ணீருடன் சாலா முருகன் சந்நிதி முன் அமர்ந்து கொண்டிருந்தார்.

“என்னாச்சு.. என்னாச்சு.. ஏன் அழுற சாலா” என்று தன் வயதையும் மீறி அருண் அவரிடம் ஓடினார்.

வெற்றியும் கதிரும் குழப்பமாக அருண் பின்னே சென்றார்கள்.

“முருகன் விசாவை நம்மள வாங்கிக்க சொல்லிட்டாரு. அவர் பொண்ணை நமக்கு கொடுக்க ஒத்துக்கிட்டாரு” என்றார் சாலா அருணிடம் கரகரப்பான குரலில்.

எப்படி சொன்னார் என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. அவருக்கும் சொல்லொண்ணா மகிழ்ச்சி. இவர்கள் ஒப்புக்காக கொடுக்கவில்லை மகளை. இப்பொழுது முருகனிடம் தங்கள் மகளை உரிமையுடன் பெறப்போகிறோம் என்பது நிறைவான மகிழ்ச்சியை தந்தது. இருவரும் அமைதியாக அமர்ந்துகொண்டனர்.

வெற்றி அவரிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு, நீங்க மெதுவா வாங்க பெரியப்பா, நாங்க முன்ன போறோம் என்று அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு கதிருடன் கீழே சென்றான். 

கீழே சென்று சுருக்கமாக விஷயத்தை கூறிவிட்டு அனைவரையும் வீட்டிற்கு அழைத்து சென்றனர். விசாகா இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் அவளிற்கும் மனதிற்குள் ஒரு இதம் வந்தது.

இன்னும் தைப்பூசத்திற்கு மூன்று மாதங்கள் இருந்தது. அப்பொழுதே தத்து வாங்கிக்கொண்டு போகலாம் என்று அருணும் சாலாவும் முடிவு செய்து அது சம்பந்தமாக ஐயரிடம் பேசிவிட்டு வீடு திரும்பினார்கள்.

——————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!