Skip to content
Post Views: 1,749
ஆண்டவர்கனிக்கு டாக்டர் பேசியது கேட்டு, அப்பாடா என்று இருந்தது. திவ்யாவை பார்க்கலாம் என்று ஆண்டவர்கனி திவ்யா ரூம் அருகே வர.
“போதும் உங்கள பார்த்தது இதுவரைக்கும் போதும்.
Advertisement
என் பொண்ணு
பட்ட கஷ்டமெல்லாம் போதும் கிளம்புங்க. இனி என் பொண்ணு, எங்க கூட என் பொண்ணா இருக்கட்டும்” என்று திவ்யாவின் தாய் தந்தை சொல்லி விட்டு, திவ்யா இருக்கும் அறைக்கு செல்ல.
Advertisement
ஆண்டவர் கனியின் மனம் வலித்தது. அவர்கள் சொல்லுவதும் உண்மை தானே. நான் தான் அவளை விரும்பினேன், கல்யாணம் பண்ணினேன். அவளை நன்றாக பார்த்து க்கொள்ள முடியாத பாவியாகி விட்டேனே, என்று மருகினான். இன்று அவளை ஹோட்டலில் பார்த்தவுடன் தெரிந்தது , அவளின் வாழ்வியல், தோற்றம், வேலை அனைத்தையும் பார்த்தவன், தனக்காக தான் அனைத்தையும் விட்டு வந்து என்னுடன் வாழ்ந்தாளா,
Advertisement
இல்லை நான் தான் கட்டாயா படுத்தி அவளை வாழ வைத்துள்ளேன், என்று வருத்தப்பட்டே, அவளை ஹோட்டலில் பார்க்காமல் திரும்பி போனான்.
Advertisement
அவளின் சந்தோசத்தை கெடுக்க மனம் வர வில்லை, நான் இல்லாமல் கூட நன்றாக இருக்கிறாள் அப்படியே இருக்கட்டும் என்றே விட்டு வந்தான்..
அவள் தன்னை பார்த்திருப்பாள் என்று அவன் துலியும் நினைக்க வில்லை..
தன்னை பார்த்து அழுது தான் மயங்கி இருக்கிறாள் என்று நினைத்து வருந்தியவன் மனதில் சாரிடா, நாச்சியா சாரி, என்று மனைவியுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தான்..
நேரம் ஆக திவ்யாவின் தோழிகள் வீட்டிற்கு கிளம்பினார்கள். கிளம்பும் போது திவ்யாவின் காதில் உன் ஹஸ்பெண்ட் வெளியில தான் உட்கார்ந்து இருக்கிறார், என்று கூறி விட்டு செல்ல.
திவ்யாவின் கண்கள் விரிந்தது, “அப்போ பாத்துட்டு பாக்காம போய்ட்டு, இப்போ எதுக்கு வந்தாராம்” என்று நினைத்தவள்.
அவரே வரட்டும் என்று அறையில் இருந்தாள்..
நர்ஸ் வந்து “டிரிப்ஸ் முடிஞ்சது மேம் இந்த மெடிசன் வாங்கிக்கோங்க, என்று டிரிப்ஸை நிறுத்தி விட்டு, “பில்
கட்டி விட்டு போலாம்” என்று சொல்லி விட்டு சென்றாள்.
கிருஷ்ணவேணி கணவரிடம் “பில் கட்டிட்டு இந்த மெடிசனை வாங்கிட்டு வாங்க கிளம்பலாம்” என்றார்..
“ஒரு நிமிசம்” என்ற திவ்யா அந்த பில்லை வாங்கி “கனி, கனி” என்று ஆண்டவர்கனியை அழைக்க.
திவ்யா தன்னை அழைப்பது கேட்க. மெல்ல எழுந்து திவ்யா இருக்கும் அறைக்கு சென்றான்.. ஆண்டவர்கனி நடக்க கஷ்டமாக இருக்க மெல்ல அவளிருக்கும் அறைக்கு செல்ல.
அவன் மெல்ல தாங்கி, தாங்கி நடந்து வருவதை பார்த்தவள் எழுந்து அமர்ந்து “என்னாச்சு கனி” என்றாள்…
அவன் ஒன்னுமில்லை என்று தலையாட்ட.
மெடிசன் சிலிப்பை தன் அப்பாவிடம் தந்தவள் “நீங்க போயி கட்டிட்டு மெடிசன் வாங்கிட்டு வாங்க” என்றவள்..
“அம்மா நீ கொஞ்சம் வெளியே போ” என்றாள்.
கிருஷ்ணவேணி மகளை முறைத்துக் கொண்டே ரூம்பை விட்டு வெளியே சென்றார்..
ஆண்டவர் கனி நிற்க முடியாமல் சேரில் அமர மறுபடியும் “என்னாச்சு” என்றாள்.
“எனக்கு ஒன்னுமில்லை திவ்யா” என்றவன் மனைவியை குற்ற உணர்வோடு பார்க்க.
திவ்யா கட்டிலில் இருந்து கீழே இறங்கியவள். ஆண்டவர்கனியின் அருகில் வந்து அவன் வேஷ்டியை விலக்கி பார்க்க.
“வேண்டாம் நாச்சியா சரியாகிரும்” என்றான்..
“என்ன இவ்வளவு பெரிய கட்டு காலில் போட்டு இருக்கீங்க என்னாச்சு”?…
“அது ஒரு பை காரன் நேர வந்து என் காலுல விட்டான் வண்டியை” என்றவன் “இப்போ பரவாயில்ல” என்றான்..
“வாய் மூடுங்க இந்த கால வச்சுகிட்டு ஊருல இருந்து காருல டெல்லிவரைக்கு வந்தீங்க” என்றாள் கோபத்தோடு.
ஆண்டவர்கனிக்கு மனைவியின் கோபம் ஒரு சந்தோஷத்தை தர நிம்மதி பெருமூச்சு விட்டவன் “ஆமாம்” என்று தலையாட்ட.
அவனை பார்த்து முறைத்தவள் நர்ஸ் என்று கூப்பிட.
அறைக்கு வந்த நர்ஸிடம் “இவங்களுக்கு கால் பெயின் ரொம்ப இருக்குற மாதிரி தெரியுது என்னன்னு பாருங்க” என்றாள்..
“ஓகே மேம்” என்றவள்.
ஆண்டவர் கனியின் கால் கட்டை பார்த்து “எத்தனை நாள் ஆச்சு சார் காலில் அடிபட்டு”.
“ஒரு வாரம் இருக்கும்”..
“காலில் என்னாச்சு சார், ஏன் கட்டு போட்டு இருக்காங்க, பெய்ன் இருக்கா” என்று காலை தொட்டு பார்க்க “ஆவென்றான் கனி”..
“மேம் காலுல சவ்வு விலகுன மாதிரி தெரியுது, கட்டு போட்டு அதிகமா நடந்ததால லூசா ஆகிருக்கு, டாக்டர் தான் பார்த்து வேற கட்டு போடனும் டாக்டர வர சொல்லவா” என்றாள்…
“உம் வர சொல்லுங்க” என்றாள் திவ்யா..
“எனக்கு ஒன்னுமில்லை திவி, ரெஸ்ட் எடுத்த சரியா போகிறும், நீ அமைதியா இரு” என்று கனி கூற..
“திவ்யா” என்று கர்ணனும், கிருஷ்ணவேணி அறைக்குள் வந்து “நீ எதுக்கு இது எல்லாம் பண்ணுற , அவர பாத்துக்க அவருக்கு தெரியும் என்று சத்தம் போட..
“நீங்க இத பத்தி பேச கூடாது, நான் வீட்டை விட்டு போனவுடன், நான் எங்கே போனேன், என்ன பண்ணுறேன், புருஷன் வீட்டுக்கு போனேன்னா? இப்படி ஏதாவது என்ன பத்தி கவல பட்டீங்களா, ஒன்னும் இல்ல. போயிட்டா நிம்மதி என்ற மாதிரி தானே இரண்டு பேரும் இருந்தீங்க, என் புருஷனை இனி ஒரு வார்த்தை பேச கூடாது நீங்க, உங்க வீட்டுக்கு போங்க, என் புருஷன் வந்துட்டாரு நாங்க எங்கள பாத்துப்போம்” என்று பேச..
மகள் இப்படி பேசவும் இரண்டு பேரின் முகத்தில் ஈயாட வில்லை “எப்படி பேசற பாரு” உன் பொண்ணு வா என்று கர்ணன் கிருஷ்ணவேணியை அழைக்க.
நர்ஸும், டாக்டரும் அறைக்குள் வர அனைவரும் அமைதியாக நின்றனர்..
நர்ஸ் “எல்லாரும் வெளியே போங்க” என்று கூற.
திவ்யா மட்டும் அங்கேயே நின்று கொள்ள.. மற்ற இருவரும் வெளியே சென்றனர்..
டாக்டர் ஆண்டவர் கனியின் கட்டை பிரித்து பார்த்து விட்டு. புதிதாக கட்டு போட்டவர்.. “ரொம்ப பெருச ஒன்னுமில்லை ஆனா ஒருவாரம் நடக்காம கம்ப்ளீட்டா பெட் ரெஸ்ட் எடுக்கனும். தேவைக்கு மட்டும் நடந்தா போதும்”.. என்று கூற..
“சரி” என்றாள் திவ்யா…
எங்கே செல்லலாம், தன் தாய் வீட்டிற்கு கனியை அழைத்து செல்ல விருப்பம் இல்லை.. இவள் தங்கி இருக்குற வீட்டில் இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என்று நினைத்து யோசிக்க..
திவ்யாவின் தந்தை வந்து “வாங்க கிளம்பலாம் நம்ம வீட்டுக்கு” என்றார்..
“நான் வரல, நீங்க போங்க” என்றாள்..
“ஏன்டி கோபப்படுற வா நம்ம வீட்டுக்கு போலாம், இனிமே வாய் திறக்க மாட்டேன், வாங்க தம்பி நீங்களும்” என்று ஆண்டவர் கனியை பார்த்து கூப்பிட..
அவனோ திவ்யாவை பார்க்க. திவ்யா வேண்டாம் என்று தலையாட்டி இருந்தவள்..
“அத்தை வீட்டு சாவி குடு” என்று திவ்யா கேட்க….
“எதற்கு” என்று கிருஷ்ணவேணி கேட்க..
“நீங்க சாவியை குடுக்க, அந்த பிளாட் சும்மா தானே இருக்கு, நாங்க அங்க ஒரு வாரம் போய் இருந்துட்டு ஊருக்கு போறோம்” என்றாள்..
“குடு, குடுனா சாவியை என் பையிலயா இருக்கு அப்பாகிட்ட குடுத்து விடுறேன்” என்றவர். கணவரை “வாங்க” என்று அழைத்து சென்றார்..
ஆண்டவர்கனியை திவ்யா கார் டிரைவர் உதவியோடு மெல்ல திவ்யாவின் அத்தை பிளாட்டுக்கு அழைத்து வந்தனர்..
கார் டிரைவரை ஆண்டவர்கனி விருதுநகர் சென்று விட கூறிவிட்டு வீட்டிற்கு வர.. பிளாட் மிகவும் அழகாய் இருந்தது. திவ்யாவின் அத்தை பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால்.
அவளின் அத்தையும் வெளிநாட்டிற்கே சென்று விட..
அவர்கள் இந்தியா வந்தால் தங்கவென இந்த வீட்டை வைத்துள்ளனர்.
ஆண்டவர்கனியை சோபாவில் உட்கார உதவி பண்ணி விட்டு. தண்ணீரை வேகமாக குடித்தாள்.
“ஏன் திவ்யா உங்க வீட்டுக்கே போயிருக்கலாமே” என்றான் கனி..
“எங்க அம்மா, அப்பாவை பத்தி உங்களுக்கு தெரியாது அங்க உங்களால ப்பிரியா இருக்க முடியாது, இங்கே அப்படி இல்ல,” என்றாள்.
“தன்னை பற்றி எப்போவும் நினைக்கும் மனைவியை இத்தனை நாள் விட்டு விட்டேன், அதுவும் இந்த நிலமையில்”.. என்று வருந்தி அவளை பார்க்க.
“திவ்யா” என்றான் கனி.
“உம் சொல்லுங்க’ என்றவள் போனில் ஏதோ பார்த்துக்கொண்டு இருக்க.
“உன்கிட்ட பேசனும்” என்றான்.
“எதுவும் இப்ப பேச வேண்டாம், எனக்கு பசிக்குது, முதல்ல சாப்பிடனும் உங்களுக்கு என்ன புட் வேணுமுன்னு சொல்லுங்க ஆர்டர் போடுறேன்” என்றாள்.
“உனக்கு பிடிச்சத போடு” என்றவன். சோபாவில் காலை நீட்டி அமர்ந்திருக்க.
“நீங்க இங்க உட்கார்ந்து இருக்கீங்களா இல்ல பெட்ல படுக்குறீங்களா என்றாள்.
“இல்ல சாப்பிட்டு போயி தூங்குறேன், இப்பவே மணி பத்து ஆச்சு” என்றான்.
ஆர்டர் பண்ணிய உணவு வந்து விட. இருவரும் சோபாவில் உட்கார்ந்து கொண்டே சாப்பிட்டு முடித்து மாத்திரை போட..
காலிங் பெல் அடித்தது..
யார் என்று திறந்த பார்க்க. திவ்யாவின் தந்தை கர்ணன், திவ்யாவுக்கு அவர்கள் வீட்டில் இருந்த உடைகளை எடுத்து வந்திருந்தார்.
அதை வாங்கியவள் “தாங்யூ பா” என்று உள்ளே சென்று விட..
கர்ணன் ஆண்டவர் கனியிடம் இரண்டு நிமிடம் பேசிவிட்டு சென்றார்..
திவ்யா உடல் கழுவி உடை மாற்றி வந்தவள் “தூங்கலாமா” என்றாள்..
“உம்” என்றவன், மெல்ல திவ்யாவை பிடித்துக்கொண்டு ஓய்வு அறை சென்று வந்து. கட்டிலில் அமர வைத்தவள்.
அவனுக்கு படுக்க தலையனை போர்வை எடுத்து கொடுத்துவிட்டு.
“படுத்துக்கோங்க”. என்றவள். அவன் அமர்ந்திருக்க.. இவள் சென்று அவன் பக்கம் சிறிது தள்ளி படுத்துக்கொண்டாள்.
ஆண்டவர்கனி சிறிது நேரம் திவ்யாவை பார்த்து இருந்தவன் “திவி” என்றான்.
அவளோ பேசாமல் மௌனமாக இருக்க.
“நாச்சியா” என்றான்.
அவளோ மீண்டும் அமைதியாக இருக்க.
அவனுக்கு அவள் தூங்கவில்லை என்று தெரியும்.
மீண்டும் ஆண்டவர் கனி “நாச்சி குட்டி” என்றான்..
தலையனையை தூக்கி அவன் மேல் எறிந்திருந்தாள் திவ்யா……
error: Content is protected !!