Skip to content
Post Views: 574
“வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு”
அத்தியாயம் -4
அதிகாலை ஐந்து மணியளவில் மணமகள் அறையில் ஒரே அடாவடிதனம் தாய்க்கும் மகளுக்கும்,
கோகிலாவின் தாய் பூங்கோதை அடியேய் கோகிலா எழுந்திரிடி இன்னும் ஒரு மணி நேரத்துல பொண்ணு ரெடியா இருக்கணும்னு உங்க பெரிய நாத்தனார் சொல்லிட்டு போயிருக்காங்க. இன்னமும் தூங்கிட்டிருக்க பாரு என்றவர் அவளுடைய முகத்தில் கை பிடி தண்ணீரினை தெளித்தார்.
Advertisement
முகத்தில் தண்ணீர் பட்ட அடுத்த நிமிடம் கடுகினை போல வெடிக்க தொடங்கினாள்.
“ம்மா…. ” இது ஒன்னும் உன்னோட வீடு கிடையாது “சும்மா சும்மா” இந்த தண்ணி ஊத்துற வேலை எல்லாம் உன்னோட வீட்டோட வச்சுக்கோ.
ஓஹோ… அப்படியா சங்கதி, ஆமாண்டி இதெல்லாம் நல்லா வக்கனையா வாய் கிழிய பேசு, மாமியார் வீட்டுக்கு போன பிறகு கோழி கூவுன பிறகும் எழுந்துக்காம படுத்திருந்தா உன்ன திட்ட மாட்டாங்க உன்ன இந்த மாதிரி லட்சணத்துல வளத்ததுக்கு என்னயதான் கேவலமா பேசுவாங்க.
Advertisement
“அப்டியா சொல்லுவாங்க ஹா ஹா ஹா…… என்று சத்தமாக சிரித்தவள்”
Advertisement
உன்ன தானே கேவலமா பேச போறாங்க என்ன ஒன்னும் கிடையாதே, எப்ப பாத்தாலும் சக்கரம் மாதிரி நீ சுத்துமா என்ன ஏன் டார்ச்சல் பண்ற கல்யாணம் என்னவோ ஆறு ஏழரை மணிக்கு தான் நீ எதுக்குமா இவ்வளவு அவசரப்பட்டு கத்தினிருக்க.
“ஏய் நான் பேசுறது உனக்கு கேலிக்கூத்தா இருக்கா?”
எல்லாம் உங்க அப்பாவ சொல்லணும் “செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து” இந்த அளவுக்கு கெடுத்து வச்சிருக்காங்க ஏற்கனவே மலேசியாகாரங்க குடும்பம் எப்படி வளர்த்து இருக்காங்களோன்ற பேரு வாங்கி வச்சிருக்கோம்.
Advertisement
உன்னோட மாமியார் வீட்டு சைடு ஜாடைய பேசுறதா உன் அத்தை ராஜி சொல்லிட்டிருக்காங்க. என அடுக்கடுக்காக குறைகளை முன்வைக்க,
“ம்மா…..”போதும் இதோட நிறுத்திக்கோ என் வீட்டுக்காரரை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் சும்மா கண்டதையும் பேசி என் நல்ல பிரஸ் மைண்ட ஸ்பாய்ல் பண்ணாத.
உனக்கு ஒன்னு தெரியுமா? இப்பவே அவர்கிட்ட சைலண்டா அமைதியான பொண்ணா, அடக்கமான பொண்ணா, வாயாடாத பொண்ணா நடிச்சு பழகிட்டேன் அவரும் என்னை நம்பிட்டாரு எங்க வாழ்க்கை நல்லா தான் இருக்கும்.
ம்ம்ம்ம்…. என்று பெருமூச்சு விட்டவர் என்னோட தவிப்பெல்லாம் உனக்கு இப்ப தெரியாது கோகி உன் வயித்துல ஒரு பொண்ணு பொறந்து அவளுக்கு இது மாதிரி கல்யாணமாகும் நிலைமைல வளர்ந்து வந்து இந்த மாதிரி வாதாடி நிக்கறப்ப தான் என்னோட வலி வேதனை எல்லாம் உனக்கு புரியும் என்றார் பூங்கோதை.
இவர்கள் இருவரும் வாதாடிக் கொண்டிருக்க அந்நேரம் பார்த்து கதவு திறக்க கோகிலாவின் அத்தை என்னண்ணி நல்ல நாளதுவுமா கண்ண கசக்கிட்டு இப்பவும் புள்ளய திட்டிக்கிட்டே இருக்கணுமா?
போங்க போய்டு அங்க நலங்கு வைக்க எல்லாத்தையும் ஏற்பாடு செய்யுங்க. இவளை ரெடி பண்ணி கூட்டிட்டு வர்றது என்னோட பொறுப்பு என்றவர் கோகிலாவையும் விடவில்லை.
நீயும் அடங்க மாட்ட போலிருக்குது எப்ப பாத்தாலும் உங்க அம்மாட்ட வம்பிளுக்கறதே உனக்கு வேலையா போச்சு.
அப்படிலாம் ஒன்னுமில்ல அத்தை
என்றவள் இரு கண்களையும் சிமிட்டி நீங்க வாங்க என்ன ரெடி பண்ணுங்க பாக்கலாம் என்றாள்.
கழுத்துல தாலி ஏறப்போகுதுங்கற பயமில்லாமல் குழந்தைகளை போல ஆனந்தமாக ஆவாரம்பூ தழை நலங்கிற்க்கு சாதாரண நேவி ப்ளூ புடவையை கட்டிக்கொண்டு அத்தையின் துணையுடன் மணமேடையில் முருகனின் அருகில் அமர்ந்தாள்.
சாதாரண தழை நலங்கு காரணமாக அக்கா, அத்தை, மாமி உறவு முறைகளை வைத்து சிறப்பாக முடித்தார்கள் இரு வீட்டினரும்,
***************
அங்கே மணமகன் அறையில்,
தங்கம்மா எங்கபோனா ரொம்ப நேரமா ஆளையே காணல.
அவள பத்தி தெரியாதா வல்லரசு மாமா வரலன்னு புலம்பி தள்ளுனா. வந்த உடனே ஏதோ தனியா கூட்டிட்டு போய் காதை கடிச்சா.
அப்படியா?
எனக்கென்னவோ அவ பொண்ண தம்பி கட்டிக்கலன்னு வருத்தமா இருக்காளோ என்னவோ எனக்கு தெரியலம்மா அவளோட முகமே சரியில்லை. எவ்ளோ டைம் கேட்டுட்டே சொல்லவே இல்ல.
என்னடி இப்படி சொல்ற?
ஆமாம்மா, அது தான் அவ பிரச்சனை வேற என்னவா இருக்க முடியும்.
இப்ப எங்கத்தான் இருக்கா அவ?
ம்ம்ம்ம்…… மாடில மாப்பிளைங்க ரெண்டு பேருக்கும் சொகுசு ரூம் போட்டு குடுத்திருக்கீங்களே அதல தான் இருக்கா நலங்கு வெக்க கூப்பிட்டேன் குளிச்சிட்டிருக்க நீங்க வைங்க நான் வர நேரமாகும் சொல்லிட்டாம்மா.
தங்கமலை சொன்னதை கேட்ட அமராவதிக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.
தங்கம்மாவுக்கு ஏதோ சொல்ல முடியாதலவுக்கு பிரச்சனைன்னு புரிந்தவர்
அவள குறைச் சொல்லலன்னா உனக்கும் உன் புருஷனுக்கும் பொழுதே விடியாது போடி பொழப்பத்தவ என்றவர் சின்ன மகளை தேடி மாடிக்கு ஓடினார்.
மாடியில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் ஒதுங்கியிருந்தால் தங்கம்மா. கண்ணீர் மட்டும் கங்கை நதி போல வற்றாமல் வழிந்துகொண்டே இருந்தது.
தங்கம்மா.. அம்மாடி தங்கம்மா இன்னுமா குளிக்கிற கதவை தொறம்மா என்றார்.
உள்ளே மதிவாணன் தாயின் முகத்தை பார்க்க அவரோ திறக்காதே என சைகையால் கூற சரி என்று தலையாட்டி அமர்ந்து கொண்டான்.
இவர்கள் இருவரும் சைகையால் பேசிகொண்டிருந்த நேரம் மதிவதனிக்கு இயற்கை அழைப்பு வர வேகவேகமாக கதவை திறந்தாள் பின்பு ஒரே ஓட்டமாக அதே தளத்தில் இருக்கும் கழிப்பறைக்கு ஓடினாள்.
“அம்மாடி மதி உள்ளாரவே இருக்குடா கக்கூஸ் ரூமு அங்க எங்க ஓடுற?”
அய்யோ,… அம்மம்மா அவசரத்துல வருது அதுக்கு எங்க போனா என்னவாம் என்றவள் நொடிப்பொழுதில் கதவை அடைத்தாள்.
ஆமாடி நீ கழுவ என்னயோ உங்கம்மாவயோ கூப்பிடுவல்ல அப்ப பாத்துக்கறேன் என்றவர் உள்ளே சென்றார்.
தங்கம்மாவின் கண்கள் சிவப்பேரியும் முகம் முழுவதும் வீங்கி இருந்ததை பார்த்தவர்,
என்னமா நீயே இப்படி அழுதா உங்கப்பா தாங்குவாரா?
உன் பொண்ண கட்டிக்கலனாலும் யாரோ ஒரு பொண்ணு அமைஞ்சி அவனோட வாழ்கை நல்லா இருக்கணும்னு பொறந்த பொண்ணுங்க நீங்க தானே அவனுக்கு நல்லது நெனைக்கணும்.
கோபம் கொண்ட மதிவாணன்,
அம்மம்மா இப்ப யாரு அக்காவை கட்டிக்கிடலன்னு அழுதாங்க? உங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா? ஒன்னும் தெரியாம உங்க பாட்டுக்கு பேசாதீங்க,
அவ்ளோ பெரிய மனிசனாகிட்டியா என்னையே எதிர்த்து கேள்வி கேக்கற?
பின்னனென்ன அம்மம்மா என்ன நடந்ததுன்னு தெரியாம அம்மாவையே குறை சொல்றிங்க.
“அப்படி என்னடா பெருசா நடந்துருச்சி? உலகத்துல நடக்காதது”
ம்ம்ம்ம்…. பிரேமாவதி அக்கா வளையல் வாங்க கூட்டிட்டு போச்சி கடைக்கு வாடான்னு, நானும் அக்காவும் கடைல வளையல் வாங்கிட்டு திரும்ப மண்டபம் வரலாம்னு கெளம்பறப்ப ராமலிங்கம் தாத்தா கூட ஒரு அண்ணன் வருவரே அவரோட வண்டில கெளம்பிடுச்சி என்னய மட்டும் அங்கவே விட்டுட்டு வந்துடுச்சி.
ஐயோ! என்னடா சொல்ற?
சத்தியமான உண்மை அம்மம்மா.
ஐயோ! என் தலையில இடியே விழுந்த மாதிரி இருக்கே என்றவர் வாயிலும் வயித்திலும் அடித்து கொண்டு கத்தினார்.
அப்பொழுது தங்கம்மா கோவமாக எழுந்து இப்ப எதுக்கு கத்தி கூப்பாடு போடறீங்கம்மா? எனக்கு தெரியாதா எல்லார்கிட்டயும் சொல்றதுக்கு?
இப்ப என்னதான் பண்ண சொல்ற?
அம்மா கொஞ்சம் பொறுமையா இரு. வல்லரசு மாமா தேடி போயிருக்காரு அவரு கண்டிப்பா அவளை கண்டுபுடிச்சி கூட்டிட்டு வந்துடுவாரு அது வரைக்கும் இந்த விஷயம் யாருக்கும் தெரியாம மூடி மறைக்கறது நம்மளோட பொறுப்பு.
உங்க அக்கா வீட்டுக்காரனுக்கு என்ன பதில் சொல்றதுடி அவனோட கோவத்தை பத்தி தெரிஞ்சுமா இவ இப்படி ஒரு முடிவெடுத்தா?
என்ன நடந்துச்சுனு தெரியலையேம்மா?
மாப்ள போன இடத்துல இருந்து சேதி எதாவது சொன்னாரா?
இவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்க,
“ம்மா ” இந்தா என்றவன் அப்பா தான் பேசறாரு உங்ககிட்ட பேசணுமாம் என்றவன் தங்கமாவின் கையில் கைபேசியை வைத்தான்.
கணவரின் அழைப்பை ஏற்றவள் சொல்லுங்க மாமா கொழந்த கெடச்சிட்டாளா? அவளை பாத்திங்களா? கையோட கூட்டிட்டு வந்துடுங்க மாமா அம்மாவுக்கும் விஷயம் தெரிஞ்சிடுச்சி இங்க பக்கத்துல தான் இருக்காங்க,
ஐயோ தங்கம்மா என்னய கொஞ்சம் பேச விடு பிரேமாவதி நாம எதிர்பாத்ததைவிட மோசமான வேலைய செய்திருக்கா,
என்ன மாமா சொல்றிங்க?
கல்யாணமே ஆகிடுச்சு தங்கம்மா….
அய்யோ அய்யோ என்றவள் தலையில் அடித்து கொண்டு கதற,
அவளிடம் இருந்து கைபேசியை வாங்கிய அமராவதி முழுவிவரத்தையும் கேட்டு ஆடிப்போய்விட்டார்.
மாப்ள நம்ப புள்ளைய எப்படியாது சமாதான படுத்தி கூட்டிட்டு வந்துடுங்களேன்.
அதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மிதான் அத்தை.
அந்த பையன் வீட்ல பிரேமா மூலமாக நம்ப முருகன் மேலையும் குடும்பத்து மேலயும் கேஸ் குடுத்திருக்காங்க. என்னனு விசாரிக்கமா நான் பிரேமாவா கூட்டிட்டு வர முடியாது.
கேஸ் தலைகீழா நமக்கா மாறிடும் பொறுமையா கையாளனும்.
நம்ப புள்ள போனது போனது தானா?
அத்தை பேசினதயே பேசாதீங்க…
உங்க பையன் கல்யாணம் நல்லபடியா நடக்கணுமா? வேணாமா?
நடக்கணும் மாப்ள உங்க மாமாவோட மனக்கவலை நடக்கலனா பெரிய வியாதில தள்ளிடும்.
“அப்ப நான் சொல்றத கேளுங்க”
“சொல்லுங்க மாப்ள கேக்கறேன் “
என் பொண்டாட்டிய ரெடியாகி கீழ போய்ட்டு வழக்கம்போல எல்லா வேலையும் பார்க்க சொல்லுங்க. நீங்களும் உங்க வேலைய பாருங்க சகலை கிட்ட பொறுமையா எடுத்து சொல்லி நான் புரிய வச்சிக்கிறேன்.
“பிரேமா எங்கன்னு கேட்ட என்ன பதில் சொல்றது? “
வல்லரசு கூட போயிருக்குனு ஏதாவது சமாளிங்க உங்களுக்கு நான் சொல்லி குடுக்கணுமா? என்றவன் அடுத்த நொடி போனை அணைத்தான்.
தங்கம்மா அமராவதியை பார்த்து உங்க அக்கா கிட்ட இத பத்தி எதுவுமே சொல்லாத,
“சரிம்மா”
நீ முகத்தை கழுவி புது புடவையை கட்டின்னு கீழ வா உன் தம்பிக்கு தெரிஞ்சா கல்யாணம் கூட வேணாம்னு அவளை தேட போயிடுவான்.
அம்மா இதுமாதிரி நடந்துடக்கூடாதுன்னு தான் நான் எனக்குள்ளவே புதச்சுவச்சிட்டேன். என் புருஷன தவற வேற யாருக்கும் இத பத்தி தெரியாது.
சரி நீ கெளம்பி வா,
பாவி மவ என் பொண்ணு வயித்துல பொறந்து இப்படி ஒரு கேவலமான வேலைய பாத்துட்டா கடவுளே உனக்கு கண்ணில்லையா? என்றவர் புலம்பியவரே மணமேடையில் கல்யாண வேலையை கவனிக்க தொடங்கினர்.
உற்றார் உறவினர் கூடி நிற்க ஐயர் மந்திரத்தை சொல்ல அனைத்து சடங்குகளும் மனதிற்கு நிம்மதியை தர அக்கினியை சாட்சியாய் வைத்து நெய்யினை ஊற்றிக்கொண்டே மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தான் முருகன்.
மாப்பிளை நாழி ஆயிடுத்து தாலி கட்ட ரெடியா?
ம்ம்ம்ம்….. நான் எப்பவோ ரெடி ஐயரே.
புள்ளையாண்ட அக்கா எங்க இருக்கீங்க மாங்கல்யதை கொண்டு போய் காமிச்சி ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்கோ.
தங்கம்மா ஒன்றும் பேசாமல் சிலையாக நிற்க, தங்கமலை தாலியை வாங்கி அனைவரிடமும் ஆசிர்வாதம் செய்யுமாறு காண்பித்தாள். வயதில் மூத்தவர்கள் அனைவரும் மாங்கல்யதை ஆசிர்வாதம் செய்து பின்பு மேடைக்கு கொண்டு சென்றாள் தங்கமலை.
மேடையில் இருக்கும் மதியழகி, மதிவதனி, திலகவதி, குமரன் மதிவாணன், தாட்சாயணி,மாலதி அருண்குமார் இவர்கள் அனைவரையும் பார்த்த பழனியப்பாவிற்கு பிரேமாவதி அங்கு இல்லாதது அவர் மூளைக்கு ஏதோ தட்டுப்பட தன்னுடைய மனைவி தங்க மலையை அருகில் அழைத்தார்.
இருங்க வரேன், என்று சைகையால் கூறியவள் ஐயரிடம் மாங்கல்யத்தை ஒப்படைத்து விட்டு கணவனின் அருகில் நின்றாள்.
“என்ன சொல்லுங்க? “
“பிரேமாவா ரொம்ப நேரமா ஆளையே காணோமே? “
அதுவாங்க பிரேமாவுக்கு எடுத்துக் கொடுத்த புது துணி கிழிஞ்சு போயிடுச்சா இந்த நேரத்துக்கு தெச்சி போட முடியாதுன்னு வேற டிரஸ் வாங்குறதுக்காக வல்லரசு மாமா கூட்டிட்டு போனாராம் தங்கமா இப்பதான் சொன்னா.
ஏன் வேற டிரஸ்சே இல்லையா அவகிட்ட, புதுசு தான் போடணுமா? இரு வரட்டும் உன் தங்கச்சி புருஷன் அவன் குடுக்கற செல்லத்துல தான் இவ அடங்காம நடந்துக்கறா?
விடுங்க சின்ன பொண்ணு எல்லாரும் புது டிரஸ் போடும்போது அவ மட்டும் பழைய டிரஸ்ஸா போடுவா?
என்னவோ பண்ணி தொலைங்க.
சரிங்க முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைங்க எல்லாரும் பாக்குறாங்க உங்க மாப்பிள்ளை முறுக்கெல்லாம் வீட்டோட வச்சுக்கோங்க.
லந்து பண்ற வீட்டுக்கு வா இருக்கு உனக்கும் உன் புள்ளைங்களுக்கும் கொஞ்சம் கூட என்னய மதிக்கறதே இல்ல.
போதும்ங்க பொது வெளில எப்படி பேசணும் எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு நான் சொல்லி குடுக்கணுமா? என்றவள் பல்லை கடித்தாள்.
சரி விடு. மேடை மேல உங்கம்மா ரொம்ப நேரமா உன்னையே பாத்துட்டு இருக்காங்க. என்னனு கேளு
ம்ம்ம்ம்….. இந்த நக்கல் நையாண்டிக்கு ஒன்னும் குறையில்லை. என்றவள் வாயில் ஒரு இடி இடித்துவிட்டு மங்கள வாழ்த்துகாக அரிசியினை அனைவரிடமும் கொடுக்க சென்றாள்.
சரியாக நல்ல நேரம் துவங்க
“கெட்டி மேளம், கெட்டி மேளம்”
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
இனிதே கோகிலா முருகன் திருமணம் நடந்து முடிந்தது.
தங்கம்மாவின் ஒரு கவலை குறைந்தது என்று நிம்மதியடைந்து மூச்சிவிட்ட நேரம் வல்லரசு மண்டபத்தில் தனி ஒருவனாக நுழைந்தார்.
பிரேமாவின் உண்மை வெளி வருமா?
பழனியப்பா எடுக்க போகும் முடிவென்ன?
தொடரும் அத்தியாயம்-5 தங்கம்ஸ்
error: Content is protected !!